தமிழ்நாட்டில் சித்தர் மரபு என்றால் அது புரட்சிகர ஆன்மீகம் என்பது போல ஒரு பிம்பம் உள்ளது. இமயமலை “நவநாத” சித்தர்களின் மகாகுரு கோரக்நாதர் தான் தமிழில் கோரக்கர் ஆகிறார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் சித்தர் பீடத்தின் தலைவர். ஆனால் அவரைக் குறித்து கீழ்த்தரமான வசைகள், அவதூறுகள், வெறுப்பு இங்கு பரப்பப் படுகிறது. அதைக் குறித்து ஒரு கண்டனம் கூட கிடையாது, மாறாக “சித்தர்” ஆசாமிகளும் கூட இதில் சேர்ந்து கொள்ளும் கொடுமை தான் இங்கு நடக்கிறது…
View More கோரக்கர் வழிவரும் யோகி ஆதித்தியநாத சித்தர்Tag: பா.ஜ.க.
தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்
‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், தற்போது நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்தும் கலவரங்கள் காட்டுகின்றன. தேசம் முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amndment Act- CAA) ஆகியவை பற்றிய முழுமையான விவரங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்காக, கேள்வி- பதில் வடிவில் தெளிவான விளக்கங்கள் இங்கே…
View More தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!
நீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும்… அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற ஹிந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர் போராட்டம் நியாயமான முறையில், மிகச் சரியான பலனைப் பெற்றுள்ளது. இனி ராமருக்கு ஆலயம் அமையத் தடையில்லை. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், உ.பி. அரசும் பார்த்துக்கொள்ளும். அதில் மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகள் தலையிட முடியாது.
View More அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?
எனக்குத்தெரிந்து விலைவாசி உயர்ந்துவிட்டது, மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்யாத தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றும் ஊழல் மலிந்துவிட்டது என்றும் பிரச்சாரங்கள் நடைபெறவில்லை. எம்பிக்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று எங்கேயும் பிரச்சாரம் நடைபெறவில்லை. பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்துவிட்டது என்று பேசுவதில்லை. அதாவது மக்களை நேரடியாக பாதிக்கிற பிரச்சினைகளைப் பற்றி யாரும் முக்கியப் பேசுபொருளாகப் பேசுவதில்லை. மதசார்பின்மைக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆகவே மதசார்பின்மையை காக்க மோடிக்கு வாக்களிக்க கூடாது. சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள். பட்டியல் சமூதாயத்தினர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று முக்கியப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்த தேர்தலில் மையப் பிரச்சாரம்… அண்ணல் அம்பேத்கர் தீர்க்கமான பார்வையுடையவர். இவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தவர். அதனால் இவற்றைப்பற்றி இன்று பிரச்சாரம் மையம் கொண்டிருப்பதால் அண்ணல் அம்பேத்கர் இருந்திருந்தால் இன்று எந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார் என்பதை அலச வேண்டியுள்ளது…
View More இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?நாடும் நமதே! நாற்பதும் நமதே!
தமிழக தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான நிலை நிலவுகிறது. வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும்.
View More நாடும் நமதே! நாற்பதும் நமதே!அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது.
View More அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி
பிறக்கும் எவரும் இறப்பது இயற்கையெனினும் அடல்ஜியின் மரணச்செய்தி மிகவும் வருந்த வைக்கிறது. அவரைப் போல சீரிய சிந்தனையும், நேர்மைத்திறமும் கொண்ட தலைவர்கள் இந்தியச் சூழலில் மிக, மிக அபூர்வமானவர்கள்.. தங்க நாற்கர திட்டம், ஜிஎஸ்டியை ஆரம்பித்தது, தகவல்தொழில்நுட்ப துறைக்கு உயிரூட்டியது, தனிப்பட்ட ஏற்றுமதி பகுதிகளை ஆரம்பித்து இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலியது, கிராம சாலைத்திட்டம் கொண்டு வந்தது, ஏழைகள் அனைவருக்கும் உணவு திட்டம் என பெரும் திட்டங்களை கொண்டு வந்தவர் வாஜ்பாய். அவர் கொண்டு வந்த இந்த அந்த்யோதயா உணவுத் திட்டம் தான் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பசிப்பிணி போக்கி எல்லோருக்கும் உணவு என்பதை ஆரம்பித்து வைத்தது.. நாட்டுக்காகவும் ஏழை எளிய மக்களுக்காவும் பாடுபட்ட மகானை வழியனுப்பும்போது வாஜ்பாயின் கொள்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி எடுப்போம். நமக்காக காலமெலாம் உழைத்த ஆன்மா நீத்தோர் இடத்திலிருந்து நமக்கு அருளட்டும்…
View More மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலிரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்
பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம்…
View More ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை
ரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே… ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமையும். ஏனென்றால், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக திரை மறைவு சக்திகளுக்குக் கிடைத்த பொன் முட்டையிடும் வாத்து அவர்….
View More ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வைஅதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரம் மீண்டும் முருங்கை மரம் ஏறி…
View More அதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா