இக்கதைமுறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்… என் மகனுக்கும் மகளுக்கும் என் அண்ணாவின் குழந்தைகளுக்கும் பற்பல கதைகளைச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விழிவிரியக் கேட்பதைப் பார்ப்பதே பேரானந்தம். அதே பேரானந்தத்தை இக்கதைகளைப் படிக்கும் சிறுவர்களும் அடையவேண்டும் என்பதே என் ஆசை. அந்த ஆசைக்கு நியாயத்தை இக்கதைகளில் செய்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்…
View More மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்Tag: சிறுவர் இலக்கியம்
ஆதிசங்கரர் படக்கதை — 2
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வையவன் உரையாடல் வடிவில் எழுதி, ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம் – பகுதி 2.
View More ஆதிசங்கரர் படக்கதை — 2ஆதிசங்கரர் படக்கதை – 1
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு. வையவன் உரையாடல் வடிவில் எழுதி ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம்.
View More ஆதிசங்கரர் படக்கதை – 1பிள்ளைத்தமிழும் பியாஜெட்டும்
அண்மையில் சில பிரிட்டிஷ் நாட்டுப்புறவியலாளர்கள் புகழ்பெற்ற ‘London Bridge’ என்கிற ‘சிறுவர்’ பாடல் குறித்து சர்ச்சைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். புகழ்பெற்ற லண்டன் பாலம் கட்டப்பட்ட போது அங்கு நரபலிகள் கொடுக்கப்பட்டதன் நினைவாகத்தான் இந்த பாடல் எழுதப்பட்டது என்றும் மிக அண்மையில் கூட அங்கே நரபலிகள் கொடுக்கப்பட்டதாகவும் ஒருவர் எழுத மற்றொருவர் அதை மறுக்க… ஆனால் பாட்டின் சாராம்சம் ஒரு உண்மையான அல்லது போலியான நரபலி நினைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. நாம் நம் குழந்தைகளுக்கு இந்த புத்திசாலித்தனமான விஷயங்களைத்தான் நாகரிகம் என்கிற பெயரில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்…
View More பிள்ளைத்தமிழும் பியாஜெட்டும்சிறுபிள்ளைகள் சமாச்சாரம்…
அம்புலிமாமாவை எடுத்துக் கொள்ளுங்கள். மிக எளிதாக ‘அம்புலிமாமா’ கதை என இப்போது சிறுபிள்ளைத்தனமான விஷயங்களை சொல்லிவிடுகிறோம். ஆனால் உண்மையில் ’அம்புலிமாமா’ என்பது அப்படி வளர்ந்தவர்களின் சின்னத்தனத்துடன் ஒப்பிடக் கூடிய சமாச்சாரமே அல்ல. கிழக்கு கடற்கரையில் பிரதீபத்தை தலை நகராக கொண்டு ஆண்ட சந்திரத்வஜனை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? … காந்தி-நேரு அதிகார அமைப்பால் பாரதத்தின் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட தேசபக்தர்களை -பாகா ஜதீன் முதல் படேல் வரை- சித்திர கதை வடிவாக சிறுவர்களுக்கு அளித்தது அம்புலிமாமா. அது மட்டுமல்ல….
View More சிறுபிள்ளைகள் சமாச்சாரம்…