ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
View More பணிப்பொன்Tag: முருகன்
காவடிகள் சிந்து பாடும் கழுகுமலை
”கருணை முருகனைப் போற்றி – தங்கக் காவடி தோளின் மேலேற்றி…. “ – காவடிச்சிந்து மெட்டுக்கள், படித்தவர், பாமரர் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. காவடிச்சிந்து என்றாலே நம் நினைவுக்கு வருபவர், அண்ணாமலை ரெட்டியார்… இங்கு கழுகுமலையில் கடலொத்த வீதிகள் காணப்படுகின்றன. அங்குள்ள கடைகளின் முன்பு முத்துப் பந்தல் போட்டிருக்கிறார்கள். அந்தப் பந்தலின் ஒளியினால் அஷ்ட கஜங்களுடைய தந்தங்களின் ஒளி கூட மழுங்கி விடுமாம்!
View More காவடிகள் சிந்து பாடும் கழுகுமலைஓங்காரத்து உட்பொருள்
சிறுமீன் கண்ணைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் அதன் விதையில் நால்வகைபடையுடன் அரசர் தங்குவதற்கேற்ற நிழலை அளிக்கத் தக்க பெரிய விருட்சம் தோன்றும் ஆற்றல் அடங்கி இருப்பதுபோல , இந்த மாயையில் மகத்தான பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூலம் அடங்கியிருக்கும். பிரணவமே உலகத்துக்கு முதற்காரணம்.
View More ஓங்காரத்து உட்பொருள்மஹாகவி பாரதியாரின் கதைகள்-செய்கை
“நாட்டியம் மிகவும் மேலான தொழில். இப்போது அந்தத் தொழிலை நமது நாட்டில் தாஸிகள் மாத்திரமே செய்கிறார்கள். முற்காலத்தில் அரசர் ஆடுவதுண்டு. பக்தர் ஆடுவது லோக பிரசித்தம். கண்ணன் பாம்பின் மேலும், சிவன் சிற்சபையிலும் ஆடுதல் கண்டோம்.
View More மஹாகவி பாரதியாரின் கதைகள்-செய்கைகாலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்
கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக் காரர்கள், கப்பல்களில் ஏறித் தப்புவதற்கு முன் அதனை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர், அது முடியவில்லை… மன்னர்கள், துறவிகள், மடங்கள் மட்டுமல்லாது, எல்லா சமூகத்து மக்களும் இந்தக் கோவிலுடன் தொடர்பு கொண்டு முருகனை வழிபட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
View More காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1
கொற்றவை, பழையோள் ஆகிய தொல்குடிப் பெண் தெய்வங்கள், வைதிகக் கடவுளாகிய ‘மால்வரை மலைமகளு’டன் இணையப் பெறுகின்றனர். அந்த இணைப்பைச் செய்பவன் முருகன். இது தொல்பெரும் தமிழ் மரபும் வேத நெறியும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தம்முட் கலந்து இணங்கியமைக்குத் தக்க சான்றாகும்.
View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1ஜனவரி 1 – படித்திருவிழா
ஆங்கிலேயர் ஆட்சி நம்நாட்டில் நிலவிய காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதப் பிறப்பன்று அதிகாரிகளான துரைமார்களை காணிக்கையுடன் சென்று கண்டு புதுவருட வாழ்த்துக்களைக் கூறித் திரும்புவது நம் மக்களிடையே ஏற்பட்ட ஒரு பழக்கம். திருப்புகழைத் தவமாக மேற்கொண்ட, வள்ளிமலை ஸ்வாமிகள் சித்தத்தில் ஒரு ஞான உதயம்! உலகத்திற்கே பெரிய அதிகாரியான, உமாஸ்கந்தனை இவ்விதம், சென்று கண்டு தொழுதால், வருட முழுவதும் எண்ணற்ற நலங்களை பெறலாமே, என அருள்கூட்டியது…
View More ஜனவரி 1 – படித்திருவிழாஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா
[உ.வே.சாவின் கட்டுரை, படங்களுடன்] “குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்.”
View More ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சாஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்
1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்துக்கள் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்; அவர்கள் தாம் குடியமர்ந்த இடங்களில் வழிபாட்டுத்தலங்களையும் அமைத்துள்ளனர். இந்து சமயம் காட்டும் நெறியில் இந்துக்களாகவே வாழ்வதற்கு அவர்கள் உறுதியான அத்திவாரத்தை இட்டுள்ளனர். 15 இந்து கோவில்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன…
View More ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்முருகன் அலங்காரப் பாடல்:
திருச்செந்தூர் முருகனைப் பற்றிய ‘அலங்காரம்’ என்னும் அழகிய மரபுவழிப் பாடலின் வரிகள் மற்றும் அதன் ஒலி வடிவம் – திருமதி ஜயலக்ஷ்மி குரலில்.
View More முருகன் அலங்காரப் பாடல்: