இந்த நெருக்கடி திடீரென்று உருவானதல்ல. ஆட்சிபீடத்தில் அமர்ந்த ராஜபக்சே சகோதர்களின் அரசு அந்த நாட்டின் பொருளாதாரத்தையும், நல்வாழ்வையும் நாசமாக்குவதற்கு என்னவெல்லாம் குளறுபடிகள் சாத்தியமோ எல்லாவற்றையும் “ரூம் போட்டு யோசித்து” செய்வது போல ஒவ்வொன்றாக செய்தது. இந்தியாவுடனான நெருக்கமான உறவிலிருந்து விலகி விலகி, பகாசுர சீனாவின் ராட்சச டிராகன் கரங்களில் தனது நாட்டின் துறைமுகம், கட்டமைப்புகள், வளங்கள் என ஏறக்குறைய எல்லாவற்றையும் அடகுவைத்து விட்டு இப்போது இலங்கை முழி பிதுங்கி நிற்கிறது.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியர்களான நமக்கு இதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் முக்கியமானவை…
View More இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ஒரு பார்வைTag: ராஜபட்சே
இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்
இந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார்… தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் – இராணுவ மயமாக்கப் பட்ட சூழல், திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும், மதமாற்றம்… முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. அந்த அமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை… இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு முழுமையான சமஷ்டி அமைப்பினை ஏற்படுத்துவதாகும். இதனை வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசு செய்வதற்கு மறுத்தால், இந்திய அரசு மற்ற இரண்டு சிக்கலான தெரிவுகளுக்கு செல்வது தான் பிரசினைக்கு தீர்வு காணும் வழிகளாக ஆகும்….
View More இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்
காலம் காலமாக உருவாகி வந்த இந்த உறவுகளின் வலைப்பின்னல்களை உதாசீனப்படுத்திவிட்டு பேசப்படுவது பாரத ஒற்றுமையோ அல்லது தமிழ் உணர்வோ அவை பொய்யானவையே. அவை நம்மை – பாரதியராகவும் சரி தமிழனாகவும் சரி – பலவீனப்படுத்தும். இந்த பண்பாட்டு ரத்த உறவுகளின் வலைப்பின்னல்களே ஹிந்துத்துவம்…. எனவேதான் வலிமையான பாரதத்துக்காக தென்னக மீனவ மக்களின் நன்மைக்காக கடலையே கண்டறிந்திராத அந்த வடக்கு மாநிலத்தில் குரல் கொடுத்த அந்த மனிதர் இன்றைய சூழலில் தமிழராகிய நமக்கு, தாயக தமிழரோ, ஈழத்தமிழரோ, புலம்பெயர்ந்த தமிழரோ எல்லாத் தமிழருக்கும், முக்கியமானவர் ஆகிறார்….
View More நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்