காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று

ஆக்கம்: பல்பீர் புன்ஜ்

(நன்றி: “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” 10/11/10)

தமிழாக்கம்: எஸ். ராமன்

காங்கிரஸ் கட்சி ஒன்றே பாரதத்தை ஒன்றாய் இணைக்கும் திறமை பெற்ற தேசியக் கட்சி என்று தன்னைக் காட்டிக் கொள்ள டெல்லியில் நடந்த தேசியக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் முயற்சி செய்தது.

ஆனால், அந்த காங்கிரசின் சரித்திரம் தான் என்ன?

அந்தக் கட்சிதானே  தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத்  தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அளித்தது?

அதன் ஆட்சியில்தானே தேசத் துரோகத்தை ஆதரிக்கும் வாதத்தை வாழ்த்துபவர்கள் என்று பகிரங்கமாக தன்னை அறிவித்துக் கொள்ளும் பிரிவுகளுக்கு தனது நேர்முக, மற்றும் மறைமுக ஆதரவை அளிக்கிறது?

தனக்கு எதிராக வந்த நீதிமன்றத் தீர்ப்பினால் தனது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தினால் 1975-77 -ல் அவசர நிலையைப் பிரகடனம் செய்த இந்திரா காந்தி நம் தேசத்தையே அச்சம் கொள்ளச் செய்தார்.

1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின்  தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் “சந்த்” எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

maoist_india_map_20091026கேரளா, மற்றும் வேறு மாநிலங்களில் செயல்படும் Popular Front of India என்ற குழு அங்கங்கே Sharia Court தண்டனைகளைக் கொடுக்கின்றது. இந்தியாவிற்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றது. தேர்ந்தெடுத்த அரசுகளைக் கவிழ்க்கவும் இஸ்லாமிய அரசை நிறுவவும் ஆயுதங்களை சேமிக்கின்றது. இந்த தேசிய முள்ளை பிடுங்கி எறியும் வல்லமை காங்கிரஸ் அரசுக்கு இல்லை என்பதோடு, அதன் கட்சியோ இந்தக் குழுவுக்குப் பரிந்தும் பேசுகிறது. நல்ல வேளையாக கேரளாவின் மார்க்சீய அரசு அதன் மேல் உரிய நடவடிக்கை எடுக்க முனைந்திருக்கிறது.

நம் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நக்சலைட்டின் பிடிக்குள் வந்திருக்கிறது. மைய அரசு தனது ஆளுமையை அங்கு உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கும் போது, காங்கிரசின் பொதுக் காரியதரிசி ஒருவரே அந்த முயற்சியை தடுப்பதோடு மட்டும் அல்லாது எந்தக் குழு தேசத்தின் மேலேயே போர் தொடுத்துக் கொண்டிருக்கிறதோ அதற்காக பரிந்தும் பேசுகிறார்.

மைய அரசில் உள்ள ரயில்வே மந்திரியோ அந்தக் குழுக்களுடன் கை கோர்த்துச் செல்ல விரும்புகிறார். தடுக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பான SIMI நாட்டின் பல மூலைகளில் வெடி குண்டு வைத்து அமைதியைக் குலைக்க பயங்கர திட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும்போது, மையத்தில் உள்ள கூட்டணி அரசோ தனது பார்வையை குஜராத்தின் பா.ஜ.க. அரசின் அங்கத்தினரைப் பழி வாங்கும் இழிச்செயலில் திருப்பியிருக்கிறது.

எழுத்தாளர் அருந்ததி ராயுடன் சேர்ந்துகொண்டு பிரிவினைவாதத் தலைவர் ஜீலானி, தலைநகர் டெல்லியிலேயே காஷ்மீரத்தை “அபகரித்துக் கொண்ட” நாடு என்று இந்தியாவை குற்றம் சாட்டுகிறார். அத்தகையவர்கள் மேல் எந்த நடவடிக்கை எடுக்கும் தைரியமும் காங்கிரஸ் அரசுக்கு இல்லை.

