பகலைப் பிரசவிக்கிறது இரவியென உனது வலது விழி. இரவைப் படைக்கிறது
நிலவென உனது இடது விழி. சிறிதே மலர்ந்த பொற்கமலமென உனது மூன்றாவது விழி பகலுக்கும் இரவுக்குமிடையில் ஊடாடும் அந்தியைச் சமைக்கிறது… செவ்வரியோடிய கண்களில் கருவிழியின் ஒளிதிகழும் தேவியின் பார்வை திரிவேணி சங்கமத்தை ஒத்திருக்கிறது என்று சமத்காரமாகக் கூறுகிறார்.
Tag: பராசக்தி
சக்திதான் என்றும் !
தோளி ருப்ப தெல்லாம் -மற்றோர்
துயர்து டைக்கவென்றே! தம்பி
காளி அடங்கமாட்டாள்! செல்வக்
கட்டி லென்று கண்டோம்!….
காடும் சடையும் வேண்டாம்! இங்கே
கலி பிளக்க வந்தோம்! அவளைப்
பாடு தம்பி பாடு! இந்தப்
பாருன் கையி லாடும்!…..
ஆடுகின்ற கடலில் -நம்மை
ஆட்டு கின்ற மனதில் -இருளைச்
சாடுகின்ற கதிரில் -அறவோர்
சாந்த மான நகையில் -ஆங்கோர்
வேடு வச்சி நடையில் -நெஞ்சம்
விம்மு கின்ற கலையில் -தோன்றிப்
பாடும் அன்னை சக்தி! பார் பார்!
பரவுதங்கு செந்தீ!…
தலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)
உங்களுடைய வீரியம் முழுவதையும் பண்டாசுரன் கவர்ந்தான். அவன் வெளியில் இல்லை. உங்கள் ஒவ்வொருவருடைய உடலிலும் கலந்துள்ளான்… இந்நிலையில் யாங்கள் இங்கிருந்து என்ன பயன்? நின் தழலுருவத்தில் கலந்திடும் இன்பமே மேவுவம்” என்று கூறி செழுந்தழற் பிழம்பொளி எழுப்பினர்… ஒருக்கால் நிலைமை நம் கையை மீறி ஐயனும் அம்மையும் எல்லாவற்றையும் சங்காரம் செய்து, அழித்துப் போட்டுக் களேபரமாக்கி மீண்டும் புனருற்பவம் செய்வரேயானால், அந்த உக்ர வேள்வியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள விடுத்த அழைப்பு இது…
View More தலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)