சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன் – வேற்றுமையற்றவன் – பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன் – சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன் -அறியவொண்ணாதவன் – சத்தியப்பொருளென அறியப்படுபவன்… அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான். பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது? அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம். அறிவோனை அறிவது எங்ஙனம்?…
View More ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்Tag: லீலை
சிவபிரான் சிதைத்த சிற்றில்
சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள்… வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்…
View More சிவபிரான் சிதைத்த சிற்றில்திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று… மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்..
View More திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்