மூலம்: டாக்டர். மூர்த்தி முத்துசுவாமி
தமிழில்: ஜடாயு
இறுதியாக, இந்தியாவுக்கான தருணம் வந்திருக்கிறது. முதலில் மேற்காசிய படையெடுப்பாளர்கள், பின்னர் பிரிட்டிஷ் காலனியம் என்று ஆயிரம் ஆண்டு அன்னிய அரசாட்சியிலிருந்து விடுபட்டு இந்தியா வெளிவந்திருக்கிறது.
1947ல் இந்தியா சுதந்திரமடைந்த வுடனேயே, பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டமைப்பு ஆகிய துறைகளில் புதிய கல்வி நிறுவனங்களைத் தொலைநோக்குடன் உருவாக்கியதன் பயனாக, பின்வந்த காலங்களில் செல்வப் பெருக்கமும், அதோடு கூடிய சமூக-பொருளாதார முன்னேற்றங்களும் சாத்தியமானது.
1940களில் உருவான இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அப்போதைய தேசத்தைப் பிரதிபலித்தது – ஒட்டுமொத்தக் கல்வியறிவு 12 சதவீதமே இருந்த தேசம்; [1] இன்னும் பிரிட்டிஷ் காலனியத்தால் ஆளப் படும் தேசம். இந்தச் சூழலில் உருவாக்கப் பட்ட அரசியல் சட்டத்தில், அது பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டிருந்தும் கூட, சில குறைகளும், தவறுகளும் உண்டாவது சகஜமே. இத்தகைய ஒரு குறைபாடு, இன்றைக்கு பட்டவர்த்தனமாகத் தெரியக் கூடிய மதரீதியான பாரபட்சங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. அதைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். மிகவும் வெட்கக் கேடான ஒரு விஷயம்.
எல்லாவற்றையும் விட, இந்திய தேசத்தில் இத்தகைய பாரபட்ச நடைமுறைகள் செயல்பாட்டில் இருக்கின்றன என்பது உலக அளவில் பலருக்கும் ஆச்சரியமளிக்கும். ஆனால் அது தான் உண்மை.
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மதப்பிரிவினைக் கொள்கை (Religious Apartheid):
சமீபத்தில், தில்லியில் கிறிஸ்தவ மிஷனரிகளின் கட்டுப் பாட்டில் உள்ள உயர்தர உயர்கல்வி நிறுவனமான செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வெளியிட்ட ஒரு அறிவிப்பு பலரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தக் கல்வி நிறுவனத்தின் 50 சதவீத இடங்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப் படுகின்றன என்ற அறிவிப்பு தான் அது. உயர்தர கல்லூரிகளில் பயில்வதை வாழ்க்கைக் கனவாகவே கொண்டிருக்கும் ஜனத்திரள் மிகுந்த ஒரு தேசத்தில், இத்தகைய அறிவிப்பு ஒரு பேரழிவுச் செய்தியாயிற்று.
“ஏற்கனவே ஸ்டீபன்சில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்போது, அவர்கள் பொது மாணவர்களுக்கான இடங்களை இந்த அளவுக்குக் குறைத்து விட்டால் நாங்கள் எங்கே போவோம்? இது அநியாயம், அக்கிரமம்”
என்றார் ஆர்ய பிரக்ரிதி [3]. தில்லியில் கல்லூரியில் சேரத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் இந்து மாணவர் இவர்.
ஒரு அதிர்ச்சிகர தகவல்: இந்தக் கல்லூரி இயங்குவதற்கான நிதியில் 95 சதவீதம் மத்திய அரசிடமிருந்து, அதாவது இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து வருகிறது. அந்த வரிப்பணத்தில் மிகப்பெரும் பகுதி பெரும்பான்மை இந்து சமூகத்தால் செலுத்தப் படுகிறது [4]. இன்னொரு கவனிக்க வேண்டிய தகவல்: புது தில்லி நகரத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை ஒரு சதவீதம், அதாவது 1% மட்டுமே [5].
என்ன நடக்கிறது இங்கே? முற்றிலும் தகுதி வாய்ந்த, கிறிஸ்தவர் அல்லாதவர்களைப் புறக்கணித்து விட்டு, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் மூலமாக கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது. அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
எப்படி நடக்கிறது இது? இந்திய அரசியல் சட்டத்தின் 30வது சட்டப்பிரிவின் (Article 30) அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பைச் சுட்டிக் காட்டி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி நிர்வாகம் தங்களது மதரீதியான பாரபட்ச நடவடிக்கை சட்டபூர்வமானது தான் என்று நியாயப் படுத்துகிறது [6].
1993ம் ஆண்டு இந்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் ஆகியோர் “சிறுபான்மையினர்” என்ற வரையறையின் கீழ் வருவார்கள் என்று அறிவித்தது [7]. இந்த சிறுபான்மையினர் சமூகங்கள் சமூக பொருளாதார ரீதியாக எந்த நிலையில் இருந்தாலும், அவை நடத்தும் கல்வி நிறுவனங்களில், அவை அரசு நிதி பெறும் நிறுவனங்களாக இருந்தாலும் கூட, தங்கள் சமூகத்தவர்களுக்கு என்று 50 சதவிகிதம் கல்வியிடங்களையும், வேலைவாய்ப்புகளையும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்று 30வது சட்டப் பிரிவு கூறுகிறது [8]. இங்கு “சிறுபான்மையினர்” என்பது முன்பு சொன்னபடி தேசிய அளவில் ஒட்டுமொத்தமாகத் தான் வரையறை செய்யப் பட்டிருக்கிறது, ஒவ்வொரு பிரதேசத்தின் மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக, பஞ்சாபிலும், மிசோரத்திலும் முறையே சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையினர்; இந்துக்கள் சிறுபான்மையினர். ஆனால், 30-வது சட்டப் பிரிவின் பிடி, இந்த மாநிலங்களிலும் கூட, கிறிஸ்தவர்களும், சீக்கியர்களுமே “சிறுபான்மையினர்” என்று கருதப் படுவார்கள். அங்குள்ள இந்துக்கள் “பெரும்பான்மையினர்” என்றே கருதப் படுவார்கள்!
