மூலம்: தருண் விஜய்
மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்வதால் ஏற்படும் தீய விளைவுகளை நீ அம்பலப் படுத்தினாலும் சரி, அதனால் எழும் பிரிவினைவாதம் குறித்து எச்சரிக்கை செய்தாலும் சரி. அதனால் என்ன ஆகப்போகிறது? நாங்கள் அந்த சிறப்பு அந்தஸ்தை தொடரத்தான் போகிறோம்.
கிருத்துவ “அறுவடையாளர்களின்” தீவிரமான மதமாற்ற பிரச்சாரங்களை மகாத்மா காந்தியும், விவேகானந்தரும் எதிர்த்திருக்கிறார்கள். அதனால் என்ன? எங்கள் ஆதரவு அந்த மதமாற்றிகளுக்குத் தான்.
வெள்ளத்தில் பீகார் மூழ்கியபோது, பாதிக்கப்பட்டோருக்கு உதவ முதலில் ஓடிச்சென்றவர்களில் ஆர்எஸ்எஸ் காரர்கள் இருந்தார்கள்; அதனால் என்ன? வழிபாட்டு தலங்களுக்கு தீ வைப்பதிலேயே நேரத்தை கழிப்பதால், வெள்ளத்தில் மூழ்கிய சக ஏழை இந்திய குடிமகன்களுக்கு உதவ வெறி பிடித்த ஆர்எஸ்எஸ் காட்டுமிராண்டிகளுக்கு நேரமே இல்லை என்று தொடர்ந்து களங்கப்படுத்துவோம்.
கிருத்துவ கொலைகாரர்களின் ஏகே47 துப்பாக்கிகளுக்கு ஒரு ஹிந்து துறவியும், அவரோடு ஒரு பெண் துறவி உள்ளிட்ட மூன்றுபேரும் கொல்லப்பட்டார்கள். அதனால் என்ன? அவர்கள் அனைவரையும் வெளியே சொல்லப்பட அருகதையற்றவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டு, “ஹிந்துக்கள் சர்ச்சுக்களை தாக்குகிறார்கள்” என்று திரும்ப திரும்ப சொல்லுவோம்.
வத்திகன் சுரண்டல்கள் என்று கூகிளில் தேடினால், 0.37 செகண்டுகளுக்கும் குறைவான நேரத்தில் 1.5 மில்லியன் பக்கங்கள் கிடைக்கின்றன. அவற்றுள் போப் எவ்வாறு தனது அரண்மனையை காம கேளிக்கை விடுதியாக மாற்றினார், அவருடைய வங்கி மில்லியன் கணக்கில் பணத்தை எவ்வாறு ஏமாற்றி ஏப்பம் விட்டது, சோவியத் யூனியன் உடைய போப்பரசின் அதிகாரம் எங்கனம் செயல்பட்டது போன்ற தகவல்கள் இடம்பெறும்போது, ஓரின வன்புணர்ச்சிகளுக்கு கேட்கப்பட்ட மன்னிப்புகளைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அதனால் என்ன? நாங்கள் ஹிந்து துறவிகளுக்கு எதிராக கீழ்த்தரமான வார்தைகளை உபயோகிக்கும் வத்திகனின் எடுபிடிகளை கொண்டாடுவதோடு, வெளிநாட்டு செனட்டுகளில் சொந்த நாட்டிற்கு எதிராக சாட்சியமும் சொல்லுவோம்.
காவி தலை பட்டைகளும், திரிசூலங்களும் காட்டுமிராண்டித்தனமான வெறுப்பின் அடையாளங்களாக மாற்றப்படும்போது தான் ஒத்துக்கொள்ளப் படுகின்றன. பார்வைக்கும் நன்றாக இருக்கும்படி காட்டப்படுகின்றன; கண்ணை கவரக்கூடிய புகைப்படங்களாகின்றன. ஆனால், நட்ட நடு இரவில் ஐந்து வயது சிறுமிகளை கொன்ற (வாந்தமா மற்றும் டோடா) ஜிகாதிகளின் பச்சை கொடியோ, அல்லது கிருஷ்ணரின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு 84 வயது முதிய ஹிந்து துறவியையும், காவியாடை உடுத்திய ஒரு பெண்மணியையும், கொலை செய்த துப்பாக்கி தூக்கும் கிருத்துவர்களோ, வெறுப்பின் அடையாள சின்னங்களாக காட்டப்படுவதை, தற்செயலாகவாவது, நீங்கள் இதுவரை பார்த்ததுண்டா?
தங்களது மதத்தில் நீடித்திருக்க விரும்பிய ஒரே காரணத்திற்காக கொல்லப் படுபவர்களின் மரண வேதனைகளையோ, வலிகளையோ நீங்கள் எப்போதாவது படித்ததோ கேள்விப்பட்டதோ உண்டா?
நியாயத்தின் குரலை தேடி
“அது ஹிந்து அல்லது இஸ்லாமிய அல்லது கிருத்துவம் இவற்றில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. எந்த ஒரு வழிபாட்டு தலத்தின்மீது நடத்தப்படும் வன்முறையும் மனிதத்தன்மை இல்லாதது” என்றும், “அத்தகைய வன்முறை அமெரிக்க-இந்தியக் கோவில்கள் மீதும், ஈரானில் நெருப்பை வழிபட்டவர்களுடைய கோவில்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட வன்முறை போன்றே கேடானது” என்றும் நான் கூறிவிட்டு, “உங்களது கடவுள் கொடூரமானது; உங்களை எங்களது ஆண்டவனின் திருச்சபைக்கு அழைத்துச்செல்ல நாங்கள் பரலோகத்திலிருந்து பணிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் பக்கம் வந்துவிடு, வராவிட்டால்…..” என்று மிரட்டும், எங்களது ராமனையும் கிருஷ்ணனையும் பறிக்க முயலும், துரைமார்களையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் ஏதாவது ஒரு மெல்லிய குரலாவது கண்டிக்காதா என்று சுற்று முற்றும் தேடுகிறேன். ஆனால், நான் காண்பது என்ன?
அடுத்தவர்களின் கடவுளை பிடுங்கிக்கொள்ளுவது ஒரு நல்ல வளப்பமான வியாபாரமாக இருக்கிறது. ஊடகங்களில் புனித ஆத்மாக்களாக காட்டப்படும் அந்த வியாபாரிகளின் நியூஸிலாந்திலும், ஆஸ்த்ரேலியாவிலும், அல்லது டச்சு பகுதிகளிலும் பக்தர்கள் யாரும் வராததால் தேவாலய கட்டிடங்கள் மாற்றப்பட்டு லௌகீகமான காரியங்களுக்காக பயன்படுகின்றன. அதனால், இந்த புனித ஆத்மாக்கள் இந்தியாவிற்கு கல்வியை பரப்ப, மருத்துவ சேவைகளை செய்ய வருகின்றனர். அவர்கள் மதமாற்றம் செய்தால் என்ன தப்பு? குறைந்த பட்சம் அவர்கள் நல்ல சமூக சேவைகள் செய்கிறார்களே, என்ற சிந்தனை போக்கைத்தான் நான் காணுகிறேன்.
