எவ்விதமான மொழியறிவோ, இலக்கிய அறிவோ, ஆன்மீக அறிவோ இன்றி இறை மறுப்பு என்ற பெயரிலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இறை நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் போக்கினை பாரதி தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது… நேர்மறையானதொரு எதிர்வினையாக பாரதி தமிழ்ச் சங்கம் ஜூலை 19 மாலை 6:00 மணிக்கு இணையம் வாயிலாக நடத்திய நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்தனர்…
View More கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வுTag: திருச்செந்தூர்
கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு
பல அச்சுப் புத்தகங்களிலும் இணையதளங்களிலும் காணப்படும் கந்தர் சஷ்டி கவசம் நூற்பிரதியில் பல்வேறு பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இதைக் கண்ணுற்ற கவிப்பெருஞ்சுடர் ஹரி கிருஷ்ணன் அவர்கள், “கண்ணுக்குத் தெரிந்த பிழைகளைக் களைந்து கூடுமானாவரை பிழையற்ற பதிப்பாக ஒன்றை இணையத்துக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்” என்று ஃபேஸ்புக் மூலம் முன்னெடுத்து, சைவ அறிஞர் ஜாவா குமார் மற்றும் சில நண்பர்கள் உதவியுடன் இந்தத் திருந்திய வடிவத்தை வழங்கியிருக்கிறார். இதனை நமது வாசகர்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்…
View More கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்புஅளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்
குமரன் தன் பிஞ்சுக் கைகளால் சப்பாணி கொட்டுகிறான். இவன் சப்பாணி கொட்டக் கொட்ட என்ன நடக்கிறது? எட்டுக் குல மலைகளும் குலுங்கிப் பாதிப் பாதியாக விழுகிறது! மேரு மலையும் அதிர்வடைகிறது! தேவர்கள் நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. நாம் உய்ந்து போனோம் என்று சந்தோஷமடைகிறார்களாம்… “இப்படிக் கேட்டால் சொல்ல மாட்டேன் முறைப்படி நீங்கள் சீடனாக அமர்ந்து கேட்டால் சொல்லுவேன்” என்கிறான் குமரன். மைந்தன் சொன்னபடியே. சீடனாகக் கீழே அமர்ந்து பணிவோடு உபதேசம் பெறுகிறான் தந்தை… “கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண் குறிப்பறிந்து அருகணைந்து, உன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கு எனக் குறையிரந்து, அவள் தொண்டைவாய்த் தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன்” என்று முருகன் வள்ளியிடம் காதல் கொண்டு சென்றதைக் கூறுகிறார் குமரகுருபரர்…
View More அளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை
முருகன் திரு அவதாரம். திரு விளையாடல்கள், ஆறுமுகங்கள், பன்னிரு கைகளின் சிறப்பு, சூர சம்ஹாரம், இருவர் திருமணம், தசாங்கம், வேண்டுகோள் எல்லாவற்றையும் 122 அடிகளில் இந்த செந்தமிழ்ப் பாமாலையில் சிறப்பாகப் பாடியுள்ளார் குமரகுருபரர்… கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து, மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய முகத்தில் அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துண் மகிழ்பூத்தளித்து… போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகமளிக்கும் முகமதியும் — தாகமுடன் வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும் தந்தருளும் தெய்வ முகத்தாமரையும்… பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோளும் அச்சமகற்றும் அயில் வேலும்…
அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை
அருணகிரிநாதரின் ஜனனம் எப்படி, எப்போது ஏற்பட்டது? தாய் தந்தையர் யாவர்? பரவலாக கூறப் படுவது போல அவர் தன் வாழ்வில் தனது பொருள், இளமை, அழகு, அறிவு எல்லாவற்றையும் பறி கொடுத்தனரா? மேலும் பல நம்பிக்கைகள், ஐதீகக் கதைகள்.. இவற்றை எல்லாம் மீள்பார்வை செய்ய தூண்டும் கட்டுரை…
View More அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வைமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி
முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும். முருகாற்றுப்படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.
View More முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டிகாலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்
கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக் காரர்கள், கப்பல்களில் ஏறித் தப்புவதற்கு முன் அதனை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர், அது முடியவில்லை… மன்னர்கள், துறவிகள், மடங்கள் மட்டுமல்லாது, எல்லா சமூகத்து மக்களும் இந்தக் கோவிலுடன் தொடர்பு கொண்டு முருகனை வழிபட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
View More காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா
[உ.வே.சாவின் கட்டுரை, படங்களுடன்] “குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்.”
View More ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சாமுருகன் அலங்காரப் பாடல்:
திருச்செந்தூர் முருகனைப் பற்றிய ‘அலங்காரம்’ என்னும் அழகிய மரபுவழிப் பாடலின் வரிகள் மற்றும் அதன் ஒலி வடிவம் – திருமதி ஜயலக்ஷ்மி குரலில்.
View More முருகன் அலங்காரப் பாடல்: