ஜம்புநாதன் செய்த பணியில் மகத்தானது, நான்கு வேதங்களையும் தமிழில் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டதாகும். வேதம் எல்லோருக்கும் பொதுவானது. அவை தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என அவர் விரும்பினார்.. மும்பை, அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. ஆரிய சமாஜத்தில் ஆர்வம் பிறந்தது. சாலையோரச் சிறுவர்கள் படும் கஷ்டங்களையும், அங்கு வசிக்கும் தமிழர்கள் படும் அவலங்களையும் கண்டு ஜம்புநாதன் மிகவும் மனம் வருந்தி 1924ல் தாராவியில் ஒரு பள்ளியை அவர்களுக்காக ஏற்படுத்தினார்…
View More வேதம் தமிழ் செய்த மேலோன்: ம.ரா.ஜம்புநாதன்Tag: யஜுர்வேதம்
வேதத்தில் சிவலிங்கம்
“இந்த வேதத்தில – ருத்ரம் இருக்கு, அதுல நமச்சிவாய எல்லாம் இருக்கு, ஆனா சிவலிங்கம் என்று வெளிப்படையாக இருக்கா சார்” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். கேட்டவர் ஒரு “சைவர்” என்பது சொல்லாமலே விளங்கும்… கிருஷ்ண யஜுர்வேதம், தைத்திரியாரண்யகம் கடைசி பாகத்தில் உள்ளது மஹாநாராயண உபநிஷத். இதில் ஶிவோபாஸன மந்த்ரா: என்ற பெயரில் கீழ்க்கண்ட மந்திரங்கள் வருகின்றன. சிவபெருமானின் ஐந்து முகங்களுக்கான மகாமந்திரங்களும்,ருத்ர நமஸ்கார மந்திரங்களும் உள்ளன…
View More வேதத்தில் சிவலிங்கம்மேதா ஸூக்தம் – தமிழில்
வேதங்களில் வரும் மேதா என்ற என்ற பெண்பாற்சொல் உள்ளுணர்வு (intuition), அறிவு (intelligence), மன ஆற்றல் (mental vigor) ஆகியவற்றைக் குறிக்கிறது. இதிலிருந்தே தமிழில் மேதை, மேதைமை ஆகிய சொற்கள் வருகின்றன. அறிவையும் அதனால் விளையும் ஆற்றலையும் ஒரு சக்தியாக, தேவியாக போற்றுகிறது இந்த அழகிய வேதப்பாடல். வேதங்களில் இவ்வாறு போற்றப்படும் மேதா தேவி என்னும் தெய்வீக சக்தியே சரஸ்வதி, கலைமகள், பாரதி என்று ஒவ்வொரு இந்து இல்லங்களிலும் உள்ளங்களிலும் வழிபடப் பெறுகிறாள்…
View More மேதா ஸூக்தம் – தமிழில்துர்க்கா ஸுக்தம் – தமிழில்
யஜுர்வேதத்தில் உள்ள பரம பவித்திரமான ஸூக்தம் இது. துர்கா என்ற சொல்லுக்கு கடக்க முடியாத, செல்லமுடியாத என்பது பொருள். துர்காணி – கடக்கமுடியாத ஆபத்துக்கள். அன்னை மகா பிரகிருதியும் ஆதி சக்தியுமானவள், அறியமுடியாதவள் என்பதனால் இச்சொல் அவளது திருப்பெயராக இலங்குகின்றது… ஜாதவேதஸ் எனும் அக்னிக்கு சோமத்தைப் பிழிந்து அளிப்போம். அறிவுருவான அவன் எமது பகைகளைப் பொசுக்கிடுக. எமது ஆபத்துக்கள் அனைத்தையும் போக்கிடுக கடலைக் கடக்கும் கப்பலென அக்கரை சேர்த்திடுக…
View More துர்க்கா ஸுக்தம் – தமிழில்ஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)
வேத நெறிப்படி வாழ நாம் எடுக்கும் சங்கல்பம் அல்லது உறுதியே யக்ஞோபவீத தாரணம் அல்லது பூணூல் அணிதல். உபநயனம் என்ற கல்விக் கண் திறக்கும் சடங்கின் புற அடையாளமாக பூணூல் அணியப் படுகிறது… அதன்படி வருகின்ற ஆவணி மாதம் 4ஆம் நாள் (20/08/2013) செவ்வாய் கிழமை ஆவணி அவிட்டம் நாளில் காலை 9 மணிக்கு யஜுர் வேத உபாகர்மம் நடைபெறும். அது சமயம் புதிதாக பூணூல் அணிய விருப்பம் உள்ளவர்கள் யாரும் இதில் கலந்து கொண்டு யக்ஞோபவீத தாரணம் செய்து கொள்ளலாம். இடம்: சென்னை திருவல்லிக்கேணி ஆரிய சமாஜம் … தகுதி: மனிதராக பிறந்த அனைவரும். தக்ஷிணை : வேதங்கள் காட்டும் வழியில் வாழ்வதே… மேலும் விவரங்கள் கீழே..
View More ஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)