ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்

இந்த ஜீவநதியில் வந்து சேரும் உயர்வு தாழ்வு என்னும் கழிவுகளை இது பலவிதத்தில் கழித்துக்கொண்டே இருக்கிறது. ஜாதிகளின் உயர்வு தாழ்வுகள் பேதிக்கப்பட்டதாகவும் மற்றும் ஒருங்கிணைந்து ஒளிரும் ஹிந்து ஸமூஹத்தின் ஒரு முகமாகவும் பரிச்சயம் தெரிவிக்கும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட மற்றும் பார்த்து ரசித்த தக்ஷிண பாரதத்திலிருந்து உத்தர பாரதம் வரைக்குமாய் என் அனுபவங்கள் [..]

View More ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்

அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை

அருணகிரிநாதரின் ஜனனம் எப்படி, எப்போது ஏற்பட்டது? தாய் தந்தையர் யாவர்? பரவலாக கூறப் படுவது போல அவர் தன் வாழ்வில் தனது பொருள், இளமை, அழகு, அறிவு எல்லாவற்றையும் பறி கொடுத்தனரா? மேலும் பல நம்பிக்கைகள், ஐதீகக் கதைகள்.. இவற்றை எல்லாம் மீள்பார்வை செய்ய தூண்டும் கட்டுரை…

View More அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை

முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும். முருகாற்றுப்படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.

View More முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.

View More சிந்தனைக்கினிய கந்தபுராணம்

மகான்கள் வாழ்வில்-9: திருப்புகழ் சுவாமிகள்

அர்த்தநாரியின் நண்பர் ஒருவர் பழனி முருகனைச் சென்று தரிசிக்குமாறும், அவன் அபிஷேக தீர்த்தம் உண்டால் தீராத வினைகள் அனைத்தும் தீரும் என்றும் ஆலோசனை கூறினார். அதன்படி மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு பழனியம்பதியைச் சென்றடைந்தார் அர்த்தநாரி…

View More மகான்கள் வாழ்வில்-9: திருப்புகழ் சுவாமிகள்

ஜனவரி 1 – படித்திருவிழா

ஆங்கிலேயர் ஆட்சி நம்நாட்டில் நிலவிய காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதப் பிறப்பன்று அதிகாரிகளான துரைமார்களை காணிக்கையுடன் சென்று கண்டு புதுவருட வாழ்த்துக்களைக் கூறித் திரும்புவது நம் மக்களிடையே ஏற்பட்ட ஒரு பழக்கம். திருப்புகழைத் தவமாக மேற்கொண்ட, வள்ளிமலை ஸ்வாமிகள் சித்தத்தில் ஒரு ஞான உதயம்! உலகத்திற்கே பெரிய அதிகாரியான, உமாஸ்கந்தனை இவ்விதம், சென்று கண்டு தொழுதால், வருட முழுவதும் எண்ணற்ற நலங்களை பெறலாமே, என அருள்கூட்டியது…

View More ஜனவரி 1 – படித்திருவிழா