செயல்முறை தேசபக்தி என்பது வெறும் உணர்ச்சியோ, தாய்நாட்டின் மீது ஏற்படும் காதல் உணர்வோ அல்ல. மாறாக, சக தேசத்தவர்களுக்குச் சேவை செய்வதற்கான வெறி. நான் இந்தியா முழுதும் நடந்தே சுற்றியிருக்கிறேன். மக்களின் அறியாமை, துயரம், வறுமை இவற்றை என்னிரு கண்களால் பார்த்திருக்கிறேன். என் ஆன்மா பற்றி எரிகிறது. இந்தக் கொடிய நிலையை மாற்றும் பேராசை என்னை எரிக்கிறது.
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3Tag: விவேகானந்தர் 150வது ஆண்டு விழா
விவேகானந்தர் 150வது ஆண்டு விழா சிறப்புப் பகுதி
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 2
“சுதந்திரம் பெறுவதென்பது, இயற்கையை வெல்வதன்மூலம்தான், ஓடி ஒளிவதன்மூலம் அல்ல. கோழைகளுக்கு வெற்றி கிடையாது. அச்சத்தையும், துன்பத்தையும், அறியாமையையும் ஓடவைக்கப் போரிட்டே ஆகவேண்டும்”
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 2சென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம்
இதய உணர்ச்சி இல்லாத, வறட்டு அறிவு நிறைந்த எழுத்தாளர்களையோ, பத்திரிகைகளில் அவர்கள் எழுதுகின்ற உயிரற்ற கட்டுரைகளையோ பொருட்படுத்தாதீர்கள். நம்பிக்கை, இரக்கம்- திடநம்பிக்கை, எல்லையற்ற இரக்கம்! வாழ்வு பெரிதல்ல, மரணம் பெரிதல்ல, பசி பெரிதல்ல, குளிர் பெரிதல்ல; இறைவனின் மகிமையைப் பாடுவோம். முன்னேறிச் செல்லுங்கள், இறைவனே நமது தளபதி. வீழ்பவர்களைத் திரும்பிப் பாரக்காதீர்கள். முன்னோக்கியே சென்று கொண்டிருங்கள், மேலும் மேலும் செல்லுங்கள். சகோதரர்களே, இவ்வாறு நாம் போய்க்கொண்டேயிருப்போம். ஒருவன் வீழ்ந்ததும் மற்றொருவன் பணியை ஏற்றுக்கொள்வான்.
View More சென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம்ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்
ஒரு தலைமுறை முந்தைய பொதுவுடைமையாளர்கள் சுவாமி விவேகானந்தரை ‘வீரத்துறவி’ என்று புகழ்ந்து பேசுவர், எழுதுவர். “சூறாவளித் துறவி” (The cyclonic saint) என அமெரிக்கத் தாளிகைகள் அவனை வர்ணித்து மகிழ்ந்தன. அடிமைப்பட்டுத் தன்னம்பிக்கை இழந்து கிடந்த பாரதத்தின் முதுகெலும்பில் மின்னற் சாரமேற்றி நிமிர்ந்து நிற்கவைத்த தீரன் அவன். அவனுடைய வாழ்க்கை அவனுடைய தோற்றத்தைப் போலவே வசீகரமானது. அவனுடைய சொற்கள் அவனுடைய கண்களைப் போன்றே ஒளிவீசுவன. அவனுடைய அறிவு அவனுடைய தோள்களைப் போல விசாலமானது. அவனுடைய சிந்தனை அவனுடைய பார்வையைப் போன்றே ஆழமானது.
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்