இந்திய எஃகின் உயர் தரத்துக்கான காரணத்தை பிரிட்டிஷ்காரர்கள் கனிமச் சுரங்கத்துக்குக் கொடுத்துவிட்டனர். இந்திய எஃகு உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட தொழில்நுட்பங் களுக்கு எந்தவித அங்கீகாரமும் தந்திருக்கவில்லை.. 1775-ல் லண்டனில் வெளியான கட்டுரையில் இந்தியாவில் பனிக்கட்டி தயாரிக்கப்படும் வழிமுறை விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதுவரையில் பிரிட்டிஷாருக்கு செயற்கை முறையில் பனிக்கட்டிகள் தயாரிக்கப்படுவது பற்றித் தெரிந்திருக்கவில்லை….
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 5Tag: வரலாற்று ஆய்வுகள்
புதிய பொற்காலத்தை நோக்கி – 4
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய ஈவு இரக்கமற்ற பொருளாதாரக் கொள்கைகளால் 3-3.50 கோடி இந்திய மக்கள் பட்டினியால் மாண்டனர். இந்தியாவில் பஞ்சம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த நேரத்திலும்கூட இங்கிருந்து பிரிட்டனுக்கு பல கோடி டன் அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்திய பாரம்பரிய அமைப்பில் இருந்த சிறப்பான நிவாரணக் கட்டமைப்புகள் முற்றாக சிதைக்கப்பட்டதால் வறட்சி பஞ்சம் ஏற்பட்டபோது கொத்துக் கொத்தாக மக்கள் இறக்க நேரிட்டது. அது ஒருவகையில் பிரிட்டிஷ் காலனிய அரசு மேற்கொண்ட படுகொலை என்றே நேர்மையும் நியாயமும் கொண்ட வரலாற்றாசிரியர்கள் கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லிவருகிறார்கள்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 4புதிய பொற்காலத்தை நோக்கி – 3
ஐரோப்பாவில் விதைக் கலப்பையை 1662-ல் முதன் முதலில் பயன்படுத்தியதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அந்தக் கலப்பை எப்போது என்று கணிக்க முடியாத பன்னெடுங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துவந்திருக்கிறது. நீர்பாசன வசதிகள், அருமையான கலப்பைகள், ஆண்டுதோறுமான மழையளவைக் கணிக்கும் திறமை, ஊடு பயிர் சாகுபதி, இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், உள்நாட்டுக்குள்ளேயே பகிர்ந்துகொள்ளுதல் என பல விஷயங்களில் பழங்கால பாரதம் முன்னணியில் இருந்திருக்கிறது…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 3புதிய பொற்காலத்தை நோக்கி – 2
பிரிட்டிஷார் நம்மைப் பற்றி எப்படி மோசமாக நினைத்திருந்தார்கள் என்பதை விவரித்த தரம்பால் அதன் பின் அதே பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டு அவர்களுடைய கூற்றுகள் ஒவ்வொன்றையும் மறுத்திருக்கிறார்.. வான சாஸ்திரம், கணிதம், மருத்துவம், எஃகு உற்பத்தி, செயற்கை முறையில் பனிக்கட்டி தயாரித்தல், விவசாயம் போன்றவற்றில் எல்லாம் இந்தியா எப்படிச் சிறந்து விளங்கியது என்பது பற்றி பிரிடிட்ஷார்களின் ஆவணங்கள் சொல்வதை இனி பார்ப்போம்..
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 2புதிய பொற்காலத்தை நோக்கி – 1
(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்) இந்தத் தொடரின் அனைத்து பகுதிகளையும்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 1ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்து
டாக்டர் கோயன்ராட் எல்ஸ்ட் மிகவும் ஆபத்தான அறிஞர். இடதுசாரிகள் அவர்மீது வன்மத்தைப் பொழிகின்றர் எனில், சில இந்து ஆசாரவாதிகளுக்கும், சமூகவளைதளக் காவிகளுக்கும் கூட அவரை ஒப்புகொள்வதில் சங்கடம் உள்ளது இந்த சலசலப்புகளைத் தாண்டி, அவரது வரலாற்று நூல்கள் காலத்தை வென்று நிற்கும்.. மனுஸ்ம்ரிதி ஒரு “ஜாதிய அறிக்கை” கிடையாது. மனுவின் பார்வை மிகவும் விரிவானது, அதே சமயம் முரண்கள் நிறைந்தது. வர்ணக்கலப்பு விஷயத்தில் அறநெறிப் பார்வையும் உள்ளது.. குதிரையின் இருப்பு ஹரப்பா நாகரீகத்தில் இன்று தொல்லியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைவைத்து இந்துத்துவ சார்புள்ள வரலாற்று அறிஞர்கள் மீது மோசமான, கீழ்த்தரமான அவமதிப்புகள் நிகழ்ந்தன… வள்ளுவர்கள் பிராமணர்கள் போலவே கோவிலில் பணியாற்றினார்கள் என்று தெரிகிறது..