bigdeal5junesmallஅவ்வளவு ஏன்?  பயங்கர வாதத்தில் ஈடுபடும் தண்டேவடா நக்சலைட்களையோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேசும் காஷ்மீரத்து கல்லெறி கயவர்களையோ  காங்கிரஸ் பொதுக் குழுக் கூட்டத்தில் யாராவது கண்டித்தார்களா? அவர்களைப் பற்றித்தான் ஏதாவது பேசினார்களா? ஆனால் அதை மறைக்கும் முகமாக, அவர்களுக்கு RSS பற்றி குற்றம், குறை சொல்லத்தான் தெரிந்தது. ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்கள்  “அது ஒரு தேசிய இயக்கம் என்று” போற்றிய RSS -ஐ ஒரு பயங்கரவாத இயக்கம் என்று ஆத்திரத்துடன் கூவத்தான் அவர்களுக்குத் தெரிந்தது. முழுப் பூசணிக்காயை சோற்றிலா மறைக்கப் பார்க்கிறார்கள்? இப்படி உள்ளதை மறைத்து, இல்லாததைப் பேசுவதால் டெல்லியில் காங்கிரசுக்கு “கனா காணும் இயக்கம்” என்ற பெயரைத் தான் வாங்கித் தந்திருக்கிறது.

தேசியப் பற்று என்பதன் மதிப்பையே குறைக்கும் அளவில் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள்  அமைந்துள்ளன. சுதந்திர இந்தியாவை வெகு காலத்திற்கு ஆண்ட ஒரே ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரையே, தனது அறுநூறுக்கும் மேற்பட்ட தன்  திட்டங்களுக்கு, காங்கிரசின்  மைய அரசு வைத்திருக்கின்றது. தேசியப் பற்று கொண்டவர்களில் வேறு எவர் பெயரும் அந்தக் கட்சிக்கு ஞாபகம் இல்லை. சுதந்திரம் பெற்ற சமயம், சுயேச்சையாக ஆண்டுகொண்டிருந்த சுமார் அறுநூறு சமஸ்தானங்களை தனது சாதுரியத்தாலும், தேச பக்தி மேலீட்டாலும் ஒன்றிணைத்த மிக உயர்ந்த மனிதரான சர்தார் படேல் காங்கிரசில் இருந்தும் அவர் பெயர் கூடவா அக்கட்சிக்கு மறந்து போய்விட்டது? 

பாகிஸ்தானிடம் அபிமானம் கொண்ட அளவில் வெகுச் சிறிய ஜுனகத் சமஸ்தானத்திலிருந்து மிகப் பெரிய ஹைதராபாத் சமஸ்தானம் வரை அறுநூறையும் வெகு வேகமாக இணைத்து நமது சுதந்திர இந்தியாவை உருவாக்கியது ஒன்றே சர்தார் படேலின் அணுகுமுறைக்கு சான்றாகப் போதும். ஆனால் ஒரே ஒரு காஷ்மீர் இணைப்பை நேரு தன்னந்தனியே கையாண்டார். விளைவு? இன்றும் நாம் தொங்கலில் தான் இருக்கிறோம். இன்னும் எத்தனை தலைமுறைகள் இதனால் அவதிப்படப் போகிறதோ?

சுதந்திர இயக்கத்திலும், சமூக சீர்திருத்தத்திலும் பங்கு கொண்டு தியாகம் செய்த பற்பல தலைவர்களில், நேரு-காந்தி குடும்பத்தின் பங்கு மட்டுமே நினைவில் நிற்கும்படி எல்லா  திட்டங்களுக்கும், இடங்களுக்கும் பெயரிடுவது என்பது தான் காங்கிரசின் தேசியப் பற்று! சிந்தனை உடையவர் எவருமே இந்தப் போக்கை ஒரு அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்றே சொல்வர். ஆக காங்கிரஸ் வளர்ப்பது ஒரு குடும்பத்தின் வழிபாட்டையே அன்றி தேசியப் பற்றை அல்ல.

SIMI, நக்சலைட் இயக்கங்கள், மதச் சார்பின்மை பற்றி அலட்டிக் கொள்வோர், தான் தோன்றி அறிவுஜீவிகள் என்று இவர்கள் எல்லாம் கட்டற்ற சிந்தனை, முன்னேற்றம் தரும் எழுத்துக்கள் என்ற போர்வையில் செய்து கொண்டிருப்பதெல்லாம் தேசத் துரோக வேலைகளே. இவர்கள் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று தெரியுமா?

shreyas_sketchராணுவம் நம்மை அடக்குகிறது, போலீசோ கொலை, கற்பழிப்புகளில் ஈடுபடுகிறது, இந்த அரசு ஏழை மக்களுக்காக அல்ல, இந்திய தொழில் நிறுவனங்கள் மக்களின் எதிரிகள், மேலும் அவைகள் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவைகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, அதனால் இந்திய நிறுவனர்களோடு இந்திய அரசையும் அகற்ற வேண்டும் என்று சொல்கின்றன.

இவர்கள் பார்வையில் போலீசைக் கொல்லும் மக்கள் குற்றவாளிகள் அல்ல, சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் போலீசும், ராணுவமும் தான் அகற்றப்பட வேண்டும்!

பழம் பெரும் இந்து மதத்தைச் சேர்ந்தவன் நான் என்று காட்டிக்கொள்வது இவர்களுக்கு ஒரு பிற்போக்கு எண்ணம், ஆனால் முஸ்லீமின் பழமைவாதத்தை ஆதரிப்பதோ ஒரு முற்போக்குக் கொள்கை. இந்துக் கடவுளர்களை நிர்வாணமாகச் சித்தரிப்பது ஒரு கலைஞனுக்கு உள்ள சுதந்திரம், ஆனால் இஸ்லாமிய வழிகளைப் பற்றி ஒரு சொல் கூடச் சொன்னால் அது மதவாத பயங்கரம். தேசிய கலாச்சாரத்திற்கு எதிராக விஷ விதைகளைத் தூவுவது இவர்களுக்குத் தனி மனித சுதந்திரம், ஆனால் நம் நாட்டின் கலாச்சார ஒற்றுமையின் அடித்தளமாக இருப்பதைப் பற்றி எழுதினால் அது ஒரு பிற்போக்குத்தனம். இப்படியாக முன்னுக்குப் பின் முரணாக உள்ளதுதான் இவர்கள் எண்ணமும், பேச்சும், செயலும்.

பழமைவாதம் கொண்ட இஸ்லாமை ஆதரிக்கும் அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்களும், இடதுசாரி கருத்துக்கள் கொண்ட அறிவுஜீவிகளும் இஸ்லாமியத்தை மட்டுமே அனுமதிக்கும் நாடுகளிலோ, அறிவுஜீவிகளின் மார்க்சீய நாடுகளிலோ ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசக்கூட மாட்டார்கள்.

எங்கெல்லாம் மார்க்சீய வழியில் ஆட்சியை பிடித்திருக்கிறார்களோ அங்கெல்லாம் கருத்து வேற்றுமை என்பதை அனுமதிக்காது முளையிலேயே கிள்ளி எறிகிறார்கள்.

இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் இன்னும் சிறையிலேயே இருக்கிறார். பழமைவாதம் பழகும் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் பள்ளிக்குச் செல்லாது தடுக்கப்படுகிறார்கள்; வெளி உலகில் பர்தா அணியாது இருந்தால் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் சிறையில் தள்ளப்பட்டோ, கல்லால் அடிக்கப்பட்டோ கொலை செய்யப்படுகிறார்கள்.

271010satishஎழுத்தாளர் அருந்ததி ராய் போன்றோர் இஸ்லாமிய நாடுகளிலோ, மார்க்சீய நாடுகளிலோ இங்கு பேசுவதுபோல் பேச முடியுமா? இந்த விவரங்களை எல்லாம் அவர்கள் சொல்லாது மறைப்பதனால், அவர் போன்றோர்களுக்கு அவர்களது பேச்சு, எழுத்து போன்ற அவர்களது ஆயுதங்களாலேயே அவர்களுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும். தனது அரசியல் நோக்கங்களுக்காக காங்கிரஸ் அவரது பேச்சை பொருட்படுத்தாது விட்டுவிடலாம். ஆனால் RSS  போன்ற தேசிய இயக்கங்களை அக்கட்சி தாக்கும் போது, இந்திய இறையாண்மையையும், சட்ட ஒழுங்கையும் பாதுகாப்பதை விட, காங்கிரஸ் ஒரு குடும்ப அரசியலை மேலாக நினைத்துச் செயலாற்றுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அருந்ததி ராயின் தேசத் துரோகப் பேச்சைப் பற்றி சிறிது கூட மூச்சு விடாத காங்கிரஸ் தேசியக் குழு, RSS  இயக்கத்தை ஒரு பெரிய பிரச்சினை போல விவரித்து முழு மூச்சுடன் தாக்கியதே, ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, மையத்தில் ஆளும் கட்சியின் எண்ணப் போக்கினைத் தெரிந்து கொள்ளலாம்.

