அதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணி. ம.ந.கூ என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்பும் நச்சுக் கிருமிகள், நாசகார ஏஜெண்டுகளான மார்க்சிஸ்டுகள் இந்தக் கூட்டணியில் இருப்பதினால் மட்டுமே கூட இது கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டும். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே உலை வைத்து விடுவார்கள்… கூட்டணியின் தலைவர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதராக இருக்கலாம். அவரைத்தான் இவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இவர் ஜெயலலிதாவை விடவும் மோசமான உடல் மற்றும் மன நிலை உடையவராக இருக்கிறார். குணா என்னும் சினிமாவில் புத்தி ஸ்வாதீனமில்லாத மகன் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று மோசடி செய்ய முயலும் அவனது அம்மாவின் கும்பலைப் போன்றது இந்தக் கூட்டணி….
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)Tag: தமிழ்நாடு
தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)
ஒரு உடல் நலன் இல்லாத அதிகார வெறி பிடித்த மர்மமான ஒரு பெண்மணிக்கு ஏன் தமிழ் நாடு வாக்களிக்க வேண்டும்? சிந்தியுங்கள். ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவை ஓய்வும், மருத்துவ சிகிச்சையும், பயிற்சிகளும், மருந்துகளுமே அன்றி நிச்சயமாக முதல்வர் பதவி கிடையாது. அதற்கான அருகதையுடையவர் அவர் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவருக்குத் தேவையான ஓய்வை அளியுங்கள்… தமிழ் நாட்டில் முக்கியமான இந்துத் தலைவர்கள் பலரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். ஆம்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெரும் கலவரம் நடத்தி போலீஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கி பெண் போலீஸ்காரர்களை மான பங்கப் படுத்தினர். இது எதையும் கண்டு கொள்ளாமல்இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழ் நாட்டில் வேர் விட்டு வளர அனுமதி அளித்து வைத்திருக்கிறார் ஜெயலலிதா. ஓட்டுக்காக இவர் அனுமதித்திருக்கும் பயங்கரவாதம் நாளைக்கு ஒட்டு மொத்தத் தமிழ் நாட்டையே அழித்து விடக் கூடியது. நீங்களும் உங்கள் மனைவி குழந்தைகளும் குண்டு வெடித்துச் சிதறும் அபாயம் தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ளது. ஊழல் மலிந்த நீர், மின்சாரம், கல்வி, பாதுகாப்பு,சாலை, வேலை என்று அனைத்து துறைகளிலும் மெத்தனமும் செயலின்மையும் ஊழல்களும் மலிந்த ஜெயலலிதா அரசு உடனடியாக நீக்கப் பட வேண்டும்…
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)
இது வெறும் அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல. நம்மையும் நமது வாரிசுகளையும், நமது எதிர்கால சந்ததியினரையும் தனிப்பட்ட அளவிலும் பாதிக்கச் செய்யும் ஒரு முக்கியமான பொது நிகழ்வு ஆகும். எப்படி உங்கள் கல்வி, திருமணம், குழந்தைகள் நலன், வீடு கட்டுதல்/வாங்குதல், வேலை போன்றவற்றிற்கு எல்லாம் அதி முக்கியத்துவம் தருவீர்களோ அது போன்ற ஒரு முக்கியத்துவத்தைத் தயவு செய்து இந்தத் தேர்தல் குறித்தான எனது வேண்டுகோளுக்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்… உலக வரலாற்றிலேயே மாபெரும் ஊழல்களை நிகழ்த்தியவை தி மு க வும் காங்கிரஸும். வேறு எந்த நாட்டிலும் இவர்கள் கைது செய்யப் பட்டு மரண தண்டனையோ அல்லது வாழ்நாள் முழுக்கச் சிறையோ அளிக்கப் பட்டு நிரந்தரமாக ஜெயிலில் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமே மீண்டும் மீண்டும் இவர்கள் தேசத்தைக் கொள்ளையடிக்கத் தேர்தலில் போட்டி போடுகிறார்கள்.,,,
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா?
செம்படம்பர் மாதம் முதல் 2015 துவக்க காலம் வரை தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது, இம்மாதிரியான கேள்வி எழ முக்கிய காரணம், தமிழகத்தின் முதலவராக பதவி ஏற்ற திருவாளர் பன்னீர்செல்வம், இன்னும் தன்னை ஒரு நிதி அமைச்சரகவே கருதுவதால் ஏற்படும் பிரச்சனையாகும்… கள்ளநோட்டு புழக்கம் அதிக அளவில் நடமாடுவதாக உளவுத் துறையினர் தகவல்களை கொடுத்தாலும், கள்ள நோட்டு கும்பலை பிடிப்பதில் அக்கரை காட்டாத அரசு… மருத்துவ மனைகளில் பச்சிளம் குழந்தைகள் பரிதபமாக பலியனதை கண்டு கொள்ளாத அரசு இந்த அரசு. மருத்துவ மனைகளில் உரிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் நியமிக்காமல் காலந் தாழ்த்தியதால் ஏற்பட்ட இழப்பு என்பதை கூட புரிந்து கொள்ளாத அரசு…
View More தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா?பாஜகவும் இப்தார் விருந்தும்
இஸ்லாமிய சகோதரிகள் ராமருக்கு ஆரத்தி எடுத்தால் மெச்சுகிறோம். கிருஷ்ணாஷ்டமியில் நம் இஸ்லாமிய சகோதரிகள் அவர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வடிவ அலங்காரம் செய்து அழைத்து வரும் போது அதை பாராட்டுகிறோம். அதையேநம் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு செய்தால் எதிர்க்கிறோம். நாம் என்ன வகாபிகளா? ஏன் இந்த இரட்டை டம்ளர் முறை? இந்த நாட்டை, இங்குள்ள பண்பாட்டை, கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அதே வேளையில் ஏற்றுக்கொள்பவர்களை ஆதரிக்க வேண்டும். அரவணைக்க வேண்டும். அவர்கள் நம்மவர்கள். நம் சொந்தங்கள். நம் தொப்புள்கொடி உறவுகள்.
View More பாஜகவும் இப்தார் விருந்தும்எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 1
…ஆனால், இப்பொருள்களுக்கு விலையில்லாமல் இல்லை. திமுக ஆட்சியில் விநியோகிக்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 1000-க்கு வெளிச்சந்தையில் கிடைத்த்து போலவே, அதிமுக ஆட்சியில் விநியோகிக்கப்படும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் சுமார் ரூ. 5,000-க்கு விற்பனைக்கு உடனுக்குடன் கைமாறுவதையும் காண முடிகிறது. … முந்தைய கருணாநிதி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதன் விளம்பரப்படத்தில் முதல்வர் படம் மட்டும் தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இத்திட்டம் ஒருவகையில் ஏழை மக்களும் நவீன மருத்துவ சிகிச்சை பெற உதவினாலும், இதன் பலனை பெருநிறுவன மருத்துவமனைகள் துஷ்பிரயோகம் செய்வதாகவும் தகவல்கள் வருகின்றன.
View More எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 1முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்
முல்லை பெரியார் விஷயத்தில் வெளிவராத பல தகவல்கள் உள்ளன. இதில் சமூக விரோதிகளை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. கேரளாவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதும் பொருளாதார முற்றுகை என்ற பெயரில் போராடுவதும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும். அரசியல் கட்சிகள் நிலநடுக்க பீதியைக் கொண்டு அரசியல் நடத்துவதில் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய நியாயம் இருக்கிறது. இதில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு என்ன வேலை? இங்கு தான் அவர்களது ஐந்தாம் படை ரகசியம் இருக்கிறது. அவர்களது வெறுப்பூட்டும் பிரசாரத்தின் அடிப்படை சபரிமலை என்பதே அது.
View More முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
திறமையான மாணவர்களை மனப்பாட அடிப்படையிலான முதற்கட்டம் நீக்கிவிடுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான CBSE பள்ளிகள் முதற்கட்டத்தைத் தாண்ட இயலவில்லை… பொதுவாக மாணவர்களைச் சலுகைகளை எதிர்நோக்கும் சவலைக் குழந்தைகளாக்கி, ஆசிரியர்களை அரசியல்வாதிகளின் கூட்டணிக் கட்சிகளாக்கும் தி.மு.க-வின் தந்திரத்தினால்…
View More தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1
2000 ஆண்டுகள் கடந்த பின்னும் ஒரு புலவனின், நீதியறிஞனின் சொற்கள் இன்னமும் புரிகின்றன, சமுதாயத்துக்குப் பொருத்தமாக உள்ளன என்பதே இமாலய வியப்பு. அதில் ஒவ்வொரு சொல்லுமே இன்றைய சிந்தனைக்குச் சரியாகப் பொருந்தி வர வேண்டும் என்று எண்ணுவது கேட்பவனின் மடமையே தவிர, வள்ளுவனின் தவறு அல்ல… அவர்கள் இருவருக்குமே கிறித்துவ தத்துவப்படி பிறவி என்பது ஒன்றே என்பதுதான் எண்ணம்… அம்மயக்க நிலையிலேயே கேள்விகள் கேட்கக் கேட்க, ஒருவர் எடுக்கும் பல பிறவிகள் பற்றி மருத்துவர் அறிகிறார்..
View More பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1எல்லாப் புகழும் விநாயகனுக்கே!
கோவையில் விநாயகர் சிலைகளை ஏற்கனவே வைத்து வழிபட்ட இடங்களிலும் கூட அனுமதி மறுத்தது காவல்துறை. பல இடங்களில் முஸ்லிம்கள் நடத்திய அமளியால் கலவர அச்சம் ஏற்பட்டது… முஸ்லிம் தரப்பே தவறு செய்தபோதும், இருதரப்பு மோதலாக சித்தரித்து, கைது செய்தனர். காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது முற்றிலும் மறைக்கப்பட்டது.. குனியமுத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட 100 விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யாமல் இந்து முன்னணியினர் அதே இடங்களில் வைத்து சத்தியாக்கிரகம் செய்தனர்…. இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் அவர்களின் பிரத்யேக பேட்டி, மற்றும் கண்கவர் விநாயகர் ஊர்வல புகைப்படங்கள்…
View More எல்லாப் புகழும் விநாயகனுக்கே!