View More ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்துபாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள் : வீர சாவர்க்கர் நூல் வெளியீடு
வீர சாவர்க்கர் எழுதிய முக்கியமான வரலாற்று நூல் பத்மன் அவர்களின் புதிய மொழிபெயர்ப்பில் விஜயபாரதம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.. பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு.தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர்…
View More பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள் : வீர சாவர்க்கர் நூல் வெளியீடுபுதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா? கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி
மரபணுவியலை வைத்து, கலாசார நகர்வைத் தீர்மானிப்பது எடுத்த எடுப்பிலேயே பிழையான முயற்சி… ரிக்வேதம்தான் மிகப்பழைய இந்தோ-ஆரிய நூல். ஹரப்பாவின் மொழி இந்தோ-ஆரிய மொழி கிடையாது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அதைவிட, அது திராவிட மொழி என்பதற்கு (அப்படி யாரேனும் சொல்லத் துணிந்தால்) அடிப்படைச் சான்றுகூடக் கிடையாது… “இந்தியாவில் இருந்து வெளியே சென்ற மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி, கலாசார ஒற்றுமைக்குக் காரணமாக இருக்கலாம்” என்பதுதான் “இந்தியாவிலிருந்து வெளிப்போதல்” கொள்கை (OIT). ஆனால், பல ஐரோப்பிய, அமேரிக்க இந்தியவிலாளர்கள் படையெடுப்புக் கொள்கையை கைவிடத் தயாராக இல்லை…
View More புதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா? கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரிதமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்
யானைகளைக் கைப்பற்றும் மாலிக் கஃபூர் பின்னர் மீனாட்சியம்மன் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறான். மதுரையில் மாலிக் கஃபூரின் படைகள் நடத்திய வெறியாட்டங்களைக் குறித்து வரலாற்றாசிரியர் நெல்சன் விளக்கமாக எழுதியிருக்கிறார்… மதுரைக் கோவில் எரிக்கப்பட்டு, இடிக்கப்பட்டு ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்களின் இருபிரிவினருக்கிடைய நிகழ்ந்த மோதலால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயப்பகுதி மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்தது.
குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்து அதனை மீட்டெடுக்கும் வரையில், ஏறக்குறைய 48 ஆண்டுகள், மதுரை ஆலயப் பூசனைகள் எதுவும் நடைபெறவில்லை…
‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2
மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி என்ற போர்வையில் திருப்பெருந்துறை கோயிலை சிவாலயமன்று என்று நிறுவமுயன்று, அதற்கு அறிவார்ந்த சான்றுகள் எதுவும் கிடைக்காமல் போக, கருவறையில் லிங்க பணமில்லை, அம்பிகையின் சந்நிதியில் திருமேனியில்லை, கல்வெட்டில்லை, நந்தியில்லை, கொடிமரமில்லை, கோணங்கியில்லை, என் தகப்பன் குதிருக்குளில்லை என்பது வரை பேசி, அது சமணச்சார்புடைய கோயில் என்று கொண்டு நிறுத்தி, அதற்கும் அடங்காமல் ஆதாரமுமில்லாமல், ஏதோ ஒரு க்ராமக்கோயில் கல்வெட்டை கோடிட்டு காட்டி, பீடம், இந்திரன், சாத்தன், திருமால், குதிரை, கொட்டடி, கொள்ளுக் கடையென்று கொட்டமடித்து விளையாடியுள்ளார். என்ன விதமான ஆராய்ச்சி இது? இதற்கு சைவசித்தாந்தப் பெருமன்றமும் துணைபோயுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற “ஆய்வு” நூல்கள் வெளிவரும் என்று வேறு பயமுறுத்தியுள்ளார். மிகக்கொடுமை. ஆரூர் த்யாகேசப்பெருமான் காப்பாற்றட்டும்…
View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2