‘நீர்’ என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை! பொதுவாகச் சொல்வதுபோல் குறிப்பாகக் கூறுகிறாள் உமையவள்! “பித்தன்…
View More தெய்வங்களும் ஊடலும்Tag: ஆன்மிகம்
சாஸ்திரம் பிரமாணம்
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா தமிழில்: ராஜி ரகுநாதன் “தஸ்மாத் சாஸ்த்ரம்…
View More சாஸ்திரம் பிரமாணம்ஆதிசங்கரர் படக்கதை — 4
உரையாடல்: வையவன் — படங்கள்: செந்தமிழ்
View More ஆதிசங்கரர் படக்கதை — 4[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி
தாயிடம் பிடிவாதம் செய்து பக்ஷணம் பெற்ற பாலனைப் போலப் பெருமிதத்துடன் கிரீஷர் அன்னையைப் பணிந்து திரும்பினர். அன்னையின் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!… ஐந்து வயதுக்குப் பிறகு இந்தியச் சிறுவன் ஒருவனுக்கு ஆச்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது… தொழில் புரியவும், செல்வம் திரட்டவும் தெரியாத குடும்பி எந்த ஆச்ரமத்துக்கும் ஏற்றவனல்லன்… ஆச்ரம வாழ்க்கையில் தொழில் புரிதற்கும் திரவியம் தேடுதற்கும் இடமுண்டு என்றாலும், போட்டி போடுதற்கு அதில் இடமில்லை… திரண்ட வெண்ணெய் தண்ணீரில் கலங்காதிருப்பது போன்று, ஆச்ரமப் பயிற்சியில் ஊறியவன், தீயவர்களுக்கிடையில் கெடாதிருப்பான்…
View More [பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி[பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை
ஊட்டி மக்கள் சிறு சிறு ஹட்டிகளில் வசித்து வந்தார்கள். சுவாமி எல்லா ஹட்டிகளுக்கும் சென்று சிறு சிறு கதைகளைக் கூறி அம்மக்களுக்கு அருளுரை கூறி வந்தார். சிலநேரங்களில் பகவத் கீதை வகுப்பு நடத்தினார். அந்த கால கட்டத்தில் பேருந்து வசதி, மின்விளக்கு வசதிகள் கிடையாது. ஹட்டி மக்கள் பகலில் தோட்ட வேலைக்கு சென்று விடுவார்கள். அவர்கள் தோட்ட வேலைக்கு செல்வதற்கு முன்பு அவர்களுக்கு அருளுரைகள் சென்று சேர வேண்டும். ஆகையால் கடுங்குளிரில் காலை 4 மணிக்கே கால்நடையாக மலையின் ஏற்ற இறக்கங்களையயல்லாம் கடந்து சென்று ஹட்டி மக்களுக்கு அருளுரை ஆற்றி வந்தார். தமிழ்நாட்டில் மூலை முடுக்கு எங்கும் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கம் பரவ வேண்டும் என்ற எண்ணத்தை சுவாமி சித்பவானந்தர் உள் வாங்கிக் கொண்டார். ஆகவே இந்தப் பணியைச் செய்ய ஓர் இடத்தில் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க வேண்டும் என்று ஆழ்ந்து ஆலோசிக்கலானார். பிறகு வழக்கம் போல் தவத்தில் ஈடுபடலானார். தாம் எண்ணியபடி ஒரு ஸ்தாபனம் அமைக்கத் தகுந்த இடம் அவர் கண்களில் பட்டது. அதுதான் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர் ஆகிய மூவரால் பாடப்பட்ட, தாருகாவன ரிஷிகள் தவம் செய்த இடமான திருப்பராய்த்துறை ஆகும். காவிரியின் தென்கரையில் இவ்வூர் இருந்தது..
