இளையராஜா @ கூகிள்

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் Talks at Google மற்றும் நேர்காணல் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடப்பதுண்டு. அந்தப் பகுதிக்கு அவ்வப்போது வருகை தரும் கலைஞர்கள், அறிஞர்கள், பிரபலங்களை கூகிள் வளாகத்திற்கு அழைத்து வந்து அந்த நிறுவனமே நடத்தும் நிகழ்ச்சி இது. அந்தத் துறையில் ஆர்வமுள்ள கூகிள் பணியாளர் ஒருவரே பெரும்பாலும் நேர்காணலை நிகழ்த்துவார். ஏற்கனவே இதில் சங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசேன் (தபலா வித்தகர்), நடிகர் அமீர்கான் மற்றும் கணினித் தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் இளையராஜா கலந்துகொண்ட நிகழ்வு முற்றிலும் வேறுபட்டதாக மிகச் சிறப்பாக தனித்தன்மையுடன் இருந்தது. கூகிளுக்கு நன்றி.

அங்கங்கு கறிவேப்பிலை போல சில ஆங்கில வாக்கியங்கள் தவிர்த்து நிகழ்ச்சி முழுவதும் இளையராஜா தமிழிலேயே பேசினார். கார்த்திக் ராஜா, மனோ மற்றும் இசைக்குழுவையும் கூடவே அழைத்து வந்திருந்தது சிறப்பு. கேள்வி கேட்ட இளைஞரை பயமுறுத்தாமல், அதே சமயம் ஒரு தகப்பன் ஸ்தானத்திற்கான தோரணையையும் விட்டுக் கொடுக்காமல் ராஜா பேசினார். சிறுவயதில் வண்டியிலிருந்து மூங்கிலை உருவி, கிருஷ்ணர் படத்திலுள்ளதைப் பார்த்து துளைபோட்டு புல்லாங்குழல் செய்து, அது முதல் தடவையே சுருதி சுத்தமாக அமைந்து விட்டதையும், மிகக் குறுகிய காலப் பயிற்சியுடன் மேற்கத்திய கிடார் இசைத் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றதையும் அவர் அந்த இடத்தில் கூறியது பரவசமாக இருந்தது. திரை இசையமைப்பில் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் கடைப்பிடித்து வந்த கறாரான தினசரி டைம் பேபிளை விவரித்த போதும், குழந்தைகளுக்கென்று எதையும் நேரம் கொடுத்து சொல்லிக் கொடுத்ததில்லை, குடும்பத்தினர் என்னை சகித்துக் கொண்டார்கள் என்று நேர்மையுடன் கூறியபோதும் அங்கிருந்தவர்கள் பலருக்கும் பிரமிப்பு ஏற்பட்டிருக்கும்.

ரமண மகரிஷி மீது தான் இயற்றிய ‘அற்புதம் அற்புதம்’ பாடலின் பல்லவியை அங்கு வந்த இசை ஆர்வலர்களைக் கொண்டு பாடவைத்ததும், சரணத்தை தன் குரலில் முழுவதுமாகப் பாடியதும் அற்புதம். பாடி முடித்த பிறகு ராஜா பேசியது தான் நிகழ்ச்சியின் ஹைலைட். ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார் (யூட்யூபுக்கு என்ன ஒரு அட்டகாசமான விளம்பரம்!). இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார். உலகெங்கும் பல ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் பகவான் ரமண மகரிஷியைப் போல வேறொருவர் கிடையாது என்று உறுதியான குரலில் அவர் கூறியதைக் கேட்டு மெய் சிலிர்த்தது. இந்தப் பாடலை எழுதியற்குப் பின் வேறு எதையும் எழுதவே எனக்குத் தோன்றவில்லை என்றார். அத்வைத அனுபூதியை ஒரு கணமேனும் தன் வாழ்க்கையில் உணர்ந்த ஒருவரால் தான் இப்படிச் சொல்ல இயலும். இசைஞானியின் பாதம் பணிகிறேன்.

அற்புதம் அற்புதம் அற்புதமே – அந்தப்
பரம்பொருள் மண்ணிலே மனிதனாய் வந்தது…

மரணத்தை வரவழைத்தணைத்தானை
மானிடன் எனத்தகுமோ
அளப்பரும் சுயமாய் நின்றானை
வானவன் எனத்தகுமோ
ஞானத்தின் முதல்வன் அவன் போல
ஞானியர் உலகில் உண்டோ
தவத்தினில் தனித்த தன்மையன் போல்
தவத்தோர் எவரும் உண்டோ – இது
அதிசயம் அல்லாது வேறென்னவோ…

நிகழ்ச்சியின் முடிவில், “இதயம் கோயில் தான் – ஆனால் அதுல உதயமாகறது ஒரு பாடல் இல்ல…” என்றார். ‘எத்தனை எத்தனையோ’ என்பதை வாயால் கூறாமால் கையை உயர்த்திக் காண்பித்தார் நமது சமகாலத்தின் சங்கீத ரிஷி.

வீடியோ பதிவு இங்கே.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

24 Replies to “இளையராஜா @ கூகிள்”

  1. கிறிஸ்தவர்கள் குரைக்கவில்லையே இன்னும் ஏன் ? பைபிளில் தெளிவாக உள்ளது.எலியா என்ற ஞானி சுழற்காற்றில் பரலோகம் சென்று விட்டாா்.அவர் மீண்டும் வருவாா் .அதற்கு பின் யுதர்களை ரட்சிக்க கிறிஸ்து பிறப்பாா் என்பது நம்பிக்கை.தீா்க்க தரிசனம். இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவனை எலியா என்றாா்.எலியா வானத்திற்கு போகும் போது என்ன உடலில் இருந்தாரோ அந்த உடலில் மீண்டும் வர வேண்டும். யோவான் தாயின் வயிற்றில் வளா்ந்து பிறந்தவன்.அவனை எலியா என்று ஏற்றுக் கொள்ள இயலாது என்று குருமார் சபை மறுத்து விட்டது. ஆகவே இயேசு மீது -வேதப்புரட்டன் ( தன்னை பொய்யாக கிறிஸ்து என்று அறிவித்தது ) என்ற குற்றச்சாட்டை -FIR- சமத்தி சிலுவையில் அடித்தார்கள். மறுநாள் யுதர்களுக்கு சப்பாத் என்ற பண்டிகை.இரவு சந்திர உதயத்திற்கு பின் சிலுவையில் பிணங்களோ உடலோ கிடப்பது ஆசார விதிகளுக்கு எதிரானது.எனவே இரவு காவலா்கள் வந்து இயேசு உடன் சிலுவையில் அடிக்கப்பட்ட இரு திருடர்களை இறக்கி கால்களை முறித்து அடித்துக் கொன்று குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.இயேசுவை வெள்ளைபவளம் மற்றும் குந்திரிகம் தடவிய துணியில் பொதிந்து ஒரு பாறை குகையில் வைத்து விட்டார்கள். இயேசு அவரது சீடா்களால் காப்பாற்றப்பட்டு பின் ஒளிந்து வாழ்ந்தாா்.
    01.இயேசு இறந்திருந்தால் காவலா்கள் ஏன் குழி தோண்டி புதைக்கவில்லை.
    02.அடக்கம் செய்ய தாயிடம் அல்லது சீடா்களிடம் உடலைக் கொடுத்து அடக்கம் செய்யவில்லை.ஏன் ?
    03.வெள்ளைப்பவளம் குந்திரிகம் தடவிய துணியில் ஏன் போா்த்த வேண்டும் ?
    04. குகையில் ஏன் வைக்க வேண்டும் ? இறந்தவர்களை குகையில் வைக்கும் பழக்கம் யுதா்களுக்கு கிடையாது.
    05. சிலுவையில் அடிபட்ட இடத்திற்கு வந்த தனது தாய் கூட அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு மாறுவேடத்தில் இயேசு இருந்தது ஏன் ? தாயிடம் கூட தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையே ஏன்.
    06.குகையில் வைத்த பிறகு ஒவவொரு சுவிவேஷமும் ஒவ்வொரு விதமாக சம்பவங்களைச் சொல்வது ஏன் ?
    07.புறசாதியாா் வீடுகளுக்குச் செல்லாமலும் சாமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன இஸ்ரவேலா் சந்ததியினா் வீடுகளுக்கு மட்டுமே செல்லுங்கள் என்று தனது சீடா்களுக்கு கட்டளை யிட்டது ஏன் ?
    08.சிலுவையில் அடிபட்டபோது ” என்தேவனே என்தேவனே என்னை ஏன் கைவிட்டீர்” என்று அலறியது ஏன் ? கடவுள் தன்னை சிலுவையில் அடிபடுவதில் இருந்து காப்பாற்றுவாா் என்று இயேசு நம்பினாா்.ஆனால் சிலுவையில் அடித்தவுடன் அவருக்கு சற்று வருத்தம்.வேதனை.எதிா்பாராதது.
    09.கவர்னா் பிலாத்தின் மனைவி இயேசுவிற்கு உதவினாா் என்ற கதை பிற புத்தகங்களில் காணப்படுகின்றது.
    10இஸ்ரவேலில் ஊழியம் செய்யவதற்கு முன்பும் சிலுவையில் அடிபட்டு காப்பாற்றப்பட்ட பின்னரும் இந்தியாவிற்கு வந்தாா் என்று சரித்திரம் சொல்லும் புத்தகங்கள் நிறைய உள்ளது.

