அடிக்கிறவனின் கர்த்தர் அப்படித்தான் – அடிவாங்குபவனை – அடி வாங்கிக் கொண்டே இருக்கச் சொல்வான் – கொஞ்சமாவது – சுய மரியாதையும் சொரணையும் இருந்தால் – அடிப்பவன் கன்னத்தில் திருப்பி அறைவான்.. நீயும் உன் தென்னகக் கூட்டுக் களவாணிக் கும்பலும் – ராஜபக்சேவுடன் சேர்ந்து காட்டினீர்களே – அதுதானே உன் கட்சியின் அபய ஹஸ்தம்..
View More திரிசூலம் அஹிம்சையின் அடையாளமாம்…Tag: பாராளுமன்றம்
2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!
இந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே களத்தை பிரதமர் மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அவர் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200க்கு மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பிரசாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தல் களத்தில் சுமார் 5 கோடி பேரை நேரில் சந்தித்த ஒரே கட்சி பாஜக மட்டுமே. இந்தத் தேர்தலானது, முழுவதும் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்திய தேர்தலாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் ஆக்கப்பூர்வமான தேர்தல். அவரது அரசு அளித்த மக்கள்நலத் திட்டங்கள், மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேசப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கான முழுமையான மதிப்பெண்களை மக்கள் வாரி வழங்கி இருக்கிறார்கள்… குஜராத், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட 15 மாநிலங்களில் முழுமையான வெற்றியை பாஜக ஈட்டி இருக்கிறது. சுமார் 200 தொகுதிகளில் 50 சதவிகிததுக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜகவின் ஒட்டுமொத்த வாக்குவிகிதமும் 38 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது….
View More 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி!ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்
பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம்…
View More ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?
டெல்லியில் தான் அனைத்து தேசிய அலுவலகங்களும், பன்னாட்டின் அலுவலகங்களும் உள்ளன என்பதும், தலைநகரின் பாதுகாப்பு, தேசத்தின் இமேஜை மற்ற நாடுகளுக்குக் காண்பிக்க, தலைநகரின் சட்ட ஒழுங்கைக் காக்க, தலைநகரின் மேம்பாட்டில் நலம் செலுத்த , நாட்டின் அனைத்து பெருந்தலைவர்களும் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற நாடுகளின் embassy இங்குள்ளது என பல காரணங்களை முன்வைத்தே இதுவரையிலான மத்திய அரசுகள் டெல்லியை முழு மாநிலமாக அறிவிக்காமல் உள்ளது…முழு மாநிலமாக அறிவிக்க சட்டத் திருத்தம் தேவை. அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றே நிறைவேற்ற இயலும். அதுவரையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட இயலாது. இதுவெல்லாம் தெரிந்தும் கெஜ்ரிவால் பல நாடகங்களை அரங்கேற்றுவார் என்பதை நாம் கண்கூடாகப் பார்ப்போம்….
View More டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?ஜனநாயக மரபுகளைக் காப்போம்!
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் செயல்பாடுகளில் மக்களை திகைக்க வைத்த செய்தி சோனியா காந்தியின் புதல்வர் ராகுல் காந்தி எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வெளியேறி, அங்கு பத்திரிகையாளர்களிடம் அவையில் ஒரே ஒரு குரல் மட்டும்தான் கேட்கிறது. மற்ற குரல்களுக்கு அங்கு இடமில்லை என்பதுபோல சொல்லியிருப்பதுதான்…. பிரதமர் மோடி தன்னுடைய ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் கண்ணியத்தையும், ஒழுங்கையும், நாட்டு நலனே மற்ற எல்லா நலன்களுக்கும் மேலானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியும் நடந்து காட்டியும் வருகிறார்….
View More ஜனநாயக மரபுகளைக் காப்போம்!மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி
மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம், ஆட்சிக்கு வரமுடியாது என்பது நன்கு தெரிந்தும், தேர்தல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் தோன்றும் பப்பூன்கள்… 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்திர பிரதேசத்தில் இரு துருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம். இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஆசை, இருவருமே குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்….தங்களுக்கு தொகுதி வேண்டுமானலும், எந்த தொகுதி என்று முடிவு செய்வதானாலும், ஜெயலலிதாவின் முடிவில் உள்ளது என்ற வாய் மூடி மௌனியாக காட்சியளிக்கும் இடதுசாரிகளின் நிலை கேவலமாகவே காட்சியளிக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் முதல்வர் என பிரகடனப்படுத்தியுள்ள அ.தி.மு.கவை முழுமையாக நம்ம முடியுமா என்பது தெரியவில்லை….
