குழவி மருங்கினும் கிழவதாகும்

திருமால் தம் மார்பில் காடுபோல் துழாய்மாலையை அணிந்துள்ளார். அதிலிருந்து வழியும் தேன் வெள்ளம் பாய்தலால் வழியெல்லாம் சேறாய் கழனிபோலாக,. அத்தகைய சேறான வழியில், கமலத்தணங்காகிய திருமகளின் கை தன் கையாகிய அணையை முகந்து செல்ல ( திருமால் தம் கையை அணையாகக் கொண்டுதான் பள்ளி கொள்கிறார். அதனால் அது தலையணை போல் கையணை ஆயிற்று. திருமாலின் கைக்குள் திருமகள் தன் கையை நுழைத்துத் தழுவிச் செல்வதால் அது முகந்து செல்வதாயிற்று) காதலர்கள் கைகோத்துதுச் செல்வதை மனக் கண்ணில் காண்க…

View More குழவி மருங்கினும் கிழவதாகும்

இந்திய பாரம்பரிய அறிவியல்

இந்தியாவில் எல்லாம் இருந்தது என்று சொல்லாதீர்கள், இந்தியாவில் ஒன்றுமே இல்லையென்றும் சொல்லாதீர்கள்.ஒரு நாகரிகம் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.உண்மையிலேயே இங்கே என்ன இருந்தது என்று தெரிந்துகொண்டு அதை மட்டும் சொல்லுங்கள்!… நமது ரிஷிகள் தெளிவாகவே இவை அனைத்தும் வெறும் செவிவழிச் செய்தியல்ல, உலக நன்மைக்காக அனுபவத்தாலும், பயனை திரும்பத்திரும்ப பரீட்சித்துப் பார்த்தும், முறையாக வளர்த்தெடுக்கப்பட்ட அறிவு என்று தெரிவிக்கிறார்கள்… வெவ்வேறு சொற்களைக் கொண்டு எண்களைக் குறிப்பது சுலபம். கூடுதலாக கவியுணர்வும், அழகியல் உணர்வும் இருக்கும். படித்து மனனம் செய்யவும் ஏதுவாக இருக்கும்…

View More இந்திய பாரம்பரிய அறிவியல்

ரமணரின் கீதாசாரம் – 2

தேகம் வேறு, ஆன்மா வேறு என்று பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு. அது அனைத்து சீவராசிகளையும் ஒன்றாகவே பார்க்க வைப்பதால், அது ஒரு புண்ணியச் செயல். அப்படியில்லாது இவர் வேறு, அவர் வேறு என்ற ரீதியில் நான்-நீ என்று பகுத்துக் காட்டும் அறிவு பகுத்தறிவு ஆகாது. அப்படி பேதங்களைப் புகுத்தும் எதுவும் பாவச் செயல்களே.

View More ரமணரின் கீதாசாரம் – 2

ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்

கடல் போன்ற உபநிடதங்களைக் கடைந்து, கண்ணன் வழங்கிய ஆரமுதான கீதையின் சாரமாக, நமக்காக பகவான் ரமணர் தந்த, சுருக்கமான பொருட்செறிவு மிகுந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய புதிய தொடர்!

View More ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்