  2. ஆகவே இயேசு இறந்தாா் உயிா்தெழுந்தாா் இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கும் உலக மக்களின் பாவத்திற்காக சிலுவையில் மரித்து பாவங்களை வென்றதால் உயிா்தெழுந்தாா் என்ற கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை கொள்கை மிக மட்டமான மூடநம்பிக்கை.இயேசுவின் வரலாறோடு பொருந்தாதது. பொது அறிவிற்கும் பொருந்தாதது. விஞ்ஞானம் வளா்ந்த மேற்கு நாடுகளில் கிறிஸ்தவம் அழிந்ததற்கு இதுபோன்ற மூடநம்பிக்கைகளே காரணம். மேலும் தன்னை திருத்திக்கொள்ள முயலாதது கிறிஸ்தவ சபை dogmatic.

  3. Forget about second coming, even the first coming (resurrection) appears to be a lie. It is sad that when Europeans and Americans are coming out of this silly religion misguided Indians are embracing it in large numbers. Ilayaraja’s message must be taken across tamilnadu , particularly the southern parts which are rapidly falling prey to evangelism. There are protests outside layaraja’s chennai house by Christian groups. As usual the advocates of freedom of expression have gone into hiding because the comments happen to be against Christianity and not against any Hindu god/ goddess.

  4. What Ilayaraja has said , whether it reflects truly on Jesus or not, clearly shows his frankness. He is fearless, not cared of any one and honest person. Many of us admire him for all his qualities. Though in movie industry, many a time, he behaves as if he is not part of the industry and does not have qualities which are usually attributed to people in movie industry.
    He lives like what he says. He does not have double standards.
    A great salute to him..
    Long Live Mr Ilayaraja

  5. Haresh,

    These comments apart, Ilayaraja is not as you make out to be. A highly arrogant person, he is always dismissive of the current music scenario. This arrogance is one of the reasons why even top film production houses/directors moved away from him even when he was at his peak.

    Just being religious & mouthing religious teachings is not praiseworthy. One has to strive to live by those ideals.

  6. கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கிடைக்கும் என்றாா் இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்றாா்
    ……
    தினசரின் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே

    ”தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியை சுமந்தாரே”

    சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
    இயேசுவை சிலுவையில் அடித்தாரே
    ——————————————–
    கிறிஸ்தவ சர்ச் களில் ஒலிபரப்பப்படும் ஒரு பிரபல்யமான பாடல்.

  7. 27-03-2018 இன்றைய தினமணி இளைஞா் மணியை பத்திரிகையைப் பாருங்கள்.சமய சொற்பொழிவாளா் திருவாளா் சுகி.சிவம் அவர்களது கட்டுரை நீ நான் நிஜம் என்ற கட்டுரைதொடரில் உதவி தம்பி உதவு என்ற கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் இடம் பெற்றுள்ளது கத்தோலிக்க பெண் துறவி தெரசாவின் படம். கிறிஸ்தவர்களுக்கு இன்னும் நாம் மனோரீதியில் அடிமையாக இருக்கின்றோம் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் நிரூபணம்.இந்த படம் வெளியிட்டமைக்கு யாா் காரணம் தினமணி ஆசிரியரா ? திரு.சுகி சிவமா ? இரண்டுபேருமே குற்றவாளிகள். பகட்டுக்காரா்கள்.

  8. உதவும் பண்பிற்கு உதாரணமாக இந்தியாவில்10000 ஆண்டுகால நாகரீக சரித்திரத்தில் ஒரு நபரை முன்உதாரணமாக காட்ட இந்த இரண்டு பேருக்கும் தெரியாதா ? ஏன் இந்துக்களை மத மாற்றம் செய்ய வேண்டும் என்ற வியாபாரத்தில் பலசிறந்த தொண்டுகளைச் செய்தவா் தெரசா.அவரை நாம் முன்உதாரணமாக காட்ட முன்வந்திருப்பது அசிங்கமான அடிமைத்தனம்.விடாமுயற்சிக்கு இன்னும் இந்துக்கள் இந்துகோவிலை 17 முறை தாக்கி கொள்ளையடித்த முஹம்மது கஜினியை முன்உதாரணமாக வேடிக்கையாக காட்டுகின்றனா். எவ்வளவு கேவலமான நிலையில் நாம் உள்ளோம்.இந்துக்கள் 23ம் புலிகேசியாக உள்ளாா்கள். எப்படி முன்னேற்றம் ஏற்படும்.

  9. இளையராஜா சொன்னதை மற்ற பிரபலங்களும் தமிழக மக்கள், குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு, எடுத்துச்சொன்னால் கிருத்துவமதத்துக்கு மாறிய அறியாமையை உணர்ந்து திருந்துவார்கள். இளையராஜாவின் தைரிய்த்தைப் பாராட்ட சொற்களே இல்லை.

  10. Shri Ilyaraja is probably unaware that that there never was an HISTORICAL Jesus Christ. Forget about first or second coming. The very person is a myth.

  11. //இளையராஜா சொன்னதை மற்ற பிரபலங்களும்…//

    இளையராஜா சொன்னது இறப்பு, உயிர்த்தெழுதல் பற்றிமட்டுமே; இயேசுவின் பிறப்பும் இதில் சேர்க்கப்படவேண்டும். கன்னி மரியாளுக்கும் ஓர் உரோமன் இராணுவப்படைக்காரனுக்குமிடையில் உள்ள உறவில் பிறந்து அதை மறைக்க தன் உறவினன் ஒருவனை மணந்து பிள்ளை பெற்ற கதையையும், சினிமா; இசை பிரபலங்கள் தென்மாவட்ட மக்களுக்குச் சொல்லி அவர்களை இயேசுவின் கதையே விவகாரமானது என்று புரிய வைக்கவேண்டும். தான் மாறியது மதமில்லை; ஒரு புரட்டே என்று அவர்கள் புரிய வைப்பது இப்பிரபலங்களால் முடியும்.

  12. //தினசரின் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே!
    ”தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியை சுமந்தாரே!
    சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
    இயேசுவை சிலுவையில் அடித்தாரே//

    இப்பாடலைப்பாடியவர் கிருஷ்ணராஜ். ஓர் இந்து. இவரைப்போல தென்மாவட்டங்களில் உள்ள பிரபல தேவாலயங்கள் விழாக்களுக்குப் போய் – பணத்துக்காக – பாடிவருபவர்கள் சினிமாவிலும் கருநாடக இசைக்கச்சேரிகளிலும் பாடுபவர்கள். அனைவரும் இந்துக்கள்; இவர்கள் பலர் பிராமண இந்துக்கள்.

    இவர்கள் அனைவருக்கும் எதிராக முழக்கமிட்டால் இவர்கள் பணத்துக்காக கிருத்துவ சேவை பண்ணமாட்டார்கள்.

  13. இளையராஜா அவர்கள் இல்லாத ஏசு செத்துப்போய் உயிர்த்தெழுந்ததை சொல்லிய விஷயம் கவனிக்கத் தக்கது தான். ஆனால் அவரது உரையாடலில் எத்தனை எத்தனை விஷயக் களஞ்சியம்.

    அவர் சிறு வயதில் மூங்கிலைத் துளையிட்டு யத்ருச்சையாகச் செய்ய முனைந்த குழல் ச்ருதி சுத்தமாக அமைந்தது. மிகவும் மனதைத் தொட்டது என்றால் மிகையாகாது. ஜன்மாந்த்ர சுக்ருதம். ஜன்ம ஜன்மாகத் தொடரும் சங்கீதம் இவருடையது என்பது புரிகிறது. முன்னால் முருகனைத் தேனாலும் பாலாலும் அபிஷேகம் செய்திருப்பார் போலும்.

    இவருடைய அப்பா எம் ஆர் ராமசாமி என்று தெரிய வந்தது. அண்ணாத்துரை முதலியார் அவர்களது படங்களில் இவர் பாடிய பாடல்கள் ப்ரபலம். தனித்ததான குரல். பின்னாட்களில் குடும்ப கஷ்டமோ வறுமையோ ………….. ஆப்ரஹாமியத்துக்கு காவு போயிருக்கிறார் என்று தெரிய வருகிறது 🙁

    ரமண க்ருதியை அவர் மனோ, சித்ரா மற்றும் தனது குழுவினருக்கு பதட்டமில்லாமல் சொல்லித்தர முனைந்தது. ஒவ்வொரு ஸ்வரஸ்தானத்தையும் இப்படி அப்படி பிசகாமல் பாடகர்களிடமிருந்து வரவழைக்க முனைந்தமை………. அருமையாக இருந்தது. மனதைக் கவர்ந்தது சித்ராவின் ப்ரயாசை. மேஸ்ட்ரோவின் சங்கதிகளுடன் வெகுவாக ஒத்துப்போனவை அவரது.

    அவரது நித்யப்படி கார்யக்ரமம். கிட்டத்தட்ட ஒரு தபஸ்வியைப் போல செயல்பட்டிருக்கிறார் என்றால் மிகையாகாது. அவரது குடுமத்துல பத்னி, புத்ரன், புத்ரின்னு அத்தன பேரும் அவரைப் புரிந்து கொண்டதால் தான் அப்படி ஒரு தபஸை அவரால் செய்ய முடிந்திருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

    பாரதத்தாய் பெற்றெடுத்த ரத்னம் பத்மபூஷண் இளையராஜா. பாரத்ரத்னா. தமிழகத்தின் தனிப்பெரும் சொத்து. வாழிய பல்லாண்டு.

  14. இயேசுவின் பிறப்பு குறித்து ஒவ்வொரு சுவிசேசமும் மாறுபட்ட கதைகளைச் சொல்லும். அதை தொகுத்து தமழ் இந்துவில் ஒரு கட்டுரை வெளியிட வேண்டும். பிற மதங்களை எதிா்க்கும் குணத்தை நாம் வளா்த்துக் கொள்ளவில்லையெனில் நாம் அந்தோ தான். அதற்கு பேச அனைவருக்கும் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டியது தமிழ் இந்து போன்ற வலைதளங்களில் கடமை. கம்பராமாயாணத்தில் இரு வரங்கள் என்ற கட்டுரையை நேற்று ஒரு முஸ்லீம் அன்பருக்கு அச்சடித்துக் கொடுத்தேன்.கம்பராமாயாணம் உண்மையா பொய்யா வரலாறா ராமன் கடவுளா என்று ஆராயந்து கொண்டிருக்காமல் ஒரு கவிதை நாவலாகப்படியுங்கள். குடும்பம் அன்பு பாசம் நடபு நீதி என்ற மனித மனங்களின் தேவையை கம்பா் அளவிற்கு வேறு எந்த கவியும் விளக்கவில்லை.இதற்கு உதாரணமாக மேற்படி கட்டுரையை படிக்கக் கொடுத்தேன்.படித்து விட்டு அற்புதமாக உள்ளது. பண்பாடு.அறஉணா்வு.மனித நேயம். என்று அவர ஆச்சரியத்தில் உளறினாா். மனித இரத்தம் வெள்ளமாகப் பெருகி ஓடும் முஹம்மதுவின் வரலாற்றை படித்து மனம் குழம்பி போயிருக்கும் இவருக்கு அன்பின் பரிமாணத்தில் புதிய பரிமாணங்களை கம்பராமாயாணம் காட்டியது. நூலகத்தில் கம்பராமாயாணம் இருக்கின்றது. படித்து முடிப்பதுதான் முதல் வேலை என்று அவா் சொன்னதில் ஒரு உறுதி இருந்தது.

    எனக்கு ஆனந்தமாக இருந்தது. மேலும் சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம் திருமந்திரம் என்ற புத்தக தொகுதி அரசு நூலகத்தில் உள்ளது.அதையும் படித்துப் பாருங்கள் என்று ஒரு கருத்தை கூடுதலாக தெரிவித்தேன்.ஏற்றுக் கொண்டாா்.

    இந்தியாவின் சிறப்பு குறித்து ஒரு அரேபிய அடிமைக்கு எடுத்துச் சொன்னதில் வெற்றி பெற்றதாக நான் என்னை பாராட்டிக் கொண்டேன்.இந்தியாவின் கலாச்சார ஆன்மீக செல்வங்களை முறையாக இந்துக்களுக்கும் பிறமதத்தவா்களுக்கும் எடுத்து உரைக்க பெரும் இயக்கங்கள் தேவை.

  15. ஒரு முறை நாகா்கோவில் பேருந்து நிலையத்தில் தடுமாறிக் கொண்டிருந்த ஒரு ஆங்கிலேய இளைஞனிடம் நான் ஆங்கிலத்தில் பேசி அவன் போக வேண்டிய ஊா் டோனாவுா் என்பதை அறிந்து சரியான பேருந்தில் ஏற்றி விட்டேன். மனம் மகிழ்ந்த அவன் என்னிடம் யோவான் சுவிசேசம் என்ற ஆங்கில புத்தகத்தை எனக்கு அளிக்க முன்வந்தாா். நான் புத்தகத்தை பார்த்து விட்டு வாங்க மறுத்து விட்டேன். அவனது செயல் அகப்பாவமாக எனக்கு தெரிந்தது.அவனிடம் Elia should preceed christ ? Agree என்றேன். அவன் விிழித்தான் . Who is Elia ? Tell me என்றேன்.அவன் முழித்தான். அடுத்து நான் Jesus says St.John is Elia, which I do not agree. Jesus is not christ.Christ is yet to come. The entire Jews population had rejected Jesus as not christ.Why should I care about him ?.I do believe christ is yet to come.இதைக் கேட்டவுடன் வேகமாக பேருந்தில் ஏறி உட்காா்ந்து கொண்டான். அவன் முகம் வோ்த்துக் காணப்பட்டது.

  16. //அவரது குடுமத்துல பத்னி, புத்ரன், புத்ரின்னு அத்தன பேரும் அவரைப் புரிந்து கொண்டதால் தான் அப்படி ஒரு தபஸை அவரால் செய்ய முடிந்திருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.//

    அவரின் மனைவி இறந்து பல்லாண்டுகளாகிவிட்டன. அவர் குழந்தைகள் அவரின் ஆன்மீகத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஒருவன் இசுலாமியராகிவிட்டான். முதலில் மறுத்த தந்தை பின்னர் பேரன் பிறந்ததும் ஏற்றுக்கொண்டார். மற்ற குழந்தைகள் ஆன்மிகம் பற்றிப்பேசுவது செயல்படுவதும் இல்லை. இன்றைய உலகில் பெற்றோரின் ஆன்மீகம் பிள்ளைக்குத் தொற்றும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஆன்மிகப்பெற்றோருக்கு நாத்திக பிள்ளை இருப்பது கண்கூடு.

  17. புரிந்து கொண்டது என்பது அவருடைய நிலையை என்று இருந்திருக்க வேண்டும். அவருடைய நிலையைப் புரிந்து கொண்டு அதில் அவருக்கு தடைக்கல்லாக இருந்ததில்லை என்று இருக்க வேண்டும். அப்போது தான் வாசகத்தின் பொருள் சரியாக இருந்திருக்கும். நன்றி பீ எசு. அவருடைய ஆன்மீகத்தை அவருடைய குடும்பம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது சரி தான். இந்த வகையில் ஒரு விதத்தில் அது அவருக்கு ஒரு குறைபாடு. ஆனால் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபடுபவர்கள் இப்படிப்பட்ட குறைபாட்டையும் ஈச்வர சங்கல்பமாகக் கடந்தே செல்ல முனைவர்.

  18. திரு.இளையராஜா அவர்களின் ஆளுமை அற்புதமானது.முன்உதாரணமானது.வாழ்க நீடுழி என்பது நமது பிராத்த்தனையாக இருக்க வேண்டும்.

  19. கண்ணதாசனின் ஆன்மிகமும்தான் இதே வகைதான். எனவேதான் அவரின் மகள் கிருத்துவராக மட்டுமன்றி, கிருத்துவசேவையும் (எவாஞ்ஜலிசம்) ஒரு கிருத்த்வரை மணந்து கொண்டு மேடையில் மத போதனை செய்கிறார்; விஷாலி கண்ணதாசன் இப்போது விஷாலி மனோகரன். எத்தனை எத்தனை நூல்கள்; பல்லாயிரக்கணக்கில் அர்த்தமுள்ள இந்துமதம் விற்பனையாகிறது. எத்தனை எத்தனை கண்ணன் பாடல்கள். ஆனால் தான் பெற்ற பிள்ளைக்கே அவை போய்ச் சேரவில்லை. ஆக, எங்கே ஓரிடத்தில் இப்படிப்பட்ட ஆன்மிகத்தில் ஓட்டை இருக்கிறது. அதை நாம் கண்டுபிடிப்பதற்கு பதிலாக, நாம் அப்படிப்பட்ட ஆன்மிகத்தை விலக்கிவிட்டு எளிமையான படோடபமில்லா ஆன்மிகத்தை அடைந்து விடுவதே சரி.

  20. \\ கண்ணதாசனின் ஆன்மிகமும்தான் இதே வகைதான். எனவேதான் அவரின் மகள் கிருத்துவராக மட்டுமன்றி, \\

    இல்லை. குறை கண்ணதாசனின் ஆன்மீகத்தில் இல்லை. நேரான விஷயத்தை கோணலாகப் பார்க்காதீர்கள். கண்ணதாசனின் மகவுகள் வழிதவறியதற்குக் காரணம் அவரது ஆன்மீகம் இல்லை. அது அவரது சந்ததிக்கு முழுமையாக அவரால் போதிக்கப்படாமை.

    ம்…………….இப்படிப்பட்ட சந்ததி கெட்டுப்போன நிகழ்வுகள் பழுத்த வைதிக குடும்பங்களிலும் இருந்துள்ளன. அதற்குக் காரணம் நேர்வழியில் சென்ற முந்தைய தலைமுறை அல்ல.

    வழிதவறிய அடுத்த தலைமுறையை பிடித்து இழுத்து நேர்வழிக்குக் கொணர முந்தைய தலைமுறை முழுமையாக ப்ரயாசிக்கவில்லையா என்பது மட்டிலும் தான் கேழ்விக்கு உள்ளாக வேண்டிய விஷய்ம்.

  21. ‘அர்த்தமுள்ள இந்துமதம்” நூலைப் படித்தே நான் இந்து மதத்தைப் பற்றி அனைத்தையும் தெரிந்தேன். என்னை பற்றுதலுள்ள இந்துமததவனாக்கியது” என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களாலேயே அந்நூல் பெரும் விளம்பரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டு நூல் விற்ப்னை விழாவில் அதிகம் விற்கும் நூலாக திகழ்கிறது.

    இதைப்படித்தாலே போதுமென்ற நிலையிருக்க புதிதாகப் போதிக்கத் தேவையேயில்லை. ஆன்மிகம் குறைபடுவது எப்போது என்றால் அதனால் விளம்பரமும் பணமும் வரும்போது.

    நிறையுள்ள ஆன்மிகம் அடக்கமானது. குன்றா விளக்கு. அருகிலிருப்போரை அப்படியே கவரும். எனவேதான் பெரியஞானிகளிடம் சென்று வருவோர் அன்றிலிருந்தே தான் மாறினேன் என்றெல்லாம் சொல்வதுண்டு. பாரதியார், குள்ளச்சாமி என்ற ஞானியை இகழ்ந்தவர். குள்ளச்சாமி சலவைக்கார சாதி. மேலும் குட்ட ரோகி. இதறகாக இகழ்ந்தாரென்றில்லை; வேறு காரணங்கள் இருக்கலாம். குவளைக்கண்ணன் ”பெரிய ஞானிகளை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ஒரு தடவை போய்ப் பார்க்கலாம்” என்று கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார். புதுச்சேரிக்கு வெளியிலே ஒரு காட்டுப்பகுதியிலிருந்தது குள்ளச்சாமியின் குடிசை அல்லது ஆசிரமம்.

    போய் வந்தார். பின்னர் எழதிய அவரின் ”குள்ளச்சாமியின் புகழ்” என்ற பாடல் பாரதியின் மனமாற்றத்தை தெரிவிக்கிறது. குள்ளச்சாமியை ஞானகுருவாக ஏற்றார்.

    பாரதியாரின் ”குள்ளச்சாமி புகழ்” என்ற பாடல் இதோ:

    ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்;
    நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
    மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
    முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோம்;
    தேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
    சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்;
    வானகத்தை இவ்வுலகி லிருந்து தீண்டும்
    வகையுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி!

    எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
    எம்பெருமான் சிதம்பரதே சிகன்தான் எண்ணாய்!
    முப்பாழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
    முக்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
    தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
    தவம்நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்.
    குப்பாய ஞானத்தால் மரண மென்ற
    குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்;

    தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச் சாமி
    தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
    பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
    பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
    நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
    ஞானகங்கை தலைமுடிமீ தேந்தி நின்றான்;
    ஆசையெனும் கொடிக்கொருகாழ் மரமே போன்றான்;
    ஆதியவன் சுடர்ப்பாதம் புகழ்கின் றேனே.

    வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
    வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை.
    ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
    ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
    ஆயிர நூல் எழுதிடினும் முடிவு றாதாம்
    ஐயனவன் பெருமையைநான் சுருக்கிக் சொல்வேன்;
    காயகற்பஞ் செய்துவிட்டான்; அவன்வாழ் நாளைக்
    கணகிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை.

    ———-பாடலில் இறுதியில் சொல்லப்பட்டவை எவரிடம் கிடைக்கிறதோ அவரே ஆன்மிகத்தில் உயர்ந்தோர். பரம ஞானிகள். சிறப்பாக போதனை (கோச்சிங்) தேவையேயில்லை. இருப்பது தானே தெரியுமாதலால். பயனும் தானே நிகழும்.

    ஆக, ஞானிகளின் ஆன்மிகம் வேறு; சினிமாக்காரர்களில் ஆன்மிகம் வேறு. முன்னது ஈர்க்கும்; பின்னது தயங்க வைக்கும். அல்லது விலக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *