வேதப் பாக்கள் வனங்களில் தான் உருப்பெற்றன. ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. நைமிச வனம்,காம்யக வனம், த்வைத வனம், தண்டக வனம், மது வனம், தாருகா வனம் என்று பல பண்டைய வனப் பெயர்கள்.. ஆனைக்கா, கோலக்கா, கோடிக்கா, நெல்லிக்கா, குரக்குக்கா, வெஃகா, தண்கா எனும் அழகான பெயர்கள் வனம் சார்ந்த தலங்களைக் குறிப்பவை… நெருங்கிய வனப்பகுதி நாட்டுக்கு ஓர் அரணாகவே திகழ்ந்தது. தமிழ் மன்னர்கள் பனையையும், வேங்கையையும், ஆரையும் காவல் மரமாகக் கொண்டிருந்தனர்… காடுறை வாழ்க்கை ஆன்மிகத்துக்குத் துணை புரிவதாக நம்பினர்; வானப்ரஸ்தம் எனும் ஒருநிலையும் வரையறுக்கப் பட்டது. ..
View More வனங்களும் நமது பண்பாடும்Tag: வனங்கள்
பிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்
பிஷ்னோய் பழங்குடியினர் மான்களையும், எருமைகளையும், குரங்குகளையும் பிற அரிய விலங்குகளையும் மட்டும் பாதுகாக்கவில்லை, மரங்களையும் உயிரினும் மேலாக பாதுகாக்கிறார்கள். உலகின் ஆதி சுற்றுச் சூழல் போராளிகள் பிஷ்னோய்களே. கஜோரி என்றொரு வகை மரம் அங்கு புனிதமாகக் கருதப் படுகிறது. அது பஞ்ச கால மரமாகக் கருதப் படுகிறது. கடும் பஞ்ச காலத்திலும் கூட அதன் மரப் பட்டைகளைத் தின்று உயிர் பிழைத்து விடலாம்… ஒரு முறை ஒரு கஜோரி மரத்தை வெட்டுவதற்காக மன்னன் படைகளை அனுப்பி வைத்த பொழுது முதலில் எங்களை வெட்டி விட்டு மரங்களை வெட்டுங்கள் என்று அந்த மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மன்றாடியுள்ளார்கள். படையினர் அவர்களைக் கொல்லக் கொல்ல மொத்தம் 393 பேர்கள் அங்கு அந்த மரத்தைப் பாதுகாப்பதற்காக உயிரை விட்டிருக்கிறார்கள். இதை பிஷ்னோய் பழங்குடி மக்களின் மூத்தவர் ஒருவர் குழந்தைகளுக்குக் கதையாகச் சொல்கிறார்…
View More பிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்கம்பனின் சித்திரகூடம்
பெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது… கம்பர் சித்தரித்துக் காட்டும் அடர் கானகத்தில் ஒருவிதமான ஒத்திசைவும் ஒழுங்கும் உள்ளது. கொடிய கானகத்திலும் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளில் எல்லாம் அன்பின் ததும்பலே வெளிப்படுகிறது. .. குடிசை கட்டி முடித்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா?”..
View More கம்பனின் சித்திரகூடம்சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்
பேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள்… ஒருவேளை மகரஜோதி தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா?
View More சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்காடென்னும் கடவுள்
சொந்த வீட்டில் எங்கள் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட மரங்களை இழந்ததற்காகச் சிறுவயதில் வருந்தாத நான், பெங்களூரில் சாலைகளை விரிவாக்குவதற்காகச் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம் பெரும் வலியை உணர்கிறேன்… “எப்படியாவது இந்த மரங்களைக் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை!” என்று ஊர்மக்கள் அனைவரும் ஒரேகுரலில் சொல்கின்றனர். அய்யாசாமி மாவட்ட நிர்வாகத்துக்குக் கூட ஒரு புகார் மனு அளித்திருப்பதாகக் கூறுகிறார்.
View More காடென்னும் கடவுள்