கம்பராமாயணம் – 14 (Kamba Ramayanam – 14)

நாட்டுப் படலம் (51-55) Canto of the Country (51-55)

கோதைகள் சொரிவன, குளிர்இள நறவம்;

பாதைகள் சொரிவன, பருமணி கனகம்;

ஊதைகள் சொரிவன, உயிர்உறும் அமுதம்;

காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள்; 51

சொற்பொருள்: கோதை பூமாலை. நறவம் தேன். பாதை மரக்கலங்கள். ஊதை காற்று. காதை கவிஞர்கள் வழங்கியிருக்கும் எல்லாப் பாடல்களையும் குறிப்பது.

பூமாலைகளிலிருந்து குளிர்ச்சியான, புதிய தேன் வடிகிறது. மரக்கலங்களிலிருந்து பொன்னும் விலையுயர்ந்த பெரிய மணிகளும் கொட்டுகின்றன (கடல் வாணிகம்). வாழ்கின்ற அனைத்து இனங்களுக்கும் உயிரை உடலில் நிலைத்திருக்கச் செய்வதான அமுதம், (வாடை, தென்றல் போன்ற பலவகையான) காற்றுகளிலிருந்து வீழ்கிறது. கவிஞர்கள் சொல்லி வைத்திருக்கும் பாடல்களிலிருந்தெல்லாம், காதுகளால் ருசிக்கக்கூடிய கனிகள் வீழ்ந்த வண்ணமாக இருக்கின்றன.

செவிநுகர் கனிகள் என்ற ஆட்சியே பின்னால் பாரதியை இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்று பாடவைத்தது. பின்னால், அயோத்தியா காண்டத்தில், இராமனைத் திரும்ப அழைத்து வருவதற்காகப் பயணப்படுவதை மக்களுக்கு அறிவிக்குமாறு சத்ருக்கனனிடம் பரதன் சொல்கிறான். சத்ருக்கனனும் அவ்வாறு அறிவிக்கிறான். அவன் அவ்வாறு செய்த அறிவிப்பு செவிப்புல நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்என்று பாரதியின் தேன்வந்து பாயுது காதினிலே பாடல் அடிக்கு மூல காரணமாக விளங்குவதைப் பின்னால் காண்போம்.

Translation: All that dripped from garlands was honey so fresh; all that flowed from the sails were gold and gems; all that the winds carried about was the mannah-of-life (breath); and all that is laden in the lines of poets are audible fruits.

Elucidation: If it was honey that the garlands dripped and money that the ships brought, the words of poets were ‘fruits to be heard’, tasted by the ear. Experimenting with expressions is thus, at least a thousand years old in Tamil literature.

இடம்கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,

தடங்கொள் சோலைவாய், மலர்பெய் தாழ்குழல்

வடம்கொள் பூண்முலை மடந்தை மாரொடும்

தொடர்ந்து போவன தோகை மஞ்ஞையே. 52

சொற்பொருள்: மஞ்ஞை மயில்.

பெரிய பரப்பைக் கொண்ட சோலைகளுக்கு வந்துள்ள, நீண்ட கூந்தலையும் ஆபரணங்கள் பூண்ட மார்பகங்களையும் கொண்ட பெண்களை ஆண்மயில்கள் கண்டன. சாயலில் மயிலைப் போலவே தோற்றமளிக்கும் அவர்களைப் பெண் மயில்கள் என்று எண்ணி, அங்கிருந்த ஆடவர்களுடைய மனத்தைப் போலவே, அந்தப் பெண்களைப் பின்தொடர்ந்தவாறு சென்றன.

Translation: In the vast groves where young lassies of long curly locks and ornated breasts, peacocks, by their beauty, gait and likeness, mistook the girls for their pairs and went behind them, following everywhere, as did the minds of men (that never moved away from their sight).

Elucidation:–

நாட்டில் வறுமை முதலியன இல்லாமை

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;

திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;

உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;

ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால். 53

சொற்பொருள்: வண்மை வள்ளல் தன்மை, கொடைச் சிறப்பு. ஒண்மை அறிவுடைமை.

அங்கே வறுமை என்பதே இல்லை ஆகையால், வள்ளல்களின் சிறப்பு வெளியே தெரிவதில்லை. எதிரிகள், நாட்டின்மேல் போர்தொடுத்து வருபவர்கள் என்று யாருமே இல்லாத காரணத்தால், நாட்டின் வீரர்களுக்குத் தங்களுடைய பராக்கிரமத்தை வெளிக்காட்டும் சந்தர்ப்பமே இல்லை. பொய் பேசுபவர்கள் யாருமே இல்லை. ஆகவே, உண்மை என்பது தனிச்சிறப்பு உள்ள ஒன்றாகக் கருதப்படவில்லை. (அது மற்றொரு இயற்கையான குணமாகக் கருதப்பட்டது; ஆகவே உண்மையே பேசுவது என்பது சிறப்புவாய்நத குணம் என்று யாருக்கும் தோன்றவில்லை.) எல்லோரும் பல பெரியவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட கேள்விச் சிறப்பு கொண்டவர்களாக இருந்ததால், ‘இன்னார் அறிவில் சிறந்தவர் என்று தனித்துச் சொல்லப்பட யாருமே இருக்கவில்லை.

மேற்படிப் பாடலில் உள்ள வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால் என்ற அடியும், வான்மீகத்தில்:

நாஷடங்க வித் ந அஸ்தி ந அவ்ரதோ ந அஸஹஸ்ரதா:

ந தீன க்ஷீப்தா சித்தோ வா வ்யாதிதோ வா அபி கஸ்சனா:

என்ற ஸ்லோகத்தையும் (பால காண்டம், சர்க்கம் 6, ஸ்லோகம் 15) ஒப்பிட்டுப் பார்க்கவும். ஆயிரத்துக்குக் குறைந்து தானமளிப்போரும் இல்லை; துன்பத்தால் நலிவுற்ற மனத்தை உடையோரும் இல்லை என்ற கருத்து ஒன்றேபோல் அமைந்திருப்பதைக் காணலாம்.

Translation: There was no poverty and therefore there was no philanthropy (as there was none to receive that which is given away). There were no invaders, nor was there any war and therefore, there was no way that the warriors could exhibit their valour and be known for their excellence. There was no falsehood and therefore Truth had no distinctive value. And, as everyone was a scholar, knowledge had no special place of praise.

Elucidation: Philonthropy is dependent on poverty; valour on war. Truth has no special plaace of mention, when there is none to utter falsehood. It becomes just the order of the day. And of what special significance is the learned, when everyone is a scholar!

Compare this idea of ‘no poverty, no philonthropy’ with this Sloka

na aSaD.nga vit na asti na avrato na asahasradaH |
na diinaH kshipta chittao vaa vyathito vaa api kashchana |

(Bala Kanda, Sarga 6, Sloka 15)

and look at the striking similarity of ideas ‘na asahasradaH’ ‘none a non-donor in thousands, thus none with a saddened heart, turmoil in mind or agonised in will is there’.

எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,

கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,

அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,

தள்ளும் நீர்மையின், தலைமயங்குமே. 54

சொற்பொருள்: அள்ளல் சேறு. அளம் உப்பளம். பண்டி வண்டி

எள்ளை ஏற்றி வரும் வண்டிகள்; தினை, சோளம், சாமை, கொள் ஆகியனவற்றை ஏற்றிவரும் வண்டிகள் ஆகியவற்றோடு, சேறு மிகுந்த உப்பளங்களிலிருந்து உப்பை ஏற்றிவரும் வண்டிகளும் ஓட்டிக் கொண்டு செல்லப்படும் வழியில் ஒன்றோடு ஒன்றாகக் கலக்கும்.

மலையிடங்களில் (குறிஞ்சி நிலத்தில்) விளைபனவாகிய எள் முதலானவையும், நெய்தல் நிலத்தின் விளைபொருளான உப்பையும் ஏற்றிக் கொண்டு நாட்டுக்குள் வருகின்ற வண்டிகள், சாலையில் (கிளம்பிய இடவேறுபாடு இல்லாமல்) ஒன்றாகக் கலக்கின்றன.

Translation: Heavily laden carts of Seasmum (Sesame), Millet, Corn, horse gram mix with carts carrying loads of salt from the marshy lands of salt works.

Elucidation: Seasmum, Millet, Corn etc. are products of the hills and salt is the product of seashore. Cartloads, moving into the country from different directions, the ones from hilly tracts and those from the saltworks from the sea, from different roads, mixed in one array without difference on the main road.

உயரும் சார்வுஇலா உயிர்கள் செய்வினைப்

பெயரும் பல்கதிப் பிறக்கு மாறுபோல்,

அயிரும், தேனும்,இன் பாகும், ஆயர்ஊர்த்

தயிரும், வேரியும், தலைம யங்குமே. 55

சொற்பொருள்: உயரும் சார்வு முக்தியை அடையும் தகுதி. அயிர் சர்க்கரை. பாகு வெல்லப் பாகு. வேரி கள்

முக்தியை அடையும் தகுதியற்ற (பிறப்பு, இறப்பு என்ற சுழலில் சிக்கி, மாறி மாறிப் பிறக்கும்) உயிர்கள், தாம் செய்த செயல்களின் தன்மைக்கு ஏற்ற (தேவர், மனிதர், தாவரம், விலங்கு ஆகிய பிறவிகளில் ஒன்றாக) மறுபிறவியை அடைவதைப் போல, (மருத நிலத்தில் விளைந்து, உற்பத்தியாக்கப்பட்ட) சர்க்கரையும் வெல்லப் பாகும், (குறிஞ்சி நிலத்தில் கிடைக்கும்) தேனும், இடையர்களின் ஊரில் (முல்லை நிலத்தில்) தயாராகும் தயிரும், கள்ளும், ஓர் இடம்விட்டு இன்னொரு இடத்துக்குச் செல்லும்.

பொருட்கள் பண்டமாற்றாக ஒருநிலப் பகுதியைச் சேர்ந்த மக்களிடமிருந்து இன்னொரு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போய் அடைகின்றன.

Translation: Like the lives that are not yet matured (to attain Moksha, or the state that releases one from the cycle of births and deaths) move from one form of life to another (namely, celestials, men, animals and plants), and are reborn after their death in one form, according to the effects of their deeds in that birth, jaggery. sugar (country sugar, made in the farmlands), honey (obtained in the hills), and curds that were produced in the colonies of cowherds, moved from one land to another.

Elucidation: People from one land exchanged their commodities for the products of another area, in barter. The products born in one land, were consumed in another, even as lives that are dead in one form takes birth in another.

முந்தைய பகுதி

அடுத்த பகுதி

5 Replies to “கம்பராமாயணம் – 14 (Kamba Ramayanam – 14)”

 1. ‘செவிநுகர் கனிகள்’

  வினைத்தொகையில் அமைந்த இத்தொடருக்கு மூலம் ஸ்ரீமத்பாகவதத்தின் காப்புச் செய்யுள் ஆதல் வேண்டும்.
  ‘நிகமகல்பதரோர் கலிதம் …பலம் ‘ (வேதங்களாகிய கற்பகத் தருவிலிருந்து நழுவி விழுந்த கனி) என பாகவத நூலை அறிமுகம் செய்யும்போது கூறியபின் பெரும்பேறு செய்தோரே அதை நுகர இயலும் என்றும் தெரிவிக்கிறது அச்செய்யுள்.
  தேவ்

 2. மிக்க நன்றி திரு தேவராஜன். உண்மை இவ்வாறிருக்க, மௌனி போன்றவர்கள் (மௌனியா பிச்சமூர்த்தியா என்பது நினைவில்லை) ‘தேன்வந்து பாயுது காதினிலே’ அப்படின்னு பாடறானே, காதுல தேன் வந்து பாய்ந்தால் எப்படி இருக்கும்… கற்பனைகூட பண்ண முடியாத கஷ்டமாச்சே அது.. இவனுக்குக் கவிதை எழுதத் தெரியவில்லை’ என்று பாரதியைப் பற்றிச் சொல்கிறார்கள்.

  கவிதையை அனுபவிப்பது என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட வடிவமைப்புக்கும், கட்டுதிட்டத்துக்கும் உட்பட்டது என்று கருதுபவர்களுக்கு அப்படித்தான் தோன்றும். அதைச் சுட்டிக் காட்டத்தான் பாரதிக்குக் கம்பன் மூலம் என்றேன். இப்போது கம்பனுக்கு மூலம் எது என்று சொல்லிவிட்டீர்கள். ஆக, கம்பராமாயணத்திலும் சரி, ஸ்ரீமத்பாகவதத்திலும் சரி, கவிதை எனப்படுவது இல்லவே இல்லை என்பது இதனம் மூலம் தீர்மானமாகிறது. சரியா? :-))

 3. //செவிநுகர் கனிகள்’ என்ற ஆட்சியே பின்னால் பாரதியை ‘இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாடவைத்தது. //

  //வினைத்தொகையில் அமைந்த இத்தொடருக்கு மூலம் ஸ்ரீமத்பாகவதத்தின் காப்புச் செய்யுள் ஆதல் வேண்டும்.
  ‘நிகமகல்பதரோர் கலிதம் …பலம் ‘ (வேதங்களாகிய கற்பகத் தருவிலிருந்து நழுவி விழுந்த கனி) என பாகவத நூலை அறிமுகம் செய்யும்போது கூறியபின் பெரும்பேறு செய்தோரே அதை நுகர இயலும் என்றும் தெரிவிக்கிறது அச்செய்யுள்.
  தேவ்//

  புதியதோர் கோணத்தில் அமைந்த கருத்துக்கு நன்றி. நல்லதொரு உதாரணம்.

  //கவிதையை அனுபவிப்பது என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட வடிவமைப்புக்கும், கட்டுதிட்டத்துக்கும் உட்பட்டது என்று கருதுபவர்களுக்கு அப்படித்தான் தோன்றும்//

  ம்ம்ம்ம்ம், நீங்கள் சொல்வது உண்மைதான், நானும் சில கவிதைகளுக்கு விமரிசனம் எழுதும்போது இத்தகைய விமரிசனத்துக்கு ஆளாகி இருக்கின்றேன். :))))))))))

 4. ‘எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால்
  பருகுவோம் இன்னமுதம் மதியோமன்றே !!’

  என்று பாசுரமிடுகிறார் குலசேகர ஆழ்வார். ஒரு திரவத்தை வாயால்தானே பருக இயலும் .
  காதாலோ, கண்ணாலோ பருக இயலுமா ? என்று கேட்பது அறிவுடைமையாகாது.
  அது கவிஞனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம். அவனது கண்ணோட்டத்தில் அவனது கவிதையைச் சுவைக்க வேண்டும்.
  ஆலயங்களில் யாளியின் சிற்பத்தைப் பார்க்கிறோம்; உண்மையில் அப்படி ஒரு விலங்கு உண்டா? எந்த ஒரு கால கட்டத்திலும் அத்தகைய உடலமைப்போடு ஒரு விலங்கு இருந்திருக்க இயலாது.
  தூணுக்குத் தூண் யாளி எதற்கு என்றா கேட்பது ?
  அது கலைஞனுக்கு ஏற்பட்ட அதீதமான கற்பனை!! அதை அதே கண்ணோட்டத்தில் ரசித்து மகிழ்வோமே.
  காதில் தேன் பாய்கிறது என்றால் இனிமை பெருக்கெடுத்து ஓடுகிறது என்று பொருள் கொள்வதில் என்ன கஷ்டம் ?
  பிறரிடம் குறை காணும் வாஸனை எல்லோரிடமும் படிந்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் தேவையற்ற அறிவாராய்ச்சி.

  ‘திருகலாகிய சிந்தை திருந்தவே
  மருகலானடி வாழ்த்தி வணங்குவோம் !!’

  தேவ்

 5. இங்கு “தேன்” என்பது அதன் பண்பாகிய
  ” இனிமை”க்கு ஆகி வந்தது. இதை, “பண்பாகு பெயர்” என்று கூறுவார்கள். தமிழறியாதவர்களே பாரதியிடம் குறை காண முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கம்பராமாயணம் – 14 (Kamba Ramyanam -14)

நாட்டுப் படலம் (51-55) Canto of the Country (51-55)

நாட்டில் வறுமை முதலியன இல்லாமை

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;

திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;

உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;

ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால். 53

சொற்பொருள்: வண்மை வள்ளல் தன்மை, கொடைச் சிறப்பு. ஒண்மை அறிவுடைமை.

அங்கே வறுமை என்பதே இல்லை ஆகையால், வள்ளல்களின் சிறப்பு வெளியே தெரிவதில்லை. எதிரிகள், நாட்டின்மேல் போர்தொடுத்து வருபவர்கள் என்று யாருமே இல்லாத காரணத்தால், நாட்டின் வீரர்களுக்குத் தங்களுடைய பராக்கிரமத்தை வெளிக்காட்டும் சந்தர்ப்பமே இல்லை. பொய் பேசுபவர்கள் யாருமே இல்லை. ஆகவே, உண்மை என்பது தனிச்சிறப்பு உள்ள ஒன்றாகக் கருதப்படவில்லை. (அது மற்றொரு இயற்கையான குணம் என்று யாருக்கும் தோன்றவில்லை.) எல்லோரும் பல பெரியவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட கேள்விச் சிறப்பு கொண்டவர்களாக இருந்ததால், ‘இன்னார் அறிவில் சிறந்தவர் என்று தனித்துச் சொல்லப்பட யாருமே இருக்கவில்லை.

மேற்படிப் பாடலில் உள்ள வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால் என்ற அடியும், வான்மீகத்தில்:

நாஷடங்க வித் ந அஸ்தி ந அவ்ரதோ ந அஸஹஸ்ரதா:

ந தீன க்ஷீப்தா சித்தோ வா வ்யாதிதோ வா அபி கஸ்சனா:

என்ற ஸ்லோகத்தையும் (பால காண்டம், சர்க்கம் 6, ஸ்லோகம் 15) ஒப்பிட்டுப் பார்க்கவும். ‘ஆயிரத்துக்குக் குறைந்து தானமளிப்போரும் இல்லை; துன்பத்தால் நலிவுற்ற மனத்தை உடையோரும் இல்லை என்ற கருத்து ஒன்றேபோல் அமைந்திருப்பதைக் காணலாம்.

Translation: There was no poverty and therefore there was no philanthropy (as there was none to receive that which is given away). There were no invaders, nor was there any war and therefore, there was no way that the warriors could exhibit their valour and be known for their excellence. There was no falsehood and therefore Truth had no distinctive value. And, as everyone was a scholar, knowledge had no special place of praise.

Elucidation: Philonthropy is dependent on poverty; valour on war. Truth has no special plaace of mention, when there is none to utter falsehood. It becomes just the order of the day. And of what special significance is the learned, when everyone is a scholar!

Compare this idea of ‘no poverty, no philonthropy’ with this Sloka

na aSaD.nga vit na asti na avrato na asahasradaH |
na diinaH kshipta chittao vaa vyathito vaa api kashchana |

(Bala Kanda, Sarga 6, Sloka 15)

and look at the striking similarity of ideas ‘na asahasradaH’ ‘none a non-donor in thousands, thus none with a saddened heart, turmoil in mind or agonised in will is there’.

எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,

கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,

அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,

தள்ளும் நீர்மையின், தலைமயங்குமே. 54

சொற்பொருள்: அள்ளல் சேறு. அளம் உப்பளம். பண்டி வண்டி

எள்ளை ஏற்றி வரும் வண்டிகள்; தினை, சோளம், சாமை, கொள் ஆகியனவற்றை ஏற்றிவரும் வண்டிகள் ஆகியவற்றோடு, சேறு மிகுந்த உப்பளங்களிலிருந்து உப்பை ஏற்றிவரும் வண்டிகளும் ஓட்டிக் கொண்டு செல்லப்படும் வழியில் ஒன்றோடு ஒன்றாகக் கலக்கும்.

மலையிடங்களில் (குறிஞ்சி நிலத்தில்) விளைபனவாகிய எள் முதலானவையும், நெய்தல் நிலத்தின் விளைபொருளான உப்பையும் ஏற்றிக் கொண்டு நாட்டுக்குள் வருகின்ற வண்டிகள், சாலையில் (கிளம்பிய இடவேறுபாடு இல்லாமல்) ஒன்றாகக் கலக்கின்றன.

Translation: Heavily laden carts of Seasmum (Sesame), Millet, Corn, horse gram mix with carts carrying loads of salt from the marshy lands of salt works.

Elucidation: Seasmum, Millet, Corn etc. are products of the hills and salt is the product of seashore. Cartloads, moving into the country from different directions, the ones from hilly tracts and those from the saltworks from the sea, from different roads, mixed in one array without difference on the main road.

உயரும் சார்வுஇலா உயிர்கள் செய்வினைப்

பெயரும் பல்கதிப் பிறக்கு மாறுபோல்,

அயிரும், தேனும்,இன் பாகும், ஆயர்ஊர்த்

தயிரும், வேரியும், தலைம யங்குமே. 55

சொற்பொருள்: உயரும் சார்வு முக்தியை அடையும் தகுதி. அயிர் சர்க்கரை. பாகு வெல்லப் பாகு. வேரி கள்

முக்தியை அடையும் தகுதியற்ற (பிறப்பு, இறப்பு என்ற சுழலில் சிக்கி, மாறி மாறிப் பிறக்கும்) உயிர்கள், தாம் செய்த செயல்களின் தன்மைக்கு ஏற்ற (தேவர், மனிதர், தாவரம், விலங்கு ஆகிய பிறவிகளில் ஒன்றாக) மறுபிறவியை அடைவதைப் போல, (மருத நிலத்தில் விளைந்து, உற்பத்தியாக்கப்பட்ட) சர்க்கரையும் வெல்லப் பாகும், (குறிஞ்சி நிலத்தில் கிடைக்கும்) தேனும், இடையர்களின் ஊரில் (முல்லை நிலத்தில்) தயாராகும் தயிரும், கள்ளும், ஓர் இடம்விட்டு இன்னொரு இடத்துக்குச் செல்லும்.

பொருட்கள் பண்டமாற்றாக ஒருநிலப் பகுதியைச் சேர்ந்த மக்களிடமிருந்து இன்னொரு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போய் அடைகின்றன.

Translation: Like the lives that are not yet matured (to attain Moksha, or the state that releases one from the cycle of births and deaths) move from one form of life to another (namely, celestials, men, animals and plants), and are reborn after their death in one form, according to the effects of their deeds in that birth, jaggery. sugar (country sugar, made in the farmlands), honey (obtained in the hills), and curds that were produced in the colonies of cowherds, moved from one land to another.

Elucidation: People from one land exchanged their commodities in exchange for the products of another area, in barter. The products born in one land, were consumed in another, even as lives that are dead in one form takes birth in another.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *