ஒருமுறை அரசவையிலிருந்த ஆச்சாரவாதிகள் ஞானேஷ்வரரையும் அவருடைய சோதரரையும் பிரஷ்டர்கள் என இகழ்ந்தனர். நிவர்த்திநாதர் ‘பூசுரரே வேதங்களை அளித்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் இவர்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்களா? தம் வாழ்க்கையால் உயர்ந்தவர்களா?” என வினவினார். அப்போது தண்ணீரை சுமந்த படி ஒரு எருமை அங்கே வந்தது. ஞானேஸ்வரர் அந்த எருமையைக் காட்டி “உங்களுக்கெல்லாம் இந்த எருமைக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு சிறு பகுதி இருக்குமென்றாலும் நீங்கள் மதிக்கப்படத் தக்கவர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆச்சாரவாதிகள் “நீ சொன்னதை இப்போது நிரூபிக்காவிட்டால் உன்னை வெட்டிப் போடுவோம்” என்றனர்….
View More ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்Tag: ஞானியின் செயல்கள்
ரமணரின் கீதாசாரம் – 10
ஒன்று கிடைக்க வேண்டும் அல்லது சேர வேண்டும் என்று நினைப்பதும் ஆசையே; ஒன்று கிடைக்க வேண்டாம் என்பதும் ஆசையே. அப்படி அது இருதரப்பட்டது போலவே, சேரவேண்டியது சேராவிட்டாலும், சேர வேண்டாதது சேர்ந்து விட்டாலும் வருவது கோபமே.[..] சலனமற்ற மனமாகிய நீர்பரப்பில் தோன்றும் குமிழிகள் போல இருப்பதால், அவை எழாத இடத்தில் மனமும் அடங்கியே இருக்கும். சாதகனைப் பொறுத்தவரை அவனது ஒவ்வொரு எண்ணமும் அடங்க அடங்க அவனுக்கும் மன அமைதி கிடைக்கும் [..]
View More ரமணரின் கீதாசாரம் – 10