போரிட்டு மாண்டு வீர சுவர்க்கம் புகுந்த வீரனின் நடுகல்லை உயர்வு நவிற்சியில் ஏற்றி வைத்துப் பாடியது இது. போர் வெற்றியைக் கூறும் வாகைத் திணையின் பேசுபொருளுக்குள் வைத்து இதனைப் பார்க்க வேண்டும். இந்த ஒரு பாட்டை வைத்துக் கொண்டு நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு எந்த தெய்வ வழிபாட்டையும் தமிழர் ஏற்கவில்லை என்று கருத்துக் கூறுவதெல்லாம் அதீதம், அபத்தம். இதே புறநானூற்றில் மற்ற பல பாடல்களில் சிவன், திருமால், கொற்றவை, இந்திரன், முருகன் ஆகிய தெய்வங்களைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்..
View More சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு மட்டும் தான் இருந்ததா?Tag: புறநானூறு
இரு புறநானூற்றுப் பாடல்கள்
ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்து போன ஒருவனின் புலம்பலாகத் தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் ‘புல்வாய்’ அது… தமர் பிறர் அறியா அமர் – புறநானூற்றுப் பாடல்களை வாசித்துக் கொண்டே வரும் போது, இந்தச் சொற்றொடரைக் கண்டு திகைத்து நின்று விட்டேன். தம்மவர் என்றும் அயலார் என்றும் அறியாத போர்க்களம்…
View More இரு புறநானூற்றுப் பாடல்கள்சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து, கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி.. இப்பாடலில் புலவர், சிவபெருமான் ஆடும் மூன்று வகைத் திருத்தாண்டவங்களைக் கூறுகிறார். அனைத்தயும் அழிக்கும் ஸம்ஹார காலத்தில் ஆடுவது கொடுகொட்டி எனும் தாண்டவம். திரிபுரத்தை அழித்த போது ஆடியது பாண்டரங்கம் எனும் தாண்டவம். ப்ரம்மனின் சிரத்தைக் கொய்து ஆடியது காபாலம் எனும் தாண்டவம்.. ஔவைப்பிராட்டியார், தனக்கு மூப்பில்லாத வாழ்வு தரும் அரிய நெல்லிக்கனியை வழங்கிய அதியமான் நெடுமானஞ்சியின் பெரும் கொடைத்திறத்தையும், நல்லுள்ளத்தையும் வாழ்த்திப் பாடுகிறார். அவர் அதியமானை,என்றும் நிலைத்து நிற்கும் சிவபெருமானைப் போல நீயும் நிலைத்து வாழ்வாயாக,என்று வாழ்த்துகிறார்…
View More சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1
பதிற்றுப்பத்து நூலின் கடவுள் வாழ்த்தில், சிவபிரானின் செம்மேனி வண்ணமும், அளவில்லா ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தியோடு கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும், அவன் அருளின் செவ்வியும்,பிறவும் கூறி வியந்து போற்றுகிறார் புலவர். “கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” என்கிறது புறநானூறு. “நச்சுக்கறை அழகுசெய்ய விளங்கும் திருக்கழுத்தை உடைய பெருமானான அவரின் திருநுதலில் விளங்கும் சிறப்புமிக்க நெற்றிக்கண் போலத் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் மாறனே” என்று பாண்டியன் நன்மாறனைப் போற்றுகிறது ஓர் பாடல். சோழர் தம் தலைநகரான புகாரில் சிவபெருமானுக்குப் பெருங்கோவில்கள் இருந்தமையும் சிவவழிபாடு பெரிதும் பரவியிருந்தமையும் சிலப்பதிகாரத்தால் தெரிகிறது. மாமன்னர் சேரன் செங்குட்டுவர் சிவனருளால் பிறந்தவர் என்றும் இளங்கோவடிகள் கூறுகிறார்…
View More சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1சங்க இலக்கியமும் சைவர்களும் – 2
சங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.. எல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்” என்றார். அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு இடத்தில் மற்றொரு உயிருடன் ஏதோ ஒருவகையில் உறவு உடையதாகும்… புறநானூற்றில், புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலர், நக்கீரர், பரணர், நல்லுருத்திரனார், நல்லந்துவனார் போன்றோர்களின் பாடல்களோடு, சிற்றினம் என ஆன்றோரால் கடியப்பட்டார் சூழலில் அவரோடுகூடி மதுவும் புலாலும் வுண்டு மங்கையருடன் களித்திருக்கும் புரவலர்களைப் போற்றிப் புகழும் பாடல்களும் உள்ளன. ஊரெரியூட்டுதலையும் உயிர்க்கொலையையும், பெண்களின் கண்ணீர்க்கம்பலையையும் வீரம் எனும் பெயரால் நியாயப்படுத்தலை ஆன்மநேயத்தை மக்களிடையே பரப்ப விரும்பும் துறவிகள் எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்? சைவப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் உகந்தனவற்றை ஏற்றுப் போற்றியே வந்துள்ளனர்…
View More சங்க இலக்கியமும் சைவர்களும் – 2இரு வேறு நகரங்களின் கதை
புத்தர் போன்ற ஒர் கருணையும் சாந்தமும், மெல்லிய புன்முருவலும் கொண்ட கடாட்சம் தரும் இன்னொரு தேவ ரூபம் உண்டா என எனக்குத் தெரியாது. அத் தேவ ரூப சாந்த சொரூபன், புத்தன் தேவனும் அல்லன். தேவனாகிய மனிதன் தான். புத்த பிக்கு காவியுடையும் எங்கும் இதே போன்ற “கருணை” பாலிப்பதும் இல்லை. காவியுடைக்குள் இருக்கும் மனித மனம் சார்ந்தது, சக மனிதனை பிணக்கிடங்காக்குவதும் அவன் வாழ்ந்த இடத்தைப் பாழாக்குவதும். காவியுடைக்குள் இருந்த ஒரு இன்னொரு பிக்கு தான்….
View More இரு வேறு நகரங்களின் கதைதலபுராணம் என்னும் கருவூலம்-4
நிலையாமையே உண்மை. எனினும் இந்தத் தத்துவம் எல்லோருக்கும் உரியதன்று. அதற்குரிய தீவிரதர மனப் பக்குவம் உடையவருக்கே இந்தத் தத்துவத்தின் பொருள் விளங்கும். அத்தகைய தீவிரதர மனப்பக்குவம் இல்லாதவருக்கு இந்த தத்துவத்தைக் கூறல் கேலிக் கூத்தாகிவிடும். அருச்சுனனையும் இராமனையும் போல உலகியற் கடமைகளைக் குறைவறச் செய்து முடித்தலே பிற அனைவருக்கும் உரியதாகும்.
View More தலபுராணம் என்னும் கருவூலம்-4