திரு GPS (கோமடம் பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்) அமைதி, அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்தவர்… Hindu Voice என்ற மும்பை பத்திரிக்கையின் தமிழக செய்தியாளாராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பற்பல இந்துத்துவ சிந்தனையாளர்களோடும் தொடர்பு கொண்டு ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனி ஒருவராக செய்து வந்தவர்.
View More அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்Tag: ஸ்ரீரங்கம்
மெய்யனான குலசேகராழ்வார்
ஒரு ஸ்ரீவைஷ்ணவன் மற்றொரு ஸ்ரீவைஷ்ணவன் காலில் விழ வேண்டும். விழும் போது நடுவில் பெருமாள் இருக்கிறார் என்று எண்ணம் வர வேண்டும். இப்படி அடியார்களுடன் பழகி அவர்களை வணங்கினால் தான் தான் பரமபதத்துக்கு சென்றால் சுலபமாக இருக்குமாம்.. திருவேங்கடத்தில் ஒரு ஏரியில் வாழும் நாரையாகப் பிறக்க கடவேன் என்கிறார். பிறகு அங்கே இருக்கும் சுனையில் மீனாகப் பிறக்க வேண்டும்; பொன்வட்டில் பிடிப்பவனாகப் பிறக்க வேண்டும் ; செண்பக மரமாக என்று அடுக்கிக்கொண்டு போகிறார் ஆழ்வார். ஆனால் இவை எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது. எல்லாவற்றிருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்கிறது. ஆழ்வார் யோசித்தார். ’கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா’ மாதிரி படியாய் கிடக்கிறேன் இன்று கோரிக்கை வைக்கிறார். அடியார்கள் அதன் மீது ஏறிச் செல்வார்கள், அதனால் அடியார்களின் பாத தூளியும் கிடைக்கும் அதே சமயம் பெருமாளின் “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்றும் இருக்கலாம்… படி என்பது ஒரு கல் அது பள்ளியில் படித்த மாதிரி ஒரு அறிவில்லாத non living thing. அசேதனம். “பவளவாய் காண்பேனே” என்கிறார். படி எப்படிப் பார்க்க முடியும் என்று உங்கள் மனதில் தோன்றலாம்…
View More மெய்யனான குலசேகராழ்வார்தாம்பத்யமும் நண்டுப்பிடியும்
“சொல்ற மாரி விசயம் இல்ல சார்” என்றவன் இரு நிமிடம் தலைகுனிந்து மவுனமாக இருந்தான். இந்த ஆறுமாசமா, ஒவ்வொரு நாளும் மூணு நாலுதடவ போன் பண்ணிருவா. எங்க இருக்கே?, யாரு கூட இருக்கே?ன்னு தொணதொணப்பு. நானும் பொறுமையா எத்தன தடவ சொல்ல முடியும்? அதுவும் கஸ்டமர் முன்னாடி… நான் தொடங்கினேன் “ ஸ்ரீரங்கத்துல, ஒரு விழா உண்டு. நம்பெருமாள் இரவெல்லாம் வேட்டைக்காக உலாப் போய் வருவார். எனவே திரும்பி வரும்போது அவர் திருமேனியில் அங்கங்கே கீறல்கள், சிராய்ப்புகள் தடம் இருக்கும்…
View More தாம்பத்யமும் நண்டுப்பிடியும்‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்
ஸ்ரீராமானுஜர் மற்றும் வைணவ ஆசாரியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் முன்வைத்து சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன் அவர்கள் எழுதியுள்ள குறுநாவல் ‘நான் இராமானுசன்’…. “ஆனால் அந்த வாக்கியம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. வெகுநாட்கள் மனம் கனத்தே இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அந்த வாக்கியம் அரூப ரூபம் கொண்டு தென்பட்டது. ஏதோ சொல்ல வருவது போல் தெரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் சொல் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்த நூல்களில் எல்லாம் அச்சொற்களின் பிம்பங்களே தெரிந்தன.. பெருங்கனவொன்று தோன்றி, புரிபடாமல் அலைக்கழித்து, புரிந்து விஸ்வரூபம் எடுத்து, தற்போது இந்த நூல் துலங்கி நிற்கிறது. ஆம். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’, நூல் உருக் கொண்ட கதை இதுவே…. ”
View More ‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்எப்படிப் பாடினரோ – 1 : அருணாசலக் கவிராயர்
பண்டிதர்கள் மட்டுமே பயின்று வந்த கம்பரின் ராமாயணத்தை, பாமரர்களும் புரிந்து கொண்டு ரசித்து அனுபவிக்கும் வண்ணம் தமிழில் கீர்த்தனைகளாகப் புனைய வேண்டும் என்பது தான் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாசக் கவிராயர் கொண்ட முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது… செவ்வியல் தன்மை கொண்ட கணிசமான கீர்த்தனைகள் இன்னமும் பிரபலமாக நீடித்து வருவதன் காரணம் அவற்றின் இசை ஒழுங்கும், உணர்ச்சி பூர்வமான தருணங்களும், அர்த்த கம்பீரமும், ஆரம்ப கால வித்வான்கள் அவற்றைத் தொடர்ந்து தங்கள் கச்சேரிகளில் பாடி வந்ததும் என்று சொல்லலாம்.. “மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன் வழிநடந்த இளைப்போ – தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத் துறைகடந்த இளைப்போ… “
View More எப்படிப் பாடினரோ – 1 : அருணாசலக் கவிராயர்பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5
இராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால், பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில் இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில் குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும். ஆகையால், பரப்பிரம்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு…
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2
கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மாண்டவர்களின் நினைவுச் சின்னம் இங்கே பதிவாகியிருக்கிறது, எந்தப் புரட்சி கோஷங்களும் இல்லாமல்…நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்கிறார் முதலியாண்டான். இங்கு பிராமணர் – பிராமணரல்லாதார் பற்றிய ஒரு 11ம் நூற்றாண்டு உரையாடல் பதிவு செய்யப் பட்டுள்ளதைக் காண்கிறோம்… திருவரங்கம் கோயில் விஷயத்தில் அத்தகையதொரு உணர்வினை உண்டாக்குவதில் கோயிலொழுகு நூலின் பங்களிப்பு மகத்தானது..
View More ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1
கருங்கல் தூண்களை எப்போது கிரானைட் போட்டு மறைத்தார்கள், அந்த மகா ரசிகர்கள் யார் என்று தெரியவில்லை என்று சொன்னார் கூட வந்த பெரியவர்… அரங்கனைப் பார்த்தவுடன் அதில் மூழ்கி நாம் திக்குத் திசை தெரியாமல் தடுமாறித் தத்தளித்து விடுவோம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க இந்தத் தூண் பற்றுதலாம்… ஆறாயிரத்துச் சொச்சம் பக்கங்களில், ஏழு பாகங்களாக ”கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு)” என்று ஒரு மாபெரும் புத்தகத் தொகுதியை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் அவர்கள் எழுதியிருக்கிறார்.
View More ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்
நமது கோவில்களில் எத்தனை வகைகள் உண்டு? பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்கள் எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன? பெரும் தூண்களும், மண்டபங்களும், கலை நயத்துடன் விளங்கும் ஒழுங்கின் பின்னணி என்ன? அருளொளி வீசும் தெய்வீக நிலையங்களான கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்களுக்கு தக்கவாறு நாம் செய்ய வேண்டியது என்ன?
View More நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்அழகு கொஞ்சும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்
ஆழ்வார்கள் என்ற சொல்லிற்கு ‘எம்பெருமானின் கல்யாண(மங்கல) குணங்களில் ஆழுங்காற்பட்டவர்கள்’ என்று பொருள் கூறுவர். என்னைக் கொண்டு தன்னைப் பாடுவித்தான்’ என்று ஆழ்வார்கள் சொல்லுதலால் இப்பாசுரங்கள் ‘அருளிச்செயல்கள்’ என்றும் திவ்விய பிரபந்தம் என்றும் சேவித்துப் போற்றப்படுகின்றது.கடினமான ஒரு மதத்தை பாகவதமதமாக சுலபமான நெறியாக மாற்றிய சிறப்பும் ஆழ்வார்களைச் சார்ந்ததே.
View More அழகு கொஞ்சும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்