இந்து தர்ம ஆசாரியர், வேத-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய வீடியோ. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்த வீடியோ அளிக்கிறது… பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா?…
View More மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்Tag: டாக்டர் ரங்கன்ஜி
சமத்துவ மூர்த்தி ஸ்ரீராமானுஜர்
ஹைதராபாதில் ஸ்ரீ சின்ன ஜீயர் அவர்களின் அருட்தலைமையில் அமைந்து பிரதமர் மோதி அவர்கள் திறந்து வைத்த ஸ்ரீராமானுஜர் சிலைக்கு சமத்துவ மூர்த்தி (Statue of Equality) என்ற திருப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளதே மிகப்பொருத்தமானது என்று இந்த உரையில் அருமையாக விளக்குகிறார் வேத சாஸ்திர அறிஞரும் ஆசாரியருமான டாக்டர் ரங்கன்ஜி அவர்கள். ஆன்மீக சமத்துவம் என்று கூறிவிட்டாலே அதனால் சமூக, பொருளாதார சமத்துவம் வந்துவிடுமா என்று இந்து விரோத “முற்போக்கு” ஆசாமிகளின் கேள்வியையும் எடுத்துக் கொண்டு அதற்கும் அறிவார்ந்த வகையில் விடையளித்திருக்கிறார்….
View More சமத்துவ மூர்த்தி ஸ்ரீராமானுஜர்வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி
டாக்டர் ரங்கன்ஜி ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்ற சிறப்பான குறுஞ்சொற்பொழிவுத் தொடரைக் கடந்த சில மாதங்களாக நிகழ்த்தி வருகிறார். சங்க இலக்கியங்களில் வேதம், வேதியர், வேத தெய்வங்கள், வேத வேள்விகள், வேதாந்த தத்துவம், ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், முருகன், சிவபெருமான், திருமால், சக்தி எனப் பலவற்றையும் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களையெல்லாம் எளிமையாக, அழகாக, ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கிறார்…
View More வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்
ஓசூரில் ஜூன் 10, 2018 ஞாயிறு முற்பகல் மைத்ரி அமைதி மையம் ஏற்பாடு செய்து நடத்திய ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ கருத்தரங்கம் சிறப்புற நிகழ்ந்தது. சங்க இலக்கியத்தில் வேதப்பண்பாடு என்பது குறித்து ஜடாயுவும், நாங்கள் ஆதி இந்துக்கள் என்ற தலைப்பில் ம.வெங்கடேசனும் உரையாற்றினர்… அடுத்து, தனது உரைக்கு முன்பாக, முந்தைய பேச்சாளர்கள் கூறிய சில கருத்துக்களின் தொடர்ச்சியாக, கிராம தெய்வங்களும் வேதப்பண்பாடும் என்பது குறித்து ரங்கன்ஜி பேசினார். இறுதியாக, பாரதியாரும் வேதமும் என்ற தலைப்பில் ரங்கன்ஜி உரையாற்றினார். உரைகளுக்கு நடுவில் பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த உரைகளின் முழு வீடியோ பதிவுகளையும் இங்கு காணலாம்…
View More ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்