கோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்

சனிக் கிழமை மாலை 5:30 அல்லது 6 மணி இருக்கலாம். திருவல்லிக் கேணி கோவில் வளாகத்தில் ஒரு காட்சியை காண நேர்ந்தது. கோவில் வந்திருக்கும் ஒரு முதிய பெண்மணியிடம் ஒரு இளைஞர் தமது செல்போனை காட்டி ஏதோ விவரித்து கொண்டிருந்தார். அந்த இளம் சகோதரர் ஒரு இஸ்லாமியர். ‘படைத்த இறைவன் ..’ என்றெல்லாம் வார்த்தைகள் காதில் விழுந்தன… அந்த அம்மணி அமைதியாக ‘இதைத்தானப்பா நாங்களும் சொல்கிறோம்.. பகவான் உலகத்தை படைத்து சம்ரக்ஷித்து கொண்டிருக்கிறார். அதற்கென்ன இப்போ!’ என்றார். ‘சரிங்க . ஒரு முக்கியமான இந்து கோவில் முன்னாடி உங்க மத பிரச்சாரத்தை செய்றீங்க. இதே போல இந்துக்கள் உங்க மசூதி முன்னாடி அவுங்க பிரச்சாரத்தை செய்ய அனுமதிப்பீங்களா?’ என்றேன்…

View More கோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்

எழுமின் விழிமின் – 14

நமது சொந்த மக்களினமாகிற கடவுள் மட்டும் தான் இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கிறார். எங்கு நோக்கினும் அவரது கைகள்; எங்கும் அவரது திருவடிகள்; எங்குமே அவரது காதுகள்.. நம்மைச் சூழ்ந்து காணப் படும் விராட் புருஷனை வழிபடாமல் வீணான மற்ற தெய்வங்களின் பின்னால் ஏன் போக வேண்டும்?… எல்லாவற்றையும் பரிகாசம் பண்ணுவது, எதைப் பற்றியும் முனைந்து சிந்தியாதிருப்பது ஆகிய இந்த நோய் நமது தேசிய இரத்தத்தில் நுழைந்திருக்கிறது. இந்த பயங்கர வியாதியை விட்டுத் தொலையுங்கள். வலிமையுடன் இருங்கள். சிரத்தையுடன் இருங்கள். மற்றவையெல்லாம் தாமாக வந்தடைந்தே தீரும்..

View More எழுமின் விழிமின் – 14