ஜவஹர்லால் நேரு எந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 1962ல் நடைபெற்ற சீன போரின்போது ஆர்எஸ்எஸ் ஆற்றிய அரும்பணியை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார். எந்த நேரு ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வெறுத்தாரோ அதே நேரு 1963ம் ஆண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். காரணம் ஆர்எஸ்எஸ்-ன் தேசத்திற்கான தன்னலமற்றப் பணியை உணர்ந்ததால்தான். எந்த ஒரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்காத பெருமை ஆர்எஸ்எஸ்-க்கு கிடைத்தது. அதுவும் காந்திஜி படுகொலை காரணமாக தடைசெய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, அதனால் பெரும் தொல்லைகளுக்கு ஆளான இயக்கம் சுதந்திர தின அணிவகுப்பில் 3500 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பூர்ண கணவேஷுடன் (ஆர்எஸ்எஸ் சீருடையுடன்) கலந்துகொண்டனர்.
View More தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்Tag: சுதந்திர தினம்
ஆகஸ்ட் 15
மிக முக்கியமான ஒன்று இப்புத்தகத்தில் உள்ளது. மகாத்மாவின் கடைசி பேட்டி: காந்தி தன் அஹிம்சை வாதத்தை ஒரு அபத்த எல்லை வரை எடுத்துச் செல்கிறார். அணுகுண்டுக்கு எதிராக உங்கள் அஹிம்சையை எப்படி பயன்படுத்துவீர்கள் என்று மிஸ் வொய்ட் கேட்கிறார். ”நான் என்ன பதில் சொல்ல இயலும்?” என்று உடன் சொன்ன காந்தி, சற்றுக் கழித்து ”பிரார்த்தனை செய்வேன்” என்கிறார். ”அணுகுண்டை ஏந்தி விமானம் மேலே பறந்து கொண்டிருந்தால் பிரார்த்தனை செய்வீர்களா?” என்று கேட்கிறார் மிஸ் வொய்ட். ’விமானத்தைப் பார்த்ததும் நான் திறந்த வெளிக்கு வருவேன். என்னிடம் தீய எண்ணம் ஏதும் இல்லையென அந்த விமானி அறிந்து கொள்வான்” என்கிறார்… பாவம் ஹிரோஷிமா, நாகசாகி நகர ஜனங்களுக்கு இந்த தற்காப்பு தெரிந்திருக்கவில்லை. நாதுராம் கோட்சேக்கும் காந்தியிடம் தீய எண்ணம் எதுவும் இல்லை என்று அவர் முகம் பார்த்து தெரிந்திருக்கவில்லை…. ஆகஸ்டு-15 அன்ற நீலகண்டனின் இப்புத்தகத்தில் நாம் காணவிருப்பது ஒரு தனி மனிதன் மகாத்மாவானதும், அவர் மறைவிற்குப் பின் அம்மகாத்மா விழித்தெழ வைத்த நாட்டின் அதள பாதாள வீழ்ச்சியும், தார்மீக சீரழிவும்… 1947 பிரிவினை சமயம். அகதிகள் முகாம்களில் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்ட குடும்பங்கள், பாகிஸ்தானில் முஸ்லீம்களால் கற்பழிக்கப்பட்ட பெண்கள், அவர்களை ஏற்க மறுக்கும் ஹிந்து குடும்பங்கள் “உங்கள் பெண்கள் தானே ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இவர்கள் வேண்ட அதை மறுக்கும் ஹிந்து குடும்பங்கள், முன்னர் காந்திக்கும் இப்போது லேடி மௌண்ட்பாட்டனுக்கும் வரும் இத்தகைய வேதனை நிறைந்த கடிதங்கள் பற்றி கல்யாணம் சொல்கிறார்… காந்தியுடன் இருந்த அனுபவத்தை, நாம் இதுகாறும் தெரிந்திராதவற்றை கல்யாணத்திடம் கேட்டு வலைப்பூவாக இப்புத்தகம் தருவது இப்புத்தகத்தின் சிறப்பு. எத்தனையோ அரிய ஆவணங்கள், புகைப்படங்கள் புத்தகத்தை நிறைக்கின்றன…
View More ஆகஸ்ட் 15ஒரு சுதந்திர தின சிந்தனை
இந்தியா தனது மக்களில் சிலரின் நம்பிக்கைத் துரோகங்களின் காரணமாகவே முதல் முறையும், பின் ஒவ்வொரு முறையும் சுதந்திரத்தை இழந்தது..இது போன்றவைகள் மறுபடியும் நேரவே கூடாது… நம் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளின் திருவுருவங்களையும், இந்த சிந்தனையையும் உள்ளடக்கிய கீழ்க்கண்ட வாழ்த்து அட்டையை இந்த நன்னாளில் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புங்கள்.
View More ஒரு சுதந்திர தின சிந்தனைஇந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை
உலத்தாருக்குத் தொண்டு செய்ய நான் உனக்குச் சுதந்திரம் கொடுத்தேன். நீ வெளியே போய் இந்த சமாச்சாரத்தைச் சொல். இந்தியா விருத்திக்கு வரும்போது ஸனாதன தர்மம்தான் முன்னுக்கு வரும் என்பதைச் சொல். இந்தியா மேன்மையையடையுமென்று சொல்லும்போது ஸனாதன தருமந்தான் விருத்தியடையுமென்பது கருத்து; இந்தியா பிரவிருத்தியாகுமென்று சொன்னால், உலகத்தின் கண் ஸனாதன தருமம் பிரவர்த்திக்குமென்று பொருள்…
View More இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரைஎங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!
‘எனது நூல் மட்டுமே மெய்ஞான நூல்’, ‘நான் கடவுளுக்கு என் மொழியில் இட்டு அழைக்கும் பெயர் மட்டுமே மெய்யானது’, ‘இவ்விரண்டையும் நம்பி ஏற்றுக்கொள்ளாதவர்கள் நரகத்துக்குப் போவார்கள்; அவர்களைக் கொன்றாலும் நான் சொர்க்கத்துக்குப் போவேன்’ என்றெல்லாம் கண்மூடித்தனமாக நம்புகிறவர்களை நாம் சமத்துவ, சகோதரத்துவ வாதிகள் என்று நம்புகிறோம்!
View More எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!