இன்றைக்கு கட்டமைக்கப்பட்டுள்ள சாதிய எதிர்ப்புவாதமானது தன்னை பிராம்மண துவேஷக் கோட்பாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. பிராம்மணர்கள் என்பது ஒரு முகாந்தரம்தான். உண்மையான இலக்கு இந்து மதம்… எனவேதான் இந்த புத்தகம் முக்கியமானது. பல பிராம்மணர்கள் கடுமையாக தீண்டாமையை எதிர்த்தார்கள். தீண்டாமையையும் கேரளத்தில் அதையும் தாண்டி நிலவிய அணுகாமைக் கொடுமையையும் அவர்கள் எதிர்த்தார்கள். அதே ஹிந்து சமயத்தில் உள்ள கோட்பாடுகளை, கருத்துக்களைக் கொண்டு எதிர்த்தார்கள்…
View More வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்Author: அரவிந்தன் நீலகண்டன்
அழ. வள்ளியப்பாவின் கண்ணன் பாட்டுக்கள்
எனக்கு மிகவும் பிடித்த முதல் கவிஞர் அழ.வள்ளியப்பா தான். அவர் பாடல்கள் தொகுப்புகளை படித்தால் ஒன்று தெரியும். அவருக்கு கண்ணனிடம் அலாதி அன்பு. கண்ணனை பரம்பொருளாக, தோழனாக, கீதை அளித்த நல்லாசிரியனாக குழந்தை பருவத்தில் நமக்குள் கோவில் கொள்ள செய்தவர்களில் அழ.வள்ளியப்பா முக்கியமானவர். முதன்மையானவர்… அவரது சில அற்புதமான கண்ணன் பாட்டுக்கள் அவை புத்தகத்தில் வெளிவந்த அதே வடிவில் கீழே..
View More அழ. வள்ளியப்பாவின் கண்ணன் பாட்டுக்கள்இந்துத்துவம் என்னும் ஆன்ம சாதனை
‘எல்லாம் காலம் காலமா இருக்குப்பா. என்ன மதமாற்றம் பண்ணி என்ன செய்யப் போறாங்க.. இந்த இந்துத்துவ பூச்சாண்டி எல்லாம் தேவை இல்லை’ போன்ற மேதாவி வாதங்கள்.. ‘ஈசனும் நானே, சிவலிங்கமும் வெள்ளமும் நானே, எனவே எதிலிருந்து எதை காப்பது’ என்றெல்லாம் வெத்து ஞானமரபுத்தனம் பேசி அன்னை விலகவில்லை. மாறாக தன்னைவிட மேலாக சிவலிங்கத்தை கருதி வெள்ளத்திலிருந்து அதைக் காப்பாற்ற அதை அணைத்துக் கொள்கிறாள். எனில், இந்து வெறுப்பு வெள்ளம், மதமாற்ற வெள்ளம், திராவிட அரசு இயந்திர வெள்ளம் ஆகியவற்றிலிருந்து நம் சமுதாயத்தையும், ஆலயங்களையும் பாதுகாக்க நாம் எப்படிப்பட்ட தியாகத்துக்கு நம்மை தயார் செய்ய வேண்டும்…
View More இந்துத்துவம் என்னும் ஆன்ம சாதனைசாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்
வீர சாவர்க்கர் மிகக் கொடுமையான வருடங்களுக்கு மத்தியில் எழுதிய மனுவில், தமக்கு விடுதலையே கிடைக்காது போகலாம் என்கிற சூழலில், என்னைத்தவிர பிறரை விடுவித்துவிடு என கேட்கிறாரே இந்த மனத்திண்மை சவுக்கு சங்கருக்கு உண்டா? அல்லது வீர சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார் என வாய் கூசாமல் பேசும் புல்லர் கும்பலில் எவனுக்கும் உண்டா?.. தனக்கு அடிப்படை வரலாறே தெரியாமல் இருப்பதை சவுக்கு சங்கர் வெளிக்காட்டுகிறாரா? அல்லது புத்தகம் படித்தால் கூட (அல்லது படித்ததாக பொய் சொன்னால் கூட) அதுவும் அவருக்கு புரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே நேர்மையில்லாமல் பொய் சொல்வதை வந்தவுடனேயே ஆரம்பித்துவிட்டாரா?…
View More சாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுகவுக்கு நன்றி: ஒரு திறந்த மடல்
இப்பண்டிகை வராக மூர்த்திக்கும் பூமி அன்னைக்கும் பிறந்த நரகாசுரனை அதே வராக மூர்த்தி – பூமாதேவி அவதார அம்சங்களான ஸ்ரீ கிருஷ்ண சத்யபாமாவால் வதம் செய்யப்படும் நாள் என தென்னகத்தில் கொண்டாடப்படுகிறது. அதர்மியானவன் சொந்த மைந்தனென்றாலும் அவனை வதம் செய்யும் பாரத பண்பாடு எங்கே. கடைமட்டத் தொண்டன் முதல் கணக்கற்றோர் செய்த தியாகத்தை ஒரு குடும்பம் மட்டுமே உண்டு மகிழும் கழகம் எங்கே! எனவே திமுகவினர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதென்பது சரியானதல்ல. தீபாவளிக்கு கண்ணியமானதல்ல…
View More தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுகவுக்கு நன்றி: ஒரு திறந்த மடல்கிறிஸ்தவம், பாலியல் குற்றங்கள், புதுமைப்பித்தன்
இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான்… புதுமைப்பித்தன் இப்படி ஒரு விசயத்தை கற்பனையாக எழுதியிருப்பாரா? நிச்சயமாக இருக்காது. அப்படிப்பட்ட அற்பத்தனம் அவரிடம் கிடையாது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் காட்டிலும் அதிகமான நிறுவனரீதியான குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் இந்தியாவில் காலனிய காலகட்டம் தொட்டே நடந்து கொண்டிருக்கலாம்…
View More கிறிஸ்தவம், பாலியல் குற்றங்கள், புதுமைப்பித்தன்பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனை
பாம்பன் சுவாமிகள் தனித்தமிழ் ஆதரவாளர் என்பதுபோல ’ஆரியத்துக்கு எதிரான அவரை செரிக்க பார்க்கும் பார்ப்பனீய தந்திரம்’ என்றெல்லாம் ஒரு சிலர் அன்பான தனி செய்திகள் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு: உரையிற் பணித்தவாறு வித்தைப் பதினெட்டிலும் வேதமே சிறப்புடைப் பிரமாணமென்றல் பரதகண்டத்துப் பண்டைநூலறிவுடையார் யாவரும் ஒப்பும் ஒரு முடிபினை ஏன்று கொள்ளும் எம்மாலும்… அன்றைக்கு சைவருள் சிலபலர் வேத நிந்தனை செய்ய முற்பட காரணம் வேதத்துள் பலதெய்வ வழிபாடு உண்டு என்றும் வேத சடங்குகள் குறித்த இழிவான பார்வையும். இதற்கான காரணம் முக்கியமாக அன்றுநிலவிய புரோட்டஸ்டண்ட் மனநிலை. அடிமைநிலையில் தளர்வுற்றிருந்த மக்களின் அறிவு காலனிய பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டதும் ஆச்சரியமல்ல. ஆனால் சுவாமிகள் இவற்றை மறுதலிக்கிறார். கன்மகாண்டத்தை அவர் இழிவாகவும் பார்க்கவில்லை. அதனை செய்வோரை அவர் அறியாமையில் இருப்பதாகவும் சொல்லவில்லை…
View More பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனைமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்
அருணகிரிநாதரைப் போல மற்றொரு மேதமையை வேறெங்கும் காணமுடியுமா என்பது தெரியவில்லை. அவர் வேறெந்த மொழியில் பிறந்திருந்தாலும் கொண்டாடியிருப்பார்கள். தமிழ் மக்களோ அவரை பத்தோடு பதினொன்று என்பது போல பார்க்கிறார்கள்… வாழ்க்கையின் ஒருவித உள்ளீடற்ற தன்மையை சொல்லி இப்படி பிறந்து வாழ்ந்து முதுமையடைந்து நோயுற்று மரணமடையப் போகிற நான் அந்த முடிவுக்கு முன் உன் கிருபையை பெறுவேனா என கேட்கிறார். அடுத்த பகுதியை பாருங்கள்..
View More மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்புனித சிலுவையின் நாசி கொலைக்களம்
ஈஸ்டர் காலங்களில் இந்த ‘கிறிஸ்துவின் பாடுகள்’ (நாகர்கோவில் வட்டாரங்களில் சிலுவைபாடு) மிகவும் முக்கியமான விஷயமாக ஐரோப்பிய மக்களிடையே இன்றும் விளங்குகிறது. இதைச் சித்தரிக்கும் மெல்கிப்சனின் ‘Passion of Christ’ திரைப்படம் வன்முறைக் காட்சிகளும் யூத வெறுப்பியலை நியாயப்படுத்தும் காட்சிகளும் நிரம்பியது. ஜெர்மனியில் நாசிகளின் உதயத்திற்கு பலகாலம் முன்பே அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இந்த சிலுவைபாடு நாடகங்கள்தான்…
View More புனித சிலுவையின் நாசி கொலைக்களம்வாரியாரின் திருப்புகழ் குரு
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருப்புகழ் அறிவு அவரது திருப்புகழமிர்தம் என்கிற பத்திரிகை மூலமும், பல தொகுதிகளாக இருக்கும் திருப்புகள் விரிவுரை நூல்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அத்தனை திராவிடப்பதர்களும் தெய்வத் தமிழுக்கு செய்த தீமையை அனலில் இட்ட பஞ்சாக அழிக்கும் வலிமை சுவாமிகளின் திருப்புகழ் விரிவுரைக்கு உண்டு.இப்படிப்பட்ட மகானின் திருப்புகழ் குரு மதுரை பிரம்மஸ்ரீ திருப்புகழ் சுவாமி ஐயர்…
View More வாரியாரின் திருப்புகழ் குரு