பண்டைய பாரதம் சமுதாய தீமைகளே இல்லாத பொற்காலம் என்று சொல்ல முடியாது. அன்றைய சமூக சூழ்நிலை, பொருளாதார உற்பத்தி உறவு முறைகள், அரசு சூழல்கள், பேரரசுகளின் உருவாக்கங்கள் இவை எல்லாம் சேர்ந்துதான் அன்றைய சமுதாயத்தை அமைத்திருக்கும். ஆனால் அதையும் மீறி மாற்றுப்பாலினங்களுக்கான ஒரு மரியாதையான இடம் இந்த பண்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. … இயற்கைக்கு புறம்பானதாக சில வேட்கைகளை சிலர் சித்தரிக்கிறார்கள். எது இயற்கை? என்பதை அவர்கள் எந்த வரையறையை வைத்து தீர்மானிக்க முடியும். இனப்பெருக்கம் மட்டும் தான் இயற்கையா? இயற்கை என்று அவர்கள் நிர்ணயித்துள்ள கோட்பாடே அடிப்படை தவறானது.
View More ஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2Tag: LGBT
விரிவடையும் இந்துத்துவம்
மானுடத்தின் மாற்று பாலினங்கள் குறித்த ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் நூலை பாஜக தலைவரான வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் வெளியிட ஒத்துக் கொண்டார். உடனடியாக இது ஊடகங்களில் ஆச்சரியமான அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஹிட்லரும் ஸ்டாலினும் மாற்றுப்பாலின மக்களை கொன்றொழித்த போது வாய்மூடி மௌனித்த மேற்கத்திய மத பீடங்கள் இன்று அவர்களின் உரிமைகளுக்காக மூன்றாம் உலக நாடுகளில் பிரச்சாரம் செய்ய களமிறங்கினார்கள். ஆத்ம அறுவடையே இறுதி இலக்கு என்பது சொல்லாமல் பெறப்படும். … இருக்கும் இந்துத்துவத்தைவிட்டு இல்லாத ’இடம்’ தேடும் நேர்மையான இத்தகைய சிறுபான்மை இடதுசாரிகள் பரிதாப ஜீவன்களும் கூட…. இது ஒரு முக்கியமான முன்னகர்வு என்பதில் ஐயமில்லை. மானுட பன்மையை அதன் அனைத்து தளங்களிலும் பேணும் இயக்கமாக சர்வதேச அளவில் இந்துத்துவம் விரிவடைகிறது.
View More விரிவடையும் இந்துத்துவம்