இந்த நான்கு பாடல்களும் யோகம்-போகம் என்னும் இரு வாழ்க்கைக் கண்ணோட்டங்களின் முரணையும் இணைவையும் சமன்வயத்தையும் வெவ்வேறு விதங்களில் முன்வைக்கின்றன… ஞானி எப்போதும் பரமாத்ம பாவனையுடன் இருப்பதால், அவரது புறச்செயல்கள் அதன் இயல்பான போக்கில் அதற்கான லயத்தில் சென்று கொண்டிருக்கும், அது போகமோ, யோகமோ, கலையோ, கல்வியோ எதுவானாலும்…
View More யோகமும் போகமும்Tag: வேதாந்தம்
பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?
புராணங்களும் சாத்திரங்களும் பொய் என்று பாரதியார் கூறுவதாக ஒரு இந்து விரோத பதிவில் மேற்கோள் காட்டியிருந்ததை நண்பர் கவனப்படுத்தினார்.. மகாபாரதம் பொய் என்று பாரதி கருதியிருந்தால், ஏன் பாஞ்சாலி சபதம் எழுத வேண்டும்? பீமனையும் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாக அவர் காண்கிறார்.. நிவ்ருத்தி எனப்படும் யோக, ஆன்மீக உயர்நிலையில் நின்று பாரதி அந்த வரிகளை எழுதுகிறார்..
View More பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்
சங்கரரைப் பற்றிய சிறப்பான அறிமுக நூல்களில் ஒன்று டி.எம்.பி.மகாதேவன் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஆங்கில நூல். ஒரு இனிய ஆச்சரியமாக, எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு மொழிபெயர்ப்பில் இதன் தமிழாக்கம் வெளிவந்து இணையத்திலும் கிடைக்கிறது (சுட்டி கீழே). தத்துவப் பேராசிரியர் எழுதிய மூலநூல், சிறந்த இலக்கியவாதியின் கவித்துவமிக்க உரைநடையில் தமிழில் ஒரு தனி மெருகைப் பெற்று விட்டது. இந்தச் சிறிய நூலில் முதல் பாதியில் சங்கரரின் வாழ்க்கைச் சரிதமும், பின்பாதியில் தத்துவ தரிசனமும் சிறப்பாக விளக்கப் பட்டுள்ளன…
View More சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்அஞ்சலி: சுவாமி ஓங்காரானந்தர்
இங்ஙனம் மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமமாக விளங்கியவர் சுவாமி ஓங்காரானந்தர். சுவாமிகள் அடிப்படையில் ஒர் ஆசிரியர். அவரது மையமான பணி என்பது நமது ஞான நூல்களை ஆழமாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்பிப்பது என்பதாகவே இருந்தது… துறவியும் ஆன்மீகத் தலைவருமாக இருக்கும் ஒருவர் இந்து தர்மத்தை அவமதிக்கும் வெறுப்பு பிரசாரங்களுக்கு எந்தவகையில் உறுதியான எதிர்ப்பையும் எதிர்வினையையும் பதிவுசெய்ய முடியும், செய்ய வேண்டும் என்பதற்கான ஆதர்ச வழிகாட்டுதலாக சுவாமிகளின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன.
View More அஞ்சலி: சுவாமி ஓங்காரானந்தர்தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்
நம்மாழ்வாரின் சாதனைதான் நமது வியப்புணர்ச்சியையெல்லாம் விஞ்சி நிற்பது. காரணம் அவரது காலத்தில் அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் வினோதமானவை. சங்கப் புலவரின் சாதனையான இலட்சியக் காதலைக் கடவுள்பால் கொண்ட காதலுக்கான பக்திமொழியாகவும், பக்திக்கான காதல் இலக்கணமாகவும் கையாண்டு வெற்றி கண்டவர் அவர். எப்படி பக்திக்கு அகத்திணையைக் கையாண்டார்கள்? திருவாய்மொழியில் தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம் என்று வரும். இந்தத் தோழி, தாய், மகள் இவர்கள் யார்?….
View More தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்
கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம்… நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயல்பை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான். இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?..
View More சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்கந்தரலங்காரம்: ஒரு தியானம்
வள்ளிமணாளன் எனக்கு ஒன்று உபதேசித்தான். யார்? தேனென்றும் பாகென்றும் உவமிக்கொணா மொழியுடைய தெய்வவள்ளியின் கோன். ஆனால் அவர் உபதேசித்ததை எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்லிப் புரியவைப்பது? வான் என்று சொல்லலாமா? இல்லை. காற்று என்று சொல்லலாமா? இல்லை. தீ, நீர் மற்றும் மண் என்றெல்லாம் சொல்ல முடியாது. சரி. தான் மற்றும் நான் என்று சொல்லித் தெரிவிக்க முடியுமா? ம்..ம் இல்லை…
View More கந்தரலங்காரம்: ஒரு தியானம்சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5
சூனியமே அதாவது ஒன்றுமிலாத பாழே இறுதி உண்மை என்பது இவர்கள் கொள்கை. இவர்கள் கோட்பாட்டின்படி, ஆன்மாவாகிய ‘நான் யார்” என்றால் ‘நீ ‘ என ஒரு பொருள் இல்லை; ஆன்மா என்பது சூனியமே. நீயும் இல்லை நானும் இல்லை கேட்பவன் என எவரும் இல்லை என்பது இவன் கொள்கை. இக்கொள்கையினை இவன் மெய்ப்பிக்க மேற்கொள்ளும் வாதமும் அவ்வாதத் தினையே மேற்கொண்டு அவனை வெல்லும் பகவத் பாதரின் வாதத் திறமையும் அருமையானவயாகும். இருவருமே தம்கொள்கையை நிறுவ ஆழ்ந்த நித்திரை எனும் சுழுத்தி அவத்தையை அடிப்படையாகக் கொள்கின்றனர்…
View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 4
ஒரு குடம். அதில் ஐந்து தொளைகள் (ஓட்டை) உள்ளன. குடத்தின் நடுவில் ஒரு தீபம் உள்ளது. நள்ளிரவில் தீபத்தினொளி ஐந்து தொளைகளின் வாயிலாக, ஐந்து பிரகாசமான கதிர் வீச்சுக்களாக (light beams) வெளிப்படுகிறது.. குடம் நம் உடல். குடத்திலுள்ள தொளைகள் ஐம்பொறிகள். அதிலிருந்து வெளிப்படும் கதிரொளி ஐம்புலன்கள் அவையாவன: சத்த பரிச ருப ரச கந்தங்கள். இவை வாயிலாகவே உயிரானது உலக போகத்தைத் துய்க்கின்றது; அறிவைப் பெறுகின்றது.
இவ்வுடலை ‘மாயா யந்திர தநு விளக்கு” என்று சிவஞான போதம் கூறுகின்றது…
பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்
சோம்பலும், பயமும், தூக்கமும் தாமச குணத்தினின்று பிறப்பவை. பல மனிதர்களுக்கும் வாழ்க்கையில் பல சமயங்களில் தமோகுணத்தின் ஆளுகைக்குக் கீழ் சென்று மீளமுடியாதபடி அதில் உழலும் நிலை ஏற்படுகிறது. அதை உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கான உறுதியும் அருளும் தெய்வம் தரவேண்டும் என்று இங்கே வேண்டுகிறார்… சத்வ குணத்தால் தூண்டப்பட்டு நிகழும் செயல்கள் அனைத்தும் சாதாரணத் தளத்திலிருந்து உயர்ந்து யக்ஞமாக, வேள்வியாக, தெய்வத்தின் செய்கைகளாக, கர்மயோகமாக ஆகிவிடுகின்றன… மகாமாயையாகிய பராசக்தி. இவ்வுலகனைத்தும் அவள் விளையாட்டன்றி வேறில்லை. அவளே இப்பாடலில் பாரதி போற்றும் கண்ணம்மா…
View More பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்