நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்

ஒரு தமிழ்நாட்டு இளைஞர் விருப்பு வெறுப்பின்றி நரேந்திர மோதியின் அரசாட்சி குறித்து வைத்த விமர்சனங்கள் இவை. ஒருவகையில் ஒரு முன்னாள் கம்யூனிஸ்டின் வாக்குமூலமும் கூட… நாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் – மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும்… ஆட்சி – அதிகாரம் – வரி வருமானம் – பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த ஆட்சிக்கும் பொருந்தும்….

View More நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்

குஜராத் 2017 பாஜக வெற்றி: இரு பார்வைகள்

தொடர்ந்து 22 ஆண்டு கால ஆட்சி செய்ததின் காரணமாக மக்களிடம் ஏற்படும் இயல்பான எதிர்பார்ப்பு ஏமாற்றங்கள், காங்கிரஸ் கட்சியினால் தூண்டி விடப் பட்ட ஜாதிப் பிர்வினைகள், பாக்கிஸ்தானின் சதித் திட்டங்கள், உள்கட்சி பூசல்கள் திறமையின்மைகள், மூன்று முதல்வர்கள் மாறியது என்று கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான எதிர்மறை காரணங்களையும் வலுவான எதிர்ப்புகளையும் மீறி குஜராத் மாநிலத்தில் பிஜேபி வெற்றியடைந்திருக்கிறது… கணக்கீடுகளை வைத்து பார்க்கும்போது தலித்துகள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பதை உணர முடியும். மொத்தம் உள்ள 13 தனித்தொகுதிகளில் 8 இடங்களையும் (61 சதவீதம்), பழங்குடி தொகுதிகளில் 11 இடங்களையும் பாஜக வென்றிருக்கிறது….

View More குஜராத் 2017 பாஜக வெற்றி: இரு பார்வைகள்

நெருக்கடி நிலை யாருக்கு?

தனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. ஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன?…..

View More நெருக்கடி நிலை யாருக்கு?

பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

கோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது அதோடு பெரும் அறிஞர். இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்…. அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, இப்போது ராம்நாத் கோவிந்த் – பாஜக அடுத்தடுத்து சிறுபான்மையினர் மற்றும் தலித்களையே உயர்பதவிகளுக்கு முன்நிறுத்துகிறது. இது சந்தர்ப்பவாத , தாஜா அரசியல் அல்லவா என்று நம்மவர்களே சிலர் கேட்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு இன்னும் நம் தேச அரசியல் பிடிபடவே இல்லை….

View More பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்

அந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். “உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்”… காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன….

View More காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்

இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?

லோக்சபா தேர்தலுக்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வெளியாகியுள்ள 4 மாநிலங்களுக்கு…

View More இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?

புதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி

1977இல் இந்திரா காந்தியின் ஆட்சி தோல்வி அடைந்து, பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்த பின்னர் இந்திரா காந்தி அரசியல் ஆதாயத்துக்காக நியமித்த பல கவர்னர்கள் நீக்கப்பட்டார்கள். அந்த இடத்திற்கு ஜனதா கட்சி புதிய கவர்னர்களை நியமித்தது. அப்படி தமிழ் நாட்டுக்கு நியமிக்கப்பட்டவர் பிரபுதாஸ் பட்வாரி என்பார். இவர் ஒரு சர்வோதயத் தலைவர். மது அருந்துவதோ, மாமிசம் சாப்பிடுவதோ இவருக்குப் பழக்கம் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் இவர் கவர்னராக இருந்த காலத்தில் இவரது கவர்னர் மாளிகையில் விருந்தினராக வந்து தங்கும் தலைவர்களுக்கும் மேற்படி சங்கதிகள் பரிமாறப் படுவதில்லை….

View More புதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி

அஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்

பாஜக மேல்தட்டு வர்க்கத்தின் கட்சி என்ற அடையாளத்தை மாற்றி கீழ் தட்டு மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக பரிணமிக்க செய்தவர் கோபி நாத் முண்டே. எளிமையாக அணுகக்கூடியவராகவும், தேர்ந்த செயல்பாட்டாளராகவும் . தூய்மையான பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரராகவும் இருந்த இந்து ஆன்மா நம்மிடமிருந்து விடை பெற்று விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக , மராத்வாடா பகுதியின் பிரதிநிதியாக இந்து சமூகத்தின் தொண்டனாக துடித்து கொண்டிருந்த இதயம் அமைதியில் ஆழ்ந்து விட்டது…. மோடியின் மந்திரிகள் முக்கியமானவர்கள். அவர்களை இவ்வளவு அலட்சியமாக இழப்பது தவறு. மந்திரிகள் எளிமையாக இருப்பது அவசியம் தான் ஆனால் அவர்களின் உயிர் பாதுகாப்பு அதை விட முக்கியம். ஒவ்வொரு மந்திரியின் உயிருக்கும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆபத்து நேரிடலாம்…..

View More அஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்

மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!

இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் செயலற்ற தன்மை மீதான மக்களின் கோபமே காரணம் என்றாலும், அதை வாக்குகளாக மாறியது தான் மோடியின் அசுர சாதனை. கண்டிப்பாக மோடியின் இடத்தில் அத்வானி உள்ளிட்ட வேறு எவர் இருந்திருந்தாலும், இத்தகைய இமாலய சாதனையை நிகழத்தியிருக்க முடியாது…. மோடியின் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் திட்டமிட்டு நடத்தியது பாஜகவின் நிகரற்ற சாதனை…. விலைக்கு வாங்கப்படும் ஊடகங்களைக் கொண்டு அரசியல் நடத்திவந்த காங்கிரஸ் கட்சியால் பாஜக வெகுவாக பாதிக்கப்பட்டுவந்தது. அந்நிலையும் இம்முறை மாறியது. காங்கிரஸுக்கு எதிரான மக்களின் மனநிலை ஊடகங்களின் காங்கிரஸ் ஆதரவுப் போக்கிற்கு கடிவாளமானது…. சுயநல நாட்டம் மிகுந்த அரசியல்களத்தில் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களை இணைத்து, ஓரணியாகக் கொண்டுசெல்வது மிகவும் கடினமானது. அதை சங்கமே சாதித்தது….

View More மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!