கல்வியிடங்களில் மட்டுமல்ல, கிறிஸ்தவ மிஷநரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளிலும் ஒதுக்கீடும், முன்னுரிமையும் உண்டு. ஏனென்றால், இதையும் 30வது சட்டப் பிரிவு அனுமதிக்கிறது. உதாரணமாக, மிஷநரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மூன்று கல்லூரிகளை எடுத்துக் கொள்வோம். மதுரை அமெரிக்கன் கல்லூரி பணியாளர்களில் 66 சதவீதம் கிறிஸ்தவர்கள். யூனியன் கிறிஸ்தவ கல்லூரி பணியாளர்களில் 83 சதவீதம் கிறிஸ்தவர்கள். மும்பை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி பணியாளர்களில் 42 சதவீதம் கிறிஸ்தவர்கள் [9]. ஆனால், இந்தக் கல்லூரிகள் அமைந்துள்ள தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களை எடுத்துக் கொண்டால் அங்கு கிறிஸ்தவர்களின் சதவீதம் முறையே 7, 19 மற்றும் 1 ஆகும். [10]. பணியாளர்களை அமர்த்துவதில் மதரீதியான பாரபட்சம் உள்ளது என்று தெள்ளத் தெளிவாக இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டபூர்வமான மதப் பாரபட்ச நடைமுறைகள் இந்தியா முழுவதிலும் உள்ள எல்லாவிதமான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்தப் படுகின்றன என்பது கண்கூடு. சலுகைகளின் கவர்ச்சி ஒருபுறம், இவை சட்டபூர்வமானவை தான் என்பது இன்னொரு புறம். பின்னர் ஏன் மதரீதியாக பாரபட்சம் காட்டத் துடிக்க மாட்டார்கள்?
மிஷநரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவன்ங்களின் விகிதம், “சிறுபான்மை” கிறிஸ்தவர்களின் விகிதத்திற்கு சரிசமமாக இருந்தால், இந்த மதரீதியான பாரபட்சங்கள் ”மதச்சார்பற்ற” என்ற அடைமொழி கொடுத்துத் தன்னை அழைத்துக் கொள்ளும் நாட்டுக்குப் பொருந்தாவிட்டாலும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடாது என்று கருதலாம். ஆனால் பிரசினையின் மையமே அங்கு தான் இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள். மொத்தம் 40,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் [11, 12, 13].
30வது சட்டப் பிரிவையும், மேற்கண்ட விவரங்களையும் இணைத்துப் பார்த்தால், வெளிப்படையாகத் தெரிய வருவது – கிறிஸ்தவர்கள் இந்தியாவில் விசேஷ உரிமைகளும், சலுகைகளும் பெற்ற சிறுபான்மையினர். அவர்களை மட்டும் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக அரசின் வளங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன – வேண்டுமென்றே திட்டமிட்டு அப்படிச் செய்யப் படவில்லை என்று தோன்றினாலும் கூட. எனவே, கிறிஸ்தவர்களில் கல்வியறிவு பெற்றவர்கள், சராசரிக்கும் அதிகமாக 80 சதவீதம் இருப்பது ஆச்சரியமே அல்ல (தேசிய அளவில் சராசரிக் கல்வியறிவு 65 சதவீதம்). [14,15]. இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளில் 30 சதவீதம் மிஷநரிகள் கையில் உள்ளதால் [16], கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட, கிறிஸ்தவர்களாக மதம் மாறுபவர்களுக்கான வேலை வாய்ப்பு சாத்தியங்கள் அங்கும் மிக அதிகமாக இருக்கும். இதுபோக, சிறுபான்மையினர் என்பதை வைத்து, மிகப் பெரிய அளவில் வரிவிலக்கு, நில ஒதுக்கீடு மற்றும் வேறு பலவிதமான சலுகைகளும் மிஷநரி நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. [17].
சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் பிற்பட்டவர்கள் என்று கோருவதை எந்த வகையிலும் நியாயப் படுத்தவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஏனென்றால் கிறிஸ்வத சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பே சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் [18] இவ்வாறு கூறியிருக்கிறது – “தற்போது ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள், எழுத்தர்கள், ஜூனியர் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) ஆகிய பல பணிகளில் கிறிஸ்தவர்களின் பங்கு, அவர்களது எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கிறது”. ஆனால் அதே அறிக்கை அடுத்த வரியில் சொல்கிறது – “இதற்குக் காரணம் கிறிஸ்தவர்களது சிரத்தை, நேர்மை, நல்ல கல்வி ஆகியவை தான்”. ஆனால் முக்கியமாக, 30வது சட்டப் பிரிவு ஏற்கனவே கிறிஸ்தவர்களுக்கு வெகுமதியான இட ஒதுக்கீடுகளையும், பிற வாய்ப்புக்களையும் அள்ளிக் கொடுத்து விட்டிருக்கிறது என்ற உண்மையை அந்த அறிக்கை, வருத்தமளிக்கும் வகையில், கண்டுகொள்ளவே இல்லை.
இத்தகைய பாரபட்சத்தின் பரிமாணமும், வீச்சும் நிலைகுலையவைப்பவை. மிஷநரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் மாணவர்களும், பணியாளர்களுமாக சேர்த்து சராசரியாக 300 இடங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். சராசரியாக, ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கையிலும், பணியிடங்களிலும் கிறிஸ்தவரல்லாத 10 பேர் இந்த பாரபட்ச நடைமுறையின் காரணமாக நிராகரிக்கப் படுகிறார்கள் என்று கொள்வோம். ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் ஒவ்வொரு வருடமும் இரண்டரை லட்சம் நிராகரிப்புக்கள்! உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் 400 மாணவர்கள் உள்ளே வரும் [19] செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லுரியில், 200 இடங்கள் ஏகபோகமாக கிறிஸ்தவர்களுக்கு மட்டுமாக ஒதுக்கீடு செய்யப் படுகிறது – இதன் பொருள் ஒவ்வொரு வருடமும், 200 நிராகரிப்புகள் நிகழ்கின்றன என்பது தான்.
இந்த இடத்தில், நிறவெறிக் காலகட்டத்தின் போது வெள்ளையர்களால் ஆளப்பட்ட தென்னாப்பிரிக்காவில் (அங்கு வெள்ளையர் சிறுபான்மையினர்) செயல்படுத்தப் பட்ட நடைமுறையுடன் இதை ஒப்பிட்டுப் பார்ப்பது பயன் தரும். அந்தக் காலகட்டத்தில் இனரீதியாக, வெள்ளையர்களுக்கே சாதகமாக அமையும் அரசு சட்டங்களின் மூலம், பெரும்பான்மையினரான கறுப்பின மக்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்புகளும் மறுக்கப் பட்டன. [20]. இதனால், தங்கள் மண்ணின்மீது கறுப்பர்களுக்கு உரிமையும், அதிகாரமும் இல்லாமலாயிற்று. தென்னாப்பிரிக்கா விஷயத்தில், அரசாட்சியில் இருந்த வெள்ளையரின் நிறவெறி, இனப்பிரிவினை நடவடிக்கைகள் கறுப்பர்களை அரசு அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. ஆனால், இந்தியா விஷயத்தில், இப்போது வெளிப்படையாகத் தெரியும் இந்த மதரீதியான பாரபட்ச நடவடிக்கைகள், அரசியல் சட்டத்தின் 30வது சட்டப் பிரிவின் காரணமாக எதிர்பாராமல் உருவாகி விட்டிருப்பவை. அல்லது நமக்கு அப்படித் தோன்றுகிறது.