9 Replies to “காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று”

 1. இந்திரா காந்தி காலத்தில் “இளம் துருக்கியர்” என்ற குழு சந்திரசேகர் மோகன் தாரியா போன்றவர்கள் தவறு நடக்கும் பொது காங்கிரசுக்குள் இருந்து கொண்டே எதிர்த்தார்கள். அதனால் தலைமை பயந்து கொண்டு இருந்தது. இப்போது இருப்பவர் எல்லாம் கொத்தடிமைகள். சோனியா வா! வந்து உட்கார் என்றதும் படுத்துக் கொள்ளும் வீரம் மிக்கவர்கள். இந்த நிலையில் யார் இந்த சோனியா, இவர் காங்கிரசின் தலைவராக ஆனது எப்படி? இவருக்குப் பின்னால் இருக்கும் வரலாறு என்ன? இவரால் இந்தியாவுக்கு நன்மையா? தீமையா? என்றெல்லாம் பகுத்து உணரும் பாங்கு இன்றைய காங்கிரசாருக்கு இல்லை. ஏட்டிக்குப் போட்டி, யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று சொல்லும் மழுங்கல் கூட்டம். இவர்களிடமிருந்து இந்தியாவை யார் காப்பாற்றப் போகிறார்கள்? அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம்..

 2. நன்றி! மிகச் சரியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை. தமிழ் வாசகர்களுக்கு, இந்திய தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தலை எதிர் நோக்கும் நேரத்தில், தமிழர்கள் சரியாக புரிந்து கொண்டு செயல் பட வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும் எந்த சக்தியையும் அது எந்த உருவில் இருந்தாலும் அதை அழித்து, ஒழிக்க வேண்டியது, நமது கடமையாகும். ஒன்று படுவோம். உயர்வடைவோம்.
  வாழ்க பாரத சமுதாயம்!
  வெல்லட்டும் அன்பு!
  நன்றி!

 3. கயவர்கள் உருவாகிக்கொண்டே தான் இருகிறார்கள்…
  தேச பக்தர்களும் பிறந்துகொண்டேதான் இருகிறார்கள்…

  கயமை மீறினாலும் தேசியம் வெற்றிகொள்ளும்…

  நம் பாரத பூமி வீழாது வீறுகொண்டு எழும்

  வாழ்க பாரதம்…

 4. காங்கிரசுக்கு தேசப்பற்று இருந்ததே கிடையாது. சுதந்திரத்தின் பின் ஆட்சிப்பற்று, அடிமைப்படுத்தும் திட்டம், தீய சக்திகளை, தனக்கு வேண்டும் போது சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வெறித்தனம் போன்றன மட்டுமே இருந்து இன்றும் அவற்றிற்கு அடையாளம் காட்டலாம். மக்களுக்கு இருந்த தேசப்பற்றை காங்கிரசுக்கு மாற்றிகாண்பிக்கமுடியாது. அதைச் செய்ய முயற்சித்து, முகத்தில் சேற்றை வாறிப்பூசிக்கொள்வது காங்கிரசுக்குக் “கை”வந்த கலை.

 5. காங்கிரஸின் தேசபற்று – அப்படி என்றால் என்ன ? ரூபாய்க்கு எத்தனை கிலோ ! எங்கு கிடைக்கும் ! என்று கேட்கும் தேசவிரோத அன்னிய அடிவருடும் கூட்டு சேர்கைதான் காங்கிரஸ். இரு வாரங்கள் கடத்தியும் எதிர்கட்சியின் கோரிக்கையை ஏற்காமல் காலம் கடத்துவதிலிருந்தே அவர்களது தேசபற்று நன்கு விளங்கும். மந்திரிசபையால் தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதியால் அனுமதிக்கபட்டு பதவியில் அமரும் நீதிபதி அரசாங்க அதிகாரியை பார்த்து குற்றம்சாட்டப்பட்ட ஒருவறுக்கு குற்றபுனலாய்வு துறையின் தலைமை பொறுப்பை எப்படி அளித்தீர்கள் என்று கேள்வி கேட்டால் இந்த கேள்வி எல்லா உயர்மட்ட பொறுப்பில் உள்ளவருக்கும் பொருந்தும் என்று வெட்கம் இல்லாமல் திமிரான பதிலை சொல்கிறார்என்றால் இது ஒரு தேசவிரோதியால் மட்டுமே சாத்தியமாகும். ஓய்வு பெற்ற திரு.கிருஷ்ணஐயர் இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸைசாடி ஒருமுழுபக்க கட்டுரையையே வெயியிட்டுள்ளார்
  சபையை கூட்டமுடியாமல் அமளிதொடர்ந்து நடந்துவரும் வேளையில் இடையே (Accountability of Judges) என்ற சட்டத்தை சபையின் வாய்ஸ் ஓட்டுழூலம் பாஸ் செய்திருக்கிறது. இதை ஒழுங்காக அழூல்படுத்தாமல் சுயலாபத்திற்காக போலிகுற்றசாட்டுகளை சுமத்தி நீதிமன்ற நீதிபதிகளை செயலிழக்க செய்யவே கொண்டுவந்தள்ள சட்டமாகத்தான் தோன்றுகிறது. இது ஜனநாயகத்திற்க்கு நீதிக்கும் விழபோகும் கடைசி மரணஅடி என்பது சந்தேகமே இல்லை

 6. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் போன்றோர் ஆரம்பித்த “இந்திய தேசிய காங்கிரஸ்” இப்போது இல்லை.

  திலகர், கோகலே, காந்தி, பட்டேல் உருவாக்கிய காங்கிரஸ் சுதந்திரத்திற்கு முன்பே அழிந்துவிட்டது. நேரு தலைமை ஏற்றவுடன் உருவான காங்கிரஸ் பிரிட்டிஷ் லேபர் பார்ட்டியின் நோக்கம் கொண்டது. யூரோப்பிய மையவாதப் பார்வை உடையது. இந்திய தேசியத்தில் இருந்து அது விலகிவிட்டது.

  இதை எதிர்பார்த்த காந்தி காங்கிரஸைக் கலைத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், தேசியத்தில் இருந்து விலகியபின்னரும், பெயரை தக்கவைப்பதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெறலாம் என்று முடிவு செய்த நேரு தலைமை, மக்களை ஏமாற்ற ஆரம்பித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

  அந்த நேருவிய காங்கிரஸும் அழிந்தது. இப்போது இருப்பது இந்திரா காங்கிரஸ். இந்தியாவை ஒரு தென்னமரிக்க நாடுபோல் மாற்ற செயல்படுகிறது.

  தேசியம் பேசுகிற, காந்தியப் பார்வையை ஏற்றுக்கொள்கிற பாஜகவை வேண்டுமானாலும் “இந்திய தேசிய காங்கிரஸின்” தொடர்ச்சி என்று சொல்லலாம்.

 7. What to tell of congress, the “abishaap” of Hindustaan.

  panditha nehru samaarambhaam raajeeva gaandhi madhyamaam
  ithaalimaatha sakutumba sahitam congress sadhaa sarvadha varjayeth

  Whereas Hindustan and its culture is in the blood of every other ordinary hindustaani cutting across Religion, language et al, could one think as to what could it be in respect of a person who discovered India.

  After the humiliating defeat against the war with china in 1962 when we lost control of places like kailash and maanasarovar, blaberred Pandit Nehru in the Parliament that “the places we lost are barren land where a blade of grass does not grow”. Agitated, Shri.Deen dayal upadhyaya ( I do not exactly remember the name of rightist politician) shot back, “there is not a blade of grass on the head of PM; can it be taken as barren?” Thats the paaramparyam of the party founded by whites to serve the interests of the white. Till date the party maintain its white ejamaana vishvaasam.

  Actually the durgandham dates far back. pattabhi sitaraamaiah Vs Nethaji Subaash chandrabose and many such instances. samoolam the party had been and is “abishaap” of Hindustaan. And it should be opposed tooth and nail in the political arena.

 8. https://www.ndtv.com/article/wikileaks%20india%20cables/wikileaks-congress-party-stung-playing-religious-politics-71958
  ஆம் ஆத்மி, மக்கள் நலன், என்று கங்கிரசார் விக்கி விக்கி அழுதாலும் சாதி மதத்தை வைத்து காங்கிரசு அரசியல் செய்யும் என்று விக்கிலீக்ஸ் காட்டிக் கொடுத்து விட்டதே!

 9. இந்தக் கட்டுரையில் ஜனநாயகத்தின் தோல்விகளை ஒரு முதியவராகச் சித்தரித்து அதைக் காட்டி அருந்ததி ராய் ஒரு ஆய்தந்தாங்கிய பெருச்சாளியிடம் கூக்குரலிடுவது போலவும் ஒரு கேலிப்படம் இருக்கிறது. ஜனநாயகத்தின் தோல்விகளில் அருந்ததி போன்ற காசுக்கு வீங்கிய காரிகைகளும் அடக்கம். விக்கிலீக்ஸில் துருவினால் இந்தப் பக்கியைப் பற்றியும் பல தகவல்கள் கிடைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *