சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் விளக்கங்கள் – வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை, இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது… ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன் தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்… .சிருஷ்டியும், சிருஷ்டிப்பவரும் கடவுள் தான் என்பது வேதம். இங்கே படைப்பும் படைப்போனும் வேறு வேறு இல்லை. எனவே இந்த ஜகத் என்பது ஈஸ்வரனின் விரிவாக்கமே அன்றி உருவாக்கம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்…..
View More கடவுள் என்றால் என்ன? – 1Tag: நுண்பொருள்
ரமணரின் கீதாசாரம் – 4
எது என்றும் உள்ளதோ அது நிலைத்து நிற்கும், எதற்கு இருப்பு இல்லையோ அது இல்லாததே. இன்று இருக்கிறது, நாளை இல்லாது போகும் தன்மை கொண்டது அது. ஆக முன்னும் பின்னும் இல்லாது இடையில் மட்டும் இருக்கும் தேகத்தை எப்படி நிலையானது என்று கொள்ள முடியும்?
View More ரமணரின் கீதாசாரம் – 4