காயத்ரி ஜபம் என்றால் காயத்ரி மந்திரத்தை இயந்திரத்தனமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் “சொல்வது” என்றே பெரும்பான்மையினர் எண்ணுகின்றனர். அப்படிச் செய்வதும் ஆன்மீக ரீதியாக பலனளிக்கக் கூடியது, உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவது என்றாலும், ஜபம் என்ற உளப் பயிற்சியில் அது ஆரம்பகட்ட நிலை மட்டுமே. அடுத்தடுத்த படிகளுக்குச் செல்லும் விழைவும் முயற்சியும் கொண்டிருப்பதே சிரத்தையான மாணவருக்கு அடையாளம்… எந்த உதட்டசைவும் இன்றி மனதிலேயே மந்திரத்தை மீண்டும் மீண்டும் இசைப்பது மானஸிக ஜபம் எனப்படும். இதுவே உத்தமமானது என்று கருதப்படுகிறது.. பாரம்பரியமாக காயத்ரி ஜபம் செய்யும் முறையில், ஜபத்தைத் தொடங்கும் முன்பு மந்திரத்தின் உருவமாக காயத்ரி தேவியின் சகுண தியானம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது…
View More காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்Tag: சந்தியா வந்தனம்
மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்
மித்ரன் ஒளியையும் உறவையும் நட்பையும் வளர்க்கும் வேத தெய்வத்தின் பெயர். சூர்ய தேவனுடைய கண்ணாக இந்தத் தெய்வத்தின் சக்தி கருதப்படுகிறது. இந்தியப் பண்பாடு மட்டுமின்றி, பண்டைய பாரசீகப் பண்பாட்டிலும் ஜராதுஷ்ட்ர மதத்திலும் மித்ர என்ற இதே பெயருடன் இக்கடவுளை வழிபட்டனர்… “சத்தியத்தின் ஒளியினாலும் கண்ணுக்குப் புலனாகும் ஒளியினாலும் அமரரையும் மனிதரையும் தத்தம் தொழில்களில் புகுத்தி பொன்மயமான தேரில் சுற்றி வருகிறான் ஸவித்ரு தேவன். உலகங்களையெல்லாம் நன்கு பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறான்”… ‘இமம் மே வருண’ என்ற இந்தப் புகழ்பெற்ற மந்திரம் தினந்தோறும் சாயங்கால சந்தியாவந்தனத்தில் உபஸ்தான (வேண்டுதல்) மந்திரமாக மேற்கு நோக்கி நின்று சூரியனைத் தொழுது கூறப்படுவது…
View More மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4
பெருமாளை “நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்” என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள்…
View More பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4