உலகெங்கும் மக்கள் தென்னாப்பிரிக்காவின் இனப்பிரிவினை நடவடிக்கைகள் விளைவித்த அநீதியையும், கொடூரத்தையும் எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். ஆனால், இந்தியாவில் அதே போன்ற நடவடிக்கைகளினால் உருவாகும் பூதாகாரமான விளைவுகளைப் பற்றிய புரிதலே முழுமையாக ஏற்படவில்லை. அப்புறம் தானே குரல் கொடுப்பதற்கு! விற்பனையைக் குவிக்கும் புத்தகங்களை எழுதும் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா இதே செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் மாணவர் தான். ஆனால் தனது முன்னாள் கல்லூரியின் இட ஒதுக்கீடுக் கொள்கைகளை “நெறிகளுக்கு எதிரானவை” (unethical) என்று மிகவும் மென்மையான தொனியில் அவர் குறிப்பிடும்போது, அவரது பார்வையில் உள்ள குறைபாடு நமக்குத் தெளிவாகத் தெரிய வருகிறது.
உள்ளபடி பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தின் 30வது சட்டப் பிரிவு விளைவித்திருக்கும் இந்த பாரபட்சமான கொள்கைகள், இந்தியா கையெழுத்திட்டு ஏற்றிருக்கும் ஐ.நா சபையின் ”உலக மனித உரிமைப் பிரகடனத்தின்” 23 மற்றும் 26வது ஷரத்துக்களை மீறுகின்றன என்று நாம் வாதிடலாம் [22]. குறிப்பாக, ”பணி புரிவதற்கான உரிமை மற்றும் சுதந்திரமான பணித் தேர்வுக்கான உரிமை” (23வது ஷரத்து), “உயர்கல்வியானது திறமையின் அடிப்படையில்அனைவரும் சம உரிமையுடன் பெற வாய்ப்புள்ளதாக இருக்க வேண்டும்” (26வது ஷரத்து) ஆகிய கொள்கைகளை மீறுவதாகத் தோன்றுகிறது. எனவே, 30வது சட்டப் பிரிவு விளைவித்துள்ள பாரபட்சங்கள் ”மனித உரிமை மீறல்கள்” என்று அழைக்கப் படவும் தகுதியுடையதாகின்றன.
இந்தியாவின் எழுச்சி பற்றி நாம் எவ்வளவு பேசினாலும், உலக அளவில் மிகவும் ஏழ்மைப் பட்ட நாடுகளில் ஒன்றாகத் தான் இந்தியா இன்னமும் இருக்கிறது. 2006ம் வருடத்திய குடும்ப நல கணக்கெடுப்புப் படி, மூன்று வயதுக்குள் உள்ள குழந்தைகளில் 46 சதவீதம் மிகவும் எடைகுறைவானவர்களாக உள்ளார்கள் (சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க தேசங்களில் கூட இது 28 சதவீதம் தான்). இந்தியக் குழந்தைகளில், சத்துக் குறைவால் ஏற்படும் சோகை நோய் (அனீமியா) அதிகரித்து 79 சதவீதத்தை எட்டியிருக்கிறது (1999ல் இது 74 சதவீதம் தான்) [23]. சத்துக் குறைவு எந்த அளவுக்கு தீவிரமாக உள்ளது என்றால், ஒவ்வொரு வருடமும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் (அதாவது ஒவ்வொரு நாளும் 6000 குழந்தைகள்) இதனால் மடிகிறார்கள். [24].
பெரும்பான்மையினரான இந்துக்கள் பிற்படுத்தப் பட்டு, உரிமை இழந்ததற்கு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த அன்னிய ஆட்சியில் அவர்கள் அதிகாரத்திலிருந்து ஒதுக்கப் பட்டு, நிராகரிக்கப் பட்டதும் ஒரு காரணம். மேலும், தற்போதைய நிலவரங்களின் படி, சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஒப்பீட்டில் இந்துக்களை விடவும் அதிகம் பிற்பட்டு இருக்கிறார்கள் என்பதும் ஓரளவு உண்மையே [25]. ஆயினும், இதில் எவ்வளவு தூரம் முஸ்லிம்கள் தாங்களே விளைவித்துக் கொண்டது என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்திய முஸ்லீம் சமூகங்கள் நவீனக் கல்வியை அணைத்துக் கொள்வதில் பெரும் தயக்கம் காட்டி வருவதும், மதரஸா கல்வியையே அதிகம் தெரிவு செய்து படிப்பதும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது [26]. இந்தியாவைப் போன்று அதே சாத்தியங்கள் கொண்டிருந்த, ஆனால் முஸ்லிம் பெரும்பான்மை தேசமான பாகிஸ்தான் எப்படி சமூக, பொருளாத பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிச் சென்றிருக்கிறது என்பதை வைத்துப் பார்த்தால் “முஸ்லிம்கள் தாங்களே விளைவித்துக் கொண்டது” என்ற கருத்திற்கு அது வலு சேர்க்கிறது [27].
சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் இந்தியாவின் மிக உரிமை பெற்ற, மிக முன்னேறிய வர்க்கத்தினரில் அடங்குவர் என்பதற்கு அவர்களே அளித்திருக்கும் வாக்குமூலங்களே சாட்சி. கணிசமான அளவிலுள்ள மற்றொரு சிறுபான்மையினரான சீக்கியர்களும், பெரும்பான்மையினரை விட மிக நல்ல நிலையில் தான் உள்ளனர்; வளம் கொழிக்கும் மாநிலமான பஞ்சாபில் தான் அவர்கள் அதிகபட்சமாக வசிக்கின்றனர். இந்தச் சூழலில், 30வது சட்டப் பிரிவை என்ன சொல்லியும் நியாயப் படுத்த முடியாது. அது மட்டுமல்ல, நூற்றாண்டுகளாக பெரும்பான்மை சமூகம் அனுபவித்து வந்த இன்னல்களை இந்த சட்டப் பிரிவு இன்னும் நீட்டிக்கிறது. அதுவும் அந்த சமூகமே வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அடுத்தடுத்த அரசுகளே இதற்கு உதவியும் உள்ளன.
கல்வியும் வேலைவாய்ப்புகளுமே வறுமையிலிருந்து மீள்வதற்கும், சுய உரிமை பெறுவதற்குமான வாசல்கள். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டமே விளைவித்திருக்கும் மேற்கூறிய பாரபட்ச நடவடிக்கைகள், தகுதியைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தில் மதச்சார்பு நிலைகள் ஆதிக்கம் செலுத்த வகை செய்துள்ளன. லட்சக்கணக்கான தகுதிவாய்ந்த குழந்தைகளும், இளைஞர்களும் வறுமையின் கோரப் பிடியிலிருந்து வெளிவர வழிசெய்யும் வாய்ப்புக்கள் அநியாயமாக அவர்களுக்கு மறுக்கப் படுகின்றன.
இந்த தேசத்தின் மக்கள் தொகையில் 95 சதவீதம் உள்ள மக்களைப் பாரபட்சத்துடன் நிராகரிப்பதைக் கொள்கையாகவே கொண்டுள்ள மிஷநரிகளின் கட்டுப் பாட்டில் தான் தேசத்தின் தலைசிறந்த பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளன. இதை மனதில் வைத்துப் பார்த்தால் சமீபத்தில் இந்தியப் பாராளுமன்றம் இயற்றியிருக்கும் கல்வி உரிமைச் சட்டம் [28] எவ்வளவு முட்டாள்தனமானது என்று விளங்கும்.
இந்தியாவில் மிஷநரி பணிகளுக்காக பெரும் தொகை வெளிநாடுகளிலிருந்து பாய்கிறது. உதாரணமாக, 2006-2007 வருடத்தில் 100 மில்லியன் டாலர்களுக்கும் (10 கோடி) அதிகமான பணம் வந்துள்ளது. [29]. தேவைப் படுபவர்களுக்கு உதவுவதற்கே இந்தப் பணம் முழுவதும் செலவழிக்கப் படுவதாக சொல்லப் படுகிறது, அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். ஆனால், மிஷநரி கல்வி நிறுவனங்களின் பாரபட்ச அணுகுமுறைகள், அவர்கள் புரியும் பாராட்டுக்குரிய சேவைப் பணிகளை முற்றிலும் மதிப்பிழக்கச் செய்கின்றன. மிஷநரி நிறுவனங்களின் பாரபட்சமான இட ஒதுக்கீடுகள் பெரும்பான்மையினர் மத்தியில் பெரும் கசப்புணர்வை ஏற்படுத்துகின்றன [30] என்று நன்கு தெரிந்திருந்தும் கூட, இவற்றை ரத்து செய்வதையோ குறைப்பதையோ பற்றிய எண்ணம் சிறிது கூட அவர்களிடம் இல்லை. மாறாக, செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி செய்தது போல, ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனங்களில் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடுகள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன [31].
நீண்டகால நோக்கில், இதனால் பாதிக்கப் படுவது இந்தியாவின் வளர்ச்சி விகிதமும், மனித உரிமைகளும் மட்டுமல்ல, அதைவிட மேலும் பெரியதான அபாயங்களும் ஏற்படும் சாத்தியம் உள்ளது.
30வது சட்டப் பிரிவு உருவாக்கும் மதப் பாரபட்சங்கள், கல்வி நிறுவனங்கள் மீது மிஷநரிகளின் அளவுக்கதிகமான கட்டுப்பாடு – இவை உருவாக்கும் நீண்டகால விளைவுகளை “பிரிவினைகளின் தொடர் இயங்குமுறைக் கோட்பாடு” (Dynamic Models of Segregation) என்கிற அறிவியல்பூர்வமான முறை கொண்டு அடுத்த பகுதியில் ஆராய்வோம். இந்த அறிவியல் முறை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் ஷெல்லிங் உருவாக்கியது.
(தொடரும்)
டாக்டர். மூர்த்தி முத்துசுவாமி அமெரிக்காவில் வசிக்கும் அணு இயற்பியலாளர். 1979ல் இந்தியாவின் பிர்லா அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் (BITS, Pilani) தனது பட்டப் படிப்பை முடித்தார். 1989ல் நியூயார்க் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தில் அணு இயற்பியலில் ஆய்வுகள் செய்து டாக்டர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் பல கல்வி நிறுவனங்களில் பதவி வகித்தும் உள்ளார். அண்மைக் காலமாக உலக அரசியல், சமூகவியல் ஆகிய துறைகள் குறித்து எழுதி வருகிறார். உலகளாகிய இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து இவர் எழுதியுள்ள Defeating Political Islam என்ற நூல் இந்தப் பிரசினை குறித்த முழுமையான பார்வையை முன்வைப்பதாக விமர்சகர்களால் மதிப்பிடப் பட்டுள்ளது.
சான்றுகள்:
[1] “Literacy in India,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/Literacy_in_India (accessed Nov. 12, 2010).
[2] NDTV, June 09, 2008, https://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080052488 (accessed Nov. 11, 2010).
[3] Ibid.
[4] Outlook India, June 25, 2007, https://www.outlookindia.com/article.aspx?234958 (accessed Nov. 11, 2010).
[5] “2001 Census India – State-wide Population Breakdown by Religion,” https://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_data_finder/C_Series/Population_by_religious_communities.htm (accessed Nov. 13, 2010).
[6] Outlook India.
[7] “National Commission for Minorities – Genesis,” https://ncm.nic.in/genesis.html (accessed Nov. 14, 2010).
[8] “National Commission for Minorities – Constitutional Provisions,” https://ncm.nic.in/constitutional_prov.html (accessed Nov. 13, 2010); see also, “Minority Rights – The Judicial Approach,” https://www.legalservicesindia.com/articles/judi.htm (accessed Nov. 12, 2010).
[9] “Indian Constitution, Religious Discrimination and USCIRF,” South Asia Analysis Group, May 19, 2005, https://www.southasiaanalysis.org/%5Cpapers14%5Cpaper1386.html (accessed Nov. 12, 2010).
[10] “2001 Census India – State-wide Population Breakdown by Religion.”
[11] Ibid.
[12] India Currents, July 17-23, 2008, https://www.hvk.org/articles/0708/138.html (accessed Nov. 12, 2010).
[13] The New York Times, August 28, 2008, https://www.nytimes.com/2008/08/29/world/asia/29india.html (accessed Nov. 13, 2010).
[14] “National Commission for Minorities – Minority Literacy Rates,” https://ncm.nic.in/minority_population.pdf (accessed Nov. 13, 2010).
[15] “2001 Census India – Literacy Rates,” https://www.censusindia.gov.in/Census_Data_2001/India_at_glance/literates1.aspx (accessed Nov. 13, 2010).
[16] India Currents.
[17] “National Commission for Minorities – Constitutional Provisions.”
[18] Free Press Release, Dec. 18, 2009, https://www.free-press-release.com/news-christians-oppose-rangnath-mishra-report-1261137900.html (accessed Nov. 13, 2010).
[19] “St. Stephen’s College – Delhi,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/St._Stephen’s_College,_Delhi (accessed Nov. 17, 2010).
[20] “South Africa under Apartheid,” Wikipedia, https://en.wikipedia.org/wiki/South_Africa_under_apartheid (accessed Nov. 13, 2010).
[21] Outlook India.
[22] “The Universal Declaration of Human Rights,” https://www.un.org/Overview/rights.html (accessed Nov. 13, 2010).
[23] Peter Wonacott, “Lawless Legislators Thwart Social Progress in India,” Wall Street Journal, May 4, 2007.
[24] CNN-IBN, Mar. 29, 2008, https://ibnlive.in.com/news/in-booming-india-hunger-kills-6000-kidsdaily/62220-17.html (accessed Nov. 13, 2010).
[25] “National Commission for Minorities – Minority Literacy Rates.”
[26] Sadanand Dhume, “Is India an Ally?” Commentary Magazine, Jan. 2008.
[27] “Why have Pakistan and India Evolved so differently?” South Asia Analysis Group, Nov. 1, 2010, https://www.southasiaanalysis.org/papers42/paper4138.html (accessed Nov. 13, 2010).
[28] “Right to Education Act,” https://www.indg.in/primary-education/policiesandschemes/right-to-education-bill (accessed Nov. 13, 2010).
[29] “Receipt and Utilization of Foreign Contribution by Voluntary Associations,” https://www.mha.gov.in/fcra/annual/ar2006-07.pdf (accessed Nov. 14, 2010).
[30] NDTV.
[31] Outlook India.
இதை ஏன் சட்ட ரீதியாக அணுக கூடாது.
இந்து இயக்கங்கள் கேஸ் போட வேண்டும்.
பின் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்க விண்ணபித்து இடம் கிடைக்காமல் அன்று போனதற்கு இன்று மகிழ்கிறேன்.
ஆட்சி புரிந்த வர்கத்தில் இருந்த முகம்மதியர்களும், கிறித்தவர்களும், எவ்வாறு ஒதுக்கீடு பெறும் மக்கள் ஆவார்கள்? சிறுபான்மையினர், பெருபான்மையினரை அடிமைப்படுத்தி ஆட்சிபுரிந்ததனாலேதானே, சுடந்திரப்போராட்டம் என்ற ஒன்றே எழுந்தது? வெளிநாட்டிலிருந்து வந்த முகம்மதியினரை, வெளிநாட்டிலிருந்து வந்த கிறித்தவர்கள் ஒழித்துகட்ட, கிறித்தவர்களை, உள்நாட்டினர் ஒழித்துக்கட்ட, மீண்டும், உள்நாட்டினர் பெயரால், அதே வெளிநாட்டு முகம்மதியர் மற்றும் கிறித்தவர்களின், கள்ளத் தனமாய்ப் பிறந்து சமுதாயமாய் மாறியிருக்கும், ஆனால் உள்நாட்டிலேயே வாசம் செய்ய வேண்டி இருந்த, கள்ளச் சமுதாயத்துக்குத் துணைபோனவர்கள் தாம் மாமேதை எனப் போற்றப்படும் பீமாராவ் அவர்களும், மற்ற வெளிநாட்டு அடிவருடிகளும. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பல அரசு வங்கிகளில், வீட்டு வங்கிக் கடன் வழங்கும் அதிகாரிகளில் பெரும்பான்மையினர் கேரளா கிறித்தவர்களே. சுதந்திரத்தை புனல் வழியாகத் தரும் அமேரிக்கா, தன அயோகயத் தனத்தை, விக்கி லீக்ஸ் வெளியிட்டவுடனேயே, விக்கி லீக்ஸ் தலைவரை கைது செய்யத் துடிக்கும் எண்ணம் தான், அமெரிக்காவின் சுதந்திர அளவுகோல். எதிலும் veezhththa முடியாத சீ னாவை, மனித உரிமை மீறல் என்று கூறி அடையும் எண்ணம் கொண்ட வெள்ளைக்கார புத்திதான், அழிவுக்கு உத்திரவாதம்.
கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, எந்த ஒரு அலுவலகம் ஆனாலும் ஒரு கிருத்துவரோ இல்லை முஸ்லிமோ தங்கள் மதத்தை சேர்ந்தவருக்கே முன்னுரிமை அளிப்பார்கள். இதை கண்கூடாக பார்த்துள்ளேன்
இவ்ளோ என் சார் ISO தர சான்றிதழ் பெற ஒரு புகழ் பெற்ற நிறுவனம் தன்னை க்ரீச்துவர்களுக்கு ஆதரவாக காட்டி கொண்டு வாங்கி விட்டது.
நம்ம கருப்பு எம்.ஜி.ஆர் கணக்கா புள்ளி விவரங்களோட சொல்லுது இந்த கட்டுரை. கசாபுக்கும், அப்சல் குருவுக்கும் வக்காலத்து வாங்கும் மனித உரிமை கயகம் இதுக்கு எல்லாம் எங்க சார் வரபோவுது ???
இவ்வளவு ஏன் சார் என் சொந்த குமுறல். இதோட 24 முறை அரசு ம்மற்றும் வங்கிகளுக்கான பொது தேர்வுகளில் பங்கு பெற்று, 3 முறை வங்கிகளிலும், 4 முறை அரசு துறையிலும் வெற்றி பெற்று நேர்முக தேர்வு வரை சென்று UR கோட்டாவினில் வடிகட்டப்பட்டு வெளியேறி உள்ளேன். என்னை விட பல மடங்கு குறைந்த மதிப்பெண்ணும், கூடுதல் பட்டய படிப்பு எதுவும் இல்லாத ஒரு கிறிஸ்துவ மாணவன். ஒரே நேர்முக தேர்வு தான் attend செய்தான். இன்று ஒரு தரமான அரசு வங்கியில் நல்ல சம்பளத்தில் இருக்கிறான். இந்த மதத்தில் இந்த ஜாதியில் பிறந்தது என் குற்றமா? இல்லை எனக்கு தன்னிறைவா?? இறைவனிடம் முறையிட்டு நொந்துகொள்வதை தவிர வேறு தெரியவில்லை
In fact the biggest unfortunate crime in India is minoritism. Every politician is exploiting in the disguise of minoritism and cheating the majority in-turn looting the countries wealth, creating unrest everywhere. This is worst than the cast discrimination and the minority identification to be abolished immediately. As per UN resolution people below 10% population are considered as minorities. Now the situation in India that both the Christian and Muslim population exceeded this limit and still identifying them as minorities is not justifiable
The minorities should adjust with majority then the majority will naturally accommodate them. What is happening in India we have been accommodating them also without any demand from their side we keep on giving all sort of facilities ignoring the Majority population simple for grabbing votes? In turn the Minorities also poses adjusting with Majority and during election time reflects their cheap mentality and vote for all antinational parties en-mass.
The definition of Minorities itself has got lot of confusion. Generally those who are not citizens of India and settle here and got the citizenship may be called as Minorities. During Independence the situation is the whole of Indians are born and brought up here with Indian citizenship and separation of minorities within Indian citizens on religion base is meaningless. Still we did it and facing all problems to-day. Still worst the case today is when an individual from the Majority on his own or with some allurements changes his religion he automatically becomes Minority and it is allowed & enjoys all the benefit of minorities
வல்லபாய் படேல் பிரதமராகியிருந்தால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும். மேலை நாட்டு கல்விவழியில் மோகம் கொண்ட நேஹ்ருவினால் நமது தேசத்திற்கு நன்மை தரக்கூடிய கல்விமுறையை தரமுடியவில்லை. விளைவு, சிறுபான்மை என்ற பெயரில் கிறித்துவ கல்வி நிறுவனங்கள் கொழிக்கின்றன. எந்தவொரு ஹிந்து அமைப்பும் புதிய கல்வி நிறுவனம் தொடங்க நாய் படாத பாடு படவேண்டியிருக்கும். அதனாலேய சிலர் தந்திரமாக செயின்ட் ஜான், மேரி ஜோசப் எனப் பெயரிட்டு கல்வி வள்ளல்(?)கள் ஆகிவிட்டனர். ஹிந்துக்கள் கல்விநிறுவனம் நடத்திநால் எந்தவிதமான சோதனைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்பதை சென்னையில் உள்ள ஒரு பள்ளியின் தாளாளர் ரத்தக் கண்ணீருடன் விவரித்தார். பேசாமல் வாசுதேவன் என்ற பெயரை ஏசுதேவன் என்று மாற்றிக்கொள்ளலாமா என்று நொந்து போய் புலம்பித்தள்ளிவிட்டார். போலி மதச்சார்பின்மை அரசுகள் ஒழிந்தால் தான் இதெற்கெல்லாம் விடுவுகாலம் பிறக்கும்.
நன்றி ஜடாயு
கூத்தன் உறையும் சிதம்பரத்தில் ஒரு கத்தோலிக்கப்பள்ளி. (தேவையானால் பள்ளி பெயரைக் குறிப்பிடுகின்றேன்) 1980 என்று நினைக்கிறேன். அங்கு பணிபுரிந்த ஆசிரியை பணிநீக்கம் செய்தது. காரணம்: அவர் சமூக சட்ட வரம்புகளுக்குட்பட்டு திருமணம் புரிந்துகொண்டார். அவர் நீதிமன்றம் சென்றார். உயர்நீதி மன்றம் வரை முறையீடு சென்றது. அவருக்கு நீதியும் கிட்டியது. உயர் நீதி மன்றத் தீர்ப்பில் திருமணம் என்னும் சமூக ஏற்பாட்டினை குலைக்க முயற்சித்ததை நீதிபதி கண்டித்திருந்தார். (நீதிபதி.மோகன் அளித்த தீர்ப்பு என நினைவு)
கிருத்தவப் பள்ளிகள் சட்டத்தையோ சமூக ஏற்பாட்டையோ தள்ளவோ தவிர்க்கவோ தயங்குவதில்லை.
சட்டம் தரும் சலுகைகளோடு சத்தம் தரும் வசதிகளும் சேர்கின்றன என்பதற்காக இந்த நினைவை இங்கு பதிவு செய்கிறேன்.
RTE கல்வி உரிமை சட்டம் வருகிறது. அரசு தன் பொறுப்பைத் தட்டிகழிக்கவும் அல்லது அடுத்தவர் மேல் சுமத்தவும் ஏற்படுத்திக்கொண்ட வழி. இந்து இயக்கங்கள் நடத்தும் பள்ளிகள் என்ன பாடு படப் போகின்றனவோ!
RTE க்கு எதிரான கேள்விகள் வறுமைக்கு எதிரான கேள்விகளாகச் சித்தரிக்கப்படும். எவரும் முனகக்கூட முடியாது.
கிருத்தவப் பள்ளிகள் தப்பிக்கத் தெரிந்தவை.
ஸ்ரீ ஜடாயு, “மிஷநரி” என்ற சொல் பலமுறை மேற்கண்ட வ்யாசத்தில் வந்துள்ளது. “மிஷனரி” என்று இருக்க வேண்டுமோ என்று நினைத்தேன். இவர்களின் குள்ள நரித் தனத்தை நினைக்கும்போது “மிஷநரி” சரியான பத பிரயோகமாக படுகிறது.
That a drum gets beaten on both the sides is the position of HIndus. One option available for Hindus is that of not admitting their wards to these religious harvesting institutions. The mammoth share of christians in controlling the educational institutions squeeze the options available to Hindus.
The children who study in these Institutions virtually undergo religious torture. The children are compelled to say christian prayers. In every possible way the deities and scriptures of Hindus are humiliated in these Institutions. Children in tender age are taught that Hindu deities are “shaitan”. These institutions compel students to attend class on important Hindu local festivals like “mariamman festival” “thai poosam” and in north India like that of “karva chouth” etc., Those students who remain absent on these days are brutally punished by the school and affected parents of children have many a times demonstrated against such brutalities.
But who is to hear? very few agitated people remove their wards from these brutal christian educational institutions.. For others, the choices being less they continue to bear the brutalities.
In this background, how can one interpret the declaration of Mr clean PM sitting upon the hill of corruption, that minorities have the first right over available resources of country. Any person of common sense would say that this is communal. But the indian media hail this as the secular view of clean PM.
பலருக்கும் தெரியாத தகவல். ஆனால் வெறுமனே தமிழ் இந்து தளத்தில் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஊடகங்களில் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சு. சுவாமி, சோ மாதிரி ஆட்களிடம் கருத்து கேட்டு அந்தக் கருத்தை பல தளங்களில் வெளியிட வேண்டும். அதோடு நிற்காமல் யாராவது சட்ட ரீதியாக அணுக வேண்டும்.
அன்புள்ள ஜடாயு,
அரசியல் சட்டத்தின் 30 வது பிரிவு தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு கல்விக்கூடங்களை அமைத்து நிர்வகிக்கும் உரிமையை சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ளது. ஆனால் அதைத் தவறாகப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு இல்லை.
-உச்ச நீதிமன்ற நீதபதி வி ஆர் கிருஷ்ண ஐயர், சென்னை, 27 .01 .1960 .
discrimination against hindus in constitution and law/r.s.narayanaswami.
அன்புடன்
சுப்பு
நன்றி! நம் ஒற்றுமைக் குறைபாடு தான் நம் வளர்ச்சியின்மைக்கும் காரணம். ஒன்று பட வேண்டும். அரசாங்கங்கள் சரியாக செயல் படுகின்றதா என மதிப்பிட்டே வாக்கு அளிக்க வேண்டும்.
ஒன்று படுவோம்! உயர்வடைவோம்!
வாழ்க பாரத சமுதாயம்!
இந்துக்களின் தற்போதைய அவல நிலைக்கு நம் இந்துக்கள்தான் காரணமே தவிர மற்றவர்களை குறை சொல்லி எந்த பிரயோசனமும் இல்லை.ஆம் நம் அனைத்து அவல நிலைக்கும் நாம்தான் காரணம். இந்து விரோத சட்டங்களை இயற்றும் போலி மதசார்பற்ற கட்சிகளை நம் இந்துக்கள்தானே சார் தேர்தலில் வாக்களித்து தேர்ந்தெடுக்கின்றனர். அத்தகைய இந்து விரோத கட்சிகளுக்கு எதுக்கு சார் நம் இந்துக்கள் வாக்களிக்க வேண்டும்?.அந்த இந்து விரோத கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு நம் இந்துக்கள்தானே காரணம். நம் இந்துக்கள் இந்து மதத்திற்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் புறகனிப்பது நமக்கு நாமே ஆப்பு வைப்பது போல் இருக்கிறது. ஆனால் மற்ற மதத்தவர்களை பாருங்கள் அவர்களின் மதத்தவருக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கின்றனர். ஆனால் நம் இந்துக்கள் இந்து விரோத கட்சிக்களுக்கு வாக்களிக்கின்றனர்.அதனால் போலி மதசார்பற்ற அரசியல் கட்சிகள் தைரியமாக ஓட்டுக்காக மற்ற மதத்தவர்களுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற்றுகிரார்கள்.எனவே நம் இந்துக்களின் அவல நிலையை போக்கும் வழி நம் இந்துக்களின் கைகளில்தான் இருக்கிறது.இனிமேலாவது நம் இந்துக்கள் இந்து மதத்திற்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். இந்து விரோத கட்சிகளை புறகணிப்போம்.அப்பொழுதுதான் நம் மக்களின் அவல நிலை நீங்கும்.
புள்ளி விவரங்களை மிகை படுத்தி கட்டுரை எழுதியது போல தோன்றுகிறது. மாறிவரும் காலசூழ்நிலையில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தில், இந்த கட்டுரை நிகழ கால சூழ்நிலையை பிரதிபலிப்பதாக தெரியல்வில்லை. பொறியில் கல்லூரிகளின் அதிகம் நிறைந்த இந்த நாட்களில், கிறிஸ்தவர்கள் கல்வியை அக்கிரமிப்பதாக கூறுவது, எனக்கு ஏற்புடையதாக தோன்றவில்லை.
ஆரம்ப கல்வியில் அவர்களது பங்கு மிகவும் முக்கியமானது. நமது தமிழ் நாட்டின் கல்வியறிவு நல்ல நிலைமையில் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பு ஏற்புடையது. மேலும் உங்கள் கூற்றுபடி பார்த்தல், இன்று இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் தான் அதிகமாக இருந்திருக்க முடியும். ஆகையால் கல்வி, மருத்துவம் முலம் மதம் மாறுகிறார்கள் என்றால் அது தவறு.
தங்கள் முயற்சியின் விளைவாக நல்லதொரு கட்டுரையை படிக்க முடிந்தது. ’30வது சட்டப் பிரிவு உருவாக்கும் மதப் பாரபட்சங்கள், கல்வி நிறுவனங்கள் மீது மிஷநரிகளின் அளவுக்கதிகமான கட்டுப்பாடு – இவை உருவாக்கும் நீண்டகால விளைவுகளை “பிரிவினைகளின் தொடர் இயங்குமுறைக் கோட்பாடு” (Dynamic Models of Segregation) என்கிற அறிவியல்பூர்வமான முறை கொண்டு அடுத்த பகுதியில் ஆராய்வோம். இந்த அறிவியல் முறை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் ஷெல்லிங் உருவாக்கியது’. நமது அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30 ஆவது ஷரத்துக்கள் சிறுபான்மையினர் நலன்களை பற்றி விரிவாக விளக்குகின்றன. இதில் ஒரு தவறான அணுகுமுறை பின்பற்றப்படுவதாக நான் நம்புகிறேன். ஒருவர் தனது வழிபாட்டு முறை அல்லது வழிபடும் தெய்வத்தை மாற்றிகொள்ளுவதால் மட்டும் எவ்வாறு ‘சிறுபான்மை’ அந்தஸ்தை பெற்றுவிட முடியும்? இவ்வாறு சிறுபான்மை அந்தஸ்து பெறுவதற்கு தூண்டும் வகையில் ஒரு சட்டம் இருக்குமானால் அது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கிவிடாதா? இதுபோன்ற பாரபட்சமான சட்டங்கள், மிகவும் தெளிவாக ஹிந்துக்களின் உரிமைகளின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலாகவே கருதப்பட வேண்டும். ஹிந்துக்களின் பெரும்பான்மையையே அழித்துவிடும் நோக்கத்துடன் இயற்றப்பட்டுள்ள இச்சட்டங்கள், நிச்சயம் நமது நாட்டின் மக்கள்தொகை பங்கீட்டில் (demography) மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. பாரபட்சமற்ற முறையில் நமது நாட்டு உச்ச நீதிமன்றம் மற்றும் அரசியல் தலைவர்கள் செயல்பட்டால் நிச்சயமாக இந்தமுரண்பாட்டை தீர்த்திருக்க முடியும். இன்றளவும் சிறுபான்மையினரின் மதம் மாற்றும் சதி திட்டங்களால் பெரும்பான்மை ஹிந்துக்கள் அவதிப்படுகிறோம். நமது நாட்டின் வளங்களையும் பொக்கிஷங்களையும் கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல் நமது மக்களின் நிம்மதியான வாழ்வை குலைக்கும் நோக்கில் ஆங்கிலேய அதிகாரிகளால் அமைக்கப்பட்ட சட்டங்களை தூக்கிஎறிந்துவிட்டு பெரும்பான்மை ஹிந்துக்களை பாதிக்காத வகையில் புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும்.
// ஒரு அதிர்ச்சிகர தகவல்: இந்தக் கல்லூரி இயங்குவதற்கான நிதியில் 95 சதவீதம் மத்திய அரசிடமிருந்து, அதாவது இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து வருகிறது. //
இந்த சான்றில் உள்ள எழுபத்தி நான்காம் பக்கம், முப்பத்தி எட்டாம் புள்ளியைப் பார்க்கவும்: https://www.ugc.ac.in/pub/annualreport/summary.pdf
கருத்துக் கூறும் அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி.
// discrimination against hindus in constitution and law/r.s.narayanaswami.
அன்புடன்
சுப்பு //
சுப்பு சார், இது ஒரு புத்தகத்தின் பெயரா? எந்த பதிக்கம் வெளியிட்டுள்ளது, எங்கு கிடைக்கும் ஆகிய விவரங்களையும் கொடுங்கள்.
// Balaji RajaSekar J M
6 December 2010 at 10:20 pm
புள்ளி விவரங்களை மிகை படுத்தி கட்டுரை எழுதியது போல தோன்றுகிறது. … மேலும் உங்கள் கூற்றுபடி பார்த்தல், இன்று இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் தான் அதிகமாக இருந்திருக்க முடியும். ஆகையால் கல்வி, மருத்துவம் முலம் மதம் மாறுகிறார்கள் என்றால் அது தவறு. //
அன்புள்ள ராஜசேகர், தயவு செய்து இரண்டாம் பாகத்தையும் படியுங்கள்.
