மங்களூர்: தாலிபானை காப்பியடிப்பதா இந்துக் கலாச்சாரம்?

Mangalore Attack
Mangalore Attack

மங்களூரில் நடந்த நிகழ்சிகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை. அங்கு உள்ள கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த ஸ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர், அங்கு மது அருந்தி நடனமாடிக் கொண்டிருந்த ஆண்கள், இளம் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக ‘ஸ்ரீராம சேனா’ அமைப்பின் தலைவர் உட்பட 17 பேரைக் கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதைக் கர்நாடகா மற்றும் தேசிய பாரதீய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பல இந்து அமைப்புகளும், திரு.அத்வானி போன்ற பெருந்தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து ஸ்ரீராம சேனா தலைவர்கள், அங்கிருந்த பெண்கள் இந்திய கலாச்சாரத்துக்கு புறம்பாக நடந்துகொண்டதால் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

அட, இதுதான் இந்திய கலாச்சாரமா தோழர்களே? இந்தியக் கலாச்சாரம் என்றால் என்ன? அதன் பிரதிபலிப்பாகப் பெண்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா? ‘பப்’ போன்ற இடங்களில் பெண்கள் செல்வது இந்திய கலாச்சாரத்துக்கு இழுக்கு என்றால் அங்கு ஆண்கள் செல்வது…

இதுவரை எத்தனை ஆண்களை இதற்காக நீங்கள் தாக்கியுள்ளீர்கள்? அதற்கு தைரியமிருக்கிறதா? ஆண்களிடம் காட்டமுடியாத உங்களது வீரத்தைப் பெண்களிடம் காட்டியுள்ளீர்களா?

இந்தியக் கலாச்சாரத்துக்கு இது புறம்பானது என்றால் அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யுங்கள். எது இந்தியக் கலாச்சாரம் என்பதைப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதைச் செய்யாமல் தாலிபான் பாணியில் பெண்களை அடித்து உதைப்பதும், உங்களை கலாச்சாரக் காவலர்களாகக் கற்பனை செய்துகொள்வதும் மூடத்தனமில்லையா?

அடுத்ததாக, இந்த கலாச்சாரத் தூய்மையின் முடிவுதான் என்ன? அரைகுறை ஆடையணிகிறார்கள் என்று இன்னொரு பேட்டியில் ஒரு ஸ்ரீராம சேனா தலைவர் பேட்டியளித்துள்ளார். இப்படித்தான் தாலிபானும் துவங்கியது. முதலில் அரைகுறை ஆடை என்பார்கள்; அடுத்தது மேலைநாட்டு ஆடைகளை அணிவது தவறு என்பார்கள்; அடுத்தது முட்டாக்குப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பார்கள்; அடுத்தது ஆண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்கள் பணிபுரியக் கூடாது என்பார்கள்; மருத்துவர்களாக, தாதிகளாக பெண்கள் பணிபுரியக்கூடாது ஏனெனில் அங்கே ஆண்களின் கையைத் தொட வேண்டியிருக்கிறது என்பார்கள், அடுத்ததாக கல்விச்சாலைகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கக் கூடாது அது கலாச்சாரத்துக்கு இழுக்கு என்பார்கள், அடுத்தது கல்வி நிலையங்களுக்கே செல்லக்கூடாது அது பெண்களின் ஒழுக்கத்தைக் குலைத்துவிடும் என்பார்கள்.

மேலே சொன்னதெல்லாம் கற்பனையல்ல. தாலிபான் பரவும் பிரதேசங்களில் எல்லாம் இத் நிகழ்ந்துள்ளது! இப்போதுகூட பாகிஸ்தானில் தாலிபான் பரவியுள்ள இடங்களில் பெண்களின் கல்விக்கூடங்களைத் தாலிபான் எரித்து வருகிறது. இதுவரை 180க்கும் அதிகமான பெண்கள் பள்ளிகளை அவர்கள் எரித்துள்ளனர். காரணம்? “அது கலாச்சாரத்துக்கு எதிரானது”! ஆஃப்கானிஸ்தானில் கூடக் கல்விச்சாலைகளுக்குச் செல்லும் பெண்கள் மீது ஆசிட் எறிகின்றனர் தாலிபான்கள்.

இந்த நிலைக்கா நமது இந்து சமுதாயம் செல்ல வேண்டும்? மங்களூர் தாக்குதல் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்தால் இது போன்ற இருண்ட நிலைக்கே நமது சமுதாயத்தை இது இழுத்துச் சென்றுவிடும். கற்பு, கலாச்சாரம், தூய்மை ஆகியவை வெளி நிர்ப்பந்தத்தின் மூலம் வருவன அல்ல, தானாகவே சுய தேர்வின் மூலம் வருவன. இதுவே இந்து சமுதாயத்தின் தத்துவம், இதனாலேயே இந்து சமுதாயம் உலகின் உன்னத சமுதாயமகத் திகழ்ந்தது. அந்நியப் படையெடுப்புகளினால் தான் இந்தியப் பெண்கள் முக்காடு போட ஆரம்பித்தனர், அவர்களின் நிலை தாழ்ந்தது. பெண்களுக்கு ஆத்மா இருக்கிறது என்பதைக்கூட ஆபிரகாமியங்கள் ஒப்புக்கொள்ளாத காலத்திலேயே நம்மிடையே அவ்வையார்களும், ஆண்டாள்களும் தோன்றி ஆன்மீகத்தை போதித்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்றான் யுகக்கவி பாரதி. கற்பு தவறும் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்பது ஆபிரகாமியக் கருத்தியலே.

இந்த ஆபிரகாமியக் கருத்தியலுக்கு இந்து அமைப்புகள், இந்து இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது.

கலாச்சாரம் நிர்ப்பந்தத்தால் வருவது அல்ல, சுய தேர்வின் மூலமும் சமூக மேம்பாட்டின் மூலமும் வருவது. அதே போன்று சில இளைஞர்கள் தாமாகவே இதுதான் இந்து கலாச்சாரம் என்று முடிவு செய்து வன்முறையில் ஈடுபடுவது நமது நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் மிகவும் கேடு விளைவிக்கும்.

49 Replies to “மங்களூர்: தாலிபானை காப்பியடிப்பதா இந்துக் கலாச்சாரம்?”

  1. மிக நன்றாக எழுதப்பட்ட கட்டுரை. இந்த வெறியாளர்கள் சட்டத்தால் கடுமையாக த‌ண்டிக்கப்படவேண்டியவர்கள்.

  2. மிகவும் அழகான முறையில் சொல்லியுள்ளீர்கள். திருந்துவார்களா?

  3. கட்டுரை மிக அருமை,
    பெண்களை தாக்கிய‌து என்பது கண்டிப்பாக ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு, ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது போல் இந்து மதத்தை பற்றி அறியாதவர்கள், ஆனால் மேற்க்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி இதுபோன்ற விடுதிகள் மூலம் இளைஞர், இளைஞிகளை தவறான பாதைக்கு திருப்பி அதன் மூலம் காசு சம்பாதிப்பவார்களை தாக்கி இருக்கலாம். குடித்து கண்டவனுடன் எல்லாம் கூத்தடித்த பெண்களை அடித்தது அவர்களுக்கு ஒரு படிப்பினை. தவறில்லை ஆனால் சரியும் இல்லை.

    பாலாஜி….

  4. இந்த ராம் சேனையில் தலைவர் முன்னாள் பா.ஜ.க. அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபினர் இப்படி செயல்களில் ஈடுபடுகிறார். அதுவும் இல்லாமல் 2008 மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தித் தோற்றவர். தற்போது கர்னாட‌கா காங்க்ரசுடன் கூட்டு சேர்ந்துள்ளார் என்பது செவிவழிச் செய்தி.

  5. நியாயமான அணுகுமுறையுடன் தெளிவாகவும் அழுத்தமாகவும் எழுதியுள்ளீர்கள்; ஸ்ரீ ராம் சேனாவின் அராஜகம் அபத்தமான ஆபத்தான போக்கு. ஹிந்து இயக்கங்களுக்குக் கெட்டபெயரை ஏற்படுத்தும். முளையிலேயே கிள்ளி வீச வேண்டும்.

    கண்ணன்

  6. திரு வஜ்ரா சொல்வது சரியென்றே தோன்றுகிறது.
    சிவா சேனையின் ராஜ் தாக்கரே கூட காங்கிரஸின் ஆள் என்றும் ஒரு பேச்சு உண்டு.
    பிரித்தாளும் சூழ்ச்சியில் வெள்ளைக்காரனை மிஞ்சி விடுவாகள் இந்த காங்கிரசார்.

