“நும்வாய்ப் பொய்யு முளவோ?”

அசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியக் கவி மரபு. சங்ககாலத்திலேயே இது தமிழ்மரபுடன் கலந்து விட்டது… புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும். மகளிர் நகைக்க முல்லை மலரும். ஏழிலைம்பாலை என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மகிழமரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். மாதவி- குருக்கத்தி. இது மகளிர் பாட மலர்வது, புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. மகளிர் தழுவ மலர்வது குரவம். இவை ‘தோதகக் கிரியை’ எனப்படும். கவிராட்சச கச்சியப்ப முனிவர் காஞ்சிப்புராணம் இரண்டாம் காண்டம் இயற்கை வருணனியயில் இவற்றை அழகுற அமைத்துப்பாடுகிறார்…

View More “நும்வாய்ப் பொய்யு முளவோ?”

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.

View More சிந்தனைக்கினிய கந்தபுராணம்

தலபுராணம் என்னும் கருவூலம் – 2

இந்தப் பாடலில் ஏனையோர் கூறுமாறு பிராமணர் முதலியோர் முகம் முதலிய உறுப்புகளில் தோன்றியதாகக் கூறிய சுவாமிகள், நான்காம் வருணத்தவரை, “முகம், தோள், தொடை ஆகிய உறுப்புகளையெல்லாம் தாங்கி நிற்கும் சரணம் என்று உரைக்கும் உறுப்பினில்” தோன்றியவர்கள் எனக் கூறுகின்றார். சரணம் என்பதற்குக் கால் என்ற பொருளோடு, புகலிடம் என்பதும் பொருள். ஏனைய மூவருக்கும் புகலிடமாக இருப்பவர் நான்காமவர் என்றும், தம் உழவுத் தொழிலின் மேன்மையால் மூவரையும் நிலைபெறத் தாங்கும் வேளாளர் என்னும் பெயரைத் தமக்கே உரியவர்கள் என்றும் விளக்கினார். வேளாளர் என்பதற்கு பிறருக்கு உபகாரியாம் தன்மை உடையவர் என்று பரிமேலழகர் பொருள் உரைப்பார்….

View More தலபுராணம் என்னும் கருவூலம் – 2