ஒரு சுதந்திர தின சிந்தனை

அனைவருக்கும் இனிய இந்திய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இத்தருணத்தில் போதிசத்வ அம்பேத்கர் அவர்களின் கீழ்க்கண்ட வரிகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியா தனது மக்களில் சிலரின் நம்பிக்கைத் துரோகங்களின் காரணமாகவே முதல் முறையும், பின் ஒவ்வொரு முறையும் தனது சுதந்திரத்தை இழந்தது.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முகமது பின் காசிமிடம் சிந்து பிரதேசத்தின் மன்னர் ராஜா தஹிர் தோல்வியடைந்தார். இந்தத் தோல்விக்கான ஒரே காரணம் சிந்து மன்னரின் ராணுவ தளபதிகள் காசிமிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு  தங்கள் மன்னருக்காகப் போரிடாமல்  இருந்தார்கள் என்பது தான். பின்வந்த காலங்களில்,  பிரிதிவி ராஜனுக்கு எதிராகப் போரிட  முகமது கோரியை அழைத்தவன் இன்னொரு இந்திய மன்னனான ஜெய்சந்த் தான்.  சிவாஜி இந்துக்களின் சுதந்திரக்காகப் போராடிக் கொண்டிருக்கையில் பிற மராட்டியத் தலைவர்களும், ராஜபுத்திரர்களும்  முகலாயரின் தரப்பில் போர் செய்து கொண்டிருந்தார்கள். சீக்கிய படைவீரர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போர் செய்கையில், அவர்களது தலைவர்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தார்கள்.

இது போன்றவைகள் மறுபடியும் நேரவே   கூடாது.  இந்தியாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் தங்கள் ரத்தத்தின் கடைசி துளி இருக்கும் வரை போராட  சபதமேற்க வேண்டும்.

நம் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளின் திருவுருவங்களையும்,  இந்த சிந்தனையையும் உள்ளடக்கிய இந்த வாழ்த்து அட்டையையோ அல்லது இந்தப் பதிவின் சுட்டியையோ, இந்த நன்னாளில்  உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புங்கள்.

independence_day_2010_card_medium_size
படத்தின் மீது க்ளிக் செய்து பெரிய, முழு அளவிலான வாழ்த்து அட்டையை

தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வாழ்க சுதந்திரம்!

வந்தே மாதரம்.

6 Replies to “ஒரு சுதந்திர தின சிந்தனை”

  1. Pingback: Indli.com
  2. வாழ்க பாரதம்
    வளர்க செந்தமிழ்
    வையமெல்லாம் பொலிக ஹிந்து தர்மம்

    பாரதமாதாவின் பாதங்களுக்கு வணக்கங்களுடன் அனைத்து நட்புள்ளங்கட்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…

  3. இந்துக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் நம் சாதி கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு ஒரே இந்து கட்சியை மாற வ வே ண்டும் நாம் இந்துக்களை முதலில் மாற வவே ண்டும் அதற்காக நாம் அனிவரும் பாடு பட வேண்டும் .

  4. This the time to get rid of the name India given by the white masters and revert to the old name Hindustan or Bharath. This will gives us our own idendity.Otherwise we all will be lumped together as someone from the Indian subcontinent that includes Pakistan.If we can change the name of Madras, Calcutta and Bombay, why not India?
    Another point. I believe that the total sum of money, running into trillions, swindled by the British from India in their 150 years rule,pales in comparision when you add up the money India lost to corruption by politicians since independence.So, have we benifitted from the independence? To add insult to injury,we are still being ruled by a white woman! I do not know whether we have really anything WORTHWHILE to celebrate.

  5. A Kashmiri separatist leader burning the Indian Flag

    Indian Flag Burnt in Srinagar
    Shame on Indian govtand Mediaalso for not making it Breaking News

    The only country of the world, where one can dare to burn the national flag..

    All these become the masala
    breaking news of Indian news channels:

    * If Tendulkar cuts the cake which is made to look like national flag, he is condemned.
    * If Mandira Bedi wears a saree with the flags of all the countries being portrayed on that, is made to apologies.
    * If one cop in Kolkata and one in Bangalore is terminated of his duties for throwing the Indian national flag on ground, by mistake.

    Then why double standards:

    * During the ongoing Amarnath Sangarsh, Jammuites holding the Indian National Flag and chanting ‘Bharat Mata ki Jai’ are open fired by the J&K Police on orders from the Police Commissioner(belongs to kashmir). Peaceful protesters are killed..
    * Like in case of Amarnath case, people in Kashmir
    when want to get some demand fulfilled, protest by burning Indian national Flag, hosting Pakistani Flag and chanting ‘Hindustan Murdabad, Pakistan Jindabad’. But no body condemns. Infact, all such protest are followed by a team of union ministers visiting Kashmir and immediately sanctioning a few thousand crore rupees for Kashmiris.
    * Every year on 14th Aug (Pakistani Indipendence Day), Pakistani flag is hosted every where in Kashmir, including the govt. buildings and on 15th Aug, same people burn the Indian flag.

    This only happens in India!!!!

    just see d pictures above

    Really shame on indian media
    இது ஒரு இமெயிலில் வந்த செய்தி,அதில் இந்திய தேசிய கொடியை எரிப்பதையும் பாகிஸ்தான் கொடியை உயர்த்தி பிடிப்பதையும் காட்டி உள்ளார்கள்,அந்த படங்களை என்னால் இணைக்க முடியவில்லை,
    இனியாவது இந்த அரசியல் வியாதிகளையும். செகுலர் வியாதிகளையும் ,பிரிவினைவாதிகளையும் பற்றி தெரிந்து கொண்டு நாம் ஒற்றுமையுடன் தேசம் காக்க பாடுபடுவோம்.
    ஜைஹிந்த், பரத் மாதகே ஜெய்.

  6. வந்தேமாதரம்

    பரங்கி கும்பினியர் ஹிந்துஸ்தானத்தை விட்டு வெளியேறிய இந்த நாளில்

    சங்கத்து ப்ராத ஸ்மரணத்தை நினைவு கூறுகிறேன்

    “ஸம்ஸ்ம்ருதா அகண்ட பாரத:”

    அகண்ட பாரதம் புனர் நிர்மாணம் செய்வதில் நமது சங்கல்பம் உறுதி பட பாரத மாதாவை வணங்குகிறேன்.

    பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் சொன்னபடி நமது தேசத்தின் வீழ்ச்சிக்கு முன்னம் காரணமான ப்ரஷ்டாசாரம் இன்றைக்கும் பேராபத்தாக உள்ளது. பூஜ்ய பாபா ராம்தேவ் ஸ்வாமி அவர்கள் ஹிந்துஸ்தானம் முழுதும் சலிக்காது ப்ரயாணம் செய்து ஸவர்ணர்கள், தலித் சஹோதரர்கள், வால்மீகி சஹோதரர்கள், தேச பக்த முஸல்மான் சஹோதரர்கள், வனவாசி சஹோதரர்கள் இவர்களை ஒன்றிணைத்து தேச உன்னதிக்காக தேசத்தின் ராஜதானி தில்லி மாநகரத்தில் ராமலீலா மைதானத்தில் ப்ரஷ்டாசாரிகளின் செவிட்டு காது கிழியும் படி சங்க நாதம் செய்துள்ளார்கள்.

    தேசத்தைப் பிளப்பதில் அன்று 1947ல் ஒப்புதல் தெரிவித்த அதே காங்க்ரஸ் கட்சி இன்றைக்கும் பாபா ராம்தேவ் ஸ்வாமி அவர்களின் அறை கூவலை உபேக்ஷித்துள்ளது. இந்த கட்சி தவிர்த்து ஹிந்துஸ்தானத்தின் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் பாபா அவர்களின் உன்னதமான குறிக்கோள்களுக்கு தங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    ப்ரஷ்டாசாரம் இல்லாத நேர்மையான பாரதம் சமைக்க உறுதி பூணுவோம்.

    அன்ய தேசங்களில் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பணம் மீட்க உறுதியுடன் யத்தனிப்போம்

    அகண்ட பாரதத்தை புனர் நிர்மாணம் செய்வோம்

    பாரத வந்தே மாதரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *