இந்த நிகழ்வானது பாரத நாடெங்கும் தொடர்ந்து நடந்து வரும் பல்வேறு புனிதநீராடல் விழாக்களிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதல்ல.. இந்த அனைத்து மாநிலங்களிலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் கோயில் நிர்வாகங்கள், ஆன்மீக அமைப்புகள கூடிப் பேசி பரஸ்பர ஒத்துழைப்புடன் இந்த விழாக்கள் நடந்தேறுகின்றன. முதலமைச்சர்களே கூட கலந்து கொள்கிறார்கள். அத்தகைய நல்ல முன்னுதாரணத்தை கடந்த வருடம் காவேரி புஷ்கரத்தின் போது தமிழ்நாடு அரசும் கடைப்பிடித்தது. இப்போது என்ன ஆயிற்று?.. “குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகமான பக்தர்கள் செல்ல பாதைவசதி இல்லை; இடவசதியும் இல்லை” என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார் ஒரு அரசு அதிகாரி. 1990களில் கூட கோயிலுக்கு முன்பாக மனதைக் கொள்ளை கொள்ளும் மணல்மேடு இருந்தது. அதனை முழுவதுமாகத் தோண்டி மணல் கொள்ளையர்கள் அழித்த பிறகு, இப்போது சேறும் சகதியும் முட்புதர்களும் பரவிய குப்பை மேடாக ஆகி விட்டிருக்கிறது. அட, இந்த விழாவை முன்னிட்டாவது அதைத் தூய்மை செய்து பயன்பாட்டுக்கு ஏற்றபடி ஆக்கலாம் என்று இந்த ஆணையருக்கு புத்தி போகவில்லை. அரசின் கையாலகாத் தனத்தை முரசறைவது தான் அவருக்குத் தெரிந்திருக்கிறது…
View More தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு?Tag: தாமிரபரணி
அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி
ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அதைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்… தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர்…
View More அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்திதாமிரபரணி முதல் பரமகுடி வரை…
ஐயா இஸ்லாமிய அடிப்படைவாதியே ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சமூக நீதிக்காக போராடுவது என்பது நல்ல விசயம். அதற்கான ஜனநாயக சூழலை இந்து பண்பாடு அளித்திருக்கிறது. அந்த பண்பாட்டின் ஒரு ஏற்றமிகு உச்சமான டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் அளித்திருக்கிறது. பெண்களை கல்லால் அடித்து கொல்வதைக் காட்டிலும் பிறமதத்தவரின் கழுத்தை வெட்டிக் கொல்வதைக் காட்டிலும் சவூதி அரேபியாவின் மானுடத்தன்மையற்ற சட்டங்களுக்கு வக்காலத்து வாங்குவதைக் காட்டிலும் குழந்தை திருமணங்கள் மூலமாக இந்திய சிறுமிகளை அராபிய ஷேக்குகளுக்கு மார்க்கரீதியாக விற்பதைக் காட்டிலும், அப்பாவிகளை குண்டு வெடிப்பில் கொன்று அதை ஜிகாத் என சொல்லி புளகாங்கிதமடைவதைக் காட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காக போராடும் இந்துவாக இருப்பது எவ்வளவோ மேல். ஆனால் அது தங்கள் அராபிய அடிமைத்தனம் நிரம்பி வழியும் மூளையில் ஏறாதது ஆச்சரியமல்ல.
View More தாமிரபரணி முதல் பரமகுடி வரை…நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?
மாநிலக் கட்சிகள் பிராந்திய நலனை மட்டுமே மனதில் கொண்டு அரசியல் செய்வதில் ஆச்சரியமில்லை. அவர்களின் அரசியல் ஒரு குறுகிய பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் காங்கிரசும், பா.ஜ.க.வும் (ஓரிரு மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருக்கும் மார்க்சிஸ்டுகளை தேசிய கட்சியாகவே மதிக்க முடியாது) தமிழகத்தின் நலனைப் புறக்கணிப்பது அநியாயம். திமுக அல்லது அதிமுக உடன் சேர்ந்து சில எம்பிக்களைப் பெற்று விடுவதாலும், கழகங்களின் சுயநல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் முழு ஆதரவைப் பெற்று விடுவதாலும், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தின் நலனை எண்ணிப் பார்ப்பதாக இல்லை. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் அதை காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆளும் கேரள, கர்நாடக மாநில அரசுகள் மதிப்பதில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தாத மாநிலங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது. சம்பந்தப்பட்ட மாநில அரசை அரசியல் சட்டத்தின் 356 வது பிரிவை அமல்படுத்தி கலைக்க வேண்டும். அல்லது 355வது பிரிவைப் பயன்படுத்தி சட்டசபையை முடக்கிவிட்டு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தலாம்
View More நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?ஒரு நதியின் நசிவு
மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும்…. வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி…
View More ஒரு நதியின் நசிவு