இப்படி ஏன் இதுவரை நிகழவில்லை என்பதையும், எப்படி இனிமேல் நிகழக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்பது பற்றியும் அந்தப் பாகம் விரிவாக விளக்குகிறது.
// இந்த சான்றில் உள்ள எழுபத்தி நான்காம் பக்கம், முப்பத்தி எட்டாம் புள்ளியைப் பார்க்கவும்: https://www.ugc.ac.in/pub/annualreport/summary.pdf //
பார்த்தேன். யுஜிஸி மானியம் பெறும் கல்லூரிகள் லிஸ்டில் செயிண்ட் ஸ்டீபன்சும் இருக்கிறது.
‘அதிர்ச்சிகரமான’ தகவல் என்று அவர் சொல்வது இத்தகைய கல்லூரி எப்படி 50% இடங்களை பிரத்யேகமாக ஒதுக்கலாம் என்பது. ஒரு மேற்கத்திய வாசகருக்கு இது அதிர்ச்சியளிக்கும் என்ற எண்ணத்தில் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். நமக்குத் தான் இது பழகிப் போய்விட்டதே.
தமிழ் நண்பர்களே:
இது மூர்த்தி முத்துசுவாமி.
முதலாவதாக நான் ஜடாயுவுக்கு ரொம்ப நன்றி சொளுகிறேன்.
நான் மதுரையிலே வளந்து வந்து, அமெரிக்கன் கல்லூரியிலே படித்தேன்.
எனக்கு உங்களுடைய நிலைமையை நினத்தால் கவலையாக இருக்கிறது.
// இந்த சான்றில் உள்ள எழுபத்தி நான்காம் பக்கம், முப்பத்தி எட்டாம் புள்ளியைப் பார்க்கவும்: https://www.ugc.ac.in/pub/annualreport/summary.pdf //
ஹிந்து பக்ஷத்தில் உள்ளவர்கள் 95 சதவிகிதம் என்று ஏதோ ’புளுகு’ எழுதுவதாகச் சிலர் கூறினாலும் கூறுவர். அதற்கு இடமில்லாமல், கட்டுரையில் உள்ள புள்ளி விவரம் சரியே என்று சுட்டிக் காட்டவே இன்ற சான்றையும் அளித்தேன். நன்றி.
திரு.மூர்த்தி முத்துகுமாரசுவாமி,
எங்களின் நிலையை பார்த்தால் கவலையாக உள்ளதாக மறுமொழி
அளித்துள்ளீர்கள்.
எனக்கும் உங்களை நினைத்தால் கவலையாக உள்ளது.
அமேரிக்காவின் 150க்கும் அதிகமான இவாஞ்சலிக்கல் குழுக்களின்
மதமாற்ற முயற்சிகளினாலும் மிஷனரிகளின் சித்து விளையாட்டாலும் இந்தியாவில் இந்துக்கள் நொங்கு எடுக்கப்படுகிறார்கள்.
அதேபோல் அமேரிக்காவிலும் வெள்ளையனின் உப்பை தின்றுவிட்டு
வெள்ளையனையே நொங்கு எடுத்து கொண்டிருக்கும் சௌதி, சோமாலிய
ஜிஹாதிக்களின் 3ம் தர தொழிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்திய செக்யூலர்கள் மதமாற்றத்தை பேச மாட்டார்கள்.
அமேரிக்க செக்யூலர்கள் அதிபர் ஒபாமாவின் தலைமையில் ஜிஹாத்தை
எதிர்க்க தயங்குவார்கள்.
உங்களால் (வெள்ளையர்களால்) நாங்கள் கெட்டோம். ஜிஹாத்திகளால்
நீங்கள் கெட்டீர்கள்.
நம் இரு இனமும் கட்டிக்கொண்டு அழுவதை விட்டு அடுத்த தேர்தலில்
நம் பெரும்பான்மை இனத்தின் தேவைகளை அடகு வைக்காத கட்சியை
ஆட்சியில் அமர்த்துவதுதான் நாம் வாழ ஒரே வழி.
நமது சமுதாயத்தை சீரழிக்கும் முயற்சியில் ஆங்கிலேய ஆட்சியால் பின்னப்பட்ட சதி வலைதான் மிஷனரிகள். நமது சமுதாயத்திற்குள் நம்மவர்களையே நமக்கு விரோதிகளாக்கிடும் இந்த சதி திட்டத்தை நமது அரசியல் அமைப்பை உருவாக்கிய பெருந்தலைவர்கள் உணர தவறியதன் விளைவு இன்று நாம் அனுபவிக்கின்ற பிரச்சினைகள். வழிபாட்டு மாற்றம் மட்டுமே ஒருவரை எவ்வாறு சிறுபான்மை ஆக்கிட முடியும். அதுமட்டுமல்லாமல் வழிபாட்டை மாற்றிக்கொண்ட ஒருவருக்கு பெரும்பான்மை சமுதாயத்திற்கு கிடைக்கும் சலுகைகளை விட அதிக சலுகைகள் கிடைக்கும்! மதம் மாறிட தூண்டும் விதத்தில் ஒரு அரசியல் சட்டம்! அதனை போற்றிப்பாதுகாப்போம்! பெரும்பான்மை ஹிந்துக்கள் விரும்பும் அரசியல் மாற்றம் நிகழும் காலம் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வரப்போவதில்லை என்றே தோன்றுகிறது.
Though the intention of the article can be appreciated, the way it is presented raises some doubts to its effectiveness. I found a few critiques against this article in the website (https://hindu-caste-haf.org/), which also made sense. I was also surprised to find that Hindu American Foundation removed this article (the original English version) from their website and indicated that they are making some changes to it. So I guess we need to wait for the latest one.
அற்புதமான கட்டூரை ! 1947kku முன்னாடி முஸ்லிம்களுக்கு தூகன கூஜவால பாகிஸ்தான் போச்சி . இப்ப தூகர கூஜவால யன்ன போக போதோ .
It is 100% true that the successive governments in India under congress rule have been indulging in the fulfilment of so called minoritis as they vote for the party without the thought of welfare of the nation but for the short term benefits which surely leads the nation restlessh in the future as the affected are talented and befitable for such studies. Only Kalki avathar remains for Hindus to save them if they elect such government again.
The means of military, mediatory and missionary British brought many parts of their colonial regions. It is pity that our traditional method of understanding anything including the concept of God was completely replaced by machaley education system which makes a person only selfish and many of our leaders were taught through that system. Reservation policy must be upgraded according to the time period as per the socio-economic condition in the society. I think at present this policy is completely misused. For example my colleague converted as christian but maintains all of his records as Hindu to get concession. Likewise many pseudo-religious people receive benefits blocking the actual purpose. But it cannot be stopped untill the affected people come out and fight for it. The congress govt won’t even think of this problem as they have to think of filling their pocket with scam money.