  7. பாராட்டுகிறேன் மகேந்திரன். தனிமனித ஒழுக்கத்தை மதத்தின் பேரால் வலியுறுத்த வேண்டுமானால் அதற்கு ஆக்கபூர்வமான பிரசாரங்கள், போதனைகள் என்று எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. வன்முறையில் ஈடுபடுவதே ஒழுங்கீனம். வன்முறை எந்தப் பெயரால் செய்யப்பட்டாலும், எந்தக் காரணத்துக்காக மேற்கொள்ளப்பட்டாலும்–தற்காப்புக் காரணங்களைத் தவிர்த்து–அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்களுக்காக வன்முறையில் ஈடுபடுபவன் ஹிந்து என்று அழைக்கப்படும் அருகதையையே இழக்கிறான். இப்படிப்பட்ட கண்மூடித்தனமான போக்குகளை மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் செய்யப்படுவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. மிக வலுவாக உங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  8. மகேந்திரன் ஐயா,

    ஆண்கள் மது அருந்துவது என்பது நம் கலாசாரத்தில் உண்டு. பெண்கள் இப்படி சீரழிந்ததாகத்தான் பண்டைய இலக்கியங்களில் காணவில்லை. ராமாயணம் முதலியவைகளில் கூட சுக்ரீவன் முதலியோர் மது அருந்து கூத்தடித்ததாக எழுதியிருக்கிறார்கள். அதனால், நீங்கள் சொல்வது சரியல்ல.

    இப்படியே போனால், முக்காடு போட்டு பெண்கள் ஸ்கூல்களை இடிப்பார்கள் என்று நீங்களாக கற்பனை செய்து கொண்டு ஒரே ஒப்பாரியாக வைத்திருக்கிறீர்கள். அவர்கள் செயத வன்முறை தவறுதான். ஆனால், அப்படி செய்ததால்தான் நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்கள், இப்படி ஒரு கட்டுரை தமிழ்இந்துவில் வருகிறது, நாலு பேர் பேசுகிறீர்கள். இது ஏன் என்பதை யோசித்துப்பாருங்கள். பப் கலாசாரம் பரவாமல் இருக்கவேண்டும் என்று ஆதங்கப்படுபவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாமல் எழுதியிருக்கிறீர்கள்.

    இப்படி காசை வைத்து கூத்தடிக்கும் இளைஞர்களால் எத்தனையோ குடும்பங்கள் கெட்டு போகின்றன. என் காசு, என் கூத்து என்று தான்தோன்றித்தனமாக இருப்பதால் சமுதாயங்கள் ஒழுக்கமுறை இல்லாமல் போகின்றன. முன்னெல்லாம், கள்ளுக்கடைகள் ஊருக்கு வெளியே இருக்கும், திருட்டுத்தனமாக போய் குடிப்பார்கள். இப்போதெல்லாம், கடைத்தெருவில் கறிகாய்கடைபோல திறந்துவிடுகிறார்கள். இது சரியா? காசுக்காக, நம் சர்க்காரே இப்படி லைசன்ஸ் கொடுத்து சமுதாயத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை கண்டித்து நீங்கள் எத்தனை கட்டுரை எழுதினீர்கள் என்று முதலில் சொல்லிவிட்டு பிறகு ராமசேனையின் கணக்கைக் கேளுங்கள்.

    நன்றி

    ஜயராமன்

  9. Jayaraman,

    Please read Harikrishnan’s comment which is just above yours. It effectively answeres your questions:

    {ஹரி கிருஷ்ணன்
    2009-01-27 at 9:11 மாலை | Permalink
    பாராட்டுகிறேன் மகேந்திரன். *தனிமனித ஒழுக்கத்தை மதத்தின் பேரால் வலியுறுத்த வேண்டுமானால் அதற்கு ஆக்கபூர்வமான பிரசாரங்கள், போதனைகள் என்று எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. வன்முறையில் ஈடுபடுவதே ஒழுங்கீனம். வன்முறை எந்தப் பெயரால் செய்யப்பட்டாலும், எந்தக் காரணத்துக்காக மேற்கொள்ளப்பட்டாலும்–தற்காப்புக் காரணங்களைத் தவிர்த்து–அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.* மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்களுக்காக வன்முறையில் ஈடுபடுபவன் ஹிந்து என்று அழைக்கப்படும் அருகதையையே இழக்கிறான். இப்படிப்பட்ட கண்மூடித்தனமான போக்குகளை மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் செய்யப்படுவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. மிக வலுவாக உங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். }

    Merely because Puranas mention that men took liquor and didn’t mention women taking liquor, can we follow such double standards in the modern day? And… if someone takes liquor in private or in a pub, without causing any disturbance or nuisance to others, tell me how it is dangerous to society or Hinduism?

  10. ரகு ஐயா,

    இராவணனே பிராமணன் என்று அறிந்து அவனைக் கொன்றதற்கு சாந்தி செய்தவன்தான் இறைவன்.

    கேள்வி, இந்துகலாசாரம் என்பதில் ஆண்கள் குடித்திருக்கிறார்களா என்பது? பதில் ஆம் என்பதே. அது சரியா? அப்படிப்பார்த்தால் அது பெண் சமத்துவமா என்றெல்லாம் தாளத்தை மாற்றிப்போட்டால் எப்படி? இந்து கலாசாரம் என்பது வழிவழியாய் வந்துள்ளது. அதில் என்ன உள்ளது என்பதுதானே கேள்வி. முதலில் சரியாய் புரிந்துகொண்டு முன்னர் வக்காலத்து வாங்கலாமே ஐயா!

    நன்றி,

  11. //
    ஆண்கள் மது அருந்துவது என்பது நம் கலாசாரத்தில் உண்டு. பெண்கள் இப்படி சீரழிந்ததாகத்தான் பண்டைய இலக்கியங்களில் காணவில்லை. ராமாயணம் முதலியவைகளில் கூட சுக்ரீவன் முதலியோர் மது அருந்து கூத்தடித்ததாக எழுதியிருக்கிறார்கள். அதனால், நீங்கள் சொல்வது சரியல்ல.
    //

    ஆண்கள் இப்படி மது அருந்திவிட்டு யாருடன் சேர்ந்து கூத்தடித்தார்கள் என்று பண்டைய இலக்கியங்களில் காணப்படுகிறதா ?

  12. In bomaby a group of such girls enjoy nude dance by gigaloos.The attack is the result of demented minds.but the girls who have thronged in the pub are also demented.Society which has no proper moral codes for prostitute etc will face such erruptions.Pak and muslims do honor killings allowed by their law.

    The girls turning economically independent do dating. Even change boys daily with one night stands.Some boy target for sexual action many girls simultaneously in such Pubs. Because they cannot drink and date in their houses they want this as independence. Don’t be too moralistic without detailing the otherside also

  13. Everything depends on parenting.

    Parenting is the one that transmits cultural values and tradition to the next generation.

    But parenting in India has long lost its value. Spare the rod and spoil the child.

    Your child may be special to you. But at the same time, he/she is going to be part of the society tomorrow. So every parent should balance love and strictness in bringing up their children. Showering only love and no strictness spoils the society like this.

  14. // பெண்கள் இப்படி சீரழிந்ததாகத்தான் பண்டைய இலக்கியங்களில் காணவில்லை. //

    பண்டைய இலக்கியங்களில் இல்லை என்று உறுதியாகச் சொல்லமுடியாது. தேடினால் பெண்கள் மது அருந்தியது தெரியவரலாம்.

    அப்படித் தெரியவருமானால், மது அருந்துவது தவறல்ல என்று வாதிடத் தோன்றலாம். 🙂

    பண்டைய இலக்கியங்கள் சொல்வதை மட்டும்தான் செய்யவேண்டும் என்று சொன்னால் அவை 39° 49′ 34″ Eல் எழுந்த நூல்களாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.

    //இதை கண்டித்து நீங்கள் எத்தனை கட்டுரை எழுதினீர்கள் என்று முதலில் சொல்லிவிட்டு பிறகு ராமசேனையின் கணக்கைக் கேளுங்கள்.//

    அபத்தம்.

    மகேந்திரனின் கட்டுரை வன்முறை பற்றியது. மது அருந்துவது தவறா தவறு இல்லையா என்பது குறித்தது அல்ல.

    நல்ல பழக்கங்களை வன்முறையால் நிலைநிறுத்திவிட முடியும் என நினைப்பது அக்மார்க் ஆபிரகாமியத்தனம்.

    இந்துப் பெயர்களை வைத்துக்கொண்டு இந்துத்துவா பற்றி எதுவும் தெரியாமல் செயல்பட முடியும் என்பதற்கு இந்த ராம சேனை ஒரு நல்ல உதாரணம். கம்யூனிஸ்ட் கட்சியில் வேலைபார்த்து பணம் பலகோடி சம்பாதிக்கும் “சீதா ராம்” எச்சூரிக்கும் இந்துத்துவாவிற்கும் என்ன சம்பந்தமோ அந்த அளவுதான் இந்த “ராம சேனைக்கும்” இந்துத்துவாவிற்கும் உள்ள சம்பந்தம்.

    யார் செய்கிறார்கள் என்பதை வைத்து அல்ல. என்ன செய்கிறார்கள் என்பதை வைத்து ஒரு செயலை மதிப்பிடுவதுதான் இந்துத்துவா.

    பெண்களிடம் வீரத்தைக் காட்டும் இந்த கும்பல் வெறும் கோழைகளின் கூடாரம். இவர்களுக்கும் பெண்களுக்கான அழகுப் போட்டிகளை எதிர்க்கும் ஜனநாயக மாதர் சங்கத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

  15. எங்கள் கல்லூரியில் ஒரு பேராசிரியர் எங்கள் வகுப்பு மாணவிகளிடம் இப்படிச் சொன்னார் “ஏன் எங்களுக்கு மட்டும் இவ்வளவு கட்டுப்பாடு என்று கேட்க்கிறீர்கள். ஏன் ladies hostel-இல் மட்டும் இவ்வளவு கட்டுப்பாடு என்று கேட்க்கிறீர்கள். எப்பொழுதுமே பூச்செடிக்குத் தான் பாதுகாப்பு அதிகம். அவனுங்கெல்லாம் முள்ளுச் செடி. எப்படி திரிஞ்சாலும் அவனுக்கு ஒன்னும் ஆகிடாது. ஆனா நீங்க அப்படி இல்ல.. உங்களை பொத்திக் காப்பாத்த வேலி போட்டா அது எங்க சுதந்திரத்திற்க்குத் தடை என்று சொன்னா எப்படி? பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்னு பின்னே எப்படி எதிர்பார்க்குறீங்க. நீங்களும் அவனுங்களை மாதிரி அலையணும்னா அப்புறம் உங்களுக்கு ஏன் இந்த extra protection சமுதாயத்தில எதிர்ப்பார்க்கறீங்க?”

    ஏல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

  16. “அப்புறம் உங்களுக்கு ஏன் இந்த extra protection சமுதாயத்தில எதிர்ப்பார்க்கறீங்க ?”

    மிகச்சரியான கேள்வி!

    கணவனைப் பிரிந்துசென்ற‌ மனைவி எவ்வளவு சம்பாதித்தாலும் கணவன்தான் மெயின்டெனன்ஸ் கொடுக்கவேண்டும். வேலைபார்க்குமிடத்தில் ஆண் அதிகாரி ஏதேனும் கேள்வி கேட்டால் உடனே “என்னை பெண் எனபதால் கொடுமை செய்தார்கள்” என்று கேசு போடலாம். பொய்ப் புகார் கொடுத்தால்கூட நடவடிக்கை எடுக்கமுடியாது.

    ஒரு பெண் ஒரு ஆணை பொது இடத்தில் எவ்வளவு கேவலமாகக் கூட நடத்தலாம். ஆனால் அந்த ஆண் திருப்பி ஒரு சொல் கூறினாலும் அவன்மீது சட்டம் பாயும்.

    பல பெண்கள் பல ஆண்களிடம் சுகம் அனுபவித்துவிட்டு விவரம் வெளியில் தெரிந்தவுடன் “அவர்கள் என்னைக் கற்பழித்துவிட்டார்கள்” என்று புகார் செய்கிறார்கள். உடனே அவர்களைக் கைது செய்துவிடுவார்கள். தினமும் இதுபோல் பல “கற்பழிப்பு” செய்திகள் வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் பெண்ணியவாதிகளும், பல பிரபலமான பெண்மணிகளும் “கற்பு” என்னும் சொல்லை பெண்களின் அடிமைத்தனத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். ஆனால் ஆண்கள்மேல் ஏவ‌மட்டும் ஆது ஒரு ஆயுதமாகப் பயன்படுகிறது!

    பாரபட்சமான சமுதாயம் இது!!

  17. ஜயராமன் அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன். இது கடவுளின் பெயரால் செய்யப்பட்டிருக்காது, காலாச்சார சீர்கேடுகளை கண்டு மனம் நொந்து அதை தடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்.
    இதை தவரென்று சொல்பவர்கள் கலாச்சார சீர்கேட்டையும் மேற்க்கத்திய கலாச்சாரத்தையும் ஆதரிப்பவர்களாகவே இருக்கவேண்டும்.
    பெண்களை தாக்கியது தவறுதான் ஏனென்றால் அவர்கள் (மது உண்ட) பூவையர்

    பாலாஜி

  18. என் கருத்துகள் சென்சார் செய்து பல வரிகளை எடுத்து அரைகுறையாய் வெட்டி இங்கே போடுகிறார்கள் என்பதால் இங்கு மேலும் தொடர விருப்பமில்லை. இருந்தாலும் இங்கே வந்திருக்கும் இன்னொரு வக்காலத்தாருக்கு ஒரு பதில்.
    ///
    //இதை கண்டித்து நீங்கள் எத்தனை கட்டுரை எழுதினீர்கள் என்று முதலில் சொல்லிவிட்டு பிறகு ராமசேனையின் கணக்கைக் கேளுங்கள்.//

    அபத்தம்.
    ///

    இந்த கட்டுரைக்காரர் ராமசேனையைப் பார்த்து நீங்கள் எத்தனை ஆம்பிளைகளை அடித்தீர்கள் என்று கணக்கு கேட்பாராம்! ஆனால், நாம் அவரிடம் நீங்கள் கலாசார சீரழிவை எத்தனை தடவை கண்டித்தீர்கள் என்று கேட்க கூடாதாம். என்னங்கடா நியாயம் இது. ஆம்பிளைகளை அடித்துவிட்டு பின்னர் பெண் பசங்களை விரட்டினால் ஓக்கேவா?

    ஒன்னுமே புரிஞ்சுக்காம குறுக்கால வந்து ஆஜராகிறீர்களே அய்யா,

    நன்றி

    ஜயராமன்

    பி.கு : இத்தோடு நான் ஜூட். என்னைக் கேள்வி கேட்க ரொம்ப ஆசைப்படுவோர் எனக்கு மெயில் அனுப்பவும், இல்லை என் பிளாக்கில் போடவும். நான் சென்சார் எல்லாம் செய்யமாட்டேன் சாமி!

  19. //
    அவர்கள் செயத வன்முறை தவறுதான். ஆனால், அப்படி செய்ததால்தான் நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்கள், இப்படி ஒரு கட்டுரை தமிழ்இந்துவில் வருகிறது, நாலு பேர் பேசுகிறீர்கள். இது ஏன் என்பதை யோசித்துப்பாருங்கள். பப் கலாசாரம் பரவாமல் இருக்கவேண்டும் என்று ஆதங்கப்படுபவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாமல் எழுதியிருக்கிறீர்கள்.
    //

    மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஜயராமன் ஐயா.

    1) 9‍‍‍/11 அன்று ‍இரட்டைக்கோபுரம் இடிக்கப்படாமலிருந்திருந்தால் அதைப் பற்றி யாரும் பேசியிருக்கமாட்டார்கள். ஒசாமா பின் லேடனின் தரப்பு உலகம் பூராவும் ஒரே நிமிடத்தில் சென்றடைய அந்த விமானக் கடத்தலும் காரணமாக இருந்தது. ஆக, அந்த வன்முறையைக் கண்டிப்பவர்கள் ஒசாமா பின் லேடனின் ஆதங்கத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் பேசுகிறார்கள்.

    2) ஆதங்கப்படுபவர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளே முக்கியம். அதை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பது அல்ல. பெரிய கொள்ளைக்காரன் என்று பெயரெடுத்தவன் சந்தனக் கடத்தல் வீரப்பன். அவன் மட்டும் யானைகளைக் கொல்லாமலோ, சந்தன மரங்களைக் கடத்தாமலோ இருந்திருந்தால் யாருக்கும் அவனைப் பற்றித் தெரிந்திருக்காது. அந்த வன்முறையைக் கண்டிப்பவர்கள் வீரப்பன் என்ற ஏழையின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள்.யானை வ‌ய‌ல்வெளிக‌ளில் செய்த‌ அட்ட‌காச‌ங்க‌ளைக் க‌ண்டித்து எழுதாத‌வ‌ர்க‌ளுக்கு யானைகளை வீர‌ப்ப‌ன் கொன்ற‌தைக் க‌ண்டிக்கும் தார்மிக‌ உரிமை நிச்ச‌ய‌மாக‌க் கிடையாது.

    3) அப்ப‌டியே நாம் மும்பையில் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளின் ம‌ன‌க்குமுற‌ல், ஆத‌ங்க‌ம் அனைத்தையும் க‌ண‌க்கிலெடுத்துக் கொள்ள‌ வேண்டும்.

    4) ஒருவர் எனக்கு ரொம்ப‌ நாட்க‌ளாய் என‌க்குத் தொல்லை கொடுத்து வ‌ருகிறார். என் த‌ர‌ப்பை நான்கு பேர் க‌வ‌னித்து அதைப் ப‌ற்றி விவாதிக்க‌ வேண்டுமென்றால் வ‌ன்முறைதான் ஒரே வழி. கூடிய‌ சீக்கிர‌ம் லும்ப‌ன்க‌ளைக் கூப்பிட‌ வேண்டிய‌துதான். வேறு வ‌ழியே இல்லை.

    ஜெய் ராம்சேனா!

  20. ஜெயராமன்,

    ‘பப்’களில் செல்வது என்பது தவறு என நாம் கருதும் பட்சத்தில் அது நிகழ்வதற்கான காரணங்களை (Stress, peer pressure இத்யாதி) அதற்கு ஆரோக்கியமான மாற்றுகளை ஏற்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு அந்த பெண்களை அடிப்பது கேடுகெட்டத்தனம். பாசிசம். ஏதோ ஒருவிதத்தில் கூட இந்து இயக்க கருத்தியலுக்கு இந்த சம்பவத்துடன் உடன்பாடு இருந்தால் அதற்காக வெட்கி தலைகுனிய வேண்டி உள்ளது. இதற்கு மாறாக எத்தகைய பெண்கள் pub செல்லும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள், அவர்களது குடும்ப சமுதாய பொருளாதார பின்னணிகள் குறித்த தரவுகளுடன் ஒரு சமூகவியல் நிகழ்வாக இதனை ஆராய்ந்து இதன் விளைவுகளை: pub போவது செயல்திறமை மீது ஏற்படுத்தும் தாக்கம், குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கம், தற்கொலை விழைவு அதிகரிக்கிறதா என்பவற்றை ஆராய்ந்து அதனை இளைய தலைமுறையினரிடையே கொண்டு சென்றிருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும். அது நம் கடமைப்பாடும் கூட. அதனை விட்டுவிட்டு இப்படி பெண்களை அடித்து தருமத்தை நிலைநாட்டும் அசகாய சூரர்களை பார்த்து வருத்தப்படத்தான் தோன்றுகிறது.

  21. I consider the views are lopsided.Man is after woman as apart of natural selection I mean libido is part of man and woman.But culture brings out libido in man openly because of his physical strength and econimic head position in family.Now girls wan to usurp the position as well as they want favour of natural selection with advantages of their physical weakness. this has broughout the womens’ liberation movement.

    Women folk who are good looking and “sexy” get away with the situation because of men’s libido and modesty of society. But there are girls who do not excite the man for dating and mating.such social workers fight agaist fashion shows etc because they don’t have anything to show to excite the libido of man for natural selection.Such women get umbrage under culture.

    there are women who are very rich and engage male srip shows and drink and go for one night stands.Pub culture is convinient portal for them to do this activity.When objected they talk of independence.
    I shun violence.But cultural revolutions always go thru violence.

    There are some girls who go to pub for economic reasons and date for money and livelihood.In the process they get hedonistic and join the boys for night stands in private qtrs arranged by third persons who run this as business.
    After the new call center and BPO culture and the night shifts this has increased more.Even good girls become victims of the circumstances.
    Instead of attending to ter roots the we are beating around the bush.
    If women want the freedom of movement away from the local cultural practices etc they should not seek spl reservations
    and there need not be a spl commission for women.All these bodies and the women welfare minister are for the wellbehaved and cutured girls in families and not for the avant garde and corrupt girls who indulge in sexual practices of the prostitutes One cannot go and take a photo of the incident of sexual pervertion.
    Pubs give a nourishing ground for such activities.
    Many girls who stay in girls hostels get diverted into this culture.I am astounded at the women who want the cake
    and eat it too.
    If this goes on like this we would ha.ve Mens’ welfare minister and dept very soon

  22. வன்முறை என்ற வழியில் இறங்கிய எந்த சமுதாயமும் உருப்பட்டதில்லை.. வன்முறையை பதிலடியாய்க் கூட கொடுக்கத்தெரியாத கூட்டம்தான் இந்துக்கள். இதுபோன்ற பெட்டிக்கேசுகளில் மாட்டிக்கொண்டு மிஷநரிகளின் பனத்தில் இயங்கும் ஊடகங்களுக்கு தீனி போட்டுஅவர்கள் இதனை தாலிபானுக்கு ஒப்பிட்டு தங்களது அரிப்பைச் சொரிந்துகொண்டுள்ளனர்.

    நமது கலாச்சாரம், பாரம்பரியம், வழிமுறைகளை மறந்துவிட்டு இதுபோன்ற இயக்கங்கள் நடத்தும் இயக்கங்கள் குறைந்த பட்சம் இந்துக்கடவுளர்களின் பெயரில் இயங்குவதை நிறுத்த வேண்டும்.

  23. அடி ஒதவுவது போல் அண்ணன் தம்பி ஒதவ மாட்டானுவ, தரவுகளை ஆராய்ந்து இளைஞர்களை நெறிப்படுத்துவது என்பது கனவிலும் நடக்காதது. 20 வயது அதற்க்கு மேல் அப்பன் சொல்லை எவனும் கேக்க மாட்டானுவ, பள்ளிக்கூட வாழ்க்கை பெற்றோர் கண்காணிப்பில் வளரும் தலைமுறை, கல்லூரியில் ஒருமுறை செய்துதான் பார்ப்போமே என்ற அலச்சியப் போக்கு மற்றும் வாழ்க்கையில் ஒரு த்ரில் வேணுமடா என்ற இளரத்தத்தின் துடிப்பு, அதி பயங்கர கேடு கெட்ட திரைப்படங்களின் தாக்கம். இவை முக்கிய காரணிகள். இவர்களை ஒரு முறை அடித்து திருத்துவதில் தப்பில்லை. கோழி மிதித்து குஞ்சு சாகாது. மது உண்ட பூவையர் மானம் காத்த (அடித்து காத்த) அண்ணன்களுக்கு ஒரு பாராட்டு.

    பாலாஜி

  24. ஜயராமன், பாலாஜி ஆகியோர் சொல்வது மிகச்சரி. பப் கலாசாரர்களிடம் போய் அஹிம்சா வாதமும், காந்தியமும் பேசிக் கொண்டிருக்க முடியாது. இங்கிருப்பவர்கள் ’ராம்சேனா’ என்ற இந்துப் பெயர் கொண்ட அமைப்பு செய்த செயலுக்குத் தான் வருத்தப்படுகிறார்களேயன்றி நிகழ்விற்கு அல்ல. பப் கலாசாரத்திற்கு ஒரு பெண், ஐந்து பெண் என்று சென்று நாளடைவில் கல்லூரிப் பெண்கள், குடும்பப் பெண்கள் என்று எல்லோரும் செல்ல ஆரம்பித்து விடுவர் புதுமை என்ற பெயரில். இங்கே மும்பையிலும், அங்கே சென்னையிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கலாசாரம் பாதுகாக்கப் பட வேண்டும் என்றால் திருந்தாத ஜென்மங்களிடம் வன்முறையை சிலநேரங்களில் பிரயோகம் செய்வது தவறில்லை. ரூம் போட்டு உட்கார்ந்து, ஆராய்ச்சி எல்லாம் செய்து இவர்களுக்கு போதனை செய்து கொண்டு இருக்க வேண்டுமா என்ன?

    சுதந்திரமாவது கத்திரிகாயாவது. உடனடியாக அவர்களை படிக்கும் கல்லூரியிலிருந்தும் வேலை பார்க்கும் இடத்திலிருந்தும் நீக்கி விட்டால் மற்றவர்கள் செய்ய யோசிப்பர். இதற்கும் தாலிபானிசத்திற்கும் சம்பந்தமில்லை. சேதுபதியின் கூற்று அபத்தம். அரவிந்தனை எல்லாம் செயல்பாட்டிற்கு உதவாது. உடனடியாக பலன் கிடைக்க வேண்டுமென்றால் இது தான் வழி. இதுவே தீர்வல்ல. ஆனால் இதுவும் ஒரு தீர்வு தான்

  25. // சுதந்திரமாவது கத்திரிகாயாவது. //

    “இந்துத்துவ‌மாவ‌து க‌த்திரிக்காயாவ‌து” என‌ப் புரிந்துகொள்க‌.

  26. ஜயராமன், பாலாஜி, அநங்கன் ஆகியோருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என நினைக்கிறேன்.

    அவர்களுக்கு இந்தப் பழக்கம் ஏற்படாமல் போனதற்கு வன்முறையா காரணம்?

    வெங்கட் எழுதியிருப்பதைப் படித்ததும் சிரிப்புத்தான் வந்தது. Pubக்குப் போகும் பல பெண்கள் எனக்குத் தோழிகள். ஒழுக்கத்தில் அவர்கள் யாரும் மற்ற குடும்பப் பெண்களுக்குக் குறைந்தவர் அல்ல. Pubக்குப் போகாத சில பெண்களையும் நானறிவேன். அவர்கள் கணவர் இருக்கும்போதே கரைகடப்பவர்கள்.

    கலாச்சார மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாததன் விளைவு இது. இதை அனுமதித்தால் வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்வி கற்கும் பெண்கள், இருபால் பள்ளிக்குச் செல்பவர்கள் எல்லாம் கற்பற்றவர்கள் என்று முடிவில்லாமல் நீளும் மனோவியாதி இது.

    த‌ன்னுடைய‌ ந‌ட‌த்தையை முடிவு செய்யும் அறிவும் திற‌னும் பெண்ணுக்கு உண்டு. என்ன‌தான் க‌ட்டுப்பாடுக‌ள் கொண்டு வ‌ந்தாலும் அவ‌ள‌து முடிவை நீங்க‌ள் மாற்றிவிட‌ முடியாது.

    மாற்ற‌ம் இய‌ல்பான‌தாக‌, புரித‌லின் விளைவாக‌ ஏற்ப‌ட‌வேண்டும். அதுதான் இந்துத்வா.

  27. // கலாச்சார மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாததன் விளைவு இது//

    ஓ பப்புக்குப் போவதும், இஷ்டப்படி கூத்தடிப்பதும் தான் கலாசார மாற்றமா? அய்யகோ.. எனக்கு இது தெரியாமல் போய் விட்டதே! அட அருணாசலா… என் செய்வாய் விதியே!…

  28. அனைத்து ஊடகங்களும் அங்கே பெண்களை மட்டும் தாக்குதலுக்கு ஆளாகிய‌துபோல் கூச்சல் போடுகின்றன. இந்த வீடியோவைப் பாருங்கள். பல ஆண்களையும் கடுமையாக அடித்தும், உதைத்தும் தாக்கி விரட்டியிருக்கிறார்கள். அதை ஒருவரும் பேசக்காணும். இந்தக் கட்டுரையில்கூட “இதுவரை எத்தனை ஆண்களை இதற்காக நீங்கள் தாக்கியுள்ளீர்கள்? அதற்கு தைரியமிருக்கிறதா? ஆண்களிடம் காட்டமுடியாத உங்களது வீரத்தைப் பெண்களிடம் காட்டியுள்ளீர்களா?” என்று எழுதியிருக்கிறீர்கள். இது உங்களைப் போன்ற பெண்ணியவாதிகளின் நடுநிலையற்ற, மனம் பிறழ்ந்த நிலையைக் காண்பிக்கிறது.

    https://www.youtube.com/watch?v=lEbD2aXs-XU&feature=related

    இந்த நாட்டில் ஆணாகப் பிறப்பதே ஒரு இழுக்கு. ஒரு பக்கம் பண்பாடு என்னும் சிறையிலிருந்து விடுதலை பெற்ற‌ பெண்கள். மற்றொரு பக்கம் பெண் என்ற சொல்லைக் கேட்டாலே ஜொள்ளு விடத்தொடங்கும் பெண்ணியவாதி ஆண்கள்.

    கொடுமைடா சாமி!

  29. அருமை நண்பர் கிருஷ்ணபுத்திரர் அவர்களே,
    கலாச்சார மாற்றத்தை நாங்கள் எதிர்க்கிறோம், மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றம் (உதாரணமாக பழனிக்கு மலை ஏறி கால்கடுக்க நடந்து சென்று பாவங்களை தொலைத்து விட்டு வந்த நாம் இப்போது தொங்கு கூடுகளில் பயணித்து பழனி செல்லவில்லையா, இன்கே கலாச்சார மாற்றம் அறிவியல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. தமிழ்க்கடவுள் எம்பெருமான் முருகப்பெருமான் அருள் எல்லோருக்கும் சரிசமம்தான். பப்,பாப் நம் இந்திய காலாச்சாரம் அல்ல அது மேற்க்கத்திய நாகறீக மற்றவர்களின் கலாச்சாரம். இணை மாற்றம் குடித்துவிட்டு கூத்தடிப்பது கண்டிப்பாக ஒரு கலாச்சார சீரளிவே அன்றி காலாச்சார முன்னெற்றமல்ல.
    அன்புடன்
    பாலாஜி..

  30. REAL REASON FOR ATTACK ON GIRLS IN மாண்
    How media distorted facts

    It was not moral policing but a campaign against jehadi sex.
    The media has blown the Shri Rama Sena orchestrated attack on pub girls in Mangalore out of proportions owing to its allegiance to anti-Hindu sentiments.

    Here are the facts:

    There is an orchestrated campaign to seduce, entrap and convert Hindu girls by sending them to Ponnani in Kerala which is the nearest conversion point where Mangalore is concerned.

    Such cases were highlighted by the vernacular media and totally ignored by the anti-Hindu English media.
    The Mullahs have openly exhorted the Muslim youths and have decided to reward them for flicking women from the other communities.
    This has enraged the masses in the region and they have supported outfits like Bajrang Dal and Rama Sena.
    It is a question of guarding your sisters and daughters.

    In this case, these girls were drugged and were on their way to be vamps in the service of these nefarious Islamic Jihadi forces.
    The public in Mangalore is in support of outfits like Bajrang Dal and the Rama Sena who are doing stellar work in protecting Hindu girls from falling into wrong hands. Sometimes, things do go to extremes.
    The Rama Sainiks have done a good job in saving Hindu girls.
    The masses in Mangalore stand by these so-called hooligans because they want to protect their women from the clutches of the Islamic jehadis — whom the media is ever eager to please.
    — Deepak Kamath
    https://greathindu.com/2009/01/how-media-twisted-mangalore-attack-on-pub-girls/

  31. At the time of the attack there were 8 youths belonging to different (communities) and four of them were girls. The raiding group found them in a compromising situation and some of them were scarcely clad and were doing nothing short of “nanga Naach”. “We did not have any other option but to chase them out of the pub as they appear to have come from good families. When they did not budge they had to beat them out of the pub”.

    https://www.mangalorean.com/news.php?newstype=broadcast&broadcastid=110035

  32. Photographs of the Hindu girls whom the Islamists tried to seduce in Mangalore Pub. In this case, these girls were drugged and were on their way to be vamps in the service of these nefarious Islamic Jihadi forcஎச்.
    — Deepak Kamat
    Photos can be found at the blog URL found above

  33. அன்பு பாலாஜி,

    கீழ்க்கண்ட பாடல் நாம் வணங்கிப் போற்றும் ஒரு தெய்வீகப் பெண்மணி எழுதியது.

    தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
    கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ
    ஊண்முறை ஈத்தல் அன்றியும்
    கோண்முறைவிருந்திறை நல்கி யோனே

    இருப்பினும், குடித்துவிட்டு கூத்தாடுவது நமது கலாச்சாரத்தில் இல்லாததாக நீங்கள் கருதுகிறீர்கள். அந்த‌ நம்பிக்கை/பிரமை சரிதானா என்ற கேள்விக்குள் நான் புக விரும்பவில்லை. ஏனெனில், நீங்கள் எதிர்ப்பது மது அருந்துவதால் எழும் தீமை குறித்து; குடித்துவிட்டு ஆடுவது எனும் ஒரு செயலைக் குறித்த‌து மட்டும் அல்ல என நம்புகிறேன்.

    ஆண்களும், பெண்களும் தங்களது வாழ்க்கையை மது போதையால் தொலைத்துவிடக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. அளவு மீறினால் இவ்வழக்கம் உடல், உள்ளம் இரண்டையும் அழிக்கும். இதை யாரும் விரும்பவில்லை.

    ஆனால், கட்டுரை ஆசிரியர் சொல்ல வருவது வேறு ஒன்றை குறித்தானது. தனது கருத்தை வன்முறையால் நிலைநாட்டுவது சரியல்ல என்கிறார். இது இந்துத்துவத்தின் கருத்தாகவும் இருக்கிறது.

    மாறுபட்ட கருத்து உங்களுடையது. வன்முறையால் மட்டுமே சிலர் திருந்துவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆபிரகாமிய மதங்களில் ஒன்று சொல்லும் மெதினத்து வசனங்களையொட்டி வாதிடுகிறீர்கள்.

    மங்களூரில் நடந்த இந்த வன்முறையால், அங்கே அடிவாங்கிய ஆடவரும் பெண்டிரும் குடிப்பதை விட்டுவிட்டார்களா?

    அல்லது, அவர்கள் குடிப்பதை முற்றிலும் நிறுத்தும்வரை அவர்கள்மீது வன்முறை தொடர்ந்து நடத்தப்ப‌டவேண்டும் என்கிறீர்களா?

    நமது இந்து மதம் இதை மறுக்கிறது. மாற்றம் உள்ளிருந்து எழவேண்டும். வெளியில் இருந்து திணிக்கப்படக்கூடாது என்கிறது. தனிமனித சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிற ஒரே மதம் இந்து தத்துவ/இறையியல் மரபுகள் மட்டுமே.

    இதையொட்டிய கலாச்சாரமே நமது கலாச்சாரம். நீங்கள் நமது கலாச்சாரம் எனக் கருதுவது ஆபிரகாமிய கலாச்சாரம். இதன் தொடர்ச்சிதான் ஆட்டோ அனுப்புகிற திராவிட கலாச்சாரம்.

    இக்கலாச்சாரம் தன்னை மற்றவர்களிடம் இருந்து உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ளும் பிரமையை அளிக்கலாம். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இது நமது கலாச்சாரம் இல்லை.

  34. We did not have any other option but to chase them out of the pub as they appear to have come from good families. When they did not budge they had to beat them out

    :‍)))))))))

    அடித்துத் துவைத்தற்கு நல்ல காரணம். பார்த்தவுடனே ‘நல்ல குடும்பம்’ என்று தெரிந்திருக்கிறது. அப்படியே ஒருவரைப் பார்த்தவுடனே ‘கெட்ட குடும்பம்’ என்று கூட கண்டுபிடிக்கலாம் போல இருக்கிறது. காவல்துறை, ராணுவம் இதையெல்லாம் கலைத்துவிட்டு, இனிமேல் தெருவுக்கொரு குண்டர் படை வைத்துக்கொள்ளலாம்.

    ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு, எப்படியெல்லாம் அதை நியாயப்படுத்துகிறார்கள் சாமி!

  35. கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரும், சங்கபரிவாரத்தின் பிரதிநிதியாகக் கருதத் தக்கவருமான திரு. எடியூரப்பா இந்த ”ராம சேனை”க்கும் சங்க பரிவாருக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்.

    இந்த குண்டர்களை உடனடியாக கைது செய்து நீதியை காத்த அவருக்குப் பாராட்டுக்கள்.

    இது குறித்த செய்தி: Ram Sene not part of Sangh Pariwar: Yeddyurappa

    “Iam telling you honestly, the Sri Ram Sene has nothing to do with Sangh Pariwar,” Yeddyurappa told reporters when asked whether Sene was an extension of the Bajrang Dal.

  36. ஜயராமன் சார்,

    இந்துத்துவ சைட்டுகளில் இந்த நிகழ்ச்சி குறித்த இந்துத்துவர்களின் கமெண்டுகள் உங்களுக்குப் பிடிக்கும். அவற்றில் 99% கமெண்டுகள் கீழ்க்கண்டவாறே இருக்கின்றன.

    1. Jihadis romeos thrashed Moral policing does not work. Jihadis should have been trashed, the girls should not have been touched. The SRIRAMA SENA idiot, I call him them this since no HINDU SWAYAM SEVAK should touch , hurt a lady.

    The ladies or their guardians or their relatives could have been alerted on this.

    You could have done this using the print media exposes, or posters well placed in the city.

    DO NOT HURT, SHOW DISRESPECT TO WOMEN.

    A SWAYAM SEVAK & A PROUD HINDU

    2. Nothing but hooliganism
    the attack perpetrated by the sri ram sene activists is nothing but brazen hooliganism. this kind of criminal activities can do no good to the hindu cause. bharath is our motherland. here we have a system to look after the day to day life of the people. if we, the hindus don’t respect that system, whom you are expecting to respect this system? do you think pakisthanis will come over and live according to indian constitution ?

    3. Self goal for VHP/*.sena
    I agree with the view of K.Venugopal. The attack by Shri Ram Sena activists is a self goal. If Jehadis are planning to hijack Hindu girls and convert them, it has to be dealt in a different manner. Identify these Jehadi gangs and target them. Use popular media to highlight the dirty tactics of Jehadis. Going to an eating place and bashing up people there is only going to cause trouble for Shri Ram Sena. Shri Ram Sena needs to a learn a few lessons from folks like the Evangelists group (who can do any non-sense, and still say that they are victims).

    4. Foolish and Useless
    We cannot simply destroy this Jihadi tactics by one day violent drama.

    What is required is to go to every hindu home and educate parents and teen aged children.

    Knowledge is more powerful than useless violence.

    In my opinion, those who indulged in this type of violence must be punished.

    These actions bring shame to our noble principle.

    5. Learn & Teach Sanatana Dharma
    Sri Ram Sena should know that it is in the absence of hindu religions education to hindu children that hindu girls flirt with youth regardless of their religious beliefs. The hindu girls or for that matter hindu boys too DO NOT KNOW THE EVIL NATURE OF ISLAM in which muslim youth are trapped without a way out. So, if hindu organizations like Sri Ram Sena wants hindu girls and boys rescued from miscreants, they should first take initiative to introduce a system in which Sanatana Dharma is taught to hindu children.

  37. “ஏதோ ஒருவிதத்தில் கூட இந்து இயக்க கருத்தியலுக்கு இந்த சம்பவத்துடன் உடன்பாடு இருந்தால் அதற்காக வெட்கி தலைகுனிய வேண்டி உள்ளது” ‍‍- அரவிந்தன் நீலகண்டன்.

    இதைப்போன்ற அராஜகங்கள் நிச்சயமாகக் கண்டிக்கப்படவேண்டியதே. சட்டப்படி, எவவித சமாதானங்களுக்கும் உட்படுத்தப்படாமல் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் கருத்தியலையெல்லாம் இதற்குள் இழுத்த்தால் எந்த கருத்தியலையுமே முன் வைக்கவோ நடைமுறைப்படுத்தவோ முடியாது.

    அஹிம்ஸையை அடித்தளமாகாக் கொண்டு நடைபெற்ற, நடைபெறுகிற எத்தனையோ அறப்போராட்டங்கள் அராஜகவாதிகளால் சிதிலமடைந்திருக்கின்றன அதற்காக அஹிம்ஸைக் கருத்தியலே வெட்கப்படவெண்டும் என்று சொல்வது சரியாகுமா?.

    அறிவு பூர்வமாக சிந்திப்பது எவ்வளவு முக்கியமோ அதற்கு எள் அளவும் குறையாமல் யதார்த்த நிலைகளையும் கணக்கில எடுத்துக்கொள்ள வேண்டும் அதுவும் அறிவுபூர்வமான அணுகு முறையே.

    நாம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சி வேகத்தில், கருத்தியலையே கேள்விக் குறியாக்குவது, இலக்கியத்திலும் புராணத்திலும் பெண்கள் குடித்தார்களளென்று நியாயப்ப்டுத்த முயற்சிப்பது ‍~ இது, மங்களுர்காரர்கள் உணர்வு ரீதியான அணுகு முறையின் ஒரு கரையில் நிர்க்கிறார்களளென்றால் அதே தளத்தின் மற்றொரு கரையில் நிர்ப்பதையே காட்டுகிறது.

    பல இடங்களில், சமயனங்களில் அரசுகளே அராஜகத்திற்கு கால்கோள் விழா நடத்துகிறது. உதாரணம்: தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு நடத்துவதும் கல்விக்கூடங்களை வியாபாரிகள் நடத்துவதும். அதில், இந்த ‘பப்’ விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். (ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு, ‘பப்’களை மூடப்போவதாகச் சொல்லியிர்க்கிறது, பார்க்கலாம்)
    நிறைவாக, மங்களுர்காரர்களின் நோக்கம் நமது தேசீயக் கருத்தியலோடு உடன்படுகிறதா என்றால், ஆம், உடன்படுகிறது. ஆனால், அவர்களின் அராஜக நடைமுறையோடு நாம் உடன்பட முடியாது. அந்த அராஜகத்திற்காக வெட்கப்படவெண்டியவர்கள், அதை நிகழ்த்தியவர்களும் அந்த கலாசார அவலத்தை வளர்ச்சியின் ~ உரிமையின் பெயரால் ஆதரிப்பவர்களும் அந்த வியாபாரத்தை அனுமதித்தவர்களும் மட்டுமே.

    கண்ணன்.

  38. //நாம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சி வேகத்தில், கருத்தியலையே கேள்விக் குறியாக்குவது, இலக்கியத்திலும் புராணத்திலும் பெண்கள் குடித்தார்களளென்று நியாயப்ப்டுத்த முயற்சிப்பது ‍~ இது, மங்களுர்காரர்கள் உணர்வு ரீதியான அணுகு முறையின் ஒரு கரையில் நிர்க்கிறார்களளென்றால் அதே தளத்தின் மற்றொரு கரையில் நிர்ப்பதையே காட்டுகிறது.//

    கண்ணன்,

    மிக நிதானமான, அதே சமயத்தில் அழுத்தம் மிகுந்த எழுத்து உங்களுடையது. மகிழ்ச்சி.

    நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்பது உணர்ச்சி வேகம் அல்ல. அது கருத்தியல் தரும் சிந்தனைப் போக்கு.

    கலாச்சாரம் என்பது எப்போதும் மாறக்கூடிய ஒன்று என்பதைக் காட்ட மட்டுமே இலக்கிய உதாரணம் பயன்படுத்தப்பட்டது. நியாயப்படுத்துவதற்கு அல்ல.

    கலாச்சாரத்தின் குணங்களையும், இயல்பையும் புரிந்துகொண்ட பின்னரே கலாச்சாரம் குறித்த ஒரு கருத்தியல் செயல்வடிவம் பெறவேண்டும்.

    இந்தப் புரிதல் கலாச்சாரம் குறித்த நமது அநுமானங்களைக் கேள்விக்குள்ளாக்கும்போது ஆரம்பமாகிறது.

    சிந்தனையை உயர்த்துவதுதான் இந்துத்துவம். குழு வன்முறையை உயர்த்துவது அல்லது பாவாடைகளின் நீளத்தைக் கூட்ட‌ எளியவர்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது இந்துத்துவம் அல்ல. அது வெறும் குண்டாயிசம். கோழைத்தனம்.

    ஹைந்தவகேரளம் எனும் இந்துத்துவ சைட்டில், இந்த குண்டர்களை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வியொன்றை இங்கே பதிகிறேன்:

    No justification for humilating and molesting women. When the country is currenly bogged down by severe issues of terrorism, inflitrations conversions the so called hindu wings are finding that discipling women is the most important job to do. if they have the slightest Nationalistic feelings they would have put sincere efforts to uproot terrorism by clevely eliminating Jihadis.

    By What they are doing will they will even loose the trust of hindus, let alone unite them.

    Why cant all these Senas come to Kannur and protect the BJP & RSS workers who are being slaughtered there daily. Why சன் [not] they go to Malappuram and bring down the pakistani flags flying high in some of the places !

  39. பெண்களைத் தொட்டு அடித்தது தவறுதான். சட்டத்தைத் தம் கையில் குண்டர்கள் எடுத்துக்கொள்ள இதுபோன்றவை அங்கீகாரமாக இருக்கும். அதுமட்டுமல்ல, குண்டாந்தடியால் மாறுபட்ட கருத்துடையவர்களின் வாயை, செயல்பாட்டை அடக்குவது கம்யூனிஸ்டுகள் (நாக்ஸலைட், மாவோயிஸ்ட் போன்ற அவர்களின் பல்வேறு அவதாரங்கள் உட்பட)மற்றும் திராவிடக் கட்சிகளின் பழக்கம். அதை அன்பையே தெய்வமெனத் தொழும் இந்துக்கள் செய்யக்கூடாது, அதுவும் அறத்தின் மூர்த்தியாம் ஸ்ரீ ராமபிரானின் பெயரில்.

    ஆனால் தேசீய மகளிர் கமிஷன் கூறும் இந்தக் கருத்துக்களைப் படித்துப் பாருங்கள்:

    Illegal activities including Prostitution rampant in Mangalore pubs – NCW Member
    30/01/2009 15:05:52 With Media Inputs

    Mangalore: Smt. Nirmala Venkatesh, National Commission for Women member to probe into Mangalore pub attack comes out with more awful issues and blames the pub culture and illegal pubs in Mangalore as the real issue.

    She told Media that her first recommendation will be to cancel the licence of Pub named Amnesia. They were clearly violating rules and regulations. The NCW had instructed the police to inquire misuse of licence, security arrangements at such centres and conduct regular checks to see that the licence was not misused by owners of pubs, bars or hotels.

    After interrogation it has been clear that in the pub they were serving liquor and food to outsiders illegally. The pub has licence to serve liquor and food only to lodgers. But those who were assaulted were outsiders and their names were not seen in the lodge register.

    முழுவ‌து ப‌டிக்க‌: https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=8124&SKIN=B

  40. We are discussing this quite a lot here. We should also be questioning the TV channel’s motivation in the whole issue
    In my humble opinion , when we are assaulted with some newstories nonstop which OVERSHADOWS EVERY OTHER NEWS, we should be objective and ask the “why” question.
    Here one obvious answer seems to be the millions they make with just one such newstory…another one is that the year is an election year…The newschannels are selective and completely ignore politically incorrect news.

  41. தேசிய பெண்கள் ஆணையத்தின் ஒரு உறுப்பினர் மங்களுருக்குச் சென்று ஆய்வு செய்தபின் அங்கு நிகழ்ந்தவைக்கு அந்த மதுபானக் கடைதான் பொறுப்பு என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார். இது மத்திய அரசில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு ஒப்புமையாக இல்லை. மதுபான வணிகம் எவ்வளவு சக்தி வாய்ந்தது! சும்மா இருப்பார்களா!!

    மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்திரி இன்னொரு உறுப்பினரை ஆய்வு செய்ய அனுப்புகிறாராம்! எதற்கு? அங்குதான் இருக்கிறது, அரசியல் மற்றும் வணிக ஆதாயங்கள்!

    ஆண்கள் குடித்து காசை இழந்து குடும்பத்தை கவனிப்பதில்லை என்று சொல்லி இதே பெண்களின் அமைப்புக்கள் ஊரூராக மதுபானத்தை ஒழிக்கவேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். ஆனால் இங்கோ, “பெண்கள் Pub-ல் சென்று குடித்தால் என்ன? அது அவர்களின் உரிமை.” என்கிறார்கள்.

    இப்போது அந்தப் பெண்களைக் காணவே காணோம். அவர்களின் பெயர், முகவரி கூட யாருக்கும் தெரியவில்லை, காவல்துறை உட்பட. இதில் சிறிதும் தொடர்பில்லாதவர்கள்தான் ஏதோ கொள்ளை போய்விட்ட மாதிரி கூவிக்கொண்டிருக்கிறார்கள்!

    ஸ்ரீராம் சேனே அங்கு குடித்துக் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தவர்களை அடித்தனர், துன்புறுத்தினர், அது தவறு என்று மட்டும் இவர்கள் கூறியிருந்தால் சரி. “பெண்களை அடித்தார்கள். அவர்கள் குடிப்பதை இவர்கள் யார் தடுப்பது” இப்படித்தான் போகிறது ஊடகங்களில் கதைப்பது! அங்கு ஆண்களையும் அடித்து விரட்டினார்கள். அதைப் பற்றி யாருக்கும் அக்கரையில்லை. அதை குறிப்பிடுவதுகூட இல்லை.

    இந்த நாட்டில் ஆண்மகன் இரன்டாம்தரக் குடிமகனாகிவிட்டான். எல்லோரும் பெண்கள், அதுவும் இளம் பெண்கள் என்றால் ஜொள்ளு விட்டுக்கொண்டு அவர்கள் செய்வதையெல்லம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள்!

  42. அந்த‌ இட‌த்தில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறைக‌ளை மிக‌த் தெளிவாக‌ மீடியாக்க‌ள் ப‌ட‌ம் பிடித்த‌து ம‌ட்டும் அல்லாது, சினிமா எடுப்ப‌து போல‌ வீடியோவும் எடுத்துள்ளார்க‌ள்.

    1. வ‌ன்முறை ந‌ட‌க்கும் இட‌த்தில் இவ்வ‌ள‌வு அழ‌காகப் ப‌டங்கள் எடுக்க‌ முடியுமா?

    2. இந்த‌ இட‌த்தில் வ‌ன்முறை ந‌ட‌க்கப்போகிற‌து என்ப‌து இவ‌ர்க‌ளுக்கு (மீடியாக்களுக்கு) எப்ப‌டித் தெரியும்?

    3. இப்ப‌டி வ‌ன்முறை ந‌ட‌க்க‌ப்போகிற‌து என்ப‌து மீடியாக்க‌ளுக்கு தெரியுமானால், அதைத் த‌டுக்க‌ அவ‌ர்க‌ள் ஏன் காவ‌ல்துறைக்குத் த‌க‌வ‌ல் தெரிவிக்க‌வில்லை?

    4. வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் இந்த‌ மீடியா ஆசாமிக‌ளை ஏன் தாக்க‌வில்லை?

    5. வன்முறை நடந்த இடத்தைவிட, மிக மோசமான நடனங்களும், நடவடிக்கைகளும் கொண்ட மதுவிடுதிகள் மங்களூரில் உண்டு என எனது மங்களூர் நண்பர் தெரிவிக்கிறார். அப்படிப்பட்ட உண்மையிலேயே மோசமான இடங்களைத் தாக்காமல் ஓரளவு டீசண்டானதாகக் கருதப்படும் இந்த இடத்தைத் தாக்கியது ஏன்?

  43. Let me put my two bit views here; 1)The girls in the pub were not under aged and were doing something quite LEGAL 2) The activities of Ramsena, as everyone agrees, is pathetic and deplorable. 3) RSS/BJP have nothing do with this mob. 4) The media is anti hindu and have been waiting for a chance to potray Hindus as backward/ violent, etc.They were aware that an attack on the pub was going to take place and did nothing to prevent it. Question: Whether these attacks wer initiated by the media in the first place? 5) Whether some women drank in the Puranas is irrelevent to the present topic.
    I am a Hindu living abroad.I have a glass of wine or Scotch after hard day’s work. My two working daughters and my wife join me occasionally.To potray them and me as amoral is laughable. We go to temples regularly and conduct Pujas at home.Obviously there is lot more to our religion than just visiting temples and doing Pujas. We try to follow the PRINCIPLES of our religion as much as possible. Discussing Christianity /Hinduisim with some of my Aussie patients is fun as most of them are Christians by name only and see the Church and it’s activities as evil.Reg the Pub incident,I( and lot of other Hindus)have not given my/their authority to ANYONE in the world , Ramsena included,to speak and act for my religion,
    If Jihadis are the cause of the problem at Mangalore pubs, enticing innocent Hindu girls, then do something LEGAL about them.Ramsena is no different to the fanatical Mullahs/Muslims who drove out Taslima Nasirin from India.

  44. I am a Hindu living abroad.I have a glass of wine or Scotch after hard day’s work. My two working daughters and my wife join me occasionally.To potray them and me as amoral is laughable. We go to temples regularly and conduct Pujas at home.Obviously there is lot more to our religion than just visiting temples and doing Pujas. We try to follow the PRINCIPLES of our religion as much as possible.

  45. வணக்கம்

    நடந்தது வன்முறை எனவே அனைவருக்கும் அதை கண்டிக்கும் உரிமை நிசசயம் உண்டு,

    சம்பவம் நடை பெற்ற அந்த பப் நிச்சயம் பல நாட்களாக அங்கே நடந்து கொண்டு தான் இருந்திருக்கும். ஏன் இவர்கள் அதை மூடும்படி கோரிக்கை வைத்து போராடி இருக்கலாமே?

    அடிபட்டு ஓடியவர்கள் அனைவருக்குமே அது வேதனையான சம்பவம், இதில் ஆணென்ன, பெண்ணென்ன, இங்கே பெண்களின் நிலை குறித்து ரொம்பவும் வேதனை பட்டார்கள் பல மீடியாவினர்,
    அப்படியானால் அடிபட்ட ஆண்கள் மட்டும் தண்டனைக்கு உரியவர்களா?

    சரி இன்னொரு விஷயம் தாக்குதல் நடத்திய ராமசேனா உறுப்பினர்களில் எத்தனை பேர் உண்மையில் ஸ்ரீ ராமன் போன்ற உத்தமர்கள்? அப்படி உத்தமர்களாக இருந்து இருப்பின் பிற பெண்களை கைதொட்டு தாக்கி இருந்திருக்க மாட்டார்கள் என்பதுவே உண்மை.

    தாக்குதலுக்கு ராமசேனா பொறுப்பாக இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு சம்பவத்துக்கு அங்கே வந்த பெண்கள், ஆண்கள், பப் உரிமையாளர், அடிவாங்கிய சகோதர சகோதரிகளின் பெற்றோர், மற்றும் இதுபோன்ற கலாசார சீர்கேடுகளை ஊக்குவிக்கும் அரசாங்கம் அத்தனை பேரும்தான் பொறுப்பாக வேண்டும்,

    இதுநாள் வரையில் அந்த பப்பை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தாத ராமசேனா திடீரென்று இப்படி ஒரு சம்பவம் நடத்துவது என்பது வெறும் அரசியல் நாடகமாகத்தான் தோன்றும். கலாசாரத்தை காப்பாற்ற என்று இவர்கள் செய்து இருப்பது கொஞ்சமும் நமது கலாசாரமற்ற செயல்.

  46. இங்கே முத்தாலிக் வன்முறையை கையில் எடுத்தது தவுறு தான் …வேறு வழி என்ன ?யாரும் எதுவும் கேட்க்க கூடாதா?சமூகம் என்றால் என்ன ?தனி மனித உரிமை என்று மிருகங்கள் போல வாழ வேண்டுமா எல்லாவற்றுக்கும் “அரசாங்கத்தை” நம்பி கொண்டு? ,யாரவது சொல்ல முடியுமா எதுக்கு பண்பாடு ? கீழ பாருங்கள் ஒரு வெளிநாட்டு வாழ் ஹிந்துவின் கருத்தை ..அது அவர் கருத்து..அவர் கருத்து கூறும் சுதந்திரம் ..அவர் உரிமை ???????
    //I am a Hindu living abroad.I have a glass of wine or Scotch after hard day’s work. My two working daughters and my wife join me occasionally//
    //Let me put my two bit views here; 1)The girls in the pub were not under aged and were doing something quite LEGAL//
    Ramji//
    பேரு ராம்ஜி அடிக்கிற சாராயத்துக்கு நியாயம் வேற …வீட்டு பெண்களும் அடிப்பார்களாம் !!!! கேட்டால் சட்டப்படி வீட்டில் வைத்து குடும்ப பெண்களோடு அடிப்பது தனி மனித உரிமை .யாரும் தலையிடமுடியாது .சரிதான் …அதனால் தான் ”சட்டப்படி” குடிக்கும் குடிமகள்/மகனுக்கும் வக்காலத்து ..இப்போ எல்லாமே “சட்டப்படித்தான்”,,விபச்சாரம் முதல் நாட்டை அடகு வைப்பது வரை .. ..எல்லாமே சரி என்றால்..தப்பு என்று ஒன்னும் இல்லையா …இத்தனை நாள் பாரத புண்ணியபூமியில் பிறந்த தவசீலர்கள் கூறியது எல்லாம் கதையா?வெட்கம் ,மானம் என்ற வார்த்தைகளை பற்றி அறியாதவர்களிடம் எவ்வளவு சொன்னாலும் எதுவும் புரியாது ..

    “முதலில் உங்களை போன்ற மேட்டுக்குடி மேதாவிகள் வெளிநாட்டில் போய் சுயமரியாதை இல்லாமல் வெறும் பணத்துக்கு ஆசைப்பட்டு சீரழிந்துவிட்டு அதையே எல்லோருக்கும் உபதேசிக்க வேண்டாம் ,உங்கள் குடும்பத்தோடு நிறுத்திகொள்ளுங்கள் .”

    என்னே ஒரு இந்து ..முதலில் முன்னுதாரண புருஷர் ஸ்ரீ ராம்மரின் பெயரை தாங்கள் எடுத்துவிடுமாறு கேட்டுகொள்கிறேன்.அது அவருக்கு கேவலம் ,பெயர் வைத்த உங்கள் பெற்றோருக்கு கேவலம்!! ராமரை போல் வாழும் எத்தனையோ ஆண்களுக்கு கேவலம் !!! of course it is a very late comment after one year..a kind request to Tamizh Hindu ..please publish & send my comment without edition to Mr.ramji…
    also i request you to fix a option via email to followup…it will have more attraction towards TH website..either for replies/arguments/or to learn new things

    (Edited and published)

    (Edited.)

  47. என்னுடன் கல்லூரியில் படித்த பெண்களின் பழக்கவழக்கங்களைப் பார்த்து மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன். இவர்களுக்கு தேவை பணமும் காமமும் மட்டுமே. இவர்களுக்கு உண்மை உணர்வும், அன்பும் கொண்டவர்கள் தேவையில்லை. சிரிது கூட அன்பில்லாமல், படிப்பு மற்றும் பணத்திமிறால் பண்பற்று நடந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *