தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. ஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன?…..
View More நெருக்கடி நிலை யாருக்கு?Tag: ஜனநாயகம்
தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!
குடிமைப்பணி அதிகாரிகள் எங்கு பணி புரிந்தாலும், அவர்கள் மத்திய அரசுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்களே மத்திய- மாநில உறவுகளையும் உறுதிப்படுத்துபவர்கள். எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும். தற்போது தென்படும் விரிசல்கள் பெரும் விலகலாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு… ஜனநாயகத்தின் முதல் இரு தூண்களிடையே நடைபெறும் உரசல்கள் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது…
View More தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!இந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்
நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியாவிற்கு என ஒரு அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க டாக்டர் அம்பேத்கார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் சோசலிஸ்ட், செக்யூலர் என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை. இந்த இரண்டு வார்த்தைகளும் 1976-ல் சேர்க்கப்பட்டன. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத திருமதி இந்திரா காந்தி, 1975-ல் நாட்டில் அவசர நிலையை அமுல்படுத்தி ஒரு வருடம் கழித்து இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது… பல ஷரத்துக்களில் இந்திரா காந்தி அரசுக்கு சர்வாதிகார உரிமைகள் அளிக்கும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதை மறைப்பதற்காகவே, அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் இரண்டு வார்த்தைகளை இணைத்தது என்பதை மறக்க கூடாது. ஏன் இதை நிரந்தரமாகவே நீக்க வேண்டும் என்பதற்கு அதிக காரணங்கள் உள்ளன. செக்யுலர் அரசியல் கட்சிகள் பதவிக்கு வரும் போது சட்டத்தின்படி ஆட்சி செய்யாமல், வாக்கு வங்கி அரசியல் நடத்துக்கிறது….
View More இந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? எந்த வகையிலும் வருமானம் வர வாய்ப்பில்லாத சிலர் ஒன்றுகூடி கட்சி அமைப்பதும், அவர்களிடம் கோடி கோடியாகப் பணம் கொட்டிக் கிடப்பதும் எப்படி? தெரியவில்லையே… நமது தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அப்புறம் இருக்கட்டும். நமது மக்கள் மனங்களில், அரசியல் கட்சியினரின் மனங்களில், பதவிக்கென்று ஆலாய் பறக்கும் சுயநலமிகள் மனதிலும், இவர்களது ஆதாயங்களைக் காட்டிலும், இந்த நாட்டின் எதிர்காலமும், மக்களின் வளமும், செல்வமும், பெருமையும் பெரிது, மிகப் பெரிது என்ற எண்ணத்தை முதலில் உருவாக்க வேண்டும். இந்த மாற்றத்தை எந்த சட்டத்தாலும் கொண்டுவர முடியாது. மனமாற்றம் ஒன்றுதான் இதற்கு வழி…
View More பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?ஜனநாயக மரபுகளைக் காப்போம்!
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் செயல்பாடுகளில் மக்களை திகைக்க வைத்த செய்தி சோனியா காந்தியின் புதல்வர் ராகுல் காந்தி எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வெளியேறி, அங்கு பத்திரிகையாளர்களிடம் அவையில் ஒரே ஒரு குரல் மட்டும்தான் கேட்கிறது. மற்ற குரல்களுக்கு அங்கு இடமில்லை என்பதுபோல சொல்லியிருப்பதுதான்…. பிரதமர் மோடி தன்னுடைய ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் கண்ணியத்தையும், ஒழுங்கையும், நாட்டு நலனே மற்ற எல்லா நலன்களுக்கும் மேலானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியும் நடந்து காட்டியும் வருகிறார்….
View More ஜனநாயக மரபுகளைக் காப்போம்!ஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா?
அரசு அணைக் கட்டுவதாக இருந்தால், நிலப்பரப்பைக் கொடுப்பவர்களுக்கு முறையாக வேலை வாய்ப்பு, இழப்பீடு என்பதை செய்ய அறிவுறுத்துவது சரியா? அல்லது கிராம சபை உத்தரவு கொடுத்தால்தான் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அரசுகளிடம் போராடி நிலங்களை இழப்பவருக்கு அனைத்துக் கட்சிகளும் போராடலாம். அப்பகுதி மக்கள் போராடி முறையான இழப்பீட்டையும், வேலை வாய்ப்பையும் கேட்டுப் பெறுவதுதான் சரியே ஒழிய, இதை இங்கு வர விட இயலாது என சொல்வதென்பது இந்தியாவின் கட்டுமானத்தையும், தொழில், விவசாய, மின் வளர்ச்சியையும் நிச்சயமாகப் பாதிக்கும்… எதைப்பற்றியும் தெளிவுப்படுத்தாமல் அதிகாரப் பகிர்வை கெஜ்ரிவால் முன்னிறுத்துகிறார் என்பதை மட்டும் வைத்து அவரை ஆதரிப்பதை அவரை ஆதரிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். அதிகாரப் பகிர்வை முறையாக எங்கு செலுத்த வேண்டும் என்கிற புரிதலின்றி செயல்படுதல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த உதவாது என்பது திண்ணம்….
View More ஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா?ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?
அன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் (ரூ. 1.76 லட்சம் கோடி) குறித்து சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த ஆ.ராசாவை பதவி விலகச் செய்த காங்கிரஸ் கட்சி, அதே போன்ற நிலக்கரி சுரங்க ஊழலை (ரூ. 1.86 லட்சம் கோடி) சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த மன்மோகன் சிங்கை நீக்குவது தானே முறை? தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது? இதில் உச்சபட்ச நகைச்சுவை, பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக சோனியா அம்மையார் முழங்கி இருப்பது தான். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பல்வேறு தருணங்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வாறெல்லாம் அமளியில் ஈடுபட்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
View More ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…
அண்ணா ஹஸாரே போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டால் போதும், மக்களுக்கு ஏதோ நடக்கிறது என்று தோன்றும். ஏதோ தாங்கள் சாதித்துவிட்டது போல தோன்றும். அடுத்த தேர்தலில் எல்லா ஊழலுக்கும் காரணம் மன்மோகனின் நரைத்த தலைதான் காரணம். எனவே கன்னத்தில் குழி விழ சிரிக்கும் ராவுல் வின்ஸியை தேர்ந்தெடுங்கள் என்று மீண்டும் நாட்டை குழியில் தள்ள சோனியா காங்கிரஸின் பெரும் மூளைகள் திட்டம் போட்டிருக்கலாம்….
View More ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2
பிரிட்டிஷ் ஊடக நிறுவனம் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் வெறுப்பை கக்கும் பாடத்திட்டங்களை பற்றின நிகழ்ச்சியை ஒளிபரப்பி உள்ளது…”Patriotic Indian Americans” என்று கூறுகையில் திரு.ஒபாமா அமேரிக்காவிற்கான தேசப்பற்றைத்தான் குறிப்புணர்த்துகிறார். இந்தியாவிற்கு அல்ல!… ஒரு ஹிந்துவான, இந்தியனான எனக்கு எது நியாயமோ, தர்மமோ, அதே நியாயங்கள் வெள்ளையனுக்கும் பொருந்தும்.
View More கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2சீனா – விலகும் திரை: ஒரு பார்வை
சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள்..அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை.. “அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை..
View More சீனா – விலகும் திரை: ஒரு பார்வை