அண்மையில் மிகவும் பாதித்து மிகவும் மனத்தளர்ச்சியில் தள்ளிய விடயம் – குழந்தை ருத்ராவின் வீடியோ. அவளுக்கு நம் மீது எத்தனை கோபம் இருந்தாலும். எந்த மேடையில் ஏறி எத்தனை வசை மொழி பொழிந்தாலும் – அவள் என்றும் நம் வீட்டு குழந்தைதான். ஏனெனில் அவள் தந்தையும் அவள் சகோதரர்களும் அந்த குடும்பமும் செய்த தியாகம் அத்தகையது.. அந்த குழந்தையின் மீதும் அவள் குடும்பத்தின் மீதும் உள்ள அளப்பரிய அன்பாலும் மதிப்பினாலும் மட்டுமே, அவள் சொல்வதில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது…
View More இந்து தியாக வீரர் குமார் பாண்டியன் குடும்பத்து வாரிசு எதிரணியில்: வேதனைTag: தமிழக பாஜக
ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை
பெண்விடுதலை என்பது ஈவெராவால் முன்னெடுக்கப்படவில்லை. அதை முன்னெடுத்தவர்கள் வேறு பலர்.. ஈவெரா கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய இடம் கீழ்வெண்மணி விஷயத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை. பொதுவாக அவரிடம் இருந்த சாதியம். ஈவெரா குறித்து எவ்வித மலினமும் ஆபாசமும் இல்லாமல் காத்திரமானதோர் விமர்சனத்தை முன்வைத்தவர் தேசிய சுகாதார தொழிலாளர் துறை தலைவராக இருக்கும் ம.வெங்கடேசன், இந்துத்துவ இயக்கத்திலிருந்து வந்தவர்..
View More ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லைமோதி 3.0 : தேசிய, தமிழக, தர்மக் கணக்குகள்
வட இந்தியாவில் முஸ்லிம் அடிப்படைவாத ஆதிக்கம், தெற்கில் கிறிஸ்தவ அடிப்படைவாத ஆதிக்கம் என வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான ஆப்ரஹாமிய அடிப்படைவாத சக்திகளின் இலக்கு இது. வரவிருக்கும் தலைமுறையை நம் தெய்வங்களால் காப்பாற்ற முடியாது. இந்து ஆன்மிக, அரசியல், சமூகத் தலைவர்கள் ஏதேனும் செய்தால்தான் உண்டு…
முதல் பத்தாண்டுகளில் இந்து மறுமலர்ச்சி என்பதைவிட தேசத்தின் வளர்ச்சி என்பதையே பாஜக முத்திரை முழக்கமாக வைத்து ஆட்சியை நடத்திவந்திருக்கிறது. தொடர்ந்து இரண்டு மூன்று முறை வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன காரணத்தினாலோ அந்தக் கட்சி மீது அதிருப்தி வந்துவிடுகிறது. பாஜகவும் அந்த சலிப்பினால் ஓரங்கட்டப்படுவதற்கு முன்பாக சுதாரித்துக் கொள்ளவேண்டும். பாஜக தனக்கான பி.டீம்களைக் கண்டடைந்தாகவேண்டும்..
அதிமுகவின் தலைவர்கள்தான் இந்து விரோதிகளாக இருக்கிறார்களே தவிர அதிமுகவின் வாக்காளர்கள் அப்படி அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அவர்களுடைய ஆதரவு பாஜகவுக்குக் கிடைக்கவேண்டுமென்றால்..
ஈ.வெ.ராவை விட அம்பேத்கர் பல மடங்கு மேலானவர். அந்தவகையில் பாஜக அவரை தமது வழிகாட்டிகளில் ஒருவராகச் சொல்கிறது. ஆனால், பிராமணிய எதிர்ப்பு என்றவகையில் ஈ.வெ.ரா மற்றும் அம்பேத்கரை பாஜக நேச சக்தியாகவே கருதுகிறது. அதனால்தான் திமுக மீது காங்கிரஸ் அளவுக்குக்கூட எந்தவொரு நடவடிக்கையையும் பாஜக எடுப்பதே இல்லை. திமுகவின் இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு ஆகியவற்றையாவது பாஜக தீவிரமாக எதிர்க்கலாம். அதையும் செய்வதில்லை…
(முழுக்கட்டுரையையும் இணையதளத்தில் வாசிக்கலாம்)
View More மோதி 3.0 : தேசிய, தமிழக, தர்மக் கணக்குகள்அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்
அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது.. அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது… இந்தப் புத்தகத்திற்கு அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜே.சாய் தீபக் ஆகிய இரண்டு சிந்தனையாளர்களும் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளனர். புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசும் அந்த இரண்டு முன்னுரைகளையும் கீழே தருகிறோம்..
View More அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?
உண்மையான எதிரிகளைப் பந்தாடினால்தான் இந்த உள் முரண்கள் விலக வழி பிறக்கும். இது தொடர்பாக மத்தியிலிருந்து எந்தவொரு பெரிய முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. மத்திய பாஜக செய்யும் ஐந்தாவது தவறு இது… இந்த விளையாட்டுக்கு அண்ணாமலை தயாராக இல்லை. இது மிகவும் நியாயமான விஷயம் தான். தலைமைப் பதவிக்கு எந்தவித அரசியலும் செய்யாமல் நேரடியாக வந்தவர் அப்படியான நிமிர்வுடன் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை… இதில் ஒரே ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், கூட்டணி பற்றிய விவாதம் உள்ளரங்கில் நடக்கவேண்டியது. எதனால், யாரால் பொதுவெளிக்கு வந்தது?…
View More அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு
தமிழக அரசியல் வரலாறு குறித்த முக்கியமான நூல் சுப்பு எழுதிய திராவிட மாயை (2010) நூலின் ஆங்கிலப் பதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இன்றைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாஜக மையமாகப் பேசக்கூடிய விஷயங்களுக்கான கருத்தியலை 10-12 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ஹிந்து இணையதளம் வளர்த்தெடுத்து வந்திருக்கிறது..
View More திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடுசிங்கக்கொடி நாட்டில் சிங்கம்: இலங்கையில் தலைவர் அண்ணாமலை
அண்ணாமலையின் பயணம் அரசுமுறைப் பயணம் அல்ல. இக்கட்டான நிலையில் இருக்கும் இலங்கையில் என்ன நடக்கிறது என்று நேரில் அறிந்து வரவும், ஆறுதல் சொல்லவும், அபயக்கரம் நீட்டவும். அதன் பின்னான அரசியல் ஆக்கங்களைச் செய்யவும் ஓர் அருமையான வாய்ப்பாக இந்தப் பயணம் அவருக்கு அமைந்திருக்கிறது. இப்படி ஒரு அழைப்பை திமுக ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? உள்மனது சொல்லுகிறது, முடியாது. அங்கே அவர்களுக்கு வரவேற்பு கிடைக்குமா அல்லது வேறு ஏதும் கிடைக்குமா என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது..
View More சிங்கக்கொடி நாட்டில் சிங்கம்: இலங்கையில் தலைவர் அண்ணாமலைஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?
ஊழலற்ற நிர்வாகத்துக்காக, நல்ல சாலைகள் கிடைத்திட, நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட, தன் வசதிக்கேற்ப மொழிவெறி, சாதிவெறி, மதவெறியைத் தூண்டி அதில் குளிர்காயாமல் இருக்க… ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது? ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது? இத்தேர்தலில் பாஜக வெல்லுமா?…
View More ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்
பதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்… பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்கும் குற்றத்தை பாஜக மீண்டும் மீண்டும் செய்யும் என்கிறேன்….
View More தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்காலா: திரைப்பார்வை
ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்… மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்…இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்…
View More காலா: திரைப்பார்வை