கம்பராமாயணம் – 13 (Kamba Ramayanam – 13)

நாட்டுப் படலம் (46-50) Canto of the Country (46-50)

பெருகித் திகழும் பல்வளம்

காரொடு நிகர்வன, கடிபொழில்; கழனிப்

போரொடு நிகர்வன, பொலன்வரை; அணை சூழ்

நீரொடு நிகர்வன, நிறை கடல்; நிதிசால்

ஊரொடு நிகர்வன, இமையவர் உலகம். 46

சொற்பொருள்:

மேகங்கள் எல்லாம் அயோத்தியில் உள்ள சோலைகளை ஒத்து இருந்தன. மேருமலையோ, அந்நாட்டின் வயல்வெளிகளில் குவிந்துகிடக்கும் வைக்கோற் போர்களை ஒத்திருந்தது. அலை கடலோ எனில், அங்கே அணைக்கட்டுகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரின் அளவை ஒத்தது. செல்வ வளம் நிறைந்திருந்த அயோத்தியை தேவலோகம் ஒத்திருந்தது.

உபமேயத்தை உபமானமாக்கும் எதிர்நிலை அணி தொடர்கிறது. மேரு, வைக்கோல் போர்களை ஒத்திருக்கவும்; கடல், அங்கே அணைக்கட்டுகளில் தேங்கியிருக்கும் நீரை ஒத்திருக்கவுமான எதிர்நிலைகள் தொடர்கின்றன.

காவியம் கற்பதில் உள்ள அனுபவம் நம் சமகால வாசிப்பு அனுபவத்திலிருந்து முற்றாக வேறுபட்டது. வரிக்கு வரி கதையில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்ற சமகாலக் கருதுகோளுக்கு காவ்யானுபவம் ஒட்டிப் போவதில்லை. வாழ்க்கையில் பல சம்பவங்களுக்காகக் காத்துக் கிடப்பதைப் போல்தான் இங்கும். நிறைய காத்திருந்து, பலவிதமான அனுபவங்களை அடைந்தே கதையோடு இணைய முடியும்.

Translation: Dark clouds of the skies were as rich as the groves of Ayodhya. Mount Meru was as high as the stacks of hay in their fields. Oceans could be likened to the quantum of water in the dams of the land. And the very land of the celestials, the Deva Loka, resembled in all respects the land of Ayodhya.

Elucidation: That, is in continuation what the poet has been doing from verse 42. Reversing the subject and object of comparison with one another. Oceans resembling the amount of water stored in dams and Meru resembling haystacks!

The Poet is frolicking in gay abandon. Our present day mindset is tuned to the idea that ‘something should happen in every sentence; every line should move towards an event in the story’. This is where reading a novel and reading an epic differs. The format for the Poet is unlimited and he takes all his time in experimenting the esoteric. Experincing the epic is like experiencing life. Life does not always move fast. And time does not move in the same manner, uniformly, throughout life. Sometimes the passage of a few minutes takes aeons. Sometimes years fly like grains of sand blown by strong winds.

Let’s move with the Poet. Hasten slowly.

நெல்மலை அல்லன நிரைவரு தரளம்;

சொல்மலை அல்லன தொடுகடல் அமிர்தம்;

நல்மலை அல்லன நதிதரு நிதியம்;

பொன்மலை அல்லன மணிபடு புளினம். 47

சொற்பொருள்: தரளம் முத்து. சொல்மலை சொல்லப்பட்ட (முத்தாகிய) மலை. கடல் அமிர்தம் உப்பு (இந்த இடத்தில்). புளினம் மணல்மேடு.

எவையெல்லாம் (குவிக்கப்பட்டதால் உண்டான) மலைகளாகக் காட்சியளிக்கின்றனவோ, அவையெல்லாம் நெல்மலையாகத்தான் இருக்கும். அப்படி நெல்மலையாக இல்லாதது முத்துகளைக் குவித்ததால் உண்டான மலையாகலாம்; அப்படி முத்துகளின் குவியலான மலையில்லை என்றால் அது கடலிலிருந்து உண்டான அமுதமாகிய உப்பின் குவியலாகத்தான் இருக்கும்; உப்பின் குவியலும் இல்லாவிட்டால், (கவனித்துப் பார்) அது நதியின் வெள்ளம் அடித்துக் கொண்டு வந்த பொன்துகள்களும், மணிக் கற்களுமாக இருக்கலாம். அப்படி பொன்னும் மணியும் திரண்ட குவியலாகவும் இல்லையென்றால் அது ஒருவேளை, மணிகள் கலந்திருக்கும் மணல்குவியல்களாகவும் இருக்கலாம்.

நாட்டில் எங்கு பார்த்தாலும் குவியல்களாகக் கிடக்கிறது என்றால், அவை ஒன்று நெற்குவியலாக இருக்கலாம், அல்லது முத்துக்குவியலாக இருக்கலாம் என்று கற்பனை தொடர்கிறது.

Translation: That which is not mountains of grains, must be hills of pearls heaped all over. That which is not heaps of pearls, should be peaks of salt, the manna of ocean. That which is not heaps of salt, would be gems and specks of gold that the rivers have washed down from hills. And that which is not heaps of gems, could only be sand heaps mixed with precious stones.

Elucidation: Wherever you find a heap in the land, it never is a heap; but is a hill. And any such hill must be what is normally known as ‘heaps of grains’. If you say that ‘this is not a heap of grain’ then look again, it might be a heap of pearls….on goes the poet, riding his ‘viewless wings of poesy’.

இளையவர் பந்து பயில் இடமும், ஆடவர் கலை தெரி கழகமும்

பந்தினை இளையவர் பயில் இடம், மயில்ஊர்

கந்தனை அனையவர் கலைதெரி கழகம்,

சந்தன வனம்அல, சண்பக வனம் ஆம்;

நந்தன வனம்அல, நறைவிரி புறவம்; 48

சொற்பொருள்: நறை தேன். புறவம் முல்லை வனம்.

‘பந்தினை இளையவர் பயில் இடம், சந்தன வனம் அல, சண்பக வனமாம்; மயில்ஊர் கந்தனை அனையவர் கலைதெரி கழகம் நந்தனவனம்அல, நறைவிரி புறவம்’ என்று மாற்றிக் கூட்டுக.

இளம் பெண்கள் பந்து வீசி விளையாடிக் கொண்டிருக்கும் இடங்கள் சந்தன மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் வனங்கள்தாம். ஆனால் அவை சந்தன வனங்கள் அல்ல; சண்பக வனங்கள் (ஏனெனில் அந்தப் பெண்களின் மேனியே சண்பக மணம் கமழ்வதுதான். நடமாடும் சண்பகப் பூக்கள் நிறைந்த அந்த சந்தன வனம், சண்பக வனமானது.) மயில்மேல் ஊர்பவனாகிய முருகனை ஒத்த அழகுள்ள இளைஞர்கள், ஆயுதப் பயிற்சிகளைச் செய்யும் இடங்கள் நந்தவனங்களில்தாம் என்றாலும் அவை முல்லை வனங்களே. (ஏனெனில் ஆடவர் மேனியில் இயற்கையில் திகழும் முல்லை மலரின் வாசம், ஆடவர் கூட்டம் நிறைந்த நந்தவனங்களை முல்லை வனமாக்கிவிடுகிறது.)

Translation: Sandalwood groves where young woman throw about and play with their balls (by virtue of their natural bodily fragrance) turned into Champaka groves. And the air in the flowering orchards where young men, handsome as the peacock-riding Skanda, were practising on weaponry, was filled with (their natural body odour of) Mullai, wild-jasmine, filling the orchards with the pleasnt smell of Mullai.

Elucidation: Traditionally the natural odour of body is attributed/likend with that of the Champaka flower for women and wild-jasmine (Mullai) for men.

மடவாரின் பேச்சழகும், காட்சிப் பொருள்களும்

கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்

பாகுஇயல் கிளவிகள்; அவர்பயில் நடமே

கேகயம் நவில்வன; கிளர்இள வளையின்

நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம். 49

சொற்பொருள்: கோகிலம் குயில். பாகியல் பாகைப் போன்ற இனிமையான. கிளவி சொல். நவில்வன பழகுவன. நாகு பெண் சங்கு (நத்தையினமாகிய சங்குப் பூச்சிகளின் பெண்)

இளம்பெண்களின் இனிமை நிறைந்த, குழறலான மழலைப் பேச்சை ஒத்துக் குயில்கள் கூவின. அவர்களுடைய நடையின் ஒசிவைப் பார்த்தே மயில்கள் நடனம் பழகிக் கொள்கின்றன. அவர்களுடைய பற்களின் வெண்மையையும் பிரகாசத்தையும் ஒத்த முத்துகளையே சங்கினங்கள் ஈனுகின்றன.

Translation: Cuckoos mimick the honeyed blabber of maidens. Peacocks imitate the swaying movements of damsels as they walk, and learn their dancing. And, oysters yield pearls, that shine like the rows of teeth of women of Kosala.

Elucidation:

இல்லங்களிள் உள்ளவை Who had what

பழையர்தம் மனையன, பழநறை; நுகரும்

உழவர்தம் மனையன, உழுதொழில்; புரியும்

மழவர்தம் மனையன, மணஒலி; இசையின்

கிழவர்தம் மனையன, கிளைபயில் வளையாழ். 50

சொற்பொருள்: பழையர் கள் விற்பவர்கள். பழநறை பழகிய, பழைய கள். உழுதொழில் உழுவதற்கான கருவிகள். மழவர் இளைஞர். இசையின் கிழவர் இசைக்கு உரிமையுள்ளவர். பாணர்.

கள்விற்போரின் இல்லங்களில் பழங்கள் இருந்தது. உழவர்களின் வீடுகளில் கலப்பை முதலான உழவுக் கருவிகள் இருந்தன. (மணப்பெண்கள் வரித்துக் கொண்ட) இளைஞர்களின் இல்லங்களில் திருமண காலங்களில் ஒலிக்கும் இசை கேட்டுக் கொண்டிருந்தது. பாணர்களுடைய இல்லங்களில் நரம்புகள் பல அமைந்த யாழ்கள் இருந்தன.

Translation: Old, seasoned toddy was available aplenty in the houses of toddy-vendors. Plough, shovel and other tools were kept in array in the residence of farmers. The houses of young bridegrooms were filled with music-of-marriage. And in the houses of bards remained attuned the many stringed lyre.

Elucidation:–

முந்தைய பகுதி

அடுத்த பகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *