“ஒரு பக்கமா சாஞ்ச இரண்டு பொண்டாட்டிகாரன்… கவிழ்ந்துவிட்டான்…” இரண்டு விரலளவு சிறிய துண்டு வெள்ளை காகிதத்தில் நாலாவது படிக்கும் அந்தச் சிறுவன் பூங்காவின் பெஞ்சில் அமர்ந்தவாறு இந்த வரியை முத்து முத்தாய் எழுதிக்கொண்டிருந்தான். எழுதிவிட்டு பிழையேதும் இருக்கிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தான்… ஸ்வாமிஜி பக்கத்திலிருந்த ஒரு பக்தரிடம் மும்முரமாய் பேசிக் கொண்டிருக்க, ஒரு சிலர் திவாகரை சூழ்ந்துகொண்டு நடந்த விபரங்களை கேட்டனர். திவாகர் கையிலிருந்த காகிதத்தை பிரித்து காட்டினார். படித்தவர்களுக்கு தூக்கிவாரி போட்டது… திருக்குமரன் கேட்டுக் கொண்டிருந்தவர்களுடைய ரியாக்ஷனுக்கேற்றவாறு ஸ்வாரஸ்யமாய் ஈடுபாட்டோடு கதைச் சொல்ல… சொல்ல… அவர்களுக்கு பரமதிருப்தியாயிற்று. இயக்குனர் திருக்குமரன் சந்தோஷத்தில் திக்குமுக்காடினார்….
View More விடுகதையா… இந்த வாழ்க்கை ? [சிறுகதை]Tag: பாரதியார் கதைகள்
பாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய். எனவே, அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம். அகில முழுதும் சுழலுகிறது… மனிதனும் பிற பிராணிகளும் தாவரங்களும் நுண்ணுயிர்களும் பூமி எனும் ஒரே அதி-உயிரின் பாகங்களே ஆகும். எனவே சுற்றுச் சூழலையும் உயிரினங்களையும் பெரும் உயிரின் பிரிக்க இயலாத முழுமை அமைப்பாக காண வேண்டும். இந்த அடிப்படையில் ஆராய்ச்சிகளும் வடிவமைக்கப் பட வேண்டும்….
View More பாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்மஹாகவி பாரதியாரின் கதைகள் – சும்மா
அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்! பார்! பார்!”
View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – சும்மாமஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்
தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா?நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப்பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன்.
View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்மஹாகவி பாரதியாரின் கதைகள் – காற்று – தேவதரிசனம்
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.
அவன் வரும் வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்தி வைப்போம்.
View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – காற்று – தேவதரிசனம்மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி
காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்… குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் …
View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டிமஹாகவி பாரதியாரின் கதைகள்: பிழைத்தோம்
“டாம், டாம் என்று வெடிச் சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் புகை. அந்தப் புகைச்சலுக்குள்ளே நான் சுழற் காற்றில் அகப்பட்ட பக்ஷி போலே அகப்பட்டுக் கொண்டேன்.
View More மஹாகவி பாரதியாரின் கதைகள்: பிழைத்தோம்மஹாகவி பாரதியாரின் கதைகள் – காக்காய் பார்லிமெண்ட்
“பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை.”
View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – காக்காய் பார்லிமெண்ட்