கிறிஸ்தவம், பாலியல் குற்றங்கள், புதுமைப்பித்தன்

இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான்… புதுமைப்பித்தன் இப்படி ஒரு விசயத்தை கற்பனையாக எழுதியிருப்பாரா? நிச்சயமாக இருக்காது. அப்படிப்பட்ட அற்பத்தனம் அவரிடம் கிடையாது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் காட்டிலும் அதிகமான நிறுவனரீதியான குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் இந்தியாவில் காலனிய காலகட்டம் தொட்டே நடந்து கொண்டிருக்கலாம்…

View More கிறிஸ்தவம், பாலியல் குற்றங்கள், புதுமைப்பித்தன்

ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்

முன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன்? கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா? சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா? நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா? கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப் போராட்டம் அல்ல…

View More ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்

விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்

இந்தியாவில் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளின் சபைகளிலும் கூட கிறிஸ்தவத்தின் கொள்கைகளையும், மதமாற்ற பிரசாரங்களையும் தீவிரமாகவும் வன்மையாகவும் சுவாமிஜி கண்டித்தார். அமெரிக்காவில் அவரது புகழைக் குலைக்கும் நோக்கத்துடன் அங்கிருந்த பல கிறிஸ்தவ மிஷன்களும் அமைப்புகளும் எப்படியெல்லாம் அவருக்கு எதிராக மோசமான அவதூறுகளையும் பொய்களையும் பரப்பின என்பதும் அவரது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இப்போது யோக்கியன்கள் போல அவரது படத்தையே போட்டு கிறிஸ்தவ மதப்பிரசாரம்..சுவாமிஜியின் வாய்மொழிகள் அனைத்தும் 8 தொகுதிகளில் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளன. இதில் ஒரு சில இடங்களில் இயேசு கிறிஸ்துவையும் உயர்வாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால்…

View More விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்

பென் (Ben) : திரைப்பார்வை

‘அற்புத சுகமளிக்கும்’ பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் பேய் பிடித்தவர்களை விரட்டுவதாகவும், தீராத நோய்களை மேடையிலேயே அதிசயமாக குணமாக்குவதாகவும் வெறித்தனமாக கத்தி, கூப்பாடு போடும் அட்டூழிய வீடியோக்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் இந்த வெறிக் கூச்சல்களை கிண்டலடித்துவிட்டு கடந்து விடுவோம். ஆனால் இவை உண்டாக்கும் கடுமையான உளவியல் பாதிப்புகளும், இவற்றின் பின்னால் உள்ள பிறமத -குறிப்பாக இந்து மத- காழ்ப்புணர்வும் எவ்வளவு தூரம் அப்பாவிகளின் சீரழிக்கும் என்பதை 2015ல் வந்த இந்த மலையாளப் படம் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி, மிக தைரியமாகக் காட்டுகிறது. கிராமத்து பள்ளியில் படித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் ஒரு சிறுவனை அவனது அம்மா நகரத்தில் ஒரு பெரிய கான்வென்ட்டில் படிக்க வைக்க விரும்பி செய்யும் சில பலவந்தமான காரியங்களும், முட்டாள் தனமான முடிவுகளும் அதன் விளைவுகளும் கதை…..

View More பென் (Ben) : திரைப்பார்வை

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1

ஸ்ரீலஸ்ரீசுவாமிகள் அறிவார்ந்த தமது சீடர்களில் சிலருக்கு இந்த நூலைக்கற்பித்து, அவர்களை சிறந்த சொற்பொழிவாளர்களாகவும் பயிற்றுவித்தார். கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் பொதுவிடங்களிலும் கோயில்களிலும் கூடும் ஹிந்துக்களிடையே பிரச்சாரம் செய்யும்போது, சுவாமிகளின் இந்த சீடர்களும் கிறிஸ்தவத்தினை கண்டிக்கும் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். பின்னாளில் 1890க்குப்பிறகு சுவாமிகளின் இரு முக்கிய சீடர்கள் கேரளம்முழுவதும் பிரயாணம்செய்து கிறிஸ்துமதச்சேதனத்தில் உள்ளக் கருத்துக்களைப் பரப்பினார்கள். இதன் விளைவாக கிறிஸ்தவ மதமாற்றத்தின் வேகம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது….

கிறிஸ்தவ மதமாற்றத்தினைத் தடுத்து முறியடிப்பதற்கு மிகச்சிறந்தவழி அவர்களது கிறிஸ்தவம் மட்டுமே உண்மையானமதம் என்ற கருத்தினை நிராகரிப்பதுதான் என்று ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் தெளிவாக அன்றே உணர்ந்திருந்தார்.

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1

எழுமின் விழிமின் – 26

இந்த பாரதத்தில் எப்பொழுதும் அதே பழைய சிவபிரான் உடுக்கையை ஒலித்துக்கொண்டே இருப்பார். அன்னை காளி மிருக பலியுடன் வழி படப்படுவாள். அன்பிக்கினிய கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்தே வருவான். கிறிஸ்தவ பாதிரியோ, வேறு பாதிரியோ என்னதான் முயன்றாலும் அவர்களை அகற்ற முடியாது. அவர்களை உங்களால் சகிக்க முடிய வில்லை என்றால் தொலைந்து போங்கள்… பாரதத்தின் மேல் வகுப்பு மக்களே! உங்களுக்கு உயிர் இருக்கிறதா? நீங்கள் சிந்திக்கிறீர்களா? பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம் போல் இருக்கிறீர்கள். ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர்கள் வெறுத்து ஒதுக்கினார்களே, அப்படிப்பட்ட மக்களிடையேதான்…

View More எழுமின் விழிமின் – 26

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)

திருவிழாவின் போது நடுத்தெருவில் பொங்கல் வைத்ததாக குற்றம் சாட்டப் பட்டு 1000 பெண்களை திருவனந்தபுரம் காவல்துறை கைது செய்து தடை உத்தரவை மீறியதற்காக வழக்கும் பதிவு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது… சிந்த் மாகாணத்தில் சிறுமிகள், திருமணமான பெண்கள் உட்பட 25-30 இந்துப் பெண்கள் ஒவ்வொரு மாதமும் கடத்தப் பட்டு மதமாற்றப் படுகிறார்கள்… மதுரை மீனாட்சி கோயிலைச் சுற்றி சட்டத்தை மீறிக் கட்டப்பட்டுள்ள 770 கட்டடங்கள் குறித்து இன்னும் 60 நாட்களுக்குள் நடவடிக்கை… உபனிஷத ஞானச் செல்வத்தினை வாராவாரம் தொலைக்காட்சித் தொடர் வடிவில் வழங்கும் ஒரு சீரிய முயற்சி “உபநிஷத் கங்கா”…

View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)

முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்

முல்லை பெரியார் விஷயத்தில் வெளிவராத பல தகவல்கள் உள்ளன. இதில் சமூக விரோதிகளை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. கேரளாவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதும் பொருளாதார முற்றுகை என்ற பெயரில் போராடுவதும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும். அரசியல் கட்சிகள் நிலநடுக்க பீதியைக் கொண்டு அரசியல் நடத்துவதில் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய நியாயம் இருக்கிறது. இதில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு என்ன வேலை? இங்கு தான் அவர்களது ஐந்தாம் படை ரகசியம் இருக்கிறது. அவர்களது வெறுப்பூட்டும் பிரசாரத்தின் அடிப்படை சபரிமலை என்பதே அது.

View More முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்