பாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய். எனவே, அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம். அகில முழுதும் சுழலுகிறது… மனிதனும் பிற பிராணிகளும் தாவரங்களும் நுண்ணுயிர்களும் பூமி எனும் ஒரே அதி-உயிரின் பாகங்களே ஆகும். எனவே சுற்றுச் சூழலையும் உயிரினங்களையும் பெரும் உயிரின் பிரிக்க இயலாத முழுமை அமைப்பாக காண வேண்டும். இந்த அடிப்படையில் ஆராய்ச்சிகளும் வடிவமைக்கப் பட வேண்டும்….

View More பாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்

சுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை

‘ஸுப்ரபாதம் என்றால் என்னன்னு கேழ்க்கறானே இந்தப் பிள்ளையாண்டான்! அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன்? எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி?’…அவள் விழித்தெழுந்துகொள்வதோடு, அடிமை வாழ்வே பரம சுகம் என்று மயங்கிக் கிடக்கிற தனது விவரங் கெட்ட பலப்பல பிள்ளைகளையும் தட்டி எழுப்பியாக வேண்டும். ஆகையால் இதோ, நான் பாடுகிறேன்…

View More சுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை

மஹாகவி பாரதியாரின் கதைகள் – சும்மா

அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்! பார்! பார்!”

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – சும்மா

மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்

தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா?நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப்பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – காற்று – தேவதரிசனம்

அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.

அவன் வரும் வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்தி வைப்போம்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – காற்று – தேவதரிசனம்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்… குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் …

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடல்

நடுக்கடலில் ஒரு தீவு; அதனிடையே பெரிய அரண்மனை. அரண்மனைக்கருகே சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை. அதனருகே புல்லாந் தரை மேல் பதினாறு வயதுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் என்னைக் கண்ட மாத்திரத்தில் எழுந்து அரண்மனைக்குள் ஓடிப்போய் விட்டாள். நான் அவ்வழியைப் பின்தொடர்ந்து சென்றேன்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடல்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன்

குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு, சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது, தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது, எட்டு லச்சுமியும் ஏறி வளருது, பயந் தொலையுது, பாவந் தொலையுது, சாத்திரம் வளருது, சாதி குறையுது, நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது, பழைய பைத்தியம் படீலென்று தெளியுது. வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது, சொல்லடீ சக்தி, மலையாள பகவதி, தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன்