இசையால் தோய்த்து எடுத்திருக்கிறார் இந்தப் புதினத்தை. தி.ஜா.வின் எழுத்துக்களை, கற்பனையை ஸ்வரமாக்கி வரமாக்கி வைத்திருக்கிறார்.. பாபுவை கண்டுபிடித்த யமுனா அவனுடன் இணையும் பொழுது வரும் வயலின் கூட்டம், மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை கமகத்துடன் கமகமவென்று இசை வாசனை வீசைசெய்வது தெய்வீகம்… இளையராஜாவின் இசை – தி.ஜானகிராமனின் மோகமுள்ளுக்கு கிடைத்த பாக்கியம், “பொன்னியின் செல்வன்” தவறவிட்ட மகுடம்…
View More மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்Tag: தஞ்சாவூர்
அஞ்சலி: தஞ்சை வெ.கோபாலன்
தஞ்சையில் இருந்தபடியே, தனியொருவராக பாரதி இலக்கியப் பயிலகம் மூலமாக அஞ்சல்வழியில் பாரதி பாடங்களை 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கற்பித்து வந்தவர். தேசியமும் தெய்வீகமும் தமிழகத்தில் தழைக்க வேண்டும் என்பதே முழு மூச்சாகக் கொண்டிருந்தவர்; தேசிய சிந்தனைக் கழகத்தின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர். கலைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தஞ்சை குபேர நாட்டியாஞ்சலி ஆகிய அமைப்புகளின் தலைவராக இருந்தவர்.
View More அஞ்சலி: தஞ்சை வெ.கோபாலன்அஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்
தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றிருந்த இவர், ஐம்பது வயதுக்குப்பின் தனது வழக்கறிஞர் பணியை விடுத்து, முழுநேரமும் தமிழ்ப்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். சைவத்திருமுறைகளின் பல பகுதிகளை ஆங்கிலத்தில் நேர்த்தியாக மொழிபெயர்த்தது இவரது மாபெரும் பங்களிப்பாகும். வாழ்நாள் முழுவதும் தீராத ஆர்வம் கொண்ட படிப்பாளியாக விளங்கிய டி.என்.ஆர் அவர்களது இலக்கத்தில் அவர் வைத்திருக்கும் தனிப்பட்ட புத்தக சேமிப்பில் 50,000க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன…
View More அஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்தமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி அனைத்து திக்கிலும் சுற்றி வளைத்தது போல சர்ச்சுகள் வந்துவிட்டன என்று கூகிள் வரைபடத்தைப் பல நண்பர்கள் பகிர்ந்து ஆவேசப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது திடீரென்று நடந்து விட்ட ஒன்றா என்ன? தமிழகத்தின் ஒவ்வொரு சிறு/பெரு நகரத்திலும் ஊர்களிலும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு துல்லியமாக திட்டமிட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்துக்கள் ஒன்றிணைந்து அங்கங்கு நிகழும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பைத் தம்மளவில் தடுத்து நிறுத்த இப்போதே முனைந்து செயல்படாவிட்டால்…? உங்களுடன் இப்போது இளித்தும் சிரித்தும் பேசிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களின் சந்ததிகள் வெறிபிடித்து வந்து உங்கள் கோயில்களை இடிப்பார்கள், சிதைப்பார்கள், இந்துவாக நீங்கள் வாழவே முடியாது என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்…
View More தமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்அஞ்சலி: நெல் ஜெயராமன்
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் (வயது 50) காலமானார். அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி. நெல் ஜெயராமன் தமிழகத்தின் அத்தனை திசைகளிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தார். நெல் திருவிழாவில் உலகின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு விவசாய ஆய்வாளர்களைப் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு போதிய பயிற்சி அளித்து விவசாய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இலட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபட வைத்து, உற்பத்தியை பெருக்கி அதனை சந்தைப்படுத்தியதன் மூலம், உலக விவசாயிகளின் பார்வையை காவிரி டெல்டா பக்கம் திரும்பச் செய்தார்…
View More அஞ்சலி: நெல் ஜெயராமன்கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள வேதாரண்யம், திருத்துறைபூண்டி, பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ஆர்எஸ்எஸ் – சேவா பாரதி புயல் நிவாரண பணி முகாம்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொருளாகவும், பணமாகவும் உதவி செய்ய விரும்புவோருக்கான தொடர்புகள் கீழே… புயலுக்கு பின் முதலில் களத்திற்கு வந்த சேவாபாரதி சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த முடிவு செய்து பணியை துவக்கியது. பெட்ரோலால் இயங்கும் ரம்பங்கள் திருப்பூரிலிருந்து வாங்கி அனுப்பப்பட்டது. அதோடு 10,000 எம் ஏ எச் திறனுள்ள பவர் பேங்க் 200 முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்டு அங்கு நிவாரணப்பணியில் களத்தில் இருப்பவர்களுக்கும், அரசு நிர்வாகத்தில் இயங்குபவர்களுக்கும் வழங்கப்பட்டது. பழைய ப்ளெக்ஸ்கள், தார்பாய்கள் வாங்கப்பட்டு தற்காலிக முகாம்கள்,உடைந்த கூரைகள் மீது போட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் மிக முக்கியமாக உணவுப்பொருட்களை அனுப்பும் துவங்கியது…
View More கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்எப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்
சாஸ்திரிகளின் கீர்த்தனைகள் பக்திச் சுவை நிரம்பியவை. சக்தி உபாசகரான அவரின் பெரும்பாலான கீர்த்தனைகள் அம்பாளைக் குறித்தே, அதிலும் அவரின் பூஜ்ய தேவதையான பங்காரு காமாட்சியைக் குறித்தே அமைந்தவை. ..‘மாயம்மா’ என்ற ஆஹிரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை மனமுருகப் பாடினார். மும்முறை ‘நம்பினேன்’ என்று சொல்வதின் மூலம் அம்பிகையின்மேல் அவர் வைத்த அசையாத நம்பிக்கை புலப்படுகிறது. உள்ளத்தை உருக்கும் அப்பாடலைக் கேட்டு அங்கிருப்போர் மட்டுமல்ல மீனாட்சி அம்பிகையே மனமுருகியிருக்க வேண்டும்… அவரது கீர்த்தனைகள் நுட்பமான தாளக் கணக்குடன் அமைந்தவை. குறிப்பாக, மிஸ்ர சாபு தாளத்தை அவர் அசாதாரணமான முறையில் கையாண்டிருக்கிறார். இதனால், தேர்ந்த சங்கீத வித்வான்களால் மட்டுமே அவரது கீர்த்தனைகளை அனுபவிக்கவும் பாடவும் முடிகிறது. நாட்டியங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த ஸ்வரஜதியை, செவ்விசை வடிவமாக்கிய பெருமை அவருக்கு உண்டு…
View More எப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்
நேற்று தமிழ்ப் புத்தாண்டு அன்று தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது பயங்கரவாதிகளால் கல்வீசி தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான பின்னணி நாளிதழ்களில் வெளிவரவில்லை… தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறை மருத்ததால், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் சதியை கண்டறியக்கோரியும் பா.ஜ.க தொண்டர்கள் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்….
View More தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி
குருநாதரின் விருப்பப்படி அவர் ஜீவசமாதி அடைவதற்கான இடத்தைத் தயார் செய்தார்கள். ஜீவசமாதி அடைவது என்பதற்கு சில விதிமுறைகள் உண்டு…. குழியின் அடியில் நடுவாக சதுரமாகச் செய்து அதன் மீது தேனொழுகும் மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் போன்றவற்றைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும். நல்ல பிரகாசமான தீப ஒளியைக் குழிக்குள் காட்ட வேண்டும்…. அந்த வழியில் தன் உடலை ஜீவசமாதி வைத்திட வேண்டுமென்று சதாசிவ பிரம்மேந்திரர் உத்தரவு இட்டார். அவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விதிமுறைகளின் அமைக்கப்பட்ட குகை போன்ற குழியில் இறங்கி குருநாதர் அமர்ந்து விட்டார்….
View More சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதிசித்தருக்குக் கிட்டிய சித்தி
நெரூரில் சமாதி கொண்ட சித்தர் சதாசிவ பிரம்மேந்திரர். இவருடைய சமாதியின் மேல் வளர்ந்திருக்கும் விருக்ஷம் பட்டுப் போனது, இப்போது மீண்டும் துளிர்த்து வளர்வதைக் காண மக்கள் வந்து போகிறார்கள். காவிரிக் கரையில் அமைதியான சூழலில், வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சுகின்ற இடத்தில் அமைந்திருக்கிறது இவரது சமாதி….. தஞ்சாவூர் மாரியம்மன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படும் இந்த மாரியம்மன் கோயில் இருக்குமிடம் புன்னைநல்லூர். தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியை மன்னன் சொல்ல, அந்த மகான் எழுந்து அந்த புற்றை மாரியம்மனாக உருவாக்கினார். இந்த மாரியம்மனை இதர மதத்தாரும் வந்து வழிபடுவதை நாம் பார்க்க முடிகிறது…
View More சித்தருக்குக் கிட்டிய சித்தி