நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

பறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் ‘தலித்’ (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்… இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது… பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் அகமண முறை மூலம் பிராமணர்கள் சாதிப் பிரிவினையை எப்படி நிலை நாட்டியிருக்க முடியும் என்ற கேள்வி வருகிறது….

View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1

தலித் என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதை ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. ‘அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது! எனது துன்பக்கேணி இதுதான். அது என்னை கும்பலில் ஒருவனாக அடையாளப்படுத்துகிறது. அது ஒரு கூட்டு அடையாளம். அதை நான் மறுப்பதை விடவும், அதுதான் என்னை மறுத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறார். இது முழுக்கவும் நியாயமான வாதமே… நிஜத்தில் காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகள் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள்தான் சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். இரு தரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில் இந்த சாதி கடந்த திருமணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் ஓரளவுக்கு சுமுகமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டிருப்பதையும் சமூக ஆய்வாளர்கள் கணக்கில் கொண்டாகவேண்டும். ஏனெனில் அதுவே நடைமுறையில் அதிகம்…

View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1

தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை

கலப்பு காதல் திருமணங்களில் மணமகன் / மணமகள் ஆகியோரில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அது ஒரு குடும்ப ரீதியான கசப்புணர்வு என்பதையும் தாண்டி, கடும் சாதிய வெறுப்பு விஷமாக மாறி விடுகிறது…. ஒரு குடும்ப சோகத்தை, தற்கொலையை முகாந்திரமாக்கி அதன் மூலம் இன்னொரு சமூகத்தினருக்கு எதிரான கடும் வெறுப்பை கூட்டு வன்முறை மூலம் வெளிப்படுத்துவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில், நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத செயல்… இந்து இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது மிக மோசமான வரலாற்றுத் தவறாகும். ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின் வலியை உணரும் நாளே உண்மையான இந்து ஒற்றுமை உருவாகும்…

View More தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை

சாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)

சாதிகளுக்கு இடையில் இணக்கத் திருமணம் செய்ய விரும்புவோர் தங்கள் விளம்பரங்களைத் தமிழ் ஹிந்துவிற்கு அனுப்பலாம். இப்பகுதிக்கு விளம்பரங்கள் அனுப்ப விரும்போவோர் tamizh.hindu-at-gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

View More சாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)