View More மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணிஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2
ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. மருமகன் அடித்த கொள்ளையைப் பற்றி இதுவரை திருமதி சோனியா காந்தி வாய் திறக்கவில்லை…. மந்திரி சபையிலேயே யோக்கியமானவர் என பெயர் பெற்றவரும் ராணுவ அமைச்சருமான ஏ.கே. அந்தோனி என்பவர் இருந்தாலும, அவரின் துறையில் ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ350 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது… பாராளுமன்றம் கூடும் போதெல்லாம், அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்கதையாகவே வெளி வருகிறது. பிரதம மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி துறையிலும் ரூ1,86,000 கோடி ஊழல் என மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது….
View More ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளை தொகையின் அளவு, நாம் வெளிநாடுகளில் பெற்ற கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கொள்ளையடித்த தொகையில் 25 சதவீத கொள்ளை பணத்தை பயன்படுத்தினால் கடன் அடைபடும் என பலர் கூறுகின்றனர்… பாரதிய ஜனதா கட்சி கேள்வி கனைகளை தொடுத்த போது, பிரதமர் உட்பட கேபினட் அமைச்சர்கள் அனைவரும், ஊழல் நடக்கவில்லை என்றே வாதிட்டார்கள். சி.ஏ.ஜி அறிக்கை வெளி வந்த பின்னர் தான் ஸ்பெக்ட்ரம் மோசடி ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தெரியவந்தது. இதில் ஒரு லட்சத்த்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு என்ற மதிப்பீடு பலரையும் திகைக்க வைத்த்து…. இந்தியாவின் ஓராண்டுகால் வரி வருவாய் ரூ9.32 லட்சம் கோடி, இந்த மோசடியின் காரணமாக மூன்றாண்டுகளுக்கு இந்தியர்கள் செலுத்தும் மொத்த வரி பணம் அளவுக்கு நிலக்கரி ஊழல் என்ற ஒரே ஊழலில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது…
View More ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 12-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்
ஒருபுறம் ராஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்று கூறி அவரை JPC முன் வருவதற்குத் தகுதியில்லாதவர் என்பதும், மறுபுறம் பிரதமரும், அமைச்சர் சிதம்பரமும் குற்றம் சாட்டப்படாதவர்கள் என்பதால் அவர்களை JPC-க்கு அழைப்பதில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகள். பார்க்கப் போனால் பிரதமர் தானே முன் வந்து JPC-யின் அழைப்பை ஏற்று வருவதாகச் சொன்னவர்தான். இப்படியாக இந்த ஊழல் விவகாரத்தில் முற்றிலும் அறிந்த மூன்றில் இரண்டு பேர்கள் தாங்களே முன் வந்து JPC உறுப்பினர்களுக்குத் தகவல் அளிப்பதாகச் சொல்லியும், அவர்கள் கூப்பிடப்படவில்லை… JPC நடந்த உண்மையை அம்பலப்படுத்துவது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா, அல்லது அந்த உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா? நமக்கே தெரிகிற பல உண்மைகளை, நமது அரசின் உண்மை ஆய்வு நிறுவனங்கள் பலவுமே வெளிக்கொண்டுவரத் தயங்குகிறது, மறுக்கிறது, அல்லது வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்கிறது. உண்மைகளைத் தேவையில்லை என மறுத்து, அவைகளைப் பாய்க்கு அடியில் குப்பையைத் தள்ளுவதுபோலத் தள்ளிக்கொண்டிருக்கிறது….
View More 2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்
காங்கிரஸ் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்படுபவர் யார் என்பதே ஜுனில் தான் தெரியும். அதற்குள் நமது ஊடக அறிஞர் படை தனது வேலையைத் துவங்கிவிட்டது… தான் களத்தில் இருந்து விலகி இருக்கவில்லை என்பதை அப்துல் கலாம் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்… மாநில தலைவர்களின் அரசியல் ராஜதந்திரம் தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அதை அந்தத் தலைவர்கள் உணர வேண்டும். பாஜக, இவ்விஷயத்தில் கூடுதல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டால், அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே ‘ஊழல்’ காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க முடியும்…
View More கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்