View More [பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை[பாகம் 12] சின்னு சித்பவானந்தர் ஆனார்
சின்னுவின் கண்களில் பட்டது, ‘சுவாமி விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள்’ என்னும் புத்தகம். பாஸ்போர்ட் குப்பைத்தொட்டிக்குச் சென்றது… மகேந்திரநாத் குப்தா எழுதிய ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்’ என்ற நூலை 1 ரூபாய் கொடுத்து வாங்கினார்… சந்நியாச தீட்ஷை பெறுவதற்கு முன்பு உயிருடன் இருப்பவருக்கும் சேர்த்து பித்ருக்களுக்குப் பிண்டம் போட வேண்டும்… “உன் தந்தையின் மரணம் சற்றுமுன் நிகழ்ந்திருந்தால் உனக்கு சந்நியாச தீட்சை தருவது 1 வருடம் தள்ளிப் போடப்பட்டிருக்கும். உன் தந்தை உடலைவிடும் போது உன் கையில் பிண்டம் பெற்றுச் சென்றது அவர் செய்த பாக்கியம்”
View More [பாகம் 12] சின்னு சித்பவானந்தர் ஆனார்[பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்
‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!’ என்ற வாசகம் பட்டினத்தாரை மாபெரும் துறவியாக்கியது. ‘சும்மாயிரு!’ என்ற மந்திரத்தால் ஞானியானவர்கள் தாயுமானவரும் அருணகிரியும். ‘செத்துத்தொலை!’ என்ற வார்த்தை வேங்கடராமனை ரமணமகரிஷி ஆக்கியது. இந்தக் கொங்கு நாட்டு இளைஞனை, சாலையோரக் கடையில் கண்டெடுத்த விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள் என்ற புத்தகம் தென்னாட்டு விவேகானந்தராக்கியது… “நீங்கள் கூறுவது உண்மையானால் ஒருவேளை ஒரு குழந்தையானது கருப்பையிலேயே அழிந்தாலோ, அழிக்கப்பட்டாலோ அது ஜீவன் முக்தி அடைந்து விடுமோ?”
View More [பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்[பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்
“இது திருநெல்வேலிக்குச் செல்கிறது. பக்தர்கள் அங்கு வருவார்கள்!”… நீங்கள் உயிர்வாழ அவசியம் என மருத்துவரின் கட்டாயம் இருக்குமேயானால் அசைவ உணவை உட்கொள்ளலாம். பசிக்காகவோ, ருசிக்காகவோ சாப்பிட்டால் அது பாபச்செயல்தான்… ஜாதி என்பது சமுதாய சவுகரியங்களுக்காக ஏற்பட்டது. ஜாதியில் உயர்வு, தாழ்வு கிடையாது. ஜாதி துவேஷம் கூடாது… தர்மச் சக்கரம் பத்திரிகை உயிருள்ளவர்களைப் போற்றவோ, தூற்றவோ செய்யாது. எல்லா சமயங்களிலுமுள்ள உயர்ந்த கோட்பாடுகளை இப்பத்திரிகை பிரசாரம் செய்யும்.
View More [பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்எழுமின் விழிமின் – 7
“…எது எளிது? ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக வளர்ந்து உருப்பெற்ற நமது தேசீய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? அல்லது சில நூற்றாண்டுகளாக நீங்கள் ஒட்டவைக்கப் பார்க்கிற அந்நிய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? ஆங்கிலேயர்கள் தமது யுத்தரீதியான பழக்க வழக்கங்களை மறந்து, போரிடுவதையும் ரத்தம் சிந்துவதையும் கைவிட்டு விட்டு, சாந்தமாக, அமைதியாக உட்கார்ந்து சமயத்தையே தமது வாழ்வின் ஒரே குறிக்கோளாக ஆக்கிக் கொள்ளுவதில் தமது சக்தி முழுவதையும் ஏன் ஒருமுகப்படுத்தக்கூடாது?…”
View More எழுமின் விழிமின் – 7எழுமின் விழிமின் – 6
என்னுடைய முன்னோர்களைக் குறித்து வெட்கப் படாமல் இருக்க வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் கொள்கைகளில் ஒன்று. உலகில் தோன்றிய பெருமை மிக்க மாந்தரில் நான் ஒருவன். ஆனால் வெளிப்படையாக உங்களுக்குக் கூறுகிறேன். நான் எனக்காகப் பெருமைப் படவில்லை. என் மூதாதையர்களின் காரணமாகவே பெருமை இன்னும் அதிகரிக்கிறது. அது எனக்கு வலிமையையும், வீர நம்பிக்கையையும் தருகிறது. பூமியில் புழுதியாகக் கிடந்த நிலையிலிருந்து அது என்னை மேலே உயர்த்தியுள்ளது. பெரியோர்களான நமது முன்னோர் களின் மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அது என்னை வேலை செய்ய வைத்துள்ளது.
View More எழுமின் விழிமின் – 6