எனவே, ஒரு ஹிந்து துறவி கொல்லப்பட்டால், அத்தகைய மரணத்தை பெற தகுந்த மிகக்கொடிய ஏதாவது ஒரு தவறை அவர் செய்திருக்கவேண்டும் (ஜனாதிபதிக்கு அனுப்பிய மனுவில் ஒரு கிருத்துவ தலைவர் இவ்வாறே எழுதியிருந்தார்). இந்த கொலையை எதிர்த்து சர்ச்சுகள் எரிக்கப்பட்டால், அது அந்த செத்துப்போன துறவியின் அடியாட்களின் கைவேலையாகவே இருக்கவேண்டும் – அதை கண்டியுங்கள், மேலும் ஹிந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரியுங்கள் என்றல்லவா அவர்கள் மனு போடுகிறார்கள்?
ஊடகங்களும், அரசாங்கமும், பார்லிமெண்டும், ஏன் “கீழான, முரட்டுத்தனமான, கல்வி அறிவற்ற” காவியாளர்களின் தியாகங்களை மிதித்து அதிகார படிகளின் மீதேறியவர்களும்கூட பாதுகாப்பான தூரத்தில் விலகி நிற்கிறார்கள். கடவுளுக்கான ஷோ ரூம்களை ஆரம்பிக்காமல், ஹரித்வாரத்திற்கும், ரிஷிகேசத்திற்கும் போய் முக்தியை காட்டுகிறேன் என்று சொல்லாமல், ஒரிஸ்ஸாவின் காந்த் காடுகளின் வனவாசிகளுக்கு கல்வி கற்பிக்க வந்ததற்காக கொலை செய்யப்பட்ட அந்த சாமியார், ஒரிஸ்ஸா அரசாங்கமும் அதிகாரிகளும் சரியாக முடிவு கட்டியதைப்போல, ஒரு கவனிப்பாரற்ற பைத்தியமாகத்தான் இருக்கவேண்டும். அவர் மட்டும் ஒரு மிகப் பெரிய ஆத்மாவாக இருந்திருந்தால், டெல்லியிலிருக்கும் ஒரு சில பெருந்தலைகளாவது அவரது இறுதிச் சடங்கிற்கு வந்திருப்பார்கள் இல்லையா?
உலுக்கப்பெற்ற வத்திகன் ஒரிஸ்ஸாவைப் பற்றி பேசியது; டெல்லியோ அந்த துறவியின் மரணம் பற்றி அமைதி காத்தது. அப்படியே இருந்துவிட்டு போகட்டும். நல்லா இருங்கடே.
அழிக்கப்பட்ட புண்ணிய ஒளி
லக்ஷ்மணானந்தா என்னும் அந்த ஆத்மா குறித்து விவேகானந்தர் பெருமிதம் அடைந்திருப்பார். விளிம்புநிலை மனிதர்கள் வாழும் பகுதியில் ஆதி சங்கரரின் பணியை லக்ஷ்மணானந்தர் தொடர்ந்தார். டாலர் பண உதவிகளும், பரந்த உலகத்தின் பலகோடி பக்தர்களுமாக வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய ஒரு மதத் தலைவராக வாழாமல், விவசாயத்தில் புதிய நுணுக்கங்களையும், நவீன கல்வியையும் விளிம்புநிலை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறிய மையத்தை ஏற்படுத்தி, அந்நிய சக்திகளின் மாயவலைகளுக்கு எதிராக அவர்களது
நம்பிக்கையை வலிமையாக்கினார் அவர்.
அவருடையது ஒரு தியாகியின் வீர மரணம். ஆனால், அவருடைய கருமாதிக்குக்கூட (மரணம் நிகழ்ந்து 13 நாட்கள் கழிந்து நடக்கும் சடங்கிற்கு) துக்கம் கேட்பவர்கள் போகக்கூடாது என்று, அவருடைய ஆசிரமம் செல்லும் அனைத்து பாதைகளையும் மறித்து அந்த மாநில அரசாங்கம் தடுத்தது.
அமெரிக்கா, ந்யூஸிலாந்து மற்றும் ஆஸ்த்ரேலியாவில் வாழ்ந்த ஆதிகுடிகளையும், அவர்களது கலாச்சாரத்தையும் கிருத்துவ மதமாற்றிகள் கூண்டோடு அழித்த நிகழ்ச்சிகளே, இப்போது இந்தியாவின் ஆதிகுடிகள் மேல் மீண்டும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அந்த நாடுகளின் ஆதிகுடிகள்மேல் சொல்லவொண்ணா வன்முறைகளையும் அடக்கு முறைகளையும் கட்டவிழ்த்ததால், இப்போது அந்த நாடுகளில் கிருத்துவ மயமாக்கலுக்கு முந்தைய கலாச்சாரம் ஏதும் சுத்தமாக இல்லை. கொலம்பஸின் வருகைக்கு பின்னர் நூறு வருடங்களுக்குள் 7 கோடி ஆதிகுடிகள் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டனர். போர்ட்டோ ரிக்கோவிலும், ப்ரேஸிலிலும், ஆஸ்த்ரேலியாவிலும், தங்கத்திற்காகவும், பைபிளின் நற்செய்தியை பரப்புவதற்காகவும் பல மில்லியன் மனிதர்கள் கொலை செய்யப்பட்டனர்.
“வாழு, வாழவிடு” எனும் கொள்கையோடு, அனைத்து பாதைகளும் அந்த ஒரு இறையையே நோக்கியே செல்லுகின்றன எனும் மந்திரத்தை பயிலுவதால், மத ஊழியம் செய்வதோ அல்லது மத மாற்றம் செய்வதோ தேவையில்லை என்று இருக்கும் கீழை நாடுகளின்மேல் இதுவரை இவர்கள் அறியாத, (ஆனால் மற்ற நாட்டினருக்கு நிகழ்ந்த) அந்த கொடூர வன்முறையே இப்போது கட்டவிழ்த்து விடப்படுகிறது.
அழைப்பில்லாத ஆள்பிடிப்பவர்கள்
இந்தியாவின் ஏழைகளும், வாழ்வதற்கு போராடும் சமூகங்களும் தங்களது (மத) நம்பிக்கையை மாற்றிக்கொள்ள, அவசரம் அவசரமாக மேற்கத்திய சக்திகள் பல பில்லியன் டாலர்களை ஒதுக்கிவைப்பது ஏனென்று யாருக்கும் புரியவில்லை. அவர்களை யார் அழைத்தார்கள்?
வேதாகமத்தின் “நற்செய்தியை” பரப்புவதும், பிறசமயத்தவரை ஏசுவின் கொற்ற குடைக்குள் அடைப்பதும் அவர்களது உரிமையென்று கூறுகின்றனர். இவர்கள் சொல்லும் ஏசு யார்?
பிற மதங்களின் ஆண், பெண் வடிவ தெய்வங்களை ஏளனம் செய்யவும், பிசாசுகளென்று பழிக்கவும், கிருத்தவராக மாறாவிட்டால் உங்களுக்கு மீட்பு கிடையாதென்று கூறவும்கூடிய உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது?
ஹிந்து பழங்குடிகள், ஹிந்து பழங்குடிகளாகவே இருந்து, தங்களால் தொன்று தொட்டு வழிபட்டு வரும் கடவுளை ஏன் அடைய முடியாது?
துருக்கிய, போர்ச்சுகீசிய, ஆங்கிலேயரும், அவர்களைப் போன்ற மற்ற ஆபிரகாமிய மதங்களும் வாளாலும், துப்பாக்கியின் கத்தி முனைகளாலும் நிகழ்த்திய தாக்குதல்களில் இருந்து தப்பி, இந்த பூமி கிரகத்தில், ஹிந்துக்களுக்காக எஞ்சி இருக்கும் இடம் நம்முடைய இந்த நிலம் மட்டும்தான். இருந்தும், மகத்தான ஹிந்து நாகரீகம் செழிப்பதை சகிக்க முடியாமல், ஐரோப்பிய அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளை முழுவதும் மதம் மாற்றிய பின்னர், இந்த இரண்டாயிரமாவது
வருடத்தில் எஞ்சியுள்ள நாடுகளையும் கிருத்துவமயாமாக்க மதமாற்றிகளையும், டாலர்களையும் அனுப்புகிறார்கள். இது நியாயமா? இந்த நியாயம் ஏற்றுக் கொள்ளக்கூடியதா?
தங்களது ஹிந்து பண்பாட்டை ஹிந்துக்கள் இங்கே உறுதி செய்ய முடியாவிட்டால், தங்களது சமூகத்தை இங்கே பாதுகாக்க முடியாவிட்டால், அதைச் செய்ய சவுதி அரேபியாவிற்கா போகமுடியும்?
முற்போக்குவாதம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சிந்தனைகள், ஹிந்து மத, புத்த மத மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, நேபாளம் போன்ற நாடுகளில் மட்டும் செயல்பட்டு, நம்மை பயமுறுத்தி, நமது எண்ணிக்கையைக் குறைப்பது ஏன்? எதனால் அவை பாக்கிஸ்தானிலோ, மலேசியாவிலோ, சவுதி அரேபியாவிலோ வேலை செய்வதில்லை?
இந்த நவீன யுகத்தில் ஹிந்துக்களை அழிக்கும் மாபெரும் சக்திகளாக கம்யூனிசமும், கிருத்தவமும் மாறியுள்ளன. ஆனாலும், அமைதிக்கான மெழுகுவர்த்திகளும், சமாதானத்திற்கான தோத்திரங்களும் தங்களுடைய கொல்லைப்புறத்தில்தான் குவிந்து கிடப்பதாக இவை மார்தட்டுகின்றன. என்ன ஒரு முரண்பாடு? வேடிக்கையாக இருக்கிறது.
ஏசுவின் பிறந்தநாளை, எனது ஆதர்ச குருவான விவேகானந்தர் தொடங்கியபடி, உலகெங்கும் உள்ள ராமகிருஷ்ண மடங்கள் தொடர்ந்து கொண்டாடி வருவது போல, ஒரு ஹிந்துவாக, நானும் கொண்டாடி வருகிறேன். நான் விரும்பும் ஏசுவின் பெருமைகளை புகழ்ந்து எழுத முடியும் அதே நேரத்தில், என்னால் எனது ஹிந்து நம்பிக்கைகளை தொடர்ந்து பயிலவும் முடியும்.
நமது பெருமை மிகுந்த புண்ணிய ஸ்தலங்களில் உள்ள ஏறத்தாழ எல்லா ஹிந்துமத ஸ்தாபனங்களும், ஏசுவின் படங்களை மரியாதைக்குரியதாக வைத்திருப்பதும், எல்லா வழிகளும் ஒரே கடவுளையே சென்றடைகின்றன என்று கூறுவதையும் என்னால்
காட்ட முடியும். ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் “சுத்திகரிப்பு” இயக்கத்திற்கு முன்பு, ஹிந்துத்துவத்திற்கு மாறுவது என்பது முற்றிலும் நடக்காத ஒன்றாக இருந்தது. ஹிந்து குடும்பத்தில் பிறப்பதால் மட்டுமே ஹிந்துவாக இருக்க முடியும் என்று இருந்தது. அப்போது கூட, நாம் கிருத்தவ, இசுலாமிய, யூத, பார்சி நம்பிக்கைகளை வரவேற்கவும், அவற்றிற்கு சம உரிமை கொடுக்கவும் செய்துள்ளோம். அவர்களது கடவுள்களை நாம் மதித்து வந்துள்ளோம்.
பதிலுக்கு, அவர்கள் நம்மை என்ன செய்துவிட்டார்கள் பார்த்தீர்களா?
பதில் சீர்வரிசை
நமது எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஒருங்கிணைந்த அவர்கள், ஹிந்துக் கடவுள்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களென்று நம்மை நம்பவைக்கவும், கிருத்துவத்துக்கு மாற்றவும் பிரசுரங்களை பதிப்பிக்கிறார்கள். ஹிந்துமதத்தின் விருந்தோம்பலை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, பிறகு ஹிந்துக்களையே குறை கூறுகின்றனர்.
ஹிந்து கடவுளான ராமனின் படத்தை விடுங்கள்; மத அரசியல் சம்பந்தமற்றவரும், வேத அறிவியல் ஆராய்ச்சியாளரும், நம் அனைவருக்கும் – இந்த நாட்டு கிருத்துவர்களுக்கும்கூட – முன்னோரான, பாஸ்கராச்சாரியாரின் படத்தை வைத்துள்ள கிருத்துவ பள்ளி ஒன்றையாவது காட்ட முடியுமா? எனது சொந்த அப்பனை அனாதையாக நடுத்தெருவில் அலைய விட்டுவிட்டு, புதிய பெற்றோர்களை தத்து எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்று பீற்றுவதை தெய்வீக அனுபவத்தின் விளைவாகக் கருதமுடியாது.
மிகப்பெரிய ஞாபக மறதி நிலையை தற்போது இந்தியா கடந்து கொண்டிருக்கிறது. நம்முடையது எதுவோ அது ஒதுக்கப்பட்டு விட்டது, நாம் நாமாக இருப்பது சந்தேகத்துடனும் வெறுப்புடனும் பார்க்கப்படுகிறது. அதனால்தான், கீர்த்தி மிகுந்த வெற்றிபெற முடியாத ஆன்ம சக்தியுடைய ஹிந்து பாரம்பரியத்திற்கான கழகம் என்ற ஒன்றை நீங்கள் எங்கும் பார்க்கவே முடியாது.
“ஹிந்து சின்னங்களாக” இருப்பதால், சிவாஜி, மற்றும் மஹாராணா பிரதாப்புடைய படத்தை எந்த ஒரு கிருத்துவ பள்ளியிலும் காண முடியாது. ஆனால், ஒரு சராசரி இந்தியனால் சரியான முறையில் உச்சரிக்கக்கூட முடியாத ரோம, கிரேக்க பெயர்களைக்கொண்ட மத போதகர்களின் படங்கள், அவர்கள் இந்த நிலத்தோடு எந்த தொடர்பும் அற்றவர்கள் என்ற போதிலும், கிருத்துவ மதத்தை பரப்பிய காரணம் ஒன்றிற்காகவே, பள்ளிகளில் தவறாமல் இடம்பெறும்.
அடுத்த முறை உங்களது குழந்தையை கான்வெண்டில் கொண்டு விடும்போது நின்று கவனியுங்கள்: அங்கே ஏதேனும் சில அறைகளில், ரோமானியப் பழங்கதைகளின்படி,
ரியா சில்வியா என்ற பெண் பூசாரிக்கும், யுத்தக்கடவுளாகிய “மார்ஸ்”க்கும் பிறந்த, ரோமுலஸ் மற்றும் ரீமஸ் இரட்டையர்களின் படங்கள் மாட்டப்பட்டிருப்பதையும், புராதன ரோமாபுரியின் நிறுவனர்களாக பாடப்புத்தகங்கள் அவர்களை வர்ணிப்பதையும் நீங்கள் காணலாம். இதே அளவுகோலை வைத்துக்கொண்டு நீங்கள் தேடினால், எந்த பாடபுத்தகமாவது லவ-குச
இரட்டையர்கள் பெயரை கூறி கேள்விப்பட்டதுண்டா? கிடையாது. ஏனெனில்,கிருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ளும் வரலாற்று உண்மையாக ரோம இரட்டையர்கள் இருக்கிறார்கள். ஆனால், லவனும் குசனும் ஹிந்துக்கள். அதனால் அவர்களை கிறித்தவ வரலாறு ஏற்றுக்கொள்ளாது.
நல்ல நோக்கங்களுடைய நமது அன்பிற்குரிய பல ஹிந்துக்கள், சிறிதும் வெட்கமில்லாமல், தாங்கள் ஒரு கிருத்துவ பள்ளியில் படித்திருந்தாலும், கிருத்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று பல முறை பீற்றிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மேன்மையாளர்களின் பட்டியலில் எனது பேரையும் நான் சேர்க்கச் சொல்லவா? நான் ஒரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தேன். எனது
ஆசிரியர்களான ஜேக்கப் சார், மற்றும் ஃபாதர் பெஞ்சமின் மீது அன்பு கொண்டுள்ளேன். ஆனால், அவ்வன்பு, “சார், ஒரு ஹிந்துவாக, நான் மதிக்கிற, நீங்கள் சார்ந்துள்ள மதத்தின் பெயரால் சிலர் செய்யும் செயல்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறுவதைத் தடுக்கலாமா?
மதமாற்றிகளின் இது போன்ற அறிவீனங்களைக் கண்டு விவேகானந்தர் அன்று கதறினார் – “ஓ கடவுளே, நீ (கும்பல் புத்தியுள்ள) கிருத்துவனல்ல, (முக்தியின் அடையாளமான) உன் கிருத்துவிடம் திரும்பப்போ”. நூறு வருடங்களுக்கு முன்பு அவர் கூறியதை மீண்டும் சொல்லக்கூடிய தைரியம் உள்ள விவேகானந்தரோ அவரைப் பின்பற்றுபவர்களோ இன்று யாருமில்லை.
மதச்சார்பின்மை என்னும் அழிரப்பர், சில வருடங்களுக்கு முன்பு ஹிந்துக்களாக இருந்தவர்களைக் கூட அவர்களுடைய தந்தைகளையும் தாத்தாக்களையும் வெறுக்க செய்துவிட்டது. இது எந்த அளவு புரையோடியிருக்கிறது என்றால், ஹிந்துக்கள் பெரும்பான்மையான இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு, அதிலும் பக்திப்பழமான ஒரு ஹிந்து ஜனாதிபதிக்கு எழுதிய மனுவில், கொல்லப்பட்ட 84 வயதான துறவியையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பற்றி, அந்த கொலைகாரர்களின் மதத்தைச் சேர்ந்த ஒருவர், அவமதிக்கும் வார்த்தைகளை எழுத ஊக்கம் அளிக்கும் அளவு கெட்டுப்போய் உள்ளது.
ஹிந்து சன்னியாசிகளின் பாதங்களை பணிந்து வணங்கிய மூதாதையர்களின் வழியில் வந்த அவர் அந்த பாரம்பரியத்திற்கு எதிரியாகத் திகழ்வதற்கு சிறிதுகூட வெட்கப்படவில்லை. உன்னிடம் (ஹிந்து பாரம்பரியம்) இருந்தது என்பதையே நீ மறுத்தால்தான், உனது வரலாற்றை முற்றிலும் அழித்தால்தான், உனக்கு உரிமையானவற்றை நீ மறந்தால்தான், நீ வத்திகனைச் சேர்ந்த ஒரு நல்ல கிருத்துவனாக முடியும்.
ஹிந்து பாரம்பரியத்தை ஹிந்துஸ்தானத்திலிருந்து அழிப்பதுதான் மதச்சார்பின்மை என்று அர்த்தம் செய்துகொண்டு நடைபெறும் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை, இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கத்தான் வேண்டுமா?
அன்றே சொன்னார் அண்ணல் காந்தி
இந்த அரசாங்கம் காந்திஜியைப் போற்றி, அவரது மேன்மைக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரது உருவப்படத்தை தனது கரன்ஸி நோட்டுக்களில் அச்சடிக்கிறது. அப்படிப்பட்ட அவர் மதமாற்றத்தைக் குறித்து என்ன சொல்கிறார்? படியுங்கள்:
“இந்தியாவிலும், மற்ற இடங்களிலும் நடக்கும் மதமாற்ற உத்திகளை காணும்போது, இந்த மதமாற்றம் என்ற கருத்தை, என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அமைதியை நோக்கி செல்லும் உலகத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் தடையாக விளங்கும் ஒரு தவறு அது. ஒரு ஹிந்து கிருத்தவத்திற்கு மதம் மாற வேண்டும் என ஒரு கிருத்தவன் எதற்காக ஆசைப்படுகிறான்? ஒரு ஹிந்து நல்லவனாகவும், கடவுள் பக்தியுள்ளவனாகவும் இருப்பதைக் கண்டு அவனுக்கு ஏன் திருப்தி ஏற்படுவதில்லை?” (ஹரிஜன்: ஜனவரி 30, 1937)
வெறுப்பை நேரடியாக உமிழாமல் எந்த ஒரு மதமாற்றமும் நிகழ்வதில்லை. ஒருவன் கொண்டிருந்த நம்பிக்கையும், அவனது மதமும், உபயோகமற்றவை, கெட்டவை, அவனது கடவுள்கள் ரட்சிக்க முடியாதவை என்று கூறாமல் ஒருவனால் மற்றொருவனை மதம் மாற்ற முடியாது. கிருத்துவ மத போதகர்கள், மதமாற்றல் “வேட்டைக்குச்” செல்லும்போது “ஆமாம் ஐயா, எங்களது கடவுளைப்போலவே, ராமனும்,கிருஷ்ணனும் நல்லவர்கள். உயர்ந்தவர்கள்” என்று கூறுகிறார்கள் என்று நம்புகிறீர்களா? அப்படிச் சொன்னால் அவர்கள் மதமாற்றுவதற்கான வாய்ப்பு எங்கே இருக்கும்?
அன்பும் அரவணைப்பும் தான் அவர்களுடைய மத மாற்றத்தின் வாகனங்கள் என்றால்,
எதற்காக பில்லியன்கணக்கில் டாலர் நிதி உதவிகள் மேற்கத்திய நாடுகளிலிருந்து இங்கு கொட்டப்படுகின்றன?
ஹிந்து கடவுள்களையும், ஹிந்து கோவில்களையும் கீழ்த்தரமாக அவமானப்படுத்தும், இகழும் பிரசுரங்களைக் கண்டிருக்கிறீர்களா? அவை குறித்து இங்கு பேசுவது கூட மிகுந்த அருவருப்பை தருகிறது. கத்தோலிக்க இணைய தளங்களுக்குச் சும்மா போய் அவர்கள் வெளிநாட்டுக்கு நிதி திரட்ட அனுப்பும் பிரசுரங்களைக் கேட்டு வாங்கிப்படித்தால், அந்த பிரசுரங்களே உங்கள் கண்களை திறந்துவிடும்.
ஏசுவாகவே வாழும் நண்பர்கள்
உயர்ந்த நோக்கத்துடனும், நல்லொழுக்கத்துடனும் ஏசுவைப்போல வாழும் நல்ல கிருத்துவர்களும் உள்ளனர். மிகவும் மதிக்கத்தக்க கேரளாவின் சிரியன் கிருத்துவர்களை, நன்னடத்தைக்கும், சகோதரத்துவ நடத்தைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களை எனக்குத் தெரியும். அவர்கள் ஒரு போதும் மதமாற்றத்தில் நம்பிக்கை கொண்டதில்லை; சொல்லப்போனால், மாஸ்கோவில் கிருஷ்ணன் கோவிலுக்கு, ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச் எதிர்ப்புத் தெரிவிப்பதாக செய்தி துணுக்குகள் வெளியானபோதுபோது, நான் சிரியன் கிருத்துவர்களின் ஆர்ச் பிஷப்பைத் தொடர்பு கொண்டேன். கிருஷ்ணர் நமது நாட்டைச் சேர்ந்தவரென்று சொல்லிய அவர் எனக்கு உதவியும் புரிந்தார்.
சுன்னி முஸ்லீம்களுக்கிடையே வஹாபிகளைப்போல், இந்திய சமுதாயத்தில் அவநம்பிக்கையையும், வெறுப்பையும் விதைக்கும் ஆக்ரோஷமான வத்திகன் ஆதரவாளர்கள் ஒட்டு மொத்த கிருத்துவ உலகத்துக்கும் பிரதிநிதிகள் அல்ல.
மேலும், எங்கெல்லாம் அவர்களுடைய ஆதிக்கம் மிகுந்துள்ளதோ அவ்விடத்தையெல்லாம் அவர்கள் இந்தியாவிலிருந்து பிரித்து தனிநாடாக மாற்ற முயல்கின்றனர். ஏன்?
நாகாலாந்தின் NSCN (IM) என்னும் ஒரு தீவிரவாத அமைப்பை வெளிப்படையாக ஆதரித்துக்கும் சர்ச்சை, உதறித்தள்ளும் தைரியம், வத்திகனைப் பின்பற்றுபவர்களுக்கு உள்ளதா?
ஏசுவின் ராஜ்ஜியத்தை நாகாலந்தில் நிறுவவே நாங்கள் போராடுகிறோம் என்று NSCN (IM) வெளிப்படையாக அறிவிப்பு செய்துள்ளது. தனது மதத்தை பரப்ப எல்லா சுதந்திரங்களையும், வசதிகளையும் செய்து தந்திருக்கும் இந்திய நாட்டிற்கு இந்த அறிவிப்பு எதிரானது என்று கூறி வத்திகன் இந்த தீவிரவாதிகளுக்கான தனது ஆதரவை வெளிப்படையாக உதறித்தள்ள முன்வருமா?
ஜனநாயகமும் பன்மையும் இணைந்து நமது நரம்பில் ஓடும்போது, அந்த ஒரு சிலரின் அடக்குமுறையை எதிர்க்க நாம் ஏன் தயங்குகிறோம்?
இனி எப்போதும், கோசி பந்தைப் போன்ற நிகழ்வுகள் நிகழாமல், நமது மக்கள் துன்புறாமல், ஒவ்வொரு இந்தியனும் மரியாதையுடன் வாழ்வதற்கும், மேலும் சில தங்கப்பதக்கங்களை வரவிருக்கும் லண்டன் ஒலிம்பிக்ஸில் பெறுவதற்கும், வறுமையையும், தீவிரவாதத்தையும் இந்திய வரை படத்திலிருந்தே அழித்தொழிப்பதற்கும், நாம் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து, செய்ய வேண்டிய வழிமுறைகளை யோசித்து, நடைமுறைகளை உருவாக்க வேண்டிய நேரம் இதுவல்லவா?
இந்த பிரச்சினைகள், மத மாற்ற பிரச்சினைகளை விடவும், ஹிந்து-முஸ்லீம்-கிருத்துவ பிரச்னைகளை விடவும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவையா?
இந்த புனித புத்தகத்தை “கட்டாயமாக” நீங்கள் படித்தே தீரவேண்டும் என்று வற்புறுத்துவதை விட்டுவிட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற உழைக்கும் மக்களுக்கு உதவி செய்தால், நமது தெய்வங்கள் நம்மை கோபித்துக்கொள்ளப் போகிறார்களா என்ன?
நமது கடவுள்கள் மற்ற கடவுளரைப் பார்த்து பொறாமைப் படுகிறவர்களா? அல்லது எதை நாம் படிக்க வேண்டுமென்று அவர்கள் எண்ணுகிறார்களோ அதை மட்டுமே நாம் படிக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா? பிரபஞ்சத்தில் அன்பின் சின்னமாகவும், அன்பாகவும் அவர்கள் மட்டுமே இருப்பதாக நமது கடவுள்கள் எண்ணுகிறார்களா என்ன?
ஓ நம்பிக்கையாளர்களே, நீங்களே முடிவு செய்யுங்கள்: அடக்குமுறை அல்லது பன்மை. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு உள்ளது. ஆனால், உங்களது தேர்வு ஏற்படுத்தப்போகும் விளைவுகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கப் போவதில்லை.
[கட்டுரை ஆசிரியர், டாக்டர் ஷியாமப்ரஸாத் முகர்ஜி ஆய்வு மையத்தின்
இயக்குனராக இருக்கிறார்.]
தருண் விஜய் அவர்களின் வீரமிகு சத்திய வரிகளை தமிழில் கொடுத்து இன்னும் அதை மிளிரச்செய்திருக்கிறீர்கள்.
தருண் விஜய் அவர்களின் வாதங்களும், அவர் முன்வைக்கும் கருத்துக்களும் யாராலும் மறுக்க முடியாதவை.
நன்றி
ஜயராமன்
\\எனது சொந்த அப்பனை அனாதையாக நடுத்தெருவில் அலைய விட்டுவிட்டு, புதிய பெற்றோர்களை தத்து எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்று பீற்றுவதை தெய்வீக அனுபவத்தின் விளைவாகக் கருதமுடியாது//
வைரவரிகள் ஐயா…
மி்க்க நன்றி
Please give the matter to Kumudham Jodhidam.Mr AMR the editor will publish it.It will reach more peolple.Thanks for the translation.
ஹிந்துக்களுக்கான இவ்வலைமனையை ஒரு நாளில் ஒரு முறையாவது பார்வையிடுவது என் வழக்கம். விஷய தானமும் செய்துள்ளேன். ஒவ்வொரு செய்திகளையும் படிக்கும்போது நெஞ்சம் நடுங்குகிறது. நம் எதிர்காலம் குறித்த அச்ச உணைர்வே மேலோங்குகிறது.
கண்ணன் காக்க வேண்டும்.
தேவ்
“இந்தியாவில் நடப்பது, காந்தி கனவு கண்ட ராம ராஜ்ஜியம் இல்லை; சோனியா காங்கிரஸின் ரோம ராஜ்ஜியம்” என்பதற்க்கு மற்றும் ஒரு சான்று இதோ !
கணக்கில் அடங்கா ஹிந்து ஞானிகள் வலம் வந்த/வரும் பூமி இது. ஆனால் எத்தனை ஹிந்து புனிதர்களுக்கு இப்படி ஒரு கவுரவம் இந்திய அரசால் அவசரம் அவசரமாக கிடைத்திருக்கிறது ?
https://www.hindu.com/thehindu/holnus/000200810111823.htm
Govt. to issue coin in honour of Sister Alphonsa
New Delhi (PTI) The government on Saturday said it has decided to issue a commemorative coin in the honour of Sister Alphonsa, who will be canonized as a saint by the Pope tomorrow in the Vatican City.
Finance Minister P Chidambaram announced that the coin will be released on August 19, 2009 in Kerala.
Sister Alphonsa is the first Indian who will be canonized as a saint by the catholic church, an official release said.
Born in 1910, she belonged to the poor Franciscan Clarist Congregation in Kerala. Her centenary year will commence on August 19, 2009 and will be celebrated for a year, it added.
என்ன நாடு ஐய்யா இது ?!
ஒரு கிறுத்தவ பெண்மணி “புனிதர்” ஆவதை வாத்திக்கனிலிருந்து நேரடி ஒளிப்பரப்பு செய்து பெருமை கொள்கிறான் !
சொந்த மதத்தில் உள்ள சுவாமியார்களை “விபூதி வரவழைத்தார். லிங்கம் வரவழைத்தார்” என்று கிண்டல் அடிக்கிறான். ஆனால் இந்த பெண்மணி அதிசயங்கள் செய்து புனிதர் ஆனார் என்று அலட்டுகிறான். நாம் ஒரு கிறுத்தவ நாட்டில் தான் இருக்கிறோமோ ??
CHRISTIAN PERSECUTIONS AGAINST THE HELLENES
Summarised from Vlassis Rassias’ book “Es Edaphos Pherein” (Greek), Athens 2000 (2nd edition), Anoichti Poli Editions, ISBN 960-7748-20-4
——————————————————————————–
(All dates “era vulgaris” = Christian Era)
314
Immediately after its full legalisation, the Christian Church attacks the Gentiles: The Council of Ancyra denounces the worship of the Goddess Artemis.
324
Emperor Constantine declares Christianity the only official religion of the Roman Empire. At Dydima, Asia Minor, he sacks the Oracle of God Apollo and tortures its Pagan priests to death. He evicts the Gentiles from Mt. Athos and destroys all local Hellenic Temples.
326
Emperor Constantine, following the instructions of his mother Helen, destroys the Temple of the God Asclepius in Aigeai of Cilicia and many Temples of the Goddess Aphrodite in Jerusalem, Aphaca, Mambre, Phoenice, Baalbek, etc.
330
Constantine steals the treasures and statues of the Pagan Temples in Greece to decorate Nova Roma (Constantinople), the new capital of his Empire.
335
Constantine sacks many Pagan Temples of Asia Minor and Palestine and orders the execution by crucifixion of “all magicians and soothsayers”. Martyrdom of the neoplatonist philosopher Sopatros.
341
Emperor Constas, son of Constantinus, persecutes “all the soothsayers and the Hellenists”. Many Gentile Hellenes are either imprisoned or executed.
346
New large-scale persecutions of the Gentiles in Constantinople. Banishment of the famous orator Libanius, who is accused of being a “magician”.
353
An edict of Constantius decrees the death penalty for all forms of worship involving sacrifice and “idols”.
354
A new edict of Constantius orders the closing of all Pagan Temples. Some of them are profaned and turned into brothels or gambling rooms. Executions of Pagan priests. The first burning of libraries in various cities of the Empire. The first lime factories are built next to closed Pagan Temples. A large part of Sacred Gentile architecture is turned into lime.
356
A new edict of Constantius orders the destruction of the Pagan Temples and the execution of all “idolaters”.
357
Constantius outlaws all methods of Divination (Astrology not excluded).
359
In Skythopolis, Syria, christians organise the first death camps for the torture and execution of arrested Gentiles from all around the Empire.
361 to 363
Religious tolerance and restoration of Pagan cults declared in Constantinople (11th December 361) by the Pagan Emperor Flavius Claudius Julianus.
363
Assassination of Emperor Julianus (26th June).
364
Emperor Flavius Jovianus orders the burning of the Library of Antioch. An Imperial edict (11th September) orders the death penalty for all Gentiles that worship their ancestral Gods or practice Divination (“sileat omnibus perpetuo divinandi uriositas”). Three different edicts (4th February, 9th September, 23rd December) order the confiscation of all properties of Pagan Temples and the death penalty for participation in Pagan rituals, including private ones.
365
An Imperial edict (17th November) forbids Gentile officers of the army to command christian soldiers.
370
Emperor Valens orders a tremendous persecution of Gentiles throughout the Eastern Empire. In Antioch, among many other Pagans, the ex-governor Fidustius and the priests Hilarius and Patricius are executed. Tons of books are burnt in the city-squares of the Eastern Empire. All friends of Julianus are persecuted (Orebasius, Sallustius, Pegasius etc.), the philosopher Simonides is burned alive and the philosopher Maximus is decapitated.
372
Emperor Valens orders the governor of Asia Minor to exterminate the Hellenes and destroy all writings of their wisdom.
373
New prohibition of all methods of Divination. The term “Pagan” (pagani, villagers) is introduced by the christians to lessen the Gentiles.
375
The Temple of the God Asclepius in Epidaurus, Greece, is closed down.
380
On the 27th February, Christianity becomes the exclusive religion of the Roman Empire by an edict of Emperor Flavius Theodosius, requiring that “all the various nations, which are subject to our clemency and moderation should continue in the profession of that religion, which was delivered to the Romans by the divine Apostle Peter”. Non-christians are called “loathsome, heretics, stupid and blind”. In another edict Theodosius calls “insane” those that do not believe in the christian god and outlaws all disagreements with Church dogma. Ambrosius, bishop of Milan, starts destroying all the Pagan Temples of his area. Christian priests lead the mob against the Temple of the Goddess Demeter in Eleusis and try to lynch the hierophants Nestorius and Priskus. The 95 year-old hierophant Nestorius, ends the Eleusinian Mysteries and announces the predominance of mental darkness over the human race.
381
On May the 2nd, Theodosius deprives christians that return to the Pagan Religion of all their rights. Throughout the Eastern Empire, Pagan Temples and Libraries are looted or burned down. On 21st December, Theodosius outlaws even simple visits to the Temples of the Hellenes. In Constantinople, the Temple of the Goddess Aphrodite is turned into a brothel and the Temples of Sun and Artemis into stables.
382
“Hellelu-jah” (Glory to Yahweh) is imposed in the christian mass.
384
Emperor Theodosius orders the Praetorian Prefect, Maternus Cynegius (a dedicated christian), to cooperate with the local bishops and destroy the Temples of the Gentiles in Northern Greece and Asia Minor.
385 to 388
Maternus Cynegius, encouraged by his fanatic wife, and his bishop “Saint” Marcellus, scour the countryside with their gangs, sack and destroy hundreds of Hellenic Temples, shrines and altars. Amongst others they destroy the Temple of Edessa, the Cabeireion of Imbros, the Temple of Zeus in Apamea, the Temple of Apollo in Dydima and all the Temples of Palmyra. Thousands of innocent Gentiles from all sides of the Empire suffer martyrdom in the notorious death camps of Skythopolis.
386
Emperor Theodosius outlaws (16th June) the care of sacked Pagan Temples.
388
Public talks on religious subjects are also outlawed by Theodosius. The old orator Libanius sends his famous Epistle “Pro Templis” to Theodosius, with a hope that the few remaining Hellenic Temples will be respected and spared.
389 to 390
All non-christian calenders are outlawed. Hordes of fanatic hermits from the desert flood into Middle Eastern and Egyptian cities, destroying statues, altars, Libraries and Pagan Temples, whilst Gentiles are lynched. Theophilus, Patriarch of Alexandria, starts heavy persecutions against the Gentiles, turns the Temple of Dionysos into a church, burns down the Mithraeum of the city, destroys the Temple of Zeus and burlesques the Pagan priests before they are killed by stoning. The christian mob profanes the cult images.
391
On 24th February, a new edict of Theodosius prohibits not only visits to Pagan Temples but also looking at vandalised statues. New heavy persecutions all around the Empire. In Alexandria, Egypt, the Gentiles, led by the philosopher Olympius, revolt and after some street fights, finally lock themselves inside the fortified Temple of the God Serapis (The Serapeion). After a violent siege, the christians occupy the building, demolish it, burn its famous Library and profane the cult images.
392
On 8th November, the Emperor Theodosius outlaws all non-christian rituals and names them “superstitions of the Gentiles” (“gentilicia superstitio”). New full scale persecutions against the Gentiles. The Mysteries of Samothrace are ended and priests slaughtered. In Cyprus the local bishop, “Saints” Epiphanius and Tychon destroy almost all the Temples of the island and exterminate thousands of Gentiles. The local Mysteries of Goddess Aphrodite are ended. Theodosius’ edict declares: “the ones that won’t obey pater Epiphanius have no right to keep living on the island”. The Gentiles revolt against the Emperor and the Church in Petra, Aeropolis, Rafia, Gaza, Baalbek and other cities of the Middle East.
393
The Pythian, Aktia and Olympic Games are outlawed as part of the Hellenic “idolatry”. Christians sack the Temples of Olympia.
395
Two new edicts (22nd July and 7th August) lead to new persecutions against the Gentiles. Rufinus, the eunuch Prime Minister of Emperor Flavius Arcadius directs the hordes of the baptised Goths (led by Alaric) to the country of the Hellenes. Encouraged by christian monks, the barbarians sack and burn many cities (Dion, Delphi, Megara, Corinth, Pheneos, Argos, Nemea, Lycosoura, Sparta, Messene, Phigaleia, Olympia, etc.), slaughter or enslave innumerable Hellenes and burn the Temples. Among others, they burn down the Eleusinian Sanctuary and burn alive all of its priests (including the hierophant of Mithras Hilarius).
396
On 7th December, a new edict by Emperor Arcadius orders that Paganism be treated as high treason. Imprisonment of the few remaining Pagan priests and hierophants.
397
“Demolish them!” Emperor Flavius Arcadius orders all the still erect Pagan Temples demolished.
398
The Fourth Church Council of Carthage prohibits to all, including its bishops, the study of Gentile books. Porphyrius, bishop of Gaza, demolishes almost all the Pagan Temples of his city (except nine of them that remain active).
399
With a new edict (13th July) Emperor Flavius Arcadius orders all remaining Temples, mainly in the countryside, to be immediately demolished: «Si qua in agris templa sunt, sine turba ac tumultu diruantur. His enim deiectis atque sublatis omnis superstitioni materia consumetur»
400
Bishop Nicetas destroys the Oracle of God Dionysus in Vesai and baptises all the Gentiles of this area.
401
The christian mob of Carthage lynches Gentiles and destroys Temples and “idols”. In Gaza too, the local bishop, also a..,”Saint”, Porphyrius sends his followers to lynch Gentiles and demolish the remaining nine still active Temples of the city. The 15th Council of Chalkedon orders all christians that still keep good relations with their gentile relatives to be excommunicated (even after their death).
405
John Chrysostom sends his hordes of gray-clad monks armed with clubs and iron bars to destroy the “idols” in all the cities of Palestine.
406
John Chrysostom collects funds from rich christian women to financially support the demolition of the Hellenic Temples. In Ephessus, he orders the destruction of the famous Temple of Goddess Artemis. In Salamis, Cyprus, “Saints” Epiphanius and Eutychius continue persecutions of the Gentiles and the total destruction of their Temples and sanctuaries.
407
A new edict outlaws once more all non-christian acts of worship.
408
The Emperor of the Western Empire Honorius and the Emperor of the Eastern Empire Arcadius, order together that all sculptures of the Pagan Temples be either destroyed or confiscated. Private ownership of Pagan sculpture is also outlawed. The local bishops lead new heavy persecutions against Gentiles and new book burning. Judges showing pity for Gentiles are also persecuted.
409
Once again, an edict orders Astrology and all methods of Divination to be punishable by death.
415
In Alexandria, Egypt, the mob urged by the bishop Cyrillus, attacks a few days before the judaeo-christian Pascha (Pesach-Easter) and hacks to pieces the famous and beautiful philosopher Hypatia. Pieces of her body are paraded by the christian mob through the streets of Alexandria, and are finally burned together with her books in a place called Cynaron. On 30th August, new persecutions start against all the Pagan priests of North Africa, who end their lives either crucified or burned alive.
416
The inquisitor Hypatius, alias “The Sword of God”, exterminates the last Gentiles of Bithynia. In Constantinople (7th December), all non-christian army officers, public employees and judges are dismissed.
423
Emperor Theodosius II, declares (8th June) that the Religion of the Gentiles is nothing more than “demon worship” and orders all those who persist in practicing it to be punished by imprisonment and tortured.
429
The Temple of Goddess Athena (Parthenon) on the Acropolis of Athens is sacked. Athenian Pagans are persecuted.
435
On 14th November, a new edict by Theodosius II orders the death penalty for all “heretics” and “pagans” of the Empire. Only Judaism is considered a legal non-christian Religion.
438
Theodosius II issues an new edict (31st January) against the Gentiles, incriminating their “idolatry” as the reason for a recent plague!
440 to 450
The christians demolish all the monuments, altars and Temples of Athens, Olympia, and other Greek cities.
448
Theodosius II orders all non-christian books burned.
450
All the Temples of Aphrodisias (City of Goddess Aphrodite) are demolished and its Libraries burned down. The city is renamed Stauroupolis (City of the Cross).
451
A new edict by Theodosius II (4th November) emphasises that “idolatry” is to be punished by death.
457 to 491
Sporadic persecutions against Gentiles of the Eastern Empire. Among others, the physician Jacobus and the philosopher Gessius are executed. Severianus, Herestios, Zosimus, Isidorus and others are tortured and imprisoned. The proselytiser Conon and his followers exterminate the last Gentiles of the island of Imbros, in the northeast Aegean. The last worshippers of Lavranius Zeus are exterminated in Cyprus.
482 to 488
The majority of the Gentiles of Asia Minor are exterminated, after a desperate revolt against the Emperor and the Church.
486
More “underground” Pagan priests are discovered, arrested, burlesqued, tortured and executed in Alexandria, Egypt.
515
Baptism becomes obligatory, even for those that already say they are christian. The Emperor of Constantinople, Anastasius orders the massacre of the Gentiles in the Arabian city Zoara and the demolition of the Temple of local God Theandrites.
528
Emperor Jutprada (Justinianus) outlaws the “alternative” Olympian Games of Antioch. He also orders the execution (by fire, crucifixion, tearing to pieces by wild beasts, or cutting by iron nails) of all who practice “sorcery, divination, magic or idolatry” and prohibits all teachings by the Gentiles (“..the ones suffering from the blasphemous insanity of the Hellenes”).
529
Emperor Justinianus outlaws the Athenian Philosophical Academy, which has its property confiscated.
532
The inquisitor Ioannis Asiacus, a fanatical monk, leads a crusade against the Gentiles of Asia Minor.
542
Emperor Justinianus allows the inquisitor Ioannis Asiacus to convert the Gentiles of Phrygia, Caria and Lydia in Asia Minor. Within 35 years of this crusade, 99 churches and 12 monasteries are built on the sites of demolished Pagan Temples.
546
Hundreds of Gentiles are put to death in Constantinople by the inquisitor Ioannis Asiacus.
556
Justinianus orders the notorious inquisitor Amantius to go to Antioch, to find, arrest, torture and exterminate the last Gentiles of the city and burn all the private libraries down.
562
Mass arrests, burlesquing, tortures, imprisonments and executions of Gentile Hellenes in Athens, Antioch, Palmyra and Constantinople.
578 to 582
Christians torture and crucify Gentile Hellenes all around the Eastern Empire, and exterminate the last Gentiles of Heliopolis (Baalbek).
580
Christian inquisitors attack a secret Temple of Zeus in Antioch. The priest commits suicide, but the other Gentiles are arrested. All the prisoners, the Vice Governor Anatolius included, are tortured and sent to Constantinople to face trial. Sentenced to death they are thrown to the lions. The wild animals are unwilling to tear them to pieces and they end up crucified. Their corpses are dragged through the streets by the christian mob and afterwards thrown unburied in the city dump.
583
New persecutions against the Gentile Hellenes by the Emperor Mauricius.
590
Throughout the Eastern Empire, christian accusers “discover” Pagan conspiracies. A new wave of torture and executions erupts.
692
The “Penthekte” Council of Constantinople prohibits the remains of Calends, Brumalia, Anthesteria, and other Pagan / Dionysian festivals.
804
The Gentile Hellenes of Laconia, Greece, resist successfully the attempt of Tarasius, Patriarch of Constantinople, to convert them to Christianity.
950 to 988
Violent conversion of the last Gentile Hellenes of Laconia by the Armenian “Saint” Nikon.
Dear sir,
Kindly can anyone help me as to how to convert this above post into Tamil?
Tamils have no knowledge of history,for all thier time is consumed in earning a livelihood and watching soap operas.
Hence it is the duty of hindu intellectuals to equip them with world history,so that they do not get misguided by propoganda and become repeat versions of well known victims of christian and islamic atrocities so elaborately documented by world historians.
auronarayan,
To type in Tamil, download some tamil editor like “Azhagi”. Google “Azhagi tamil editor” . Type in Tamil, convert to unicode and then copy paste here. Hope this helps
ஆரோ நாராயணன் அவா்களுக்கு
NHM writer என்ற software-ஐ இன்ஸ்டால் செய்து Alt+0 ஆங்கிலத்திலும் Alt+4 தமிழிலும் பாமினியில் அடிக்க முடியும். முயன்று பாருங்கள்
அருமையான கட்டுரை. நம் அரசியல் வியாதிகளுக்கு பதவி வெறிதவிர நாட்டு நலனில் அக்கறை கிடையாது. வரலாற்றில் இருந்து பாடம் படிக்காமல் தான்தோன்றித்தனமாக அறிக்கைகள் விட்டு திசை திருப்புகிறார்கள். பிற மதங்களை சகித்துக்கொள்ள முடியாத மதங்கள் இஸ்லாமும் கிறிஸ்தவமும். இவை இரண்டுக்கும் இடையில் இந்துக்கள் எப்படி தங்களைக் காத்துக்கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் அரசியல் வியாதிகள் இவர்களுக்கு சிறுபான்மை சலுகை கொடுத்து வளா்த்து வருகிறது. பகவானே நீ தான் வழிகாட்ட வேண்டும். இந்துக்களுக்கு ஒற்றுமை உணர்வை உண்டாக்க வேண்டும். கிறிஸ்தவா்கள் , இஸ்லாமியர்களுடன் வியாபாரம் செய்யக்கூடாது. இந்துக்கள் மூலம் வியாபாரம் செய்து அதன் லாபத்தில் வெடிகுண்டு வைப்பதற்கும், மதமாற்றம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். இந்துக்களே விழி்த்து எழுங்கள்