நூலின் தலைப்பில் குறிப்பிட்ட பேசுபொருளை விளக்குவதோடு கூட, பொதுவாக கிறிஸ்தவ மதம் குறித்த இந்துக்களின் விமர்சனங்களையும், கிறிஸ்துவ மத வரலாற்றில் உள்ள சர்ச்சைகள், விவிலியத்தில் உள்ள சில விஷயங்கள் ஆகிய பலவற்றையும் முன்னும் பின்னுமாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர். அந்த விதத்தில், கிறிஸ்தவ மதப்பிரசாரங்களை எதிர்கொள்வதற்கும் எதிர்ப்பதற்கும் விழிப்புணர்வு கொண்ட இந்துக்களுக்கு உதவக் கூடிய கையேடு என்ற அளவிலேயே இந்த நூலைக் கருதலாம்…
View More சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்Tag: சுவாமி விவேகானந்தர்
கண்ணனின் கட்டளையற்ற கட்டளையும் நியோ-ஹிந்துத்துவமும்
சுவாமி விவேகானந்தர் உபநிஷதங்களின் சாரத்தை, வேதாந்தத்தின் மகத்துவத்தை மேலைநாடுகளில் முழங்கினார். இதைத் தாங்கொணாத மிஷனரிகள் “இந்தியாவில் இருக்கும் உண்மையான ஹிந்துமதம் பற்றி இவர் பேசவில்லை. மேலைநாட்டு தத்துவங்களைப் படித்துவிட்டு, அதையொட்டி, இவை ஏற்கனவே ஹிந்துமதத்தில் உள்ளன என்று நம்மை ஏமாற்றுகிறார்” என்று பிரசாரம் செய்தனர். பின்பு பால் ஹேக்கர் முதலானோர் தமது நூல்களில் இதனை வளர்த்தெடுத்தனர். சேவை, கர்மயோகம் போன்ற கருத்துக்கள் அனைத்தும் நமது சனாதன தர்மத்தின் அடிப்படையில் என்றும் இருப்பவை. ஆனால் இவற்றை நாம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து கடன் வாங்கினோம். அதனால் தான் பழைய ஹிந்து மதத்தை விட்டுவிட்டு, நியோ-ஹிந்துமதம் எனும் பொய் உருவானது என்பது பல மிஷனரிகளின் வாதம். இதுதான் நியோ-ஹிந்து எனும் கருத்து உருவான இடம்.. ஆனால் இப்போது, சில ஆசாரவாதிகள் காலத்துக்கு ஏற்ப சிந்தனை செய்யும் அனைத்து ஹிந்துத்துவவாதிகளையும் ‘நியோ’ என்று பட்டம் கொடுத்து ஏசுகிறார்கள். நம்மவர்களுக்கு இந்த விபரீதப்பொருள் தெரியுமா என்று எனக்குச் சந்தேகம்தான்… “பழமையை விடமுடியாமல், அதற்காக நிதர்சனத்தைத் தியாகம் செய்யும் அடிப்படைவாதிகள்” என்ற தோற்றம் ஹிந்து தர்மத்துக்குப் பொருந்தாத ஒன்று. அதனைப் பொருந்துமாறு செய்யும் வேலையை ஆசாரவாதிகள் பார்கின்றனர்…
View More கண்ணனின் கட்டளையற்ற கட்டளையும் நியோ-ஹிந்துத்துவமும்இந்துமதமே உலகிற்குத் தன்னை எடுத்துரைத்தது: சுவாமி விவேகானந்தர்
ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான். நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது. அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.. ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார். ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார்…
View More இந்துமதமே உலகிற்குத் தன்னை எடுத்துரைத்தது: சுவாமி விவேகானந்தர்சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் உன்னத இடத்தை வகிப்பவை சுவாமி விவேகாநந்தர் அருளியவை. கேட்பதற்கே மிகவும் எழுச்சியூட்டும் துதியாக அமைந்தது ‘கண்டன பவ பந்தன’ என்னும் துதி. பெரும் சமுத்திர அலைகளின் அணி போல் திரண்டு எழும் நாத அலை போன்றே பாடுங்கால் அமைவது… வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவருக்கு நீஞ்சிக் கரை சேரும் படியாக ஒரு புணை ஒன்றைக் கொடுத்தால் அதைக் கொண்டு கரையை நோக்கி நீஞ்சாமல் அடித்துப் போகும் வெள்ளத்தின் ஓட்டத்தின் வழியிலேயே போவது சுலபமாக இருக்கிறது என்று கொண்டு அப்படியே கடலில் போய் மூழ்கிவிடும் அபத்தமாகத்தான் இந்த ஜீவன் தனக்கு இயற்கையில் கொடுக்கப்பட்ட திறமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது…
View More சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்தாய்மதம் திரும்புதலும் சாதியும்
இந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல… தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது.. விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது… இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள்? விடை மிக எளிது…
View More தாய்மதம் திரும்புதலும் சாதியும்பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை
சுவாமி விவேகானந்தரின் அழைப்பை ஏற்று, அயர்லாந்திலிருந்து பாரதம் வந்து, இந்நாட்டின் தவப்புதல்வியாகவே வாழ்ந்தவர் சகோதரி நிவேதிதை. அவரது 150-வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இந்த ஆண்டு நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, தமிழகத்தில் ரத யாத்திரை நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
கோவையில் ஜனவரி 22,2018 (இன்று) தொடங்கி, சென்னையில் பிப்ரவரி 22,2018 முடிவுபெறும் இந்த மாபெரும் ரத யாத்திரை, 30 நாட்களுக்கு 27 மாவட்டங்களின் வழியாக சுமார் 3,000 கி.மீ. தொலைவைக் கடந்து 2 லட்சம் மாணவிகளிடம் சகோதரி நிவேதிதை ஆற்றிய பணிகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரத யாத்திரையை ஒட்டி, சகோதரி நிவேதிதை குறித்த கட்டுரை இங்கு வெளியாகிறது…
View More பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதைபி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்
பி.ஆர்.ராஜமய்யர் வெறும் 26 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்ற மாபெரும் வரலாற்றுத் துயரம் இந்தப் புத்தகத்துடன் என்றென்றைக்கும் இணைந்து இதற்கு மேலும் ஒரு காவியத்தன்மையை அளித்து விடுகிறது. காதல் மனங்களின் துள்ளல், குயுக்தியும் சிறுமையும் கொண்ட பாத்திரங்களின் நடத்தைகள், வலிந்து புகுத்தப்பட்ட செயற்கைக் கதைப்போக்கு சம்பவங்கள், இறுதியில் வேதாந்தத்தை நோக்கிய திருப்பம் அனைத்தின் பின்னும் அந்த வாழ்க்கையின் துயரத்தின் சுமை படிந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை… அவ்வளவு சிறுவயதில் ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பர், தாயுமானவர் என்று உலகப் பெருங்கவிஞர்களின் கவிதையில் ஆழ்ந்து தோய்ந்த ஒரு மனம். தன் கலைத் திறனால் சிகாகோவையும் லண்டனையும் மூச்சடைக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்ட ஒரு தமிழ் மனம்…
View More பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்
இந்தியாவில் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளின் சபைகளிலும் கூட கிறிஸ்தவத்தின் கொள்கைகளையும், மதமாற்ற பிரசாரங்களையும் தீவிரமாகவும் வன்மையாகவும் சுவாமிஜி கண்டித்தார். அமெரிக்காவில் அவரது புகழைக் குலைக்கும் நோக்கத்துடன் அங்கிருந்த பல கிறிஸ்தவ மிஷன்களும் அமைப்புகளும் எப்படியெல்லாம் அவருக்கு எதிராக மோசமான அவதூறுகளையும் பொய்களையும் பரப்பின என்பதும் அவரது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இப்போது யோக்கியன்கள் போல அவரது படத்தையே போட்டு கிறிஸ்தவ மதப்பிரசாரம்..சுவாமிஜியின் வாய்மொழிகள் அனைத்தும் 8 தொகுதிகளில் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளன. இதில் ஒரு சில இடங்களில் இயேசு கிறிஸ்துவையும் உயர்வாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால்…
View More விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
எந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.
View More ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்
திருவள்ளுவர் – சுவாமி விவேகானந்தர்- இருவருமே மனிதப் பிறவியின் மாண்பை உணர்த்தியிருக்கிறார்கள். தன்னம்பிக்கையின் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார்கள். சோம்பலைத் தூற்றியிருக்கிறார்கள்.முயற்சியின் மேன்மையைப் போற்றியிருக்கிறார்கள். ஒழுக்கத்தின் பெருமையை உணரச் Thiruvalluvar 1செய்திருக்கிறார்கள். நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியைப் பற்றிய கருத்துக்களை அழகாக வடித்திருக்கிறார்கள்.
View More கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்