கயமையின், போலித் தனத்தின் திருவுருவாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மு.கருணாநிதி என்ற கிழவர் திரைக்கதை எழுதி, குட்டி பத்மினி போன்ற ஜோக்கர்களின் இயக்கத்தில் ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் வருகிறது என்பது தமிழ் நாட்டின் சாபக் கேடு… 1989ல் ராமானுஜாசாரியார் என்ற தமிழ்த் திரைப்படம் ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. தூர்தர்ஷனில் இந்தப் படத்தை அப்போதே நான் பார்த்திருக்கிறேன். சம்ஸ்கிருதத்தில் ஆதி சங்கராசார்யா மற்றும் இன்னும் சில விருது பெற்ற திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற கலைப்பட இயக்குனர் ஜி.வி.ஐயர் இந்தப் படத்தின் இயக்குனர்…
View More ராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்Tag: பிரம்மசூத்திரம்
சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்
சிவாத்துவித பாடியம் என்று அறியப்படுவது, பிரம்ம சூத்திரத்திற்கு நீலகண்டர் அல்லது ஸ்ரீகண்டர் எழுதிய பாஷ்யத்தைக் குறிக்கும். ஸ்ரீகண்ட பாடியத்தைப் பெயரளவிலேனும் அறிந்தவர் மிகச் சிலரே. அதனை அறிமுகம் செய்வது இக்கட்டுரையின் நோக்கம்… வேதாகமங்களைப் பிரமாணமாகக் கொண்ட தென்னாட்டுச் சைவசித்தாந்தத்திற்குச் ‘சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்தம்’ என்பது தத்துவ உலகில் வழங்கிவரும் பெயராகும். சுருக்கமாக ‘வைதிக சைவம்’ என்பர்…. ஒன்றற்கொன்று மாறுபட்டதுபோல் தோன்றும் உபநிடதக் கருத்துக்களை ஒருவகையில் சமன்வயப்படுத்தும் நூல் பிரம்மசூத்திரம். சூத்திரம் என்ற பெயருக்கு ஏற்பச் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளை செறித்துப் பாதராயணர் கூறியுள்ளார்….பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்பது சைவசித்தாந்தம். பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்ற கொள்கையை நீலகண்டர் வன்மையாக மறுக்கின்றார். பிரமம் உபாதானகாரணமும் ஆகும் என்பது நீலகண்டர் கொள்கை….
View More சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை
வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை”, “கால பின் வரையறை” என்ற இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும்… பௌத்த நூற்களை சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்த யுவாங் சுவாங் தர்மகீர்த்தியின் பெயரையோ அவரது ஏழு முக்கிய ஆக்கங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.. தர்மகீர்த்தியின் காலமாகிய கி.பி. 640 க்குப் பிறகு என்று பார்த்தால், ஆதி சங்கரர் அதிகபட்சம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்று விளங்குகிறது.
View More ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வைஅச்சுதனின் அவதாரப் பெருமை
பிரம்மத்தின் மேன்மையை மனதில் வைத்துக் கொண்டாலொழிய பிரம்மம் எடுக்கும் அவதாரங்களின் மகிமை புரிவது கடினம். நிற்க, இங்கு ஒரு நியாயமான ஐயம் எழக்கூடும். “நமக்கு எட்டாத இந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்வதால் ‘நமக்கு என்ன பயன்? அப்படி ஒரு பொருள் இல்லை’ என்று கூறிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?” என்று கேட்கலாம்.
View More அச்சுதனின் அவதாரப் பெருமைசாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்
சுவாமி சித்பவானந்தர் எழுதுகிறார், “ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். அத்தகைய வேதாந்தத்தினுள் சிறுமையும் அற்பத்தனமும் எவராவது நுழைத்துவிடக் கிடையாதா? இதை ஆராய்வதற்குஆதாரங்கள் வேண்டிய அளவில் இருக்கின்றன. இங்கு எழுந்துள்ள கேள்வியே அதைச் சுட்டிக்காட்டுகிறது ….”
View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்