சிவாத்துவித பாடியம் என்று அறியப்படுவது, பிரம்ம சூத்திரத்திற்கு நீலகண்டர் அல்லது ஸ்ரீகண்டர் எழுதிய பாஷ்யத்தைக் குறிக்கும். ஸ்ரீகண்ட பாடியத்தைப் பெயரளவிலேனும் அறிந்தவர் மிகச் சிலரே. அதனை அறிமுகம் செய்வது இக்கட்டுரையின் நோக்கம்… வேதாகமங்களைப் பிரமாணமாகக் கொண்ட தென்னாட்டுச் சைவசித்தாந்தத்திற்குச் ‘சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்தம்’ என்பது தத்துவ உலகில் வழங்கிவரும் பெயராகும். சுருக்கமாக ‘வைதிக சைவம்’ என்பர்…. ஒன்றற்கொன்று மாறுபட்டதுபோல் தோன்றும் உபநிடதக் கருத்துக்களை ஒருவகையில் சமன்வயப்படுத்தும் நூல் பிரம்மசூத்திரம். சூத்திரம் என்ற பெயருக்கு ஏற்பச் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளை செறித்துப் பாதராயணர் கூறியுள்ளார்….பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்பது சைவசித்தாந்தம். பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்ற கொள்கையை நீலகண்டர் வன்மையாக மறுக்கின்றார். பிரமம் உபாதானகாரணமும் ஆகும் என்பது நீலகண்டர் கொள்கை….
View More சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்Tag: சமயகுரவர்
தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை
தொன்மையான சைவ மரபினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் சைவ சமயத்தை இழிவு படுத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும் கழகத்தின் முக்கிய கொள்கைகள் என கூறினார்… மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – தமிழகத்தில் பூசையே நடைபெறாத சிவாலயங்களை ஆங்காங்கே சைவப் பெருமக்கள் தத்தெடுத்து நித்திய பூசைகள் சிவாகம முறைப்படி நிகழ… வேத ஆகம பாராயாணத்தைக் கண்ட அன்பர்கள் மிகுந்த பரவசமடைந்தனர். பெங்களூர் அன்பர்கள் நடத்திய ஸ்ரீசண்டேச நாயனார் மற்றும் ஸ்ரீகண்ணப்ப நாயனாரின் நாடகங்கள் காண்போர்களின் மனதை பறித்தன…
View More தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வைதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று… மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்..
View More திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்கடவுளின் பணித்திட்டம்
உயிர்களைவிட்டுக் கணநேரமும் பிரியாமை அவனது குறிப்பு என மாணிக்கவாசகர் அனுபவித்துக் கூறுகின்றார். ‘உய்ய என் (உயிர்களின்) உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா’, ‘மருவி எவ்வுயிரும் வளர்ப்போன் காண்க’ என்பன போலத் திருவாசகத்தின் பல இடங்களில் இறைவன் உயிர்களோடு கலந்து நின்று பிரியாமல் இருப்பதன் திருக்குறிப்பை அதாவது ‘கடவுளின் பணித்திட்டத்தை’ மணிவாசகர் அறிந்து கூறுகின்றார்.
View More கடவுளின் பணித்திட்டம்