ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1

”அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல் – எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?…இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில் – பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்நீராக இருந்தது – வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது – அதிலிருந்து மகத்தான தவத்தால் அந்த ஒன்று பிறந்தது… தேவர்களோ படைப்பிற்குப் பின்வந்தவர்கள் – அப்படியானால் அது எப்படி உருவாயிற்று? யாரறிவார்?”… சிருஷ்டி உண்மையில் எப்படி உண்டாயிற்று, யார் அதனை உருவாக்கிய கடவுள் என்ற ஆதிக் கேள்வியையே இந்தப் பாடல் போற்றுகிறது என்று வேத இலக்கியம் குறித்து எழுதிய நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். பிற்காலத்தில் வளர்ந்து செழித்த இந்திய தத்துவ ஞானப் பிரிவுகள் அனைத்தும் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளின் ஆரம்பப் புள்ளி இந்த சூக்தங்கள் தான்…

View More ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1

நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்

அன்பு மகனே, ஒரு மண்கட்டியினால் மண்ணாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மண் மட்டுமே சத்தியம்… உண்ணும் அன்னம் மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை மலமாகிறது. அதன் நடுவுரு ஊனுடம்பாகிறது. நுண்மை மனமாகிறது… விதவிதமான மரங்களிலிருந்து அவற்றின் ரசத்தை எடுத்துச் சேர்த்து ஒரு ரசமாக, தேனாக சமைக்கின்றன தேனீக்கள். அந்த ரசங்களுக்கு நான் இந்த மரத்தின் ரசம், நான் அந்த மரத்தின் ரசம் என்று பகுத்தறியும் விவேகம் இருப்பதில்லை.. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது…

View More நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்

இந்து மதம் – கேள்வி பதில்: 1

இந்த பிரிவில் இந்து மதம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை தொகுக்கவிருக்கிறோம். முதல் பகுதி இது – ஸ்ருதி என்றால் என்ன? ஸ்மிருதி என்றால் என்ன? இதன் பிரிவுகள் என்ன? – திருவள்ளுவர் ஏன் சமணராக இருக்கமுடியாது? – சுவர்க்கம், நரகம் என்பது என்ன? – நான் ஒரு முஸ்லீம்/கிறிஸ்தவன். என்னால் ஹிந்து மதத்துக்கு மாற முடியுமா? ….

View More இந்து மதம் – கேள்வி பதில்: 1