கிறிஸ்துவ – திராவிட மாயவலை

karunanidhi and christian bishopகிறிஸ்துவ மதமாற்றிகள் தமிழருக்கும் தமிழரின் தாய் மதத்துக்கும் எதிரான நச்சுக் கருத்துகளைப் பரப்ப திராவிடக் கட்சிகள் உதவுகின்றன. இந்த திராவிட-கிறிஸ்துவ உறவு இன்று தெய்வீகத் தமிழகத்தை நாசம் செய்துகொண்டிருக்கின்றது. இதற்கு ஒரு உதாரணம்தான் இந்த தெய்வநாயகம். இவர் ‘திராவிட ஆன்மீக இயக்கம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதன்மூலம் “ஆதி கிறிஸ்துவம்” என்கிற பெயரில் “தோமா கிறிஸ்துவ”த்தைத் தமிழகத்தில் நிலைநாட்ட முயற்சிக்கிறார். “உலகத் தமிழர் சமய மாநாடு” என்று ஒரு மாநாட்டை நடத்தி அதன்மூலம் ‘தமிழர் சமய வரலாறு’ என்கிற புரட்டு வரலாற்றை மேடையேற்றியிருக்கிறார்.

மேலும், தோமா கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்காக தோமையர் பற்றிய திரைப்படம் ஒன்றை மயிலை பேராயர் ஒத்துழைப்புடன் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்தத் தயாரிப்பிற்கு வாடிகனும் (Vatican) முழு ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தின் ஆரம்ப விழா வெகு விமரிசையாக தி.மு.க. அரசின் ஒத்துழைப்புடன் நடந்தேறியது. முதல்வர் கருணாநிதி தலைமையில் இவ்விழா நடந்தது. இவர்கள் தோமாவையும், திருவள்ளுவரையும் சமகாலத்தவராகக் காண்பித்துத் திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் செய்விக்க முயல்கிறார்கள் என்பது தெரிந்தும், தமிழ் இலக்கியங்களைப் பற்றி பேரறிவு கொண்ட, குறளோவியம் பாடிய கலைஞர் இவ்விழாவில் கலந்து கொண்டது தமிழர்களை முதுகில் குத்தியதோடல்லாமல் தெய்வப்புலவர் திருவள்ளுவரை அவமானப் படுத்தியதும் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

திராவிட-கிறிஸ்துவ உறவு

Kanimozhi and Jagath Casper Rajசென்னை சங்கமம் என்கிற பெயரில் அரங்கேற்றப்படும் கூத்துக்களும் இந்த உறவின் ஓர் அங்கமே. தமிழ் வருடப் பிறப்பை சித்திரை மாதத்திலிருந்து தை மாதம் என்கிற பெயரில், கிறிஸ்துவ முதல் மாதமாகிய ஜனவரி மாதத்துக்கு மாற்றி கிரிகோரியன் காலண்டர் (Gregorian Calendar) முறைக்கு மாற்றியதும் இந்த உறவின் விளைவே. கிரீன்வேஸ் சாலையை டி.ஜி.எஸ். தினகரன் சாலையாகப் பெயர் மாற்றியதும் இதன் தொடர்ச்சியே.

பின்வரும் உண்மைகளைக் கூர்ந்து நோக்குங்கள்: தமிழகமெங்கும் கட்டாய மதமாற்றம் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்க அரசாங்கம் அதைச் சற்றும் கண்டு கொள்ளவில்லை. மதமாற்றம் செய்யும் சர்ச்சுகளுக்கும், மிஷனரிகளுக்கும், அமெரிக்க, ஐரோப்பிய, ஜெர்மானிய நாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் வெளிநாட்டுப் பணம் வருவதை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. சர்ச்சுகளும், மிஷனரிகளும், சகட்டு மேனிக்கு நிலங்கள் வாங்கி வளைத்துப் போட இவ்வரசாங்கம் உதவுகிறது. (இது ஆங்கிலேயர் காலத்திலேயே தொடங்கிவிட்ட செயல்தான். ஆனால், நம்மை அடிமைகளாக்கி வதைத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர் கிறிஸ்துவர்கள்தாம். அவர்கள் அதற்குத் துணை போனதில் எந்த வியப்பும் இல்லை.)

இந்து ஆலயங்களின் வாயில்களில் இந்து மதத்தைத் தூற்றித் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப் படுகின்றன. தெய்வநாயகம் போன்றவர்கள் இந்து மதக் கடவுள்களையும், இந்து ஆன்மீக வழிபாட்டு முறைகளையும், இந்து கலாச்சாரத்தையும், கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக அசிங்கப் படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமலும், அவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் இந்த கிறிஸ்துவ-திராவிட விஷ உறவேயாகும். இந்துக்கள் இதுகுறித்துக் கொடுக்கும் புகார்களை போலீஸ் கண்டுகொள்வதில்லை.

திட்டமிட்ட தமிழ் மொழிக் களவு

இவ்வாறாகப் பல யுக்திகளின் மூலம் தொடருகின்ற இவ்விஷ உறவு உறுதி கொள்வதே தமிழ் மொழியின் பேரில்தான். தமிழ், தமிழர், தமிழ் சமயம் என்றெல்லாம் முழங்கி, மக்களை மூளைச்சலவை செய்து இந்து மதத்திலிருந்து அவர்களைப் பிரித்து, தமிழ் சமயம் வேறு இந்து மதம் வேறு என்று பாகுபடுத்தி, பின்னர் தமிழகத்தைக் கிறிஸ்துவ நாடாக மாற்றுவதே இவர்களின் தொலைநோக்குக் குறிக்கோளாகும். இந்த குறிக்கோளை புரிந்து கொண்டோமானால் இவர்களின் “தீவிர தமிழ்ப் பற்று” எப்பேர்ப்பட்ட இரட்டை வேடம் என்பது விளங்கும். ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி யு போப், கால்டுவெல் போறவர்கள் ஏன் இங்கு வந்து குடியேறி தமிழ்ச் சேவை செய்வது போல் நம் ஆன்மீக கலாசார வாழ்க்கை முறைகளைக் கற்று பின்னர் அவற்றையே மதமாற்றம் செய்ய உபயோகித்துக் கொண்டார்கள் என்பது நமக்கு நன்றாகப் புரியவரும். கிறிஸ்தவ இலக்கியக் கழகம் (CLS) போன்ற அமைப்புகள் மூலம் பலதரப்பட்ட எழுத்தாளர்களையும் அழைத்து, அவர்களை விருந்துபசரித்து, விருதுகள் கொடுத்து, அவர்கள் மனதை ஆரம்பகாலந் தொட்டே மழுங்கடித்து விடுகின்றனர். இதில் விலைபோன எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளைக் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார்கள்.

கிறிஸ்துவம்-தமிழ்-விடுதலைப் புலிகள்

தமிழ்-கிறிஸ்துவ தேசத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கையையும் சேர்த்துக் கொள்வதால் பல பயன்கள் கிட்டும் என்பதற்காகவே இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் பக்கம் நின்று அவர்களுக்கு நிதி, ஆயுதம் மற்றும் பல உதவிகளைப் பாதிரிமார்கள் செய்து வருகின்றனர். தமிழகத்தைப் போலவே இலங்கையில் உள்ள தமிழர்களும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களே. ஆனால் கிறிஸ்துவ மிஷனரிகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவும் உதவியும் அளிக்கும் போர்வையில் தமிழர்களைக் கிறிஸ்துவ மதமாற்றம் செய்து வருகிறார்கள். தற்போது விடுதலைப் புலிகளில் பாதிக்குமேல் கிறிஸ்துவர்களாக மாறி விட்டனர் என்று தெரிகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கிறிஸ்துவராக இருந்தாலும் இருக்கலாம். தமிழகத்தில் உள்ள திராவிட இன வெறியர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பாலமாக இருந்து, “மொழி வெறி”யின் (Tamil Chauvinism) மூலம் இணைத்து வைப்பதே ஐரோப்பியக் கிறிஸ்துவ அமைப்புகளின் நோக்கம்.

கிறிஸ்துவம்- தமிழ் – சங்கமம்!

இந்த “திராவிடம்-கிறிஸ்துவம்-தமிழ்” கூட்டமைப்பிற்குச் சிறந்த உதாரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் “தமிழ் மையம்” என்கிற அரசு சாரா அமைப்பு ஆகும். இந்தத் தமிழ் மையத்தை நிறுவியவர் ஜகத் காஸ்பர் ராஜ் என்கிற பாதிரியார். இவர் பல வருடங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கொண்டு இலங்கைத் தமிழர்களுக்காக ரேடியோ நிகழ்ச்சிகள் நடத்தியவர். அப்போது விடுதலைப் புலிகளின் தொடர்பு கொண்டு அமெரிக்கா, கனடா, மற்றும் பல நாடுகளுக்குச் சென்று புலிகளுக்காக நிதி திரட்டியவர். இவர் ஆரம்பித்த தமிழ் மையத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் பங்கு உண்டு. இருவரும் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக “சென்னை சங்கமம்” என்கிற பெயரில் தமிழகக் கிராமியக் கலைகளையும், இயல், இசை, நாடகங்களையும் நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு ஜகத் காஸ்பர், இசைமேதை இளையராஜாவின் உதவியுடன் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகத்தை (ஆரட்டாரியோ) சிம்பொஃனி வடிவில் வெளியிட்டு அவ்வியாபாரத்தில் பெரும் தோல்வி அடைந்தார். பின்னர் அது சிம்பொஃனியே அல்ல, சர்ச்சுகளில் வாசிக்கப்படும் சாதாரண ஆக்டெராய்ட் இசை வகையைச் சார்ந்தது என்று சில இசை மேதைகளால் நிறுவப்பட்டது. இதை இளையராஜா அவர்களே ஒரு தமிழ் வார இதழின் நேர்காணலில் ஒத்துக் கொண்டுள்ளார்கள். ஆன்மீகத் தமிழாக இருந்தாலும் சரி, கலாசாரத் தமிழாக இருந்தாலும் சரி, அதை களவு செய்து அதற்கு ஒரு கிறிஸ்துவ வண்ணம் பூசி தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பதே இவர்களது நோக்கம்.

திருவாசகத்தைப் போலவே வேறு உதாரணங்களும் உண்டு. இவ்வாண்டு நடந்த சென்னை சங்கமம் ஆரம்ப விழாவில் “நடந்தாய் வாழி காவேரி” என்கிற அழகான தமிழ்ப் பாடலுக்கு ஐரோப்பிய உடை அணிந்த மகளிர் மேற்கத்திய முறையில் பாலே மாதிரியான நடனம் ஆடினர். இந்தச் சென்னை சங்கமம் மூலம் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் போன்ற இந்துமதம் சார்ந்த இசையையும், கலைகளையும் கூட கிறிஸ்துவ மயமாக்க முயல்கின்றனர். இந்தச் சென்னை சங்கமம் என்கிற கூத்தினால், கிராமப்புறக் கலைகளும், கலைஞர்களும் வளர்கிறார்களா என்பது தெரியவில்லை. அதே சமயம் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் ஆகியவையும் தங்கள் பாரம்பரியத்தை இழப்பதற்கான சூழல் இருக்கிறது.

சில தமிழ் இந்து மடங்களின் அறியாமை

இங்கே மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால் ஓரிரண்டு தமிழ் ஆன்மீக மடங்களும் கூட இந்தத் திராவிட-கிறிஸ்துவக் கூட்டணியின் வலையில் விழுவது தான். வேதம், சமஸ்க்ருதம் ஆகியவற்றின் மேல் தேவை இல்லாத காழ்ப்புணர்ச்சி கொண்டு, தமிழும் சமஸ்க்ருதமும் இறைவனின் இரு கண்கள் என்கிற சாதாரண அடிப்படை ஆன்மீக உணர்வு கூட இல்லாமல், அவற்றுக்கு எதிராக இயங்கி வரும் இம்மடங்கள் நாளை தமக்கு நேர்ந்திருக்கும் ஆபத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் இந்தக் கூட்டணியில் கைகோர்த்துக் கொண்டுள்ளன. இம்மடங்களின் மூலம் மற்ற தமிழ் சைவ, வைணவ மடங்களையும் இந்து மதத்திலிருந்து பிரிக்கவே கிறிஸ்துவ மிஷனரிகளும் சர்ச்சுகளும், “திராவிட ஆன்மீகம்”, “தமிழ் சமயம்” போன்ற மேல்பூச்சுகளோடு உலவுகின்றன.

நல்லவேளையாக பெரும்பான்மையான தமிழ் மடங்கள், வேத, புராண, உபநிடதங்களின் பெருமைகளை உணர்ந்து செயல் படுவதால் இவர்களுடைய நோக்கம் இதுவரை நிறைவேறாமல் இருக்கிறது. ஆனால், இவர்கள் ஒவ்வொரு மடத்தையும குறி வைத்து தங்களுடைய காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

எனவே, தமிழ் இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தத் தமிழ், தமிழருக்கு எதிரான முயற்சிகளை முறியடிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த அபாயத்திலிருந்து தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை:

1. அனைத்துப் பீடாதிபதிகளும், மடாதிபதிகளும், ஆதீனங்களும் ஒன்று சேர வேண்டும். தாங்கள் ஒன்று சேர்வதோடு தங்களைப் பின்பற்றும் மக்களையும் அவர்கள் ஒன்றிணைக்க வேண்டும்.

2. தமிழகமெங்கும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்கு தரிசனம் தந்து, கிராமத்தில் உள்ள கோவில்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மக்களிடையே இந்து மதக் கோட்பாடுகளையும், ஆன்மீக, கலாசாரப் பெருமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

3. ஒவ்வொரு ஊரின் காவல் தெய்வங்கள், குடும்பங்களின் குல தெய்வங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஒவ்வொரு வருடமும் ஊரே ஒன்றுகூடித் திருவிழா நடத்துவதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் அறிவுறுத்த வேண்டும்.

4. தேச பக்தி, தெய்வ பக்தி, ஆகிய இரண்டுக்கும் உள்ள பிணைப்பைப் பற்றியும் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மற்ற மதங்கள் இந்தியாவை அடிமைப்படுத்துவதற்கான ஓரிடமாகவே பார்க்கின்றன என்பதைப் புரியவைக்க வேண்டும்.

5. இந்த விழிப்புணர்ச்சி இயக்கத்தில் ஆன்மீக, கலாசார, சேவை அமைப்புகள் கைகோர்த்துச் செயல்பட வேண்டும்.

6. இந்த இந்து பூமிக்கே உரிய ஆன்மீக அறிவும், கலாசார உணர்வையும் அகற்றிவிட்டால் எமது மொழிகள் தளருமேயன்றி வளராது என்பதைப் புரிய வைக்க வேண்டும். நம் தேசத்தின் மொழிகள் ஒன்றையொன்று அரவணைத்துச் சென்றால்தான் அனைத்து மொழிகளும் வளரும். ஒன்றைத் தாழ்த்தி மற்றொன்றை உயர்த்துபவர்கள் பேசும் சமத்துவம் போலியானது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இதைப் படிக்கும் நீங்கள் ஒரு குருமடத்தைச் சார்ந்தவரானால், அங்கே கிறிஸ்துவத்தின் கரங்கள் நீளவோட்டாமல் அங்கிருக்கும் ஆதீனகர்த்தர், நிர்வாகிகள் ஆகியோரை எச்சரிப்பது அவசியம். எல்லாக் கடவுளரும் எமக்கு ஏற்பே என்ற இந்துவின் பரந்த எண்ணமே அவனது வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடக் கூடாது.

இந்துக்கள் இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று நம்புவதை விடவேண்டும். தமிழர்களை, நமது மதத்தை, மொழியை, கலாச்சாரத்தை அன்னியப்படுத்திக் களங்கப்படுத்துவதன் மூலம் தமது மத ஆதிக்கத்தை இந்த மண்ணில் நிறுவ முயலும் சக்திகளின் வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும். சக இந்துக்களிடம் இவற்றைப்பற்றித் தொடர்ந்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக ஒரு விவேகானந்தன் வரவேண்டும் என்று காத்திராமல் நாமே அந்த விவேகத்துடன் செயல்பட்டால், நமக்கு ஆனந்தமும் வரும். நமது நாடு நம்மதாக இருக்கும்.

தொடர்பான கட்டுரைகள்:

 1. சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்
 2. தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்
 3. India Interacts article

23 Replies to “கிறிஸ்துவ – திராவிட மாயவலை”

 1. Thanks To jayamohan Blog
  https://jeyamohan.in/?p=621
  ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே

  https://jeyamohan.in/?p=600
  மெல்லமெல்ல இது ஒரு வலுவான தரப்பாக ஆகும். உதாரணமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொன்னார். ‘திருவள்ளுவரை சிலர் சம்ணர் என்ற்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்…’ என்று. 1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்பு கோரினார். இன்று அது இயல்பான ஒரு வரலாற்று ஊகமாக ஆகிவிட்டிருப்பதை பாருங்கள்.

 2. In 2005, American televangelist Benny Hinn visited Bangalore, and on the eve of his visit, some local group, had distributed pamphlets which had derogatory remarks about Hinduism and idol worship – at the press conference prior to Benny Hinn’s congreation event at Bangalore, journalists confronted the organisers of the event (which included several former IPS/IAS officers, if am not mistaken) and angry questions were posed about the intentions of Benny Hinn’s visit – the answers were either elusive or downright denials. Benny Hinn came, and his event was attended by 1000s of people and even a former Prime Minister attended the event, took his ‘belssings’ with no shame, or semblance of self-respect!!

  This is a CRUSADE of a different kind, thats happening right in front of us, another cultural genocide with the active support of our politicians!

 3. அருமை நண்பரே உங்கள் கட்டுரை

  நம் மக்கள் இப்போதாவது முழித்துக் கொள்ள வேண்டும்.

  இந்த கட்டுரையை பிரதி எடுத்து கோவில் வாசல்களிலோ அல்லது தெரிந்த நண்பர் வட்டத்திலோ விநியோகிக்கவேண்டும்.

  நான் நிச்சயமாக இந்தக் கட்டுரையை பரப்புவேன்.

  ஈசனின் பெருங்கருணையால் நீங்கள் பல்லாண்டு வாழவும், இப்படிப் பட்ட நல்ல கட்டுரைகளை எழுதவும் நான் ஈசனை வேண்டுகிறேன்.

  வாழ்க தமிழ்செல்வன், வாழ்க தமிழ்செல்வன், வாழ்க தமிழ்செல்வன்.

  வளர்க உங்கள் பணி.

 4. வாய்மையின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இருதியில் வய்மையே வெல்லும் இது பொய்யர்களின் இறுதி கலமாகும்

 5. பாரதிய ஜனதா தமிழ் நாட்டின் ஆட்சிக்கு சீக்கிரம் வரவேண்டும்

 6. see the following, the message from https://www.tamilchristian.org/ they make our people as our own enemies and they are involved in stealing hindu people.

  We have to do something to stop this first, and we should not leave the people blank, then only these evils sit in their heart. We should know that they never know, anything about hindu religion, and these blank peoples are occupied by the evil thoughts of these converting ghosts.

  Millions have been converted

  Christianity Today says:
  “Millions have been converted after seeing films about Jesus, and Hindu radicals are responding with violence.

  “In the darkness of a July night, 200 villagers sat and stared at the makeshift movie screen alongside a river in Nanjanagudu, a rural community in India’s southwestern Karnataka state. Six Indian men in their late 20s stood by the LCD projector they had brought to show a film about Jesus.

  “Ignoring the plentiful mosquitoes and mat bugs, Lakshmamma, 45, a dark-skinned Dalit woman in the crowd, winced as she watched Roman soldiers drive long nails into the body of Jesus. For the fourth time, Lakshmamma was watching Dayasagar (Ocean of Mercy), a gripping Indian-produced feature film about Jesus translated into 15 major Indian languages under the sponsorship of Dayspring International in Virginia Beach. As the film depicted Christ on the cross, Lakshmamma wept openly.

  “For the last quarter-century, Operation Mobilization (OM), Campus Crusade, Vimukthi Baptist Church, Dayspring, Gospel for Asia, and others have been penetrating the thicket of traditional Indian culture with compelling feature films about the life of Christ.

  “Dayasagar and the Jesus film, one or both available in 70 of India’s 407 living languages, have won over large numbers of villagers. Dayspring says 19 million Indians have seen Dayasagar since 1979, and 7 million have made public Christian commitments. Campus Crusade says 500 film teams show the Jesus film to 100,000 Indians daily.

 7. This is a great service you are doing. How to propagate this to reach a larger TAMIL audience who really matter. THIS A BIG QUESTION Incidentally, if such a network in other languages such as Telugu HINDU Gujarati HINDU ETC., IS STARTED THE REACH WOULD BE FAR AND WIDE . IT IS MY ANXIETY WHICH COMPELS ME TO MAKE THIS SUGGESTION FOR CONSIDEATION AND TO IMPLEMENT IN WHATEVER FORM IT IS POSIBLE AND FEASIBLE
  REGARDS

 8. //
  இதற்கு முன்பு ஜகத் காஸ்பர், இசைமேதை இளையராஜாவின் உதவியுடன் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகத்தை (ஆரட்டாரியோ) சிம்பொஃனி வடிவில் வெளியிட்டு அவ்வியாபாரத்தில் பெரும் தோல்வி அடைந்தார். பின்னர் அது சிம்பொஃனியே அல்ல, சர்ச்சுகளில் வாசிக்கப்படும் சாதாரண ஆக்டெராய்ட் இசை வகையைச் சார்ந்தது என்று சில இசை மேதைகளால் நிறுவப்பட்டது. இதை இளையராஜா அவர்களே ஒரு தமிழ் வார இதழின் நேர்காணலில் ஒத்துக் கொண்டுள்ளார்கள். ஆன்மீகத் தமிழாக இருந்தாலும் சரி, கலாசாரத் தமிழாக இருந்தாலும் சரி, அதை களவு செய்து அதற்கு ஒரு கிறிஸ்துவ வண்ணம் பூசி தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பதே இவர்களது நோக்கம்.
  //

  திருவாசகத்தை சிம்பொனி வடிவம் என்று எங்குமே **இளையராஜா** குறிப்பிடவில்லை. திருவாசகத்தின் வெளியீட்டுக்கு முன்னரே அதை சிம்பொனி என்ற ரீதியில் கேள்வி கேட்கப்பட்டபோது இளையராஜா தெளிவாகவே அது ஆரட்டாரியோ என்று திருத்தினார். அது இசை வெளியானபின் யாரோ சில இசை மேதைகள் கண்டுபிடித்த விஷயமல்ல. வெளியீட்டு நிகழ்ச்சி, ப்ரோமோ எல்லா இடங்களிலும் அது ஆரட்டாரியோ என்றே விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் கட்டுரையிலோ சில **இசைமேதைகள்** கையுங்களவுமாக இளையராஜா பொய் சொல்லி அம்பலப்படுத்தியது போலவும், அதை இளையராஜா **ஒத்துக்கொண்டது** போலவும் எழுதப்பட்டிருக்கிறது. இது போன்ற அவதூறான ஒரு கருத்தை முகப்பிலும் வேறு வெளியிட்டு விளம்பரப்படுத்தியிருப்ப‌து மிகவும் துரதிர்ஷ்டமான விஷயம். இது குறித்து கட்டுரையாசிரியரின் விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். மேலும் ஆரட்டாரியோ ஒரு சாதாரண இசை வகை என்று சொல்லும் கட்டுரையாளரின் இசையறிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

 9. நண்பர் சேதுபதிக்கு
  வணக்கம். இக்கட்டுரை இந்துமதத்திற்கு எதிராக இயங்கும் கிறிஸ்துவ-திராவிட விஷ உறவை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தோடு எழுதப்பட்டதேயன்றி, நான் மிகவும் மதிக்கும் இசை அமைப்பாளர் இளையராஜா அவர்களைக் குறை கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல. தங்களின் மறுமொழி என் மனதில் இரண்டு எண்ணங்களை ஏற்படுத்தியது.

  ஒன்று, நீங்கள் கட்டுரையையும் அதில் கொடுத்துள்ள லிங்குகளையும் சரியாகப்படிக்கவில்லை. இரண்டு, மேம்போக்காகக் கட்டுரையைப் படித்துவிட்டு, திருவாசகம் பற்றிய பத்தியை சரியாக மனதில் வாங்கிக்கொள்ளாமல், இளையராஜாவின் மீது உள்ள அபரிமிதமான அபிமானத்தால், நான் அவரைக் குறை கூறியிருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளீர்கள்.

  எனவே, உங்களைப் போன்றவர்கள் ஒரு கட்டுரையை தவறாக அணுகி, தவறான மறுமொழியிட்டு, கட்டுரை ஆசிரியர் பற்றிய தவறான எண்ணத்தை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்திவிடக்கூடாது என்கிற காரணத்தால், உங்கள் சந்தேகத்தையும் போக்கி, மற்ற வாசகர்கள் மனதிலும் தெளிவை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தால், இவ்விளக்கத்தைத் தருகிறேன்.

  //திருவாசகத்தை சிம்பொனி வடிவம் என்று எங்குமே **இளையராஜா**
  குறிப்பிடவில்லை. //

  திருவாசகத்தை சிம்பொனி வடிவம் என்று **இளையராஜா** அவர்கள் குறிப்பிட்டதாக நான் கட்டுரையில் சொல்லவில்லை. மீண்டும் ஒருமுறை கட்டுரையைப் படிக்கவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

  //திருவாசகத்தின் வெளியீட்டுக்கு முன்னரே அதை சிம்பொனி
  என்ற ரீதியில் கேள்வி கேட்கப்பட்டபோது இளையராஜா தெளிவாகவே அது ஆரட்டாரியோ
  என்று திருத்தினார். அது இசை வெளியானபின் யாரோ சில இசை மேதைகள்
  கண்டுபிடித்த விஷயமல்ல. வெளியீட்டு நிகழ்ச்சி, ப்ரோமோ எல்லா இடங்களிலும்
  அது ஆரட்டாரியோ என்றே விளம்பரப்படுத்தப்பட்டது. //

  காஸ்பர் ராஜ், பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த திருவாசகத்தை “Thiruvaasagam in Symphony” என்றும், அமேரிக்காவில் “Thiruvaasagam in Symphony USA” என்றும் விளம்பரப் படுத்தியுள்ளார். தன்னுடைய “தமிழ் மைய்யம்” இணைய தளத்திலும் அவ்வாறே விளம்பரப் படுத்தியுள்ளார். “தி ஹிந்து” நாளிதழும் தன்னுடைய 6 ஜூன் 2005 இதழில் “Thiruvaasagam in Symphony” என்றே குறிப்பிட்டுள்ளது. அதற்குப் பிறகே ஆனந்த விகடன் பேட்டியில் இளையராஜா இது சிம்போனி இல்லை என்று உண்மையைக் கூறி காஸ்பர் ராஜின் ஏமாற்று வேலையை வெளிக்கொணர்ந்தார். இதனிடையே காஸ்பர் ராஜின் ஏமாற்று விளம்பரத்தைப் பார்த்தவுடன், டாக்டர் வீ என்பவர் திருவாசகம் Symphony இல்லை என்று நிறுவினார். இதற்குப் பின்னரும், இளையராஜாவின் ஆனந்த விகடன் பேட்டிக்குப் பின்னரும் தான் காஸ்பர் ராஜ் “Thiruvaasagam in Symphonic Oratorio” என்று லேபிளில் மாற்றம் செய்தார். மேலும், ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன், திரு அத்வானி ஆகியோரை “திருவாசகம்” விஷயமாக சந்தித்தபோது கூட இளையராஜா இவ்வுண்மையை சொல்லவில்லை. தெரிந்தோ தெரியாமலோ காஸ்பர் ராஜிடம் இளையராஜா மாட்டிக் கொண்டு பின்னர் உஷாராகி இருக்கிறார். இந்த அனுபவம் தான் பின்னாளில் ஈ வே ரா படத்திற்கு இசை அமைக்க வேண்டாம் என்று முடிவெடுக்க வைத்திருக்கும் என்பது என் எண்ணம்.

  ஆனால், கிறிஸ்துவ காஸ்பர் ராஜ் திராவிட உறவுடன் தனது தமிழ் மைய்யம் என்கிற நிறுவனத்தின் மூலம் தமிழ்-இந்து கலாச்சாரத்தை எப்படி கிறிஸ்துவமயமாக்க முனைந்துள்ளார் என்பதை விளக்கும் கட்டுரையில் திருவாசகத்தைப் பற்றிய விவகாரங்களை விலாவாரியாக சொல்லிக்கொண்டிருந்தால் கட்டுரை திசைமாறிப் போகும் என்கிற காரணத்தால் தான், முக்கியமான விஷயங்களை மட்டும் என் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். மேலும் விவரங்களுக்கு வாசகர்கள் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளுக்குச் சென்றால் காஸ்பர் ராஜின் கிறிஸ்துவ வியாபாரக் கூத்துகளைத் தெரிந்துகொள்ளலாம்.

  // ஆனால் கட்டுரையிலோ சில
  **இசைமேதைகள்** கையுங்களவுமாக இளையராஜா பொய் சொல்லி அம்பலப்படுத்தியது
  போலவும், அதை இளையராஜா **ஒத்துக்கொண்டது** போலவும் எழுதப்பட்டிருக்கிறது.//

  கண்டிப்பாக இல்லை. இது நீங்கள் அவசரத்தில் செய்த முடிவு. மேலும் கிறிஸ்துவ இசை வடிவத்தில் திருவாசகத்தை கிறிஸ்துவ மயமாக்க முனைந்த காஸ்பர் ராஜுடன் கூட்டு சேர்ந்தது இளையராவின் மாபெரும் தவறு தான். பக்தி மயமான திருவாசகத்தை கெடுப்பதற்கு இளையராஜா துணை போயிருக்க வேண்டாம். ஆனால் கட்டுரையில் நான் அதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை. எழுதுவது என் கட்டுரையின் பொருளுக்கும், நோக்கத்துக்கும் தேவையில்லாதது. அந்த விஷயங்கள் கட்டுரையின் பாதையை மாற்றிவிடும்.

  //இது போன்ற அவதூறான ஒரு கருத்தை முகப்பிலும் வேறு வெளியிட்டு
  விளம்பரப்படுத்தியிருப்ப‌து மிகவும் துரதிர்ஷ்டமான விஷயம். //

  “அவதூறான” கருத்தை வெளியிட்டதாக நீங்கள் சொல்வது வருந்தத்தக்கது.

  //இது குறித்து
  கட்டுரையாசிரியரின் விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். //

  விளக்கங்கள் போதுமென்று நினைக்கிறேன். மீண்டும் ஒரு முறைக் கட்டுரையையும், அதில் கொடுத்துள்ள லிங்குகளையும் படித்தால் மனம் தெளிவு பெறும். மேலும் விவரங்களுக்கு – காஸ்பர் அடைந்த நஷ்டம் உட்பட – https://www.asiantribune.com/index.php?q=node/4959
  மற்றும் https://www.ephesians-511.net/thiruvasagam.html ஆகிய லிங்குகளுக்கும், காஸ்பர் ராஜ் பற்றிய சரியான விமரிசனங்களுக்கு http://www.vigilonline.com தளத்தில் Religion பகுதியில் “The Catholic church, Tamil and LTTE” என்ற தலைப்பை கிளிக்கினால் பல விவரங்கள் கிடைக்கும்.

  //மேலும் ஆரட்டாரியோ
  ஒரு சாதாரண இசை வகை என்று சொல்லும் கட்டுரையாளரின் இசையறிவும்
  மெய்சிலிர்க்க வைக்கிறது.//

  Oratorio என்பது கிறிஸ்துவ மதம் சம்பந்தப்பட்ட, சர்ச்சுகளில் வாசிக்கப் படக்கூடிய, ஒபெராவை விட சற்றுக்குறைவான தரம் வாய்ந்த இசைவடிவம் என்பது எனக்குத் தெரியும். எனவே, symphony யுடன் ஒப்பிடும்போது அது சாதாரணமாகத்தான் எனக்குப் பட்டது. மேலும் நமது பாரம்பரிய இசை வகைகளுடன் ஒப்பிடும்போது, கிறிஸ்துவ இசை மிகவும் சாதாரணம் தான் என்பது காஸ்பர்-இளையராஜாவின் திருவாசகத்தைக் கேட்பவர்கள் நன்றாகப் புரிந்துக்கொள்வார்கள்.

  எனவே, “கட்டுரையாளரின் இசையறிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது” என்கிற “எள்ளிநகையாடல்” தேவையில்லாதது என்பது என் எண்ணம்.

  விமரிசனத்திற்கு அஞ்சாமையும், தவறை ஒத்துக்கொள்வதும், எள்ளிநகையாடலை கண்டிப்பதும், ஒரு எழுத்தாளனுக்கு மிகவும் தேவையான குணநலன்கள். அவை என்னிடம் உண்டு.

  அன்புடன்

  தமிழ்ச்செல்வன்.

 10. //கிறிஸ்துவ இசை வடிவத்தில் திருவாசகத்தை கிறிஸ்துவ மயமாக்க முனைந்த காஸ்பர் ராஜுடன் கூட்டு சேர்ந்தது இளையராவின் மாபெரும் தவறு தான். பக்தி மயமான திருவாசகத்தை கெடுப்பதற்கு இளையராஜா துணை போயிருக்க வேண்டாம்.//

  இளைய ராஜாவே தான் செய்து விட்ட தவற்றினால் மிகவும் மனம் வருந்தினார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். எப்படியோ, இந்த வலையில் வீழ்ந்தாலும் மீண்டு வந்தாரே என நினைச்சுக்கணும், கட்டுரை அருமையாக எழுதப் பட்டுள்ளது. எனினும் பணபலமும், அரசியல் பலமும் அவர்களிடம் உள்ளது, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் அரசியல் வீச்சுப் பரவி இருக்கிறது வெளிப்படையாய்த் தெரிகின்றது. மக்கள் தான் விழிச்சுக்கணும். ஆனாலும் இந்த இந்து மதம் எனச் சொல்லப் படும் சநாதன தர்மத்தை அவ்வளவு லேசில் அழிக்க முடியாது. எரிந்து முடிந்த நெருப்பின் சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் ஓர் மறுமலர்ச்சிக்குக் காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

 11. Good article. It is so unfortunate that very few people within Hindu Fraternity understand this massive plan. We should appreciate the long term plan of Constantine Joseph Beschi and Caldwell. They have seeded the Aryan dravidian divide long long back and see how it is reping benefit. I am not seeing any long term goals from hindus. We are emotional and not acting ( including me).

  Regards
  S Baskar

 12. திரு. தமிழ்ச்செல்வன் அவர்களே

  தங்கள் கட்டுரைகள் சிலவற்றை வாசித்தேன். அவை, மிக தெளிவாகவும் விளக்கமாக்வும் ஆணித்தரமாகவும் அழகாகவும் உள்ளது.

  நீங்கள் எழுத்தாளர் சோ. போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்.

  மேலும் தங்கள் எழுத்துக்கள் பாமர மக்களிடம் போய்சேரவேண்டும். அப்போதுதான் இந்தியாவை ஹிந்து விரோதிகளிடமிருந்து காப்பாற்ற முடியும்.

  தங்கள் பணி மேலும் வளர திருவருள் துணையை நாடும்

  சுதாகர்.

 13. Jagat Kasper Raj’s is of a dubious background which needs to be probed thoroughly. He has already roped in the best musicians in Carnatic music who shamelessly perform in the events organised by ‘Tamil Maiyam’ and receive awards thrown at them. A reigning super star in Carnatic music circle has sung keertanams in praise of Jesus and posed for photographs with her 8-stoned nose stud flashing and her smile intact!
  An octagenerian violin maestro and his daughter-son duo were really pleased to be felicitated by the dubious Christian priest.
  The fellow flaunts his knowledge of Hindu literature on stage and the uncles and aunts of Mylapore in their best silks and diamonds exchange glances admiring his command over a domain that is exclusively ‘Hindu’.
  The fault is with us that we fall for every dirty trick overlooking the dangers lurking. We never learn lessons from history.

 14. what is the relegion of the thamizh.is it hinduism.it is the religion of the aryans not tamils.

 15. what is the relegion of the thamizh.is it hinduism.it is the religion of the aryans not tamils.whats wrong in helping ltte by the christian missionaries .who said that ltte’s are terrist.your hinduism not even respects the sc(The aathi dravidans)people then whats wrong in follow any other religion..first stop crying man..

 16. This is all such a insane talk. You guys are manipulating the truth.Hinduism brough and brings and will bring intelectual, meterial and moral poverty.

 17. //A reigning super star in Carnatic music circle has sung keertanams in praise of Jesus and posed for photographs with her 8-stoned nose stud flashing and her smile intact!//
  Is it a sin to sing praises for Jesus. I have been saying that there were keerthanaas sung by christian musicians in carnatic style for the past 300 years and we feel proud to sing those keerthanas in churches

 18. உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?—
  Open orphanages, schools & colleges
  Open organizations to help widows and abandoned people
  Open home for the aged

  Oneday one christian preacher told a story while he visited US: people look at others and tell “hey there is a piece of wood in your eye” while they have big piece of wood in their own eye. Like this, our people, instead of uplifting our community up are looking at muslims and christians. My uncle spent 70,000 to make holy bath in river ganges. What is the use, last time when we visited India, we found he had grabbed a lot our land. Preach against these acts. May be hundred times you preach, one man may change.

 19. anything the missionaries do must be looked at with suspicion.
  outwardly it may look very harmless and beneficial to the Hindus.
  But there will be a trap.
  missioanries are very adept at this
  So the Hindus should totally spurn their overtures.

 20. மிக மிக நுண்ணிய அறிவாற்றலுடன் உண்மைகளையும் கலந்து கொடுத்துள்ள கட்டுரை
  கிறிஸ்தவம் என்பது வெள்ளைக்கார கிறிஸ்தவ நாடுகள் ஹிந்துக்களுக்கு எதிராக உபயோகிக்கும் நஞ்சு கலந்த சாக்லேட்
  அதை நாம் கையால் கூட தொடக் கூடாது
  அவர்களுக்கு நம்மை கிறிஸ்தவர்களாக ஆக்கி மேன்மை அளிக்க வேண்டும் என்றோ, முக்தி கொடுக்க வேண்டும் என்றோ எண்ணம் இல்லை
  கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் கலாச்சார வேர்களை அழித்து விட்டு , நம்மை கிறிஸ்தவ நாடுகளின் கார்பன் காபிகளாக ஆக்கிவிட்டு அவர்களுக்கு அடிமையாகஆக்க வேண்டும்
  கிறிஸ்தவர் தொகை பெருகினால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படுத்தி அப்போது கிறிஸ்தவ நாடுகள் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டை உடைக்கலாம் .
  இதுதான் அவர்களது குறிக்கோள்

 21. OPPUSDEI, THE INTELLIGENCE WING OF CHRISTIANS OPERATE FROM SPAIN.IT IS LIKE CIA OR RAW OR ISI .THIS SECRET WING OF CHRISTIANITY ENGAGE IN COVERT OPERATIONS, SECRETLY ELEMINATING THE PEOPLE WHO WORK AGAINST CHRISTIANITY, TRAPPING HINDUS SAINTS AND GIVING THEM BAD IMAGES ECT. THEY HAVE MORE THAN 2,00,000 WORKING IN MANY COUNTRIES. THEIRY TARGET IS FIRST SOUTH INDIA WHICH THEY SUCCEEDED IN CONVERSION OF MANY PEOPLE AND NEXT TARGET IS NORTH INDIA PARTICULARLY TRIBAL PEOPLE. THEY TARGET ORISSA, ASSAM AND NORTH EAST STATES BESIDES SOME STATES IN NORTH INDIA. IN ANDHRA THEY WERE V MUCH ACTIVE DURING YSR PERIOD. YRS VISITED POPE MANY TIMES AND SECRELY TRIED TO ESTABLISH DIRECT CONTACT WITHOUT MADAM, FOR WHICH REST IS THE HISTORY AS TO WHAT HAPPENED TO HIM. CHRISTIANITY IS THE CANCER AND NOT A RELIGION. IT IS THE DUTY OF ALL HINDUS TO WATCH CAREFULLY ABOUT THEIR MOVE TO HIJACK HINDU CULTURES LIKE YOGA, BHARATHANATIYAM, CARNATIC MUSIC
  AND RITUALS OF HINDU TEMPLES. HINDUS MUST HAVE COPY RIGHT FOR THIS LIKE THEY HAD FOR ‘YOGA’ IN USA AND IN EUROPE. CHURCH CELEBRATE ‘CAR FESTIVALS ( THER) LIKE IN HINDU TEMPLES, THEY CELEBRATE PONGAL, VIJAYADASAMI AND DEPAWALI ( THEY SAY IT IS THE DAY OF LIGHT TO REMOVE THE DARKNESS ).
  HINDUISM SWALLOWED ALL PAGAN RELIGIONS LIKE JAINISM, BUDHISIM AND OTHER FAITHS LIKE FIRE. ONE DAY CHRISTIANITY WILL ALSO GET EVOPRATED IN HINDUISM FIRE. HOWEVER ONE MUST BE VIGILENT TO PREVENT THIS CANCER TAKING ROOTS IN OUR SOIL. ALL HINDUS MUST BE FIRST EDUCATED ABOUT THEIR RELIGION AND DIFFERENCES BETWEEN CHRISTIANITY BEFORE COUNTERING THEM. APPRECIATE THIS WEBSITE AND ITS MODERATERS.

  REGDS/ RAM

 22. There is nothing in wrong being a Dravidian. Why this negative portrayal of dravidians? If some political party or organisation is mis using the word dravidians, why to attack a community/word that has been there for at least two thousand years?

  I am a Dravidian and I am proud of my history and culture. I am not anti-Hindu or anti-Indian or even anti-brahmin. The term Dravidian denotes my my culture, language and race. What’s wrong with that?

  If you are using the word due to feelings of hurt, then please remember – the term once included brahmins who lived among us as well. There were brahmins who lived among us, who lived as dravidians and who became part of us. We never considered them as something different. Read poems written by Kapilar (of the Sangam age).

  If you want to unite all Hindus, then